Thursday, October 1, 2026
Blog

Online Abuse Sexual Exploitation and Human Trafficking among Youth Awarness

Chennai:

The Indian Community Welfare Organisation (ICWO), in collaboration with Just Rights for Children (JRC) and Chevalier T. Thomas Elizabeth College for Women (CTTE), organised an awareness and capacity-building programme on “Online Abuse, Sexual Exploitation and Human Trafficking among Youth” at the JJ Auditorium, CTTE College for Women, Chennai.

The programme brought together students, faculty members, volunteers, media representatives and civil society representatives to create awareness on the growing risks of online abuse, sexual exploitation and human trafficking and to equip young people to recognise and prevent such risks. The programme commenced with a prayer song and registration of students, followed by the gathering of students, guests and media representatives.

Dr. S. Sridevi Principal, CTTE College for Women, delivered the Welcome Address and welcomed the guests and participants. She spoke about the increasing freedom and choices available to women, including the freedom to make decisions regarding marriage and divorce, while emphasising that freedom must also be accompanied by awareness and the ability to protect oneself from risks and exploitation. She said the programme had been organised to provide students with such awareness and knowledge.

Mementos were presented to Dr. P.M. Nair, IPS (Retd.), International Expert on Human Trafficking Matters, and Mr. A.J. Hariharan, Founder Secretary, ICWO.

Dr. P.M. Nair Calls for Awareness Programmes Across Colleges The key session was delivered by *Dr. P.M. Nair, IPS (Retd.) who spoke about online sexual exploitation, human trafficking and the increasing risks faced by children and youth.

Dr. P.M.Nair said:
“This event on capacity building of the youth in understanding, preventing and fighting Online Sexual Exploitation and related issues organised by CTTE College along with ICWO and Just Rights For Children on 29.9.26 is an important event which will have tremendous impact in the youth. Thousands of youth and children are being lured or deceived or coerced by online abusers and traffickers in the name of job and so many other things. Eventually, many of them are landing as victims of these predators. Once the children and youth are aware of the issues, they will ensure that they do not fall into the trap. Therefore, we need to carry out such programmes across all colleges in the country. I am so happy that I have been called in as a resource person to address the issues and suggest the solutions and guide the youth. It is not just honour for me, it is my profound duty in national interest. Our nation is safe only when our youth and children are also safe. This is a great step in ensuring national security. Jai Hind.”

Hariharan Highlights Anti-Human Trafficking Clubs

Mr. A.J. Hariharan, Founder Secretary, ICWO, addressed the gathering and highlighted the importance of youth participation in preventing human trafficking and exploitation. He spoke about ICWO’s Anti-Human Trafficking Clubs (AHTCs) and appreciated CTTE College for Women for being the first college to start an AHTC. He noted that the initiative has since expanded to more than 100 colleges with AHTC Clubs, providing young people with opportunities to learn about trafficking, exploitation, prevention and responsible action.

Mr. A.J.Hariharan also stressed that awareness is essential in protecting young people in the digital age. “Awareness is the first and most powerful step towards protecting young people. Our objective is not to discourage young people from using technology, but to empower them to use it safely and constructively.”

He appreciated the collaboration between ICWO, JRC and CTTE College for Women and emphasised the importance of partnerships between civil society organisations and educational institutions in strengthening child protection and prevention. As part of the programme, awareness posters were released and an oath-taking ceremony was conducted with students and volunteers. The Humanities Club of CTTE College for Women also presented an enactment on online abuse, sexual exploitation and trafficking. The programme highlighted the shared responsibility of young people, families, educational institutions, civil society organisations and communities in preventing exploitation and creating safer online and offline environments.

Ms. Dhrisya, Professor, Department of English, CTTE College for Women, proposed the Vote of Thanks.

The programme concluded with a call for continued capacity-building and awareness programmes across educational institutions, empowering young people to become responsible digital citizens and active participants in preventing online abuse, sexual exploitation and human trafficking

மீசைய முறுக்கு2 விமர்சனம்! படம் எப்படி இருக்கு? RATING 3/5

2017 ஆம் ஆண்டு இதே குஷ்பு, ஹிப் ஹாப் ஆதி கூட்டணியில் மீசையை முறுக்கு முதல் பாகம் வந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இரண்டாம் பாகம் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், அவ்னி மூவிஸ் சார்பில், குஷ்பூ சுந்தர் தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் நடிகர்கள் ஹிப் ஹாப் ஆதி, கெடிகா சர்மா, நாசர், ரம்யா ரங்கநாதன், யோகி பாபு , சைத்ரா ஆச்சார் , பாபா பாஸ்கர், கருணாஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ளது.

விமர்சனம்:

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில் கானா பாடல்களை பாடி சாதிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைகின்றன. இதே கனவை அவரது மகனும் தொடர்ந்து, இசைத்துறையில் சாதிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரது முயற்சியும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதையடுத்து மூன்றாவது தலைமுறையாக கானா இசையை உலகறியச் செய்யும் போராட்டத்தை ஹிப்ஹாப் ஆதி முன்னெடுக்கிறார். தனது தாத்தா மற்றும் தந்தையின் கனவை நிறைவேற்ற அவர் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? கானா இசையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றாரா? என்பதே மீசைய முறுக்கு 2 கதை….

சென்னை கானா இசைக்காக ஆதி முன்னெடுக்கும் போராட்டங்களும், அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளும் கவனம் பெறுகின்றன. குறிப்பாக வடசென்னை பின்னணியையும், அங்குள்ள இசைக் கலாசாரத்தையும் திரையில் கொண்டுவந்த விதம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஆதி வழக்கமான பாணியில் தனது ‘அட்வைஸ்’ வசனங்களால் ரசிகர்களை ரசிக்க வைப்பதோடு, ஆட்டம், பாட்டம் என படம் முழுவதும் உற்சாகமான என்டர்டெயின்மென்ட்டை வழங்கியுள்ளார். மூன்று தலைமுறை கானாபாடகராகவும் ஹிப்ஹாப்தமிழா ஆதியே நடித்திருக்கிறார்.அந்தந்தக் காலகட்டத்துக்கேற்ற உடைகள்,சிகையலங்காரம் ஆகியன மட்டுமின்றி உடல்மொழியிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார்.

சைத்ரா,கீதிகா சர்மா,ரம்யா ரங்கநாதன் ஆகிய மூன்று நாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்… ரம்யா ரங்கநாதன் கொஞ்சம் முன்னிலை பெறுகிறார். கருணாஸ், ஹர்சத் கான் ஆகியோர் நல்லநடிப்புடன் நகைச்சுவையையும் கலந்து கொடுத்து சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் என படத்தில் முக்கியமான நடிகர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுடைய அனுபவ நடிப்புகள் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. ஹிப்ஹாப் ஆதியின் இசை படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் வகையில் உள்ளன. குறிப்பாக ‘ஆரா பத்துக்கு பத்து…’ பாடல் கொண்டாட்டத்தின் உச்சமாக அமைந்துள்ளது. கானா இசை, இளைஞர்களுக்கான கருத்துகள், பாடல், நடனம் மற்றும் கொண்டாட்டம் என பொழுதுபோக்கு அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டுள்ள ‘மீசைய முறுக்கு 2’, ஹிப்ஹாப் ஆதி ரசிகர்களுக்கு உற்சாகமான விருந்தாக அமைந்துள்ளது.

மைனஸ்: காமெடியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம், முதல் பாதி கதையை இன்னும் ஜாலியாக கொண்டுபோயிருக்கலாம், கதையை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்.

மீசைய முறுக்கு 2 – கானா வெறி ஆட்டம்.

70 எலிகளுடன் ஷூட்டிங்- நடிகர் சூரி கலகல பேச்சு

‘ஏழு கடல் ஏழு மலை’ வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதில் நடிகர் சூரி, நிவின்பாலி, நடிகை அஞ்சலி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அதில்

இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது,

“பாலுமகேந்திரா சாருடன் இருந்தபோது, ‘ஒருத்தன் நல்லா கதை சொல்றான்டா’ என்று ஒரு நாள் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் பேசினார்; ரொம்ப நாட்கள் அப்படி அவர் பேசிப் பார்த்ததில்லை. அவர்தான் இயக்குநர் ராம். ரெண்டு பேர் கதை சொல்வதை பார்க்கும்போது, ‘எனக்கு இப்படி சொல்ல வரவில்லையே’ என்று ஏக்கம் இருக்கும். அதில் ஒருவர் ராம், இன்னொருவர் என்னுடைய சீனியரான தங்கவேலன். ‘கற்றது தமிழ்’, ‘பேரன்பு’, ‘தங்க மீன்கள்’ என இப்போது ‘ஏழு கடல் ஏழுமலை’ வரை ஒரு மனிதராக, இயக்குநராக அவர் எப்படி தன்னை விரிவாக்கிக் கொண்டே வருகிறாரோ, அதுபோல அவருடைய கதைகளும் விரிவாக்கம் அடைந்து கொண்டே இருக்கிறது; கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த ‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தில் நிறைய ஆர்டரை மாற்றி, ரசிகர்களுக்குப் புரியும் வகையாக எளிமைப்படுத்தி, பார்வையாளனுக்கு அதனுடைய எமோஷன் நேரடியாக வந்து சேர்வதற்கான ஒரு கதை சொல்லலை இதில் அழகாக அவர் உருவாக்கி இருக்கிறார். மனிதர்களுடைய ஒலியும் இன்னொரு உயிரினத்துடைய ஒலியும் ஒன்றாகவே ஒலிக்கிறது இந்த படத்தில்தான் என்பதுதான் இப்படத்தினுடைய மிக மிகச் சிறப்பான அம்சம் என்று நினைக்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

“எனக்கு குறிப்பிட்ட சில இயக்குநர்களை ரொம்பவே பிடிக்கும், காரணம் என் ரசனை அந்த மாதிரி. அந்த வகையில் ‘தரமணி’ படம் நடந்த சமயத்தில் இயக்குநர் ராமை சந்தித்துப் பேசினேன். ஆனாலும் அவரை வைத்துப் படம் எடுக்கும் அளவிற்கு நாம் இன்னும் வளரவில்லையோ என எனக்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது. அந்த சமயத்தில் ‘நீ சின்ன தயாரிப்பாளர் தானே?’ என்று என்னை சிலர் ஏளனமாகப் பேசியதைக் கேள்விப்பட்டு, நடிகர் சிம்பு தானாகவே முன்வந்து கால்ஷீட் கொடுத்து ‘என் படத்தைத் தயாரியுங்கள்’ என்று கூறினார். வெங்கட் பிரபு அந்தப் படத்தை இயக்கியதால்தான் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். அந்த சமயத்தில் ராம் அண்ணனிடம் இருந்து ஒரு கதை வந்தது; என்னைத் தேடி வந்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். அதுதான் ‘ஏழு கடல் ஏழு மலை’. என்றார்

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி பேசும்போது,

“எனக்கு இந்த மேடை வாழ்க்கையில் ரொம்பவே முக்கியமான ஒன்று என்று சொல்லலாம். நான் யுவன் சங்கர் ராஜாவின் மிகப்பெரிய ரசிகன்; எந்த அளவுக்கு என்றால், நான் முதன்முதலாக கீபோர்டு வாங்கி பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தது யுவன் சாரோட பாட்டுக்களை வச்சுதான். அதன் பிறகு மியூசிக் புரொடக்ஷன் படிக்க ஆரம்பித்தபோது யுவன் சாரோட சாங்ஸ் எடுத்துதான் ஒவ்வொன்றாக கற்க ஆரம்பித்தேன். ஆனால் யுவன் சாருடைய எந்த பாட்டாக இருந்தாலும் அதில் ஒரு ஆழம், அவ்வளவு அன்பு, ஆன்மா இருக்கும். இது எப்படி வருகிறது என்று யாருக்குமே தெரியாது, அவருக்கு மட்டும் தான் தெரியும். அதனால் இன்னும் நான் அவரை ஃபாலோ பண்ணிக்கிட்டு தான் இருக்கிறேன். ‘மரியான்’ படத்தின் போது ஒரு பாடல் பாட ஏ.ஆர். ரகுமான் ஸ்டுடியோவிற்கு வந்தார். அப்போது அங்கே நான் கடைசி அசிஸ்டன்ட் யுவன் பாடுவதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று சொல்லி ரகுமான் சாரிடம் கேட்டேன், ஆனால் உள்ளே வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஆனால் இன்று யுவன் சாருடன் இந்த மேடையில் நானும் ஒருவராக அமர்ந்திருப்பது பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை” என்றார்.

இயக்குநர் ராம் பேசும்போது,

“ஏழு கடல் ஏழுமலை’ அக்டோபர் ஒன்றாம் தேதி வருகிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் எலியோ யானையோ மரமோ புல்லோ எல்லாமே உயிர் தான். அதுதான் படத்தில் கதை. இப்ப ஒரு வாரத்துக்கு முன்னாடி ‘கற்றது தமிழ்’ படம் பார்த்தேன். அப்ப நாம எல்லாம் எப்படி இருந்தோம் இன்னைக்கு அப்படி இருக்கோமா அப்படின்னு தோணுச்சு. நிறைய மாற்றமாகி இருக்கு. ஆனால் நான் அப்படியே தானே இருக்கிறேன். முதன்முதலில் கற்றது தமிழ் படம் எடுத்தப்ப நா முத்துக்குமார் தான் என்னை யுவன் சங்கர் ராஜா கிட்ட கூட்டிட்டு போனார். ஒரு 30 நிமிஷம் கூட கதை சொல்லி இருக்க மாட்டேன். இந்தப் படம் நான் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டாரு. அன்று தொடங்கிய நட்புதான்.. அவர் நோ சொன்னால்தான் நான் வேறு இடத்துக்குப் போக முடியும். அடுத்த படமும் அவர்தான் பண்றாரு. என்றார்

நடிகர் நிவின்பாலி பேசும்போது,

“ரொம்ப ஹேப்பியா இருக்கு! ‘ஏழு கடல் ஏழு மலை’ யூனிட் ரொம்பவே நல்லா போச்சு.. இந்த மாதிரி ஒரு சக்சஸ் எல்லாம் வரும்போது ரொம்ப ஹேப்பியா இருக்கும். இல்ல, சினிமாவில் இன்னும் கமிட்டடா இருக்கணும்; ஆடியன்ஸ் அந்த மாதிரி இருக்கிறார்கள். இந்த அன்பைக் கொடுக்கிறது ஆடியன்ஸ்தான், அப்போ உங்களுக்காக ஒரு நல்ல படம் பண்ணிட்டுப் போகணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கிறேன். ரொம்ப நாள் ஆச்சு ‘கம் பேக்’ வார்த்தையைக் கேட்டு, இப்ப என்னுடைய பெயரும் கூட அதில் இருக்கு. ‘நிவின்பாலி கம்பேக்’. ‘ பர்சனலா சொல்லணும்னா, எல்லா படமும் கம் பேக் முயற்சி தான்; இப்போ இந்த படமும் ஒரு கம்பேக் டூ தமிழ் சினிமா.. அப்படி இருக்கட்டும்” என்றார்.

கதாநாயகி அஞ்சலி பேசும்போது,

“எல்லோருக்கும் லார்ஜர் தன் லைஃப் (Larger than life) படங்கள் அப்படின்னு சில இருக்கும்; நாமும் அப்படி பண்ணினா எப்படி இருக்கும் என்று நினைப்போம். எனக்கு இந்த ‘ஏழு கடல் ஏழுமலை’ அப்படி ஒரு அனுபவத்தைத்தான் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது, ஆனால் அது இந்த அளவிற்கு வெளிப்படையாக எல்லோரும் பாராட்டும் அளவிற்கு இருக்கிறது என்பது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நிவின்பாலி ஒரு அற்புதமான கோ-ஸ்டார். அவர் ஸ்பாட்டுக்கு வந்து விட்டாலே தினசரி எனக்கு ஒரு சேலஞ்ச் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக ஒருவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார், அதற்கு நான் எப்படி பண்ணனும் அப்படின்னு பிளான் பண்ணிட்டு போற ஆள் இல்லை நான். ஆனால் இந்த செட்டில் நிவின்பாலி குட்டி குட்டி எக்ஸ்பிரஷனில் வந்து அதை கலக்கி எடுத்துடுவாரு. அதனால நானும் என் பங்குக்கு ஏதாவது பண்ணிக்கிட்டு இருக்கணும், அது ஒரு ஆரோக்கியமான போட்டியாகத்தான் இருந்தது. அது மட்டுமல்ல, முதல் நாளே இந்த நிவின்பாலியுடன் என்னால் ஒரு கம்ஃபோர்ட் ஜோன் உருவாக்க முடிந்தது.

சூரியை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; குற்றாலத்தில் ஒரு முறை படப்பிடிப்பு நடந்தபோது அங்கே ஒரே ஒரு ட்ரெட் மில் தான் இருக்கும். நானும் சூரியும் ரெண்டு பேருமே ஒர்க் அவுட் பண்ணனும்னு ஆசைப்படுவோம், அதனால் ரெண்டு பேருமே அதிலேயே ஓடுவோம்; ஒரு மாதிரி வேடிக்கையாக இருக்கும். வெளியில போய் கிரிக்கெட் விளையாடவும் செய்வோம். இப்பதான் எனக்கு அதெல்லாம் ஞாபகம் வருகிறது. அவரோட நல்ல மனசுக்கு இப்போது அவர் என்ன சாதித்திருக்கிறாரோ அதற்கு எல்லாமே அவர் மிகத் தகுதியானவர். சூரியின் வெற்றி எனக்கு ரொம்பவே பர்சனலா ஃபீல் ஆச்சு; அவருக்கு இதற்கு மேலும் இன்னும் வெற்றி வர வேண்டும். இந்த படத்தில் நடித்த எலி பற்றி சொல்லத் தேவையில்லை, அதுவும் எங்கள் சக நடிகர்தான்; தேங்க்யூ எலி. என்றார்

பாடலாசிரியர் மதி புகழேந்தி பேசும்போது,

“இது எனக்கு முதல் மேடை. நான் அகரம் பவுண்டேஷன் வழியே வந்த மாணவன். இயக்குநர் ராமிடம் ஒரு உதவியாளனாகத்தான் சேர்ந்தேன். இப்போது அவரது படத்திலேயே பாடல் எழுதியிருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இசையமைப்பாளர் சந்தோஷிடம் பாடல் எழுதுவது ரொம்ப வசதியாகவும் எளிமையாகவும் இருந்தது. நிறைய விஷயங்களைக் கேட்டு ஆலோசனை செய்து எழுத முடிந்தது” என்றார்.

இயக்குநர் பார்த்திபன் பேசும்போது,

“இங்கே வந்திருக்கிற சினிமா காதலர்கள், ரசிகர்கள், பத்திரிகை நண்பர்கள் எல்லாருக்கும் வணக்கம்! இளைஞர்கள் எல்லோரும் எவ்வளவு உயரத்தையும் அடையலாம் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் சூரி. அவங்களுடைய வளர்ச்சி ஒரு சாதாரண நடிகரின் வளர்ச்சியல்ல, மிகப்பெரிய உழைப்பு.

இயக்குநர் ராமுக்கு சினிமாவைத் தாண்டி வேறு எதுவுமே தெரியாது; சினிமாவில் அவர் ஒரு மந்திரவாதி. அன்பானவர், அடங்காதவர், நல்ல படம் எடுப்பதில் அசராதவர். அவர் படங்கள் எப்போதும் மிக எலிகண்ட்டாக இருக்கும். ஒவ்வொரு படத்திலும் டைரக்டர் ராமின் கோபமும் ஸ்டைலும்தான் முதல் ஹீரோவாக வெளிப்படும். அதனால்தான் அவரது மவுஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ‘நிவின் பாலிடெக்னிக்’ என்று சொல்லும் அளவிற்கு நிவின் பாலியின் நடிப்புத் தொழில்நுட்பம் அலாதியானது; நடிப்பில் ஒரு ‘நடிக்காத தன்மை’ அவரிடம் இருக்கும். சூரி ரொம்ப பிசியாக இருந்தாலும், தான் வாங்கும் பாராட்டுகளுக்கு நீண்ட குரல்பதிவு மூலம் உடனே பதிலளிக்கும் அந்தப் பண்பு அவரை இன்னும் பல கோடிகள் உயரத்திற்குச் சேர்க்கும். என்றார்

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது,

“எப்போதுமே இயக்குநர் ராம் இருக்கும் மேடையில் ஏறும்போது ஒரு குற்ற உணர்ச்சியோடு தான் ஏறுவேன்; காரணம் முத்துக்குமார் சார் இல்லாத மேடை என்பதால் அந்த உணர்வு என்னிடம் எப்போதும் இருக்கும். அவங்க ரெண்டு பேரோட காம்பினேஷனில் வந்த பாடல்கள் எல்லாமே எனக்கு அவ்வளவு பிடிக்கும். நிவின்பாலியின் அலட்டல் இல்லாத நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதேபோல ‘விடுதலை’ படத்தில் சூரி பிரமிக்க வைத்திருந்தார். எல்லோரும் சொல்வார்கள், வெற்றிமாறன் சார் சூரியை மாற்றிவிட்டார் என்று! ஆனால் அது உண்மை அல்ல; அவர் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்கள் எல்லோரையும் தான் மாற்றி இருக்கிறார். அந்த கதாபாத்திரம் மாறவில்லை, பார்க்கும் நம்முடைய பார்வை மாறுகிறது; அதைத்தான் வெற்றிமாறன் செய்தார். ராம் சார் படங்களில் அவர் இயற்கையைக் கொண்டாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்; வெவ்வேறு விதங்களில் பஞ்சபூதங்களையும் அவர் கொண்டாடுவார்” என்றார்.

மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன்-தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.

ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே

படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம்

இசை: சக்தி பாலாஜி என்ற தொழில்நுட்பக் கூட்டணியுடன் இந்தப் படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தன.

சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று இன்று பெரிய வெற்றி பெற்றுள்ளது.இது சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கை வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பினைத் தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது .இந்த வெற்றி மகிழ்ச்சியை முன்னிட்டு படக்குழுவினர் ஊடகங்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் வகையில் ‘எங்களின் இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்’ என்ற பதாகையுடன் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி சென்னை, வடபழனி பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அதில்

தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் பேசும்போது,

“முதலில் இந்தப் படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள்.இந்தப் படம் வெளியாவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு நான் பார்த்தேன். பார்த்தவுடன் இயக்குநர் பாலாஜியிடம் படம் நல்ல த்ரில்லராக வந்து இருக்கிறது . சரியான தேதியில் வெளியிட்டால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறினேன். இந்தக் தேதியைக் குறிபிட்டபோது நான் பாலாஜியிடம் கேட்டேன் ”இந்தத் தேதி சரியானதுதானா ?அன்றைக்கு ஒன்பது படங்கள் வருகின்றன. ஏற்கெனவே ‘மண்டாடி’ நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்றேன்.அப்போது அவர் “இல்லை சார் இந்தத் தேதியை முடிவு செய்துவிட்டோம் அதற்குக் கொண்டு வருகிறோம்” என்றார்.ஒன்பது படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .அதற்கு ஊடகங்கள் கொடுத்த ஆதரவும் பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவும் தான் காரணம் . எனது வாழ்த்துக்கள் .இதை ஒரு மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன். இத்தனை படங்கள் நடுவில் மக்கள் பெரிய படங்களை தான் பார்ப்போம், பெரிய நட்சத்திர நடிகர் நடித்த படங்களைத்தான் பார்ப்போம் என்றிருக்கிற சூழலில் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்பது கொண்டாடப்பட வேண்டிய வெற்றிதான்.

ஒரு திரைப்படம் எடுக்கும்போது ஒரு நடிகர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் எவ்வளவு பிரச்சினைகளை அந்தப் படம் சந்திக்குமோ அத்தனையையும் இந்தப் படம் சந்தித்திருக்கிறது.அதுவும் அறுபது ,எழுபது சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த நடிகருடன் தொடர்ந்து போக முடியவில்லை என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்து நிறுத்தி விடுவோம் என்று முடிவு எடுப்பது யாரும் சுலபமாக எடுக்க முடியாது.சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் அப்படித்தான் நடந்தது. ஒரு பெரிய நடிகருடன் பிரச்சினைகளால் அந்தப் படத்தை முடிக்க முடியாமல் திணறினேன். படங்கள் வளர்ந்த பிறகு, செலவு செய்த பிறகு எங்களால் அப்படி ஒரு முடிவு ஒன்று எடுக்க முடியவில்லை.படத்துக்காக நீண்ட தூரம் வந்து விட்டோம் ,நிறைய செலவாகிவிட்டது என்று தயங்கினோம்.அப்படிப்பட்ட நிலையில் படத்தை நிறுத்திவிட்டு வேறு படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல .அது தெரிந்து சித்து ஈடுபாட்டுடன் நடிக்க வந்தது பாராட்டுக்குரியது.அவரது நடிப்பு பிரமிப்பாக இருக்கிறது.இன்று திரையரங்குகளில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. நடிகர்கள் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது எல்லாவற்றையும் சரியாகப் பேசிக் கொண்டு ஒப்பந்தம் செய்ய வேண்டும். பிறகு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டியதுதான். சில சமயம் வாரத்திற்கு ஆறேழு படங்கள் வருகின்றன. சில வாரம் எதுவுமே வருவதில்லை. இதை முறைப்படுத்த வேண்டும். அடுத்த வாரம் கூட ஆறுபடங்கள் வருகின்றன. மூன்று படங்கள் முக்கியமான படங்களுக்குக் கூட திரையரங்குகள் கிடைக்கவில்லை. வாரத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மேல் வரக்கூடாது. எல்லாவற்றையும் மீறி இந்தப் படம் வரவேற்பு பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது .இந்தப் படத்திற்கு பிவிஆர் சினிமா கொடுத்த ஆதரவு பெரிய விஷயம். அவர்கள் சிறு முதலீட்டுப் படங்களுக்கும் வாராவாரம் திரையரங்குகள் தர வேண்டும்.படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

படத்தின் நாயகன் சித்து பேசும்போது,

“எப்போதும் தனஞ்ஜெயன் சார் அவர்கள் சிறுபடங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இங்கு வந்ததற்கு நன்றி. இந்தத் தருணத்திற்காக நான் பதினான்கு ஆண்டுகள் காத்திருந்தேன் .சாலிக்கிராமத்தில் தசரதபுரத்தில் எட்டாவது தெருவில் ஒரு சிறிய அறையில் இருந்து கொண்டு தான் சினிமா வாய்ப்பு தேடினேன். எல்லா கம்பெனிகளுக்கும் நிறைய போட்டோ எடுத்துக் கொண்டு சென்று அலைந்திருக்கிறேன்.அது ஒரு பெரிய தேடல்.அப்போது இதில் நிறைய பசி, அவமானம் போன்றவற்றைச் சந்தித்து இருக்கிறேன். நிறைய இடத்தில் போட்டோக்களைக் கொடுத்துவிட்டு உதவி இயக்குநரிடம் இருந்து நாளைக்கு ஓர் அழைப்பு வராதா என்று ஏக்கத்துடன் காத்திருந்த நாட்கள் உண்டு. திரையரங்கு சென்று படம் பார்க்கும்போது நம்முடன் வாய்ப்பு கேட்டவர்கள் எல்லாம் நடித்துப் பெரிய ஆளாகி ஹவுஸ் ஃபுல்லாக படங்கள் ஓடியதையும் பார்த்திருக்கிறேன். அப்போது மகிழ்ச்சியாக இருக்கும்.பொறாமை இருக்காது .ஆனால் மனதில் ஒரு பக்கம் சிறு வருத்தமும் ஏக்கமும் இருக்கும். நமக்கான நாள் என்று வரும்? நமக்கான வாய்ப்பு என்று வரும்? என்று ஒரு ஏக்கம் இருக்கும் .அப்படித் தூக்கமில்லாத நாட்கள் எல்லாம் இருந்திருக்கின்றன. நான் ஆசைப்பட்டது போலப் பல ஊர்களுக்கு திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது ஹவுஸ்புல் காட்சிகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு எத்தனை நாட்கள் ஆசைப்பட்டு இருக்கிறோம்.அது இப்போது நடக்கிறது என்கிறபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது .மிக்க நன்றி. ’ஜிகர்தண்டா’ படத்தில் ஒரு வசனம் வரும் ,சினிமா ஒரு தேவதை மாதிரி அதை மதித்தால் அது திரும்பத் திரும்பத் தேடிக் கொண்டு வரும் என்று.சினிமாவை எந்த அளவுக்கு நாம் விரும்புகிறோமோ அது நம்மைக் கைவிடாது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன் .இது எனக்கு ஒரு ஆரம்பம் தான். ஒரு நல்லதொரு அறிமுகமாக இருந்திருக்கிறது.இந்த கொண்டாட்டத்திற்குக் காரணமாகப் பலர் இருக்கிறார்கள் .ஒரே ஒருவரைச் சொல்ல வேண்டுமென்றால் இயக்குநர் பாலாஜி சகோதரரைச் சொல்வேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் பாலாஜி பேசும்போது,

“இது உண்மையிலேயே ஒரு உணர்ச்சிகரமான தருணம். இப்போதும் அந்த அறுபது -எழுபது சதவீத படத்தை எடுத்து விட்டுத் தூக்கிப் போட்டது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. இந்தப் படம் வருவதற்கு இந்தத் தயாரிப்பாளர்கள் இருவர் முக்கியமானவர்கள். சகோதரர் ஷரண், கோபால் சார் இவர்கள் முக்கியமானவர்கள். அதையும் தாண்டி என் மனைவி, என் சகோதரர், குடும்பத்தினர் , நண்பர்கள் என் என் குழுவினர் உட்பட பலரும் பெரிய பக்க பலமாக இருந்தார்கள்.அதையும் தாண்டி பலரும் எனக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.மீண்டும் ஒரு படத்தைத் தொடங்குவதற்கு எனது குழுவினர் எனக்குப் பெரிய பலமாக இருந்தார்கள். வேல ராமமூர்த்தி சார், ஜெயக்குமார் சார் எனக்குத் துணையாக இருந்திருக்கிறார்கள். சிந்து,ரித்விகா மேம், தர்ஷிகா மேம் நீண்ட நாட்கள் என்னுடன் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் 18 மணி நேரம் கூட வேலை செய்திருக்கிறார்கள்.சித்து என்னுடனே மினி டூர் போல வந்து கொண்டே இருந்தார். என்னுடைய ஒளிப்பதிவாளர் மணிகண்டன், அவருக்கு பெரிய நன்றி.என் முதல் படத்திற்கும் எனது அடுத்த படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவாளர்.எங்களுக்குள் கருத்து வேறுபாடு வரும்,ஆனால் எதையும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளலாம். சண்டை போட்டாலும் உடனே மறந்துவிட்டு டீ சாப்பிடக் கூப்பிட்டால் வருவார். அப்படிப்பட்டவர்தான் எடிட்டர் ராஜா ஆறுமுகமும். ஒரு படம் எடுத்து முடிக்கப்பட்டதை ஏற்கெனவே ஒரு நடிகரை வைத்து எடுத்த படத்தில் தேவையற்றதைத் தூக்கி விட்டுத் தேவையானதை எடுத்து மீண்டும் எடுக்கப்பட்டதோடு சேர்த்துக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது சுலபமானது கிடையாது.அவர் செய்தார். அவருக்கு நன்றி. என்றார்

நடிகை ரித்விகா பேசும்போது,

“இங்கே வந்து தனஞ்ஜெயன் சார் வந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.ஊடகங்களின் விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியது மக்களிடம் போய்ச் சேர்ந்து இருக்கிறது . திரையரங்குகளில் படம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது.ஆனாலும் இது போதாது. மேலும் இந்தப் படம் போய்ச் சேர வேண்டும். பிரதான ஊடகங்கள் தவிர்த்து சமூக ஊடகங்களிலும் இதை நிறைய பேர் ரீல்ஸ் போட்டு விளம்பரம் செய்து வருகிறார்கள் .இந்தப் படத்தை மேலும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லா திரையரங்குகளுக்கும் கூட்டம் வர வேண்டும். மக்கள் அனைத்துப் படங்களையும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் .அப்போது தான் அந்தத் திரையரங்க அனுபவம் கிடைக்கும் .நான் முன்பே சொன்னேன் இந்தப் படம் ஒரு திரையரங்கு அனுபவத்திற்கான படம் என்று .ஓ டி டி வரும் வரை காத்திருக்க வேண்டாம் .எந்தப் படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு வந்து பாருங்கள்.அப்போதுதான் சினிமா வளர்ச்சி பெறும்”என்றார்.

நடிகை தர்ஷிகா பேசும் போது,

“வேர்ட் ஆப் மௌத் என்பதை நான் நம்புகிறேன்.சொல் என்பது மிக முக்கியமானது .அதற்கு நிறைய சக்தி இருக்கிறது.நேர்நிலையாக ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அது நாலைந்து பேருக்கு நேர்நிலையாகச் செல்லும் .எதிர்மறையாக ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அது பத்துப்பதினைந்து பேருக்கு எதிர்மறையாகச் செல்லும்.முதல் முதலில் இந்த படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னதை வைத்து இந்தப் படத்தைப் பார்க்க வந்திருக்கிற கூட்டம் பெரியது. அதற்கு முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி. பொதுவாக முதல்படம் செய்யும்போது எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கேட்டாலும் அது எனது முதல் படம் என்று பெருமையாகச் சொல்ல வேண்டும். அப்படி சொல்லும்படியாக இந்த ’தி டார்க் ஹெவன்’ படம் அமைந்திருக்கிறது.என் முதல் படம் என்பதை பெருமையாகக் கூறுவேன்.அனைவருக்கும் நன்றி “என்றார்.

இந்தச் சந்திப்பில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, நடிப்புக் கலைஞர்கள் வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார், ஆர்த்தி, சுமித்ரா ,பிரதீப்,விவேக், செல்வா, மனோஜ் , அலெக்ஸ், டேனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மீசைய முறுக்கு 2 பத்திரிகையாளர்கள் சந்திப்பு

கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

சுந்தர் சி – குஷ்பு தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யூடியூபர் ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் ஹிப்ஹாப் ஆதி:

‘மீசை முறுக்கு’ முதல் பாகம் என்னுடைய சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ‘மீசை முறுக்கு 2’ என்பது ஒரு இசைக் கலைஞனின் கதை. இசை பற்றிய படம். இதில் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஒரு முக்கியமான தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மறைந்த நடிகர் விவேக் சார் நடித்த இடத்திற்கு யாரையும் ஈடு செய்ய முடியாது என்றாலும், இந்தக் கதாபாத்திரத்திற்கு பாபா பாஸ்கர் மாஸ்டர் சரியாக இருப்பார் என்று நம்பி அவரை நடிக்க வைத்தேன். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் ஒரு சிறந்த நடிகராகவும் உருவெடுப்பார்.

என்னுடைய சுயாதீன பாடல் மூலமாகத்தான் ஹர்ஷத் கானை முதன்முதலில் அறிமுகப்படுத்தினேன். ‘பய் பய் பய்’ என்ற அந்தப் பாடலை எடுத்து, அவரை ஒரு நடிகராக உலகிற்கு அடையாளம் காட்ட முயன்றேன். அதிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்து விருதெல்லாம் வாங்கியிருப்பதைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

இந்தப் படத்தில் ஹர்ஷத் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில், தனது சொந்த பெயரிலேயே நடித்துள்ளார். பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தின் நகைச்சுவைப் பகுதியை அவர் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். மேலும், படத்தைப் பற்றிய விளம்பரப் பணிகளையும் அவர் முன்னின்று நடத்தி வருகிறார். ஹிப்ஹாப் என்பது எப்படி மேலைநாடுகளின் வீதிப் பாடலாக இருந்து உலக அளவில் முதன்மைப் பெற்றதோ, அதேபோல நம்ம ஊரின் ‘கானா’ இசையும் சர்வதேச அளவில் கொண்டாடப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

கானா என்பது வெறும் லோக்கல் இசை கிடையாது. அது மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் ஒரு அற்புதமான கலை. இந்தத் திரைப்படத்தில் 80-கள், 90-கள் மற்றும் தற்கால கானா இசை என மூன்று வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ‘மீசை முறுக்கு 2’ படத்திற்குப் பிறகு கானா கலைஞர்களுக்கான அங்கீகாரமும், கானா இசை மீதான பார்வையும் முற்றிலும் நேர்மறையாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தில் கெட்டிகா, சைத்ரா, ரம்யா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். யோகி பாபு அண்ணன், நாசர் சார், கருணாஸ் அண்ணன் எனப் பல முன்னணி நடிகர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். மேலும், ‘அன்பறிவு’ படத்தின் இயக்குநர் அஸ்வின் இதில் கிரியேட்டிவ் புரொட்யூசராகப் பணியாற்றியுள்ளார். 12 பாடல்களைக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான கொண்டாட்டமாக இருக்கும்” என்றார்.

புது படைப்பாளிகளுடன் பயணம் பிடிக்கும்- நடிகர் சமுத்திரக்கனி

ரென்டெக் ஃபிலிம், லயன் வி ஃபிலிம்ஸ், அன்னை சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து வழங்க, விஜய் ஆர். ஆனந்த்  இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, தம்பி ராமையா, டேவிட் டிட்டோ, தனுஜா, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்  ‘கஸ்தூரி வீடு’. இத்திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. படத்தில் ஒளிபரப்பப்பட்ட ட்ரெய்லர் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருந்ததாக விழாவில் கலந்து கொண்டவர்கள் பேசிக் கொண்டனர்.
 
இவ்விழாவில் தயாரிப்பாளர் லயன் டாக்டர் வகேஷ் வரவேற்புரையாற்றிப் பேசும் போது:
 
“இந்த படம் ஆரம்பித்தது ஒரு பிசினஸ் மீட்டிங்கில் தான் அப்பொழுதுதான் இயக்குநரின் அறிமுகம் கிடைத்தது. அரை மணி நேரத்தில் கதையை விளக்கினார். எவ்வளவோ படங்கள் பார்த்து இருக்கிறோம். எவ்வளவோ கதைகள் பார்த்திருக்கிறோம். ஆனால் இது புதிதாக இருந்தது. ஏதோ ஒன்று புதிதாக சுவாரஸ்யமாக இருப்பது தெரிந்தது.அரை மணி நேரத்தில் சொன்ன கதையில் எனக்கு நம்பிக்கை வந்து படத்தைத் தொடங்கலாம் என்று கூறிவிட்டேன்.அப்படித்தான் இந்தப் படம் தொடங்கப்பட்டது.
 
இயக்குநர் மிகவும் அர்ப்பணிப்பு உள்ள மனிதர்.படப்பிடிப்பில் அவரது கடின உழைப்பைப் பார்த்திருக்கிறேன் படப்பிடிப்புக்கு எப்போதாவது நான் சொல்லும் போது எல்லோரும் பரபரப்பாக இருப்பார்கள். அந்தந்த வேலை அப்படியே நடக்கட்டும் என்று நான் விட்டு விடுவேன்.இயக்குநர் மிகவும் அர்ப்பணிப்புள்ள மனிதர், கடின உழைப்பாளி. அவரது உழைப்புக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
 
நான் பல தொழில்களில் ஈடுபட்டு வெற்றி பெற்று இருக்கிறேன். இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறேன். இதிலும் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன் .அந்த அளவிற்கு படம் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. இங்கே வாழ்த்துவதற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்றார்.
 
ரென்டெக் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ராணி ஸ்ரீ ரெட்டி பேசும் போது:
 
“நான் வெவ்வேறு பிசினஸில் நான் இருந்தேன். இப்போதுதான் திரைப்படத்துறைக்கு வந்திருக்கிறேன்.
சகோதரர் இயக்குநர் விஜய் ஆனந்த் என்னிடம் அரை மணி நேரத்தில் ஒரு கதை சொன்னார்.நானும் எனது கணவரும் கேட்டுக் கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் விரிவாகக் கதை சொன்னார். எந்தெந்த பாத்திரத்தில் யார் நடிப்பது என்பது வரை தெளிவாகக் கூறினார்.
 
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா என்றார். பார்க்கலாம் என்று சொன்னேன். அடுத்த பத்து நிமிடங்களில் வந்து அழைத்தார். பூஜை என்றார்கள்,வந்துவிட்டேன். அப்படி அன்று ஆரம்பித்தது தான் இன்று வரை வெற்றிகரமாகத் தொடர்கிறது. 
 
எனது பிசினஸ் எல்லாம் வெற்றி பெறுவதற்கு எனது தாய் தந்தையின் ஆசீர்வாதம் பலமாக இருந்தது. அதேபோல எனது கணவரின் ஆதரவும் பக்கபலமாக இருந்தது. இன்று வரை அதுதான் தொடர்கிறது.இந்தப் படத்தின் வெற்றி ஊடகங்கள் கையில் தான் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். இந்தப் படக்குழுவினரை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
 
விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர்  ஜி. கே. எம். தமிழ்க்குமரன் பேசும்போது:
 
“சினிமா என்பது ஒரு கனவு உலகம். முதலில் படம் எடுக்கும் போது ஒரு கனவோடு வருவார்கள். இந்தத் தயாரிப்பாளர்கள் முதல் முறையாக இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். படம் எடுக்கும் தயாரிப்பாளர், இயக்குநர் நடிப்பவர்கள் ,தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாம் பெரிய கனவோடு வருவார்கள்,நானும் அப்படித்தான் ஒரு கனவோடு வந்தேன்.
 
படம் தயாரிப்பது மிகவும் கடினமான காரியம். சில தயாரிப்பாளர்களைப் பார்க்கும்போது அவர்கள் படும் சிரமங்களைப் பார்க்கும் போது பாவமாக இருக்கும்.சினிமா நல்ல தொழில் .ஆனால் அதைச்சரியாகச் செய்ய வேண்டும்.இன்று ‘மண்டாடி’ படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தயாரிப்பாளருக்குப் பெரிய லாபம் வந்துள்ளது.
 
இந்த ‘கஸ்தூரி வீடு’ ட்ரெய்லர் பார்த்தேன். நன்றாக உள்ளது. திரைப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி விடைபெறுகிறேன். நன்றி” என்றார்
 
இயக்குநர் பவித்ரன் பேசும்போது:
 
கமலா திரையரங்கில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இதன் உரிமையாளர் சினிமாவை நேசித்தவர்.
 
அந்த அரங்கிலே நடைபெறும் இந்த விழாவில் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் இயக்குநர் விஜய் ஆனந்த் எனக்கு பல காலமாகத் தெரிந்தவர். அவர் கடினமான உழைப்பாளி. அவரது ட்ரெய்லரைப் பார்த்த போது நன்றாக இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களைக் கவரும்படியும் குழந்தைகளைக் கவரும்படியும் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் என்பது வரும் காட்சிகளில் இருந்து தெரிகிறது. வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார்.வித்தியாசமான கலைஞர்கள் வரும்போது நீங்கள் ஆதரிக்க வேண்டும்; ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
தமிழக அரசு சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் மானியம் வழங்குவதற்கு சம்மதித்துள்ளது. இது சினிமா அரசு நிறைய செய்யும் என்று நம்புகிறோம். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
 
இயக்குநர் ராஜகுமாரன் பேசும்போது:
 
“இந்த கமலா திரையரங்கில் அடித்துப் பிடித்துக் கொண்டு படம் பார்த்தது முதல் பல்வேறு நினைவுகள் வருகின்றன. எங்கள் இயக்குநரின் பூவே உனக்காக படத்துக்காக 225 ஆவது நாள் கேடயம் வாங்கியது, சூரியவம்சம் படத்திற்காக 125 ஆவது நாள் கேடயம் வாங்கியது, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்திற்காக 250 ஆவது நாள் கேடயம் வாங்கியது போன்ற நினைவுகள் எனக்கு வருகின்றன.
 
இந்த ‘கஸ்தூரி வீடு’ படத்தை இயக்கியிருக்கும் விஜய் ஆனந்த் கடினமான உழைப்பாளி .விழாவுக்கு அழைப்புகளை ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து அழைத்தார். இந்த கஸ்தூரி வீடு படம் ஒரு கவனிக்கத்தக்க ஒரு படமாக இருக்கும் .அதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
இன்று திரையுலகில் அனைவருக்கும் பிடித்தவராக இருக்கிறார் சமுத்திரக்கனி. அவர் உள்ளங்கை நெல்லிக்கனி, திசையெங்கும் பறந்து வெற்றிக் கனி பறிக்கும் தங்கக் கனி. எளிய மனிதர், கடின உழைப்பு கொண்டவர். நண்பர்களுக்காக உதவியாக இருப்பவர். அவரும் இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
இயக்குநர் பேரரசு பேசும் போது:
 
“இந்த படத்தில் சமுத்திரக்கனி சார் நடித்திருக்கிறார் அவர் இன்று ஒரு பான் இந்தியா நடிகர். ஆந்திரா சென்றாலும் கேரளா சென்றாலும் அவர் பேனர் போஸ்டரில் அவர் படம் இருக்கிறது. அந்த அளவிற்கு அவர் பல மொழிகளில் நடித்து வருகிறார். அப்படிப்பட்டவர் இது மாதிரி சிறிய படங்களுக்கு ஆதரவு கொடுத்து நடித்திருப்பது பாராட்டத்தக்கது.
 
வீடு என்றாலே பெண்கள் பெயர் தான் விளங்கும். இது ‘கஸ்தூரி வீடு’. ஆண்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்கள் பெயரை வீட்டுக்குச் சொல்ல மாட்டார்கள். பெண்கள் பெயரில் தான் இன்னார் வீடு என்று அழைப்பார்கள். இப்போது ஆக்சன் படங்களுக்கும் பேய்ப்படங்களுக்கும் வித்தியாசமில்லை.
 
பேய்ப் படங்களில் வருகிற அறுக்கிறது, உடைப்பது, தலையை முறுக்குவது போன்ற காட்சிகள் எல்லாம் ஹீரோக்கள் நடிக்கும் ஆக்சன் படங்களில் வருகின்றன, பேய்ப் படத்திற்கும் ஆக்சன் படத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டது. விஜய் ஆனந்தும் அப்படி ஒரு பேய்ப் படத்தை எடுத்திருக்கிறார்.
 
இந்தப் படத்தில் ஆன்மீகம் இருக்கிறது, பேய் இருக்கிறது, சென்டிமென்ட், அறிவியல் எல்லாமும் கலந்து இருக்கிறது. இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
 
படத்தின் இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த் பேசும்போது:
 
“நான் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்திருக்கிறேன். ஒரிசாவுக்கு ஒரு முறை படப்பிடிப்புக்குச் சென்றபோது,
 
அந்த ஓட்டலில் தமிழ் சேனலே வரவில்லை. ஒரே ஒரு தமிழ் சேனல் மட்டும் வந்தது. அதை ஆன் செய்த போது சூப்பர் ஸ்டார் நடித்த ‘வெற்றி நிச்சயம் ,இதுவேத சத்தியம் ‘என்ற பாடல் ஒலித்தது. இடையில் ஒரு விளம்பரம் வந்தது.
 
அது ஒரு விழிப்புணர்வு விளம்பரம். அதில் நன்றாக உடையணிந்து ஸ்டைலாக ஒரு நடிகர்-இயக்குநர் வந்தார். அவரை நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். அவர்தான் சமுத்திரக்கனி அவர்கள். அவரை வைத்து ஏன் ஒரு கதை செய்யக்கூடாது என்று நினைத்தேன். இந்தக்கதை தோன்றியது. நாள் பூரி ஜெகநாதர் கோயிலில் இரண்டு விஷயங்கள் கிடைத்தன. ஒன்று : படத்தின் தலைப்பு கஸ்தூரி என்பது, அந்தப் பெயரில் திரைப்படமாக எடுப்பது, இன்னொன்று: ஹாரர் பேய்ப் படமாக எடுப்பது என்று, இப்படி இரண்டு விஷயங்கள் கிடைத்தன. 
 
முதலில் 50 ஆயிரம் ரூபாய் வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் தான் இந்த ‘கஸ்தூரி வீடு’. இந்த படத்திற்கு சமுத்திரகனி சார் வந்த பிறகு, பெரியபடமாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் அவரை எப்படி அணுகுவது அவரிடம் எப்படி வேலை வாங்குவது என்று எனக்குப் பயமாக இருந்தது. தயக்கமாக இருந்ததது. ஆனால் அனைத்தையும் அவர் மாற்றி அற்புதமாக நடித்துக் கொடுத்தார்.
 
படத்தின் கதாநாயகன் பற்றி சொல்ல வேண்டும், அவரைப் பார்த்தபோது ‘வருஷம் 16’கார்த்திக் தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர் அற்புதமான திறமைசாலி. சொல்வதை எளிதாகப் புரிந்து கொண்டு சரியாக நடித்துக் கொடுப்பார். கதாநாயகி தனுஜா எனது நண்பரின் மகள். அவர் எனது குழந்தை போன்றவர். காலம் கொண்டு வந்து சேர்த்திருக்கிற குழந்தை. நடிக்கும் போது அவருக்கு எனக்கும் நல்லிணக்கம் வந்து அற்புதமாக நடித்துக் கொடுத்தார். நிறைய சிரமமான காட்சிகளை நடித்துக் கொடுத்தார். பயந்து அழும் காட்சிகளில் கிளிசரின் போடாமலேயே நடித்தார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
 
படம் ஆரம்பித்ததை விட முடித்தபோது பெரிதாகி செலவு நான்கு மடங்கு ஆகிவிட்டது . பலரும் இவ்வளவு செலவு தேவையா என்றார்கள். ஆனால் படம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் செலவு செய்யத்தான் வேண்டும் என்று நான் கூறுவேன். இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள்.இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
 
படத்தில் நடித்த நடிகர் டேவிட் டிட்டோ பேசும்போது:
 
“நான் இங்கே வந்திருப்பதற்கும் படத்தில் நடித்திருப்பதற்கும் ஒரே காரணம் இயக்குநர் தான். அவர் இல்லாமல் நான் இல்லை.அவருக்கு முதலில் என் நன்றி.இந்தப் படத்தில் நான் சிரமப்பட்டு நடித்ததாகக் கூறினார். ஆனால் இந்தப் படத்திற்காக இயக்குநர் பட்ட சிரமங்கள் ஏராளம். அதற்கு முன்பு இதெல்லாம் சாதாரணம்.
 
இந்தப் படத்திற்காக பேய் போல மேக்கப் போட்டு இருந்த பெண்ணைப் பார்த்து நான் பயந்து விட்டேன்,அந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்தது. ஒரு வீட்டில் படப்பிடிப்பிற்காகச் சென்றோம். அது நிஜமான பேய் வீடு என்று அவர் கூறிய போது எனக்கு இன்னும் பயமாக இருந்தது.படத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள்” என்றார்.
 
படத்தின் நாயகியாக நடித்திருக்கும் தனுஜா பேசும்போது:
 
“ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இதே கமலா தியேட்டரில் என்னுடைய இன்னொரு படத்திற்காக வந்திருந்தேன்.அப்போது ஒரு பகுதியாக இருந்த எனது பாத்திரம் இப்போது முழுப் படத்திலும் வருவது போல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இன்று மீண்டும் வந்திருக்கிறேன் காரணம் எனது அப்பா. நான் நல்ல வேடங்களில் நடிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். இதில் படம் முழுக்க நான் வருவது போல் கிடைத்திருக்கும் வாய்ப்புக்கு நன்றி.
 
எனக்கான கதாபாத்திரம் அமைந்திருப்பது மகிழ்ச்சி. சமுத்திரகனி சார் மரியாதைக்குரிய நபர்.அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு கொடுங்கள் “என்றார்
 
இயக்குநர் நடிகர் சமுத்திரக்கனி பேசும் போது:
 
“இயக்குநர் நன்றி கூறிய அத்தனை பேருக்கும் நானும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், ஒரு நல்ல பயணம் இது. விஜய் ஆனந்தை சந்தித்து பேசும் போது சொன்ன விஷயங்கள் அவரோடு பயணப்பட்டது தயாரிப்பாளர் மேடம் அவர்களோடு பயணப்பட்டது எல்லாமே அற்புதமான விஷயம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதுப் புது மனிதர்களோடு பயணம்செய்வது இறைவன் நமக்குக் கொடுத்த கொடை என்று நினைக்கிறவன் நான்.
 
புதுப்புது மனிதர்களை பார்க்க வேண்டும். புது புது படைப்பாளிகளுடன் பயணம் செய்வது எனக்கு அவ்வளவு பிடிக்கும். அப்படித்தான் இந்த படத்திற்கும் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். இந்த விழாவிற்கு நான் நேற்று இரவு படப்பிடிப்பு முடிந்து விமானம் பிடித்து வந்திருக்கிறேன்.இந்த மாதிரிப் படங்களுக்குத்தான் ஒரு முகம் வேண்டும். அப்படி எல்லோரும் விரும்புவார்கள். யாராவது ஒருவர் முன்னாடி வந்து நிற்க வேண்டும். அப்படி ஒரு ஆசை இருக்கும். நான் இப்போது ஒரு படம் எடுத்திருக்கிறேன். அதற்கு நான் இன்னொரு முகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் யாரைத் தேடுகிறேனோ அவர் ஒரு படம்எடுத்தால் அவர் இன்னொரு முகத்தைத் தேடுவார். இப்படி மாறி மாறித் தேடிக்கொண்டே இருப்பது தான் நம் பயணமாகவே இருக்கும்.
 
இயக்குநர் விஜய்யிடம் ஒன்று சொல்வேன். அதுதான் நிஜம். நாம் சரியாக உழைத்தால் ஒரு மேஜிக் நடக்கும். அந்த மேஜிக் உள்ளே நாமெல்லாம் இருப்போம். அதை மட்டும் நம்புவோம். யாரும் வந்து எந்தப் படத்தையும் தூக்கி எல்லாம் கொண்டு வந்து நிறுத்திட முடியாது. நம் வேலையை நாம்செய்வோம்; 100 சதவீதம் செய்வோம். உண்மையாக உழைப்போம். மக்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
 
என் குருநாதர் சொல்வார் “நீ உண்மையா உழைச்சிட்டின்னா அது திரையில தெரியும். உன் உழைப்புதான் ஒரு பெரிய அரணா நிக்கும்”னு சொல்லுவாரு. அதற்கு ஒரு உதாரணம் தான் ‘மண்டாடி’ சூரியோட திரைப்படம். அவருடைய உழைப்புதான்,அந்த இயக்குநரும் அதில் பங்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுடைய உழைப்பும், அந்த அசுர உழைப்புதான் அந்தப் படத்துக்கான ஒரு பெரிய முகமா வந்து நிற்கும். அப்படி நம்முடைய உழைப்பை 100% நாம் போட்டால் போதும்.
 
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்! தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்! இதில் பணிபுரிந்ததொழில்நுட்பக் கலைஞர்கள் நடிகர் நடிகையர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், வெல்வோம்! என்றார்.

‘பாரிஸ் கஃபே’ விமர்சனம் RATING 3/5

கண்மணி ரங்கநாதன் மற்றும் வெங்கல் லிங்கேஸ்வரன் தயாரிப்பில், தண்டர் மீடியா மற்றும் எல் வி என்டர்டைன்மெண்ட் சார்பில் குரு சோமசுந்தரம், அனு மோள், நயனா சாய், சாய் விக்கி, விஜய் விஷ்வா அர்ச்சனா நடிப்பில் சரஜ் சீலன் எழுதி இயக்கி இருக்கும் படம் தான் ‘பாரிஸ் கஃபே’

விமர்சனம்

மருத்துவரான குரு சோமசுந்தரம் மனைவி அனுமோல் மீது பெரும்பாசம் கொண்டவர். சமூகநலனுக்காக குரல் கொடுக்கும் அனுமோலும் கணவன் மீது பாசம் கொண்டவர் தான். குரு சோமசுந்தரம் சூழ்நிலை அழுத்தம் காரணமாக ஒரு காதல் ஜோடியின் கொலையை தற்கொலை என போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கொடுத்து விடுகிறார்.

அதில் கோபப்படும் அனுமோல் கணவரை விட்டுப் பிரிகிறார். இவர்களைச் சேர்த்து வைப்பதற்காக மகள் அர்ச்சனா அவரின் காதலன் விஜய் விஷ்வா இருவரும் வருகிறார்கள். பெரிய ஜோடியை சின்ன ஜோடி சேர்த்து வைத்ததா? அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் ரீ ஓப்பன் ஆகி என்ன விளைவுகளை ஏற்படுத்தியது? என்பதே படத்தின் கதை.

குருசோமசுந்தரம் குற்றவுணர்ச்சியை சுமக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அனுமோல் பெரியார் அம்பேத்கர் வழிமொழிந்த பெண்ணாக நடித்து கவனம் ஈர்க்கிறார். விஜய் விஷ்வா ஒரு சப்போர்ட்டிங் ஹீரோவாக அசத்துகிறார். அர்ச்சனா கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஒரு காதல் ஜோடி இயல்பாக நடித்துள்ளனர். இயக்குநர் சராஜ் சீலன் ஒரு சோசியல் கன்டென்ட்-ஐ கையிலெடுத்துள்ளார். அந்தக் கன்டென்டில் கொஞ்சம் கமர்சியல் சேர்த்து ஓரளவு இன்ட்ரெஸ்டிங்காகவே கதை நகர்கிறது. படம் முழுக்க ஆங்காங்கே காமெடிகள் வைத்து முக்கிய திருப்பத்துக்குள் கதை போனதும் எமோஷனலாக சீரியசாக முடிய வேண்டிய படம் இது. மாறாக, கடைசி நேரத்தில் வில்லனை எல்லாம் காமெடி ஆக்கி குரு சோமசுந்தரம் கையில் துப்பாக்கி கொடுத்து காமெடி செய்து படத்தை சற்று நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள். கிளைமேக்ஸ் ரசிக்க வைக்கிறது.

பாரிஸ் கஃபே- ஜோடியின் கருத்து.

‘கோல்ட் கால்’ விமர்சனம் RATING 3/5

வேலை தேடி அலையும் நான்கு இளைஞர்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை கிடைக்கிறது. வேலை கிடைத்த சந்தோஷத்தைவிட, வேலையைச் செய்யாமல் எப்படி சமாளிப்பது என்பதில்தான் அவர்களுக்கு அதிக ஆர்வம். நிறுவனத்தின் இலக்குகளைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், தங்களுக்குத் தெரிந்த விதத்தில் பொழுதைக் கழிக்கும் இந்த நால்வருக்கும் ஒரு கட்டத்தில் பிரச்சினை காத்திருக்கிறது.

கொடுக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் இல்லையென்றால் வேலையை இழக்க நேரிடும் என்ற நெருக்கடி உருவாகிறது. இதற்கிடையில் ஒரு பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு சிறுவன் கடத்தப்படுவது கதையின் போக்கையே மாற்றுகிறது. அந்தக் கடத்தல் வழக்கின் நிழல் இந்த நான்கு இளைஞர்களின் மீதும் விழ, அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை. 

சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி & கீர்த்தனா புல்கி தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். குறிப்பாக, சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் தருணங்களிலும், பிரச்சினையிலிருந்து தப்பிக்க முயலும் காட்சிகளிலும் இயல்பான நடிப்பு படத்திற்கு நகைச்சுவைத் தன்மையைச் சேர்க்கிறது. வேலை மீது அக்கறையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தங்களால் சமாளிக்க முடியாத ஒரு பெரிய பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்ளும்போது ஏற்படும் குழப்பங்களே படத்தின் பிரதான பொழுதுபோக்கு.

படத்தின் மிக முக்கியமான பலம் அதன் பெங்களூரு களம். நகரத்தின் இயல்பான சூழலைப் பயன்படுத்தி கதை நகர்த்தப்பட்டிருப்பது படத்திற்கு தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது. குறிப்பாக, பெங்களூருவின் பன்மொழிச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் வெவ்வேறு மொழிப் பின்னணியைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பது ரசிக்க வைக்கிறது. இயக்குநர் தம்பிதுரை எத்துராஜ், கதையை நேரடியாகச் சொல்லாமல் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்.

கோல்ட் கால்- டார்கெட் வலி. 

‘தி டார்க் ஹீவன்’ விமர்சனம் RATING 3/5

பாலாஜி இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் ‘தி டார்க் ஹீவன்’

விமர்சனம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மெக்கரை என்ற மலைக்கிராமத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்படும் சில மர்மமான சம்பவங்கள், நிகழ்காலத்திலும் எவ்வாறு தொடர்கின்றன என்பதுதான் படத்தின் கதைக்களத்தின் முக்கிய அடித்தளம்.

மெக்கரையில் உள்ள கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஒரு மர்மமான புத்தகம் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால், அதை யார் படிக்கத் தொடங்கினாலும், அவர்களின் வாழ்க்கையில் அடுத்து நடைபெறவிருக்கும் சம்பவங்கள் அதில் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அந்த நபர் எப்போது, யாரால், எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது கதைக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

இந்த மர்மமான புத்தகத்தைச் சுற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களுக்கும், நிகழ்காலத்தில் நடைபெறும் தொடர் மரணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே கதையின் முக்கிய முடிச்சாக அமைந்திருக்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நூலகரின் மகள் தனது தந்தைக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக மெக்கரைக்கு வருகிறார். அதே நேரத்தில், கிராமத்தில் மர்மமான முறையில் தொடர்ந்து நடைபெறும் தொடர் மரணங்களை விசாரிப்பதற்காக காவல்துறை அதிகாரியாக சித்து அங்கு வருகிறார்.

கிராம மக்கள் இந்த தொடர் மரணங்களுக்கு பின்னால் வன தெய்வத்தின் சாபம் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் காவல்துறை அதிகாரியான சித்து, இதை இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவமாக பார்க்காமல், இதன் பின்னால் ஒரு சைக்கோ கொலையாளி இருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்குகிறார். இந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது யார்? என்பதே கதை.

சித்து, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். தர்ஷிகா, ரித்விகா ஆகியோருக்கும் கதையோட்டத்திற்கு தேவையான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருவரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.

நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, அருள் D சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்கள் பார்வையாளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவே படத்தின் மர்மத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது. கதாபாத்திரத்தின் தீவிரத்தையும், விசாரணைக் காட்சிகளின் அழுத்தத்தையும் உணர்ந்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, கதையின் மர்மம் அதிகரிக்கும் நேரங்களில் அவரது நடிப்பு படத்தின் பதற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

தி டார்க் ஹீவன்- த்ரில் கலவை.

நடிகை சிம்ரனுக்கு சிறந்த நடிகை விருது! எந்த படத்திற்கு தெரியுமா?!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், Tourist Family திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனக்கான ஒரு வலுவான கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற சிம்ரன், Tourist Family படத்தில் தனது கதாபாத்திரத்தை மிக இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் வெளிப்படுத்தியிருந்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்ற நிலையில், தற்போது அந்த நடிப்பிற்கான அங்கீகாரமாக SIIMA விருது கிடைத்துள்ளது.
 
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ள சிம்ரனுக்கு, இந்த விருது அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. “மீண்டும் இந்தப் போட்டியில் நான் இருக்கிறேன்” என்பதை தனது தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களாலும், சிறப்பான நடிப்பாலும் நிரூபித்திருக்கும் சிம்ரனுக்கு இந்த SIIMA அங்கீகாரம் மேலும் ஒரு மகுடமாக அமைந்துள்ளது.
 
மேலும், Tourist Family திரைப்படம் SIIMA 2026-ல் மொத்தம் 6 விருதுகளை வென்று, அந்த விழாவில் அதிக விருதுகளைப் பெற்ற தமிழ் திரைப்படமாகவும் கவனம் பெற்றுள்ளது. படத்தின் நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் தங்களுக்கான விருதுகளைப் பெற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
 
ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் வசூல் அல்லது வரவேற்பைத் தாண்டி, அதில் பணியாற்றிய ஒவ்வொருவரின் திறமைக்கும் கிடைக்கும் அங்கீகாரத்தில்தான் முழுமை பெறுகிறது. அந்த வகையில், Tourist Family படக்குழுவின் இந்த 6 SIIMA விருதுகள், திரைப்படத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் தரமான படைப்புக்கும் கிடைத்திருக்கும் பெருமையான அங்கீகாரமாக அமைந்துள்ளது.
 
சிம்ரனின் இந்த SIIMA வெற்றி, அவரது திரைப்பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்திற்கான தொடக்கமாகவும், சிறந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து தனது திறமையை நிரூபிக்கிறார் என்பதற்கான வலுவான சான்றாகவும் அமைந்துள்ளது.