Wednesday, September 11, 2024
Blog

Goat Review: கோட் எப்படி இருக்கு?! RATING 3.8/5

தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக விஜய் (எம்.எஸ். காந்தி). அவரின் மனைவியாக சினேகா, தன் மனைவிக்கு தான் செய்யும் தொழிலை ரகசியமாக வைக்கிறார் நம்ம காந்தி. இருவருக்கும் ஜீவன் என்கிற மகன் இருக்கிறார். இந்நிலையில் சினேகா மீண்டும் கர்ப்பமாகிறார். காந்தியின் சிறப்பு குழுவில் சுனில் தியாகராஜன்(பிரசாந்த்), கல்யாண் சுந்தரம்(பிரபுதேவா), அஜய்(அஜ்மல் அமீர்), அவர்களின் பாஸ் நஸீர்(ஜெயராம்) முன்னாள் தலைவராக மோகன் ஆகியோர் இருக்கிறார்கள்.

மோகன் பணத்திற்காக மோசடி செய்து மாட்டிக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறியவர். அவரை கென்யாவில் வைத்து கொலை செய்கிறது விஜய் தலைமையிலான குழு. அடுத்த ஆபரேஷனுக்காக தாய்லாந்து செல்ல வேண்டும். கர்ப்பிணி மனைவி சினேகாவின் தொல்லை தாங்காமல் அவரையும், நான்கு வயது மகனையும் அழைத்துக் கொண்டு செல்கிறார். அங்கு நடந்த ஒரு எதிர் தாக்குதலில் கர்ப்பிணி சினேகாவை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழ்நிலை. அப்போது நான்கு வயது மகன் காணாமல் போகிறார்.

கடத்தியவர்களுடன் அந்த மகனும் விபத்தில் இறக்கிறான். 2008ல் நடந்த அந்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது 2024ல் விஜய், சினேகா பிரிந்து வாழ்கிறார்கள். மாஸ்கோவில் ஒரு வேலைக்காக சென்ற போது அங்கு தன்னைப் போல உள்ள ஒரு இளம் விஜய்யை சந்திக்கிறார். பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை…..

அப்பா காந்தி ஆக, மகன் ஜீவன் ஆக இரண்டு வேடங்களிலும் விஜய் தனது நடிப்பில் கவர்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகிபாபுவும், பிரேம்ஜியும் சிரிக்க வைக்கிறார்கள். ‘நீ பிறக்கிறதுக்கு முன்னாடி இருந்தே அவன் என் நண்பன்டா,’ என பிரசாந்த் சொல்லும் போது அரங்கத்தில் விசில் சத்தம் பறக்கிறது. 

பாடல் பெரிய அளவில் இல்லை, விஜய், த்ரிஷா பாடல் காட்சி ஏமாற்றம் அடைய வைத்துவிட்டது. இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் லாஜிக் இல்லவே இல்லை…. 

கோட் – விஜய் ரசிகர்களுக்கு மட்டும் விருந்து  

தமிழக வீராங்கனைகள் வெற்றி!

பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே போட்டியில் மனிஷா ராமதாஸ் வெண்கலம் வென்றார்.

17வது பாராலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் கடந்த 28ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. 5ஆம் நாளான இன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் துளசிமதி முருகேசன் சீனாவின் யாங் கியூக்ஸியாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 21 – 17, 21 – 10 என்ற புள்ளிக் கணக்கில் கியூக்ஸியாவிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் துளசிமதி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இதேபோன்று மற்றொரு போட்டியில் மனிஷா ராமதாஸ் டென்மார்க்கின் கேத்ரின் ரோசென்கிரென்னை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21- 12, 21 – 8 என்ற புள்ளிக் கணக்கில் மனிஷா வெற்றி பெற்றார். இதன்மூலம் வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றார்.

இவர்கள் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

22வது இடத்தில் இந்தியா

ஆடவருக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். பாட்மின்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் 22வது இடத்தில் இந்தியா உள்ளது.

 

 

சந்தீப் கோஷ் கைது: CBI விசாரணை!

கல்லூரி முதல்வராக இருந்தபோது நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடைப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டுவந்த முதுநிலை பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் 2 வாரங்களாக சிபிஐ அதிகாரிகள் சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொல்கத்தாவிலுள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான முதுநிலை பெண் மருத்துவர், கல்லூரியில் உள்ள கருத்தரங்கில் ஆக. 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம் மட்டுமின்றி, கல்லூரியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அவற்றிற்கு கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுப்பப்பட்டது. முதுநிலை மருத்துவர்கள் தேர்ச்சிக்கு பணம் பெறுவது, மருத்துவமனையில் போதைப் பொருள் புழக்கம் – கடத்தல் போன்ற புகார்கள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். சந்தீப் கோஷிடம் தொடர்ந்து 15 நாள்களுக்கு இரு இடங்களில் விசாரணை நடைபெற்றது. முதலில் கொல்கத்தா பிந்தாநகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நிஜாம் மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டது. அங்கு வைத்து சிபிஐ அதிகாரிகள் அவரை இன்று !கைது செய்தனர்.

முன்னதாக கொல்கத்தாவின் பெலிகத்ரா குடியிருப்புப் பகுதியில் உள்ள சந்தீப் கோஷின் இல்லத்தில் கடந்த 25ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மருத்துவமனையில் பணமோசடி நடைபெற்றதாக எழுந்தப் புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

விஜய் மாநாடு நடத்த 21 கேள்விகள்! என்னன்ன? வாங்க பார்ப்போம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே செப்டம்பர் 23-ஆம் தேதி மாநில மாநாடு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், 21 கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கோரி கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை சார்பில் திங்கள்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடத்தப்படும், அதற்கான விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. வி.வி. திருமாலையும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதியையும் அவர்களது அலுவலகத்தில் சந்தித்து, செப்டம்பர் 23 -ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலை பகுதியில் கட்சியின் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பை வழங்கக் கோரியும் மனு அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாலையில் வி.சாலை பகுதிக்குச் சென்ற கூடுதல் எஸ்.பி. திருமால், மாநாடு நடைபெறுவதற்குத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்துக்கு 21 கேள்விகளைப் பட்டியலிட்டு, அதற்கு 5 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தி விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் கடிதம் அனுப்பியுள்ளார்.

கேள்விகள் விவரம் வருமாறு:

1. மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை. எனவே மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்.

2. மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விவரம்.

3. மாநாடு நடத்த திட்டமிப்பட்டுள்ள இடத்தின் உரிமையாளர்கள் யார், அவர்களிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா?

4. மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள் விவரம்.

5. மாநாட்டு மேடையின் அளவு என்ன, எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்படவுள்ளன, மேடையில் பேசவிருக்கும் முக்கிய நபர்களின் விவரம்.

6. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன.

7. மாநாட்டில் வைக்கப்படவுள்ள பேனர்களின் எண்ணிக்கை, அலங்கார வளைவுகளின் விவரம்.

8. மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்தாரர்கள் விவரம்.

9. மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள், அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விவரம்.

10. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்கள் எந்தெந்த மாவட்டத்திலிருந்து வருவார்கள், யாருடைய தலைமையில் வருவார்கள், அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விவரம் மற்றும் அவர்கள் வரும் வாகனங்களின் வகை மற்றும் எண்ணிக்கை (இரு சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகளின் விவரம்).

11.மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா, அந்த இடத்தின் உரிமையாளர் யார், அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

12. மாநாட்டில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் பாதுகாப்புப் பணிக்கு தனியார் பாதுகாவலர்கள் அல்லது தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா, அவர்களின் பெயர் விவரம், சீருடை விவரம்.

13. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு செய்யப்படவுள்ள பாதுகாப்பு வசதிகள் விவரம்.

14. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு செய்யப்படவுள்ள அடிப்படை வசதிகளின் விவரம் மற்றும் வழங்கப்படும் குடிதண்ணீர் பாட்டில்வகையா அல்லது தண்ணீர் தொட்டி மூலமாகவா, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட இதர வசதிகள்.

15. மாநாட்டுக்கு வரும் நபர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதா அல்லது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே சமையல்கூடம் மூலம் சமைத்து விநியோகிக்கப்படவுள்ளதா.

16. மாநாட்டில் தீ விபத்தை தவிர்க்கும் வகையில் செய்யப்படவுள்ள பாதுகாப்பு விவரம்.

17. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதா, அவ்வாறு செய்யப்பட இருப்பின் மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ் விவரங்கள்.

18. மாநாட்டில் கலந்துகொள்ள வரும் நபர்கள் உள்ளே மற்றும் வெளியே செலலும் வழித்தடங்கள் எத்தனை?

19. கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் மேடைக்கு செல்லும் வழித்தடம் பற்றிய விவரம்.

20. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் ஒவ்வொரு இடத்துக்கும் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடங்கள் எத்தனை?

21. மாநாட்டுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது, அதற்கான அனுமதி விவரம்.

இவ்வாறு 21 கேள்விகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு அவர் அளிக்கும் பதிலைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநாடு நிச்சயம் நடைபெறும்: காவல்துறை சார்பில் கோரப்பட்டுள்ள 21 கேள்விகளுக்கும் உரிய முறையில் பதிலளிக்கப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திட்டமிட்டப்படி நடைபெறும் என்றுதமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி எம். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம்!

சென்னை தீவுத்திடல் பகுதியில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஃப்ஐஏ முதற்கட்ட அனுமதி கொடுத்த நிலையில் கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் தொடங்கின. பயிற்சி போட்டிகள் இரவு 10.45 மணி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன் நிறுவனம் (ஆா்பிபிஎல்) சாா்பில் பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய பந்தயங்கள் நடைபெறுகிறது.

3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பாா்முலா 4 காா் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போா் நினைவுச் சின்னம், நேப்பியா் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது. ஐ.ஆா். எல். என்று அழைக்கப்படும் இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் உள்ளன. இதுவும் 5 சுற்றுகளை கொண்டது. போட்டி நடைபெறவுள்ள சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பாா்வையாளா்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளன.

 

கோட் படத்தில் விஜய் யின் சம்பளம் இவ்வளவா?!

கோட் படத்தின் பட்ஜெட் மற்றும் வணிகம் குறித்து தயாரிப்பாளர் பேசியுள்ளார். விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் – இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ஆக்சன், டீஏஜிங் காட்சிகள் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் நேர்காணல்களை அளித்து வருகின்றனர். அப்படி நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர், “பிகில் திரைப்படம் ரூ. 180 கோடியில் உருவானது. படம் வெளியாகி 5 ஆண்டுகளே ஆனாலும் நடிகர் விஜய்யின் மார்க்கெட் பிரம்மாண்டாக வளர்ந்து விட்டது.

கோட் திரைப்படம் கிட்டத்தட்ட ரூ. 400 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், பாதி நடிகர் விஜய்யின் சம்பளம். கோட் மிகப்பெரிய படமாக உருவாகியுள்ளது. டிஏஜிங் தொழில்நுட்பம் இருந்ததால் பட்ஜெட் அதிகமாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

GRADUATION OF SECOND QUALIFIED FLYING INSTRUCTOR’S COURSE

The valedictory Function for the second Naval Helicopter Flying Instructors’ Course (NHFIC) was held at INS Rajali, Arakkonam on 30 August 24 marking graduation of two Naval helicopter pilots as Qualified Flying Instructors. Commodore Kapil Mehta, Commanding Officer, INS Rajali awarded the prestigious ‘Qualified Flying Instructor’ badges to Lieutenant Commander Rajat Balamohan and Lieutenant Commander Arsh Bansal.

The 22-week training program at NHFIC involved comprehensive ground and flying training with regular assessments focused on instructional capabilities. The program emphasises the seamless integration of theoretical knowledge with practical flying skills, preparing the trainee instructors to deliver effective training both on ground and in the air.

In his address, Commodore Kapil Mehta acknowledged the vital role of INAS 561 in timely training of Qualified Flying Instructors who in turn train ab-initio pilots towards the Indian Navy’s growing aviation arm. He encouraged the graduating instructors to uphold the values and traditions of the service and to serve as role models for aspiring Indian Navy pilots.

சென்னையில் கார் ரேஸ்: போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நாளை மற்றும் ஞாயிற்றுகிழமை சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இதற்காக சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, ஈ.வி.ஆர் சாலை வழியாக செல்லலாம்.

அண்ணா சாலையில், வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.

Special Trains for Puja Diwali and Chhath Festivals

Special Trains for Puja Diwali and Chhath Festivals

The following Special trains will be operated to clear extra rush of passenger during  Special Trains as detailed below: 

  1. Train No.06089/06090Dr. MGR Chennai Central  – Santragachi – Dr. MGR Chennai Central  Weekly Specials:

Train No.  06089 Dr. MGR Chennai Central  – Santragachi Weekly Special will leave Dr. MGR Chennai Central at 13.30 hrs on 04th, 11th, 18th,25th,September, 02nd,  09th , 16th,23rd, 30th,October,06,13th, 20th,and 27th, November, 2024 (Wednesdays) and reach Santragachi at 20.50 hrs, the next day (13 Services)

In return direction Train No. 06090 Santragachi – Dr. MGR Chennai Central  Weekly Special will leave Santragachi at 23.40 hrs on 05th, 12th, 19th,26th,September, 03rd,  10th , 17th, 24th, 31st,,October,07th,14th, 21st,and 28th, November, 2024  (Thursdays) and reach Dr. MGR Chennai Central  at 09.00 hrs, the third day (13 Services)

Coach Composition: 1- AC Three Tier Coach, 6- Sleeper Class Coaches 12- General Second Class Coaches & 2- Luggage cum Brake Vans 

The details of timings and stoppages of Train No. 06089/06090 Dr. MGR Chennai Central  – Santragachi – Dr. MGR Chennai Central Weekly Specials are as follows (Timings in hours):

 Train No.  06089 Dr. MGR Chennai Central – Santragachi Weekly Special

Station

Train No. 06090 Santragachi – Dr. MGR Chennai Central  Weekly Special

13.30 (Wednesday)

(d)

Dr MGR Chennai Central

(a)

09.00(Saturday)

16.03/16.05

(a/d)

Gudur

(a/d)

06.05/06.07

16.38/16.40

(a/d)

Nelore

(a/d)

05.30/05.32

18.23/18.25

(a/d)

Ongole

(a/d)

03.47/03.49

20.15/20.25

(a/d)

Vijayawada

(a/d)

01.05/01.15

22.35/22.38

(a/d)

Rajahmundry

(a/d)

19.40/19.43

23.28/23.30

(a/d)

Samalkot

(a/d)

18.45/18.50

02.30/02.35

(a/d)

Duvvada

(a/d)

16.55/17.00

03.45/03.55

(a/d)

Vizianagaram

(a/d)

15.40/15.50

05.48/05.50

(a/d)

Palasa

(a/d)

13.38/13.40

08.40/08.55

(a/d)

Khurda Road

(a/d)

09.30/09.45

09.35/09.40

(a/d)

Bhubaneswar

(a/d)

08.55/09.00

10.12/10.15

(a/d)

Cuttack

(a/d)

08.22/08.25

15.20/15.25

(a/d)

Bhadrak

(a/d)

04.55/05.00

16.23/16.25

(a/d)

Balasore

(a/d)

03.43/03.45

18.25/18.30

(a/d)

Kharagpur

(a/d)

01.35/01.40

20.50 (Thursday)

(a)

Santragachi

(d)

23.40 (Thursday)

 

  1. Train No.06095/06096Tambaram – Santragachi – Tambaram Weekly Specials:

Train No.  06095 Tambaram – Santragachi Weekly Special will leave Tambaram at 13.00 hrs on 05th, 12th, 19th,26th,September, 03rd,  10th , 17th, 24th, 31st,,October,07th,14th, 21st,and 28th, November, 2024  (Thursdays)  and reach Santragachi at 20.50 hrs, the next day (13 Services)

In return direction Train No. 06096 Santragachi – Tambaram Weekly Special will leave Santragachi at 23.50 hrs on 06th, 13th, 20th,27th,September, 04th,  11th , 18th, 25th,October,01st,08th, 15th, 22nd,and 29th, November, 2024   (Fridays) and reach Tambaram at 09.45 hrs, the third day (13 Services)

Coach Composition:  3- AC Three Tier Coaches, 8- AC Three Tier Economy Coaches,  2- Sleeper Class Coaches, 1- Second Class Coaches (Divyangjan Friendly)and 1- Luggage cum Brake Vans.  

The details of timings and stoppages of Train No. 06095/06096 Tambaram – Santragachi – Tambaram Weekly Specials are as follows (Timings in hours):

Train No.  06095 Tambaram – Santragachi Weekly Special

 

Station

 

Train No. 06096 Santragachi – Tambaram Weekly Special

13.00 (Thursday)

(d)

Tambaram

(a)

09.45 (Sunday)

13.35/13.40

(a/d)

Chennai Egmore

(a/d)

08.30/08.40

16.03/16.05

(a/d)

Gudur

(a/d)

05.45/05.47

20.15/20.25

(a/d)

Vijayawada

(a/d)

01.05/01.15

22.35/22.38

(a/d)

Rajahmundry

(a/d)

19.40/19.43

23.28/23.30

(a/d)

Samalkot

(a/d)

18.45/18.50

02.30/02.35

(a/d)

Duvvada

(a/d)

16.55/17.00

03.45/03.55

(a/d)

Vizianagaram

(a/d)

15.40/15.50

05.48/05.50

(a/d)

Palasa

(a/d)

13.38/13.40

08.40/08.55

(a/d)

Khurda Road

(a/d)

09.30/09.45

09.35/09.40

(a/d)

Bhubaneswar

(a/d)

08.55/09.00

10.12/10.15

(a/d)

Cuttack

(a/d)

08.22/08.25

15.20/15.25

(a/d)

Bhadrak

(a/d)

04.55/05.00

16.23/16.25

(a/d)

Balasore

(a/d)

03.43/03.45

18.25/18.30

(a/d)

Kharagpur

(a/d)

01.35/01.40

20.50 (Friday)

(a)

Santragachi

(d)

23.50 (Friday)

ஸ்டார் லைனர் விண்கலம் திரும்புமா?! நாசா விளக்கம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டது. இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கோளாறு சரிசெய்யபட்டபோதும் இருவரையும் ஸ்டார் லைனர் விண்கலத்திலேயே பூமிக்கு அழைத்து வரவேண்டாம் என நாசா முடிவெடுத்தது.

இருவரையும் பூமிக்கு கொண்டுவர எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் பயன்படுத்தப்பட உள்ளது. க்ரு டிராகன் விண்கலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

இதனிடையே, தொழில்நுட்ப கோளாறை சந்தித்த ஸ்டார் லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து எப்போது பூமிக்கு திரும்பும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பும் நாள் குறித்து நாசா இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்வெளி வீரர்கள்-வீராங்கனைகள் இன்றி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து செப்டம்பர் 6ம் தேதி மாலை 6.04 மணிக்கு ஸ்டார் லைனர் விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. சுமார் 6 மணி நேரம் பயணித்து விண்கலம் மறுநாள் 12.03 மணிக்கு பூமியை அடையும் என்று நாசா தெரிவித்துள்ளது.