Thursday, November 19, 2026
Blog

அப்பா குட்டி திரைப்பட முன் வெளியீட்டு விழா

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் ‘அப்பா குட்டி’. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிளாக்மெயில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மு. மாறன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம், பிணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஊட்டி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படம் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, இயக்குநர் மு. மாறன், ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய திரைப்பிரபலங்கள் படத்தின் உருவாக்க அனுபவங்கள், கதைக்களம், நடிகர்களின் நடிப்பு, தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு மற்றும் படத்தின் சுவாரசியமான தகவல்கள் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி பேசியதாவது,

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புக்குப் பிறகு என்னை மீண்டும் இந்த இடத்திற்கு அழைத்து வந்ததில் விஜய் ஆண்டனிக்கும், எனது நெருங்கிய நண்பர்களான இயக்குநர்கள் சசி, சுசீந்திரன், தனஞ்செயன், தங்கர் பச்சான் உள்ளிட்ட அனைவருக்கும் முக்கியப் பங்கு உண்டு. இந்த ஐந்து ஆண்டுகளிலும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் எனக்கு அளித்த ஆதரவையும் அன்பையும் மறக்க முடியாது. மீரா நல்ல இடத்தில் இருக்கிறாள். இனி அவளைப் பற்றிக் கவலைப்படாமல், நீங்கள் மீண்டும் திரையுலகிற்கு வர வேண்டும்; நிறைய படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். நீங்கள் அனைவரும் எங்கள் நண்பர்களும் நலன் விரும்பிகளும்தான்.

எங்கள் குடும்பம் எப்போதும் எளிமையாகவும் வெளிப்படையாகவும் வாழ்ந்திருக்கிறது. மீரா பயன்படுத்திய பொருட்களையும் அவளுடைய அறையையும் இன்றுவரை நினைவாகப் பாதுகாத்து வருகிறோம். விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. மீராவுக்காக வாங்கி வைத்திருந்த காலணிகளைப் பார்த்த பிறகு, இனி வாழ்க்கை முழுவதும் செருப்பு அணியப் போவதில்லை என்று அவர் முடிவு செய்தார். அதேபோல், மீரா வாங்கிக் கொடுத்த சுமார் நான்காயிரம் ரூபாய் மதிப்புள்ள கடிகாரத்தை மட்டுமே இப்போது அணிந்து வருகிறார். முன்பு பயன்படுத்திய விலையுயர்ந்த கடிகாரங்களைக்கூட ஒதுக்கிவிட்டார். அந்தக் கடிகாரத்திலேயே மீரா தன்னைக் கவனித்துக்கொள்வதாக அவர் நம்புகிறார். இவை அனைத்தும் எங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய மிகவும் தனிப்பட்ட உணர்வுகள்.

இன்று நடைபெறுவது ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் முன்வெளியீட்டு விழா. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எங்களை மகிழ்வித்த திரையுலகப் பிரபலங்கள், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் நிறைய பேச வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. இப்போது நிகழ்ச்சியைத் தொடங்குவோம். நன்றி.

தங்கர் பச்சான் பேசியதாவது,

“முதலில் விஜய் ஆண்டனிக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழில் பெயர் வைத்ததற்காக அவரைப் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டில் உருவாகும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ் பெயர்கள் வைக்கப்படுவது மிகவும் அவசியம். ஆனால் வாரத்திற்கு வெளியாகும் பத்து படங்களில் இரண்டு படங்களுக்குக் கூட தமிழில் பெயர் இருப்பதில்லை. இதுகுறித்து ஊடகங்களோ, கலைஞர்களோ யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மக்களுடைய பணம் மட்டும் வேண்டும் என்று நினைப்பது வருத்தமளிக்கிறது. முன்பு கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம், சமஸ்கிருதப் பெயர்களைத் தவிர்த்து தமிழ்ப் பெயர்களை ஊக்குவிப்பதற்காக வரிச்சலுகை வழங்கப்பட்டது. இப்போது இந்த விஷயத்தில் அரசுகள் கவனம் செலுத்துகின்றனவா என்று தெரியவில்லை. இது அவமானமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

விஜய் ஆண்டனி என்னுடைய நண்பர். அவர் ஒரு கலைஞராகவும், மனிதராகவும் தரமானவர். அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இந்தப் படத்தைப் பார்க்க எனக்கு இரண்டு முறை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தும் பார்க்க முடியவில்லை. இன்றைய மனித வாழ்க்கை உறவுகளைக் கடந்து பணத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் நேசிப்பவர்களுடன் ஐந்து நிமிடங்கள் அமர்ந்து பேசக்கூட நேரமில்லாமல் கைபேசியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால்தான் இப்படிப்பட்ட திரைப்படங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம். குறிப்பாக, குழந்தைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் உலக அளவில் குறைந்துவிட்டன. குழந்தைகளின் உலகமே அவர்களிடமிருந்து திருடப்பட்டுவிட்டது. மண்ணையும், நீரையும், உணவையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டோம். குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சியைப் பெற்றோரின் கைபேசிகளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திலும் வீட்டிலும் குழந்தைகளை இயந்திரத்தனமாக நடத்துகிறோம். அவர்களுக்கு அன்பு எங்கே கிடைக்கும்?

இவற்றையெல்லாம் பேசுவதற்கான கலைதான் திரைப்படக் கலை. ஆனால் இன்றைக்கு நம்மிடம் இருக்கும் நவீன கேமராக்கள், ஒளி, ஒலி உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பெரும்பாலும் வன்முறையைக் காட்சிப்படுத்தவும், போதைப்பொருள் கடத்தல், மது அருந்துதல் போன்றவற்றை விதவிதமாகக் காட்டவும் பயன்படுத்துகிறோம். அப்படிப்பட்ட படங்கள் எத்தனை கோடி வசூல் செய்கின்றன என்று தொடர்ந்து எழுதுகிறோம். அந்தப் பணத்தால் சமூகத்திற்கு என்ன பயன்? மீண்டும் மீண்டும் அதே போன்ற படங்களைத்தான் உருவாக்குகிறார்கள். அதற்குப் பதிலாக, மக்களிடம் உறவுகளையும் அன்பையும் பேசக்கூடிய இப்படிப்பட்ட திரைப்படங்கள் கவனிக்கப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும். ‘அப்பா குட்டி’ திரைப்படம் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் என்பது என்னுடைய கணிப்பு. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும், படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

இயக்குநர் சசி பேசியதாவது,

“ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியிலும், டிரெய்லர் வெளியீட்டிலும் இந்தப் பாடல்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று காலையில் முழுப் படத்தையும் பார்த்த பிறகு, இந்தப் பாடல்கள் கதையில் எந்த அளவுக்குப் பொருத்தமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இடம்பெற்றிருக்கின்றன என்பது புரிந்தது. படம் பார்த்த பிறகு மீண்டும் அந்தப் பாடல்களைக் கேட்கும்போது அழகான உணர்வைக் கொடுக்கின்றன. பாடல்களைச் சரியான இடத்தில் பொருத்திய இயக்குநர் மாறனுக்கு என்னுடைய பாராட்டுகள்.

இன்று ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த திருப்தியுடன் இருக்கிறேன். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான உறவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு தனித்துவமான விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் இந்தப் படத்தின் யுஎஸ்பி. அதைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு நல்ல படத்தைப் பார்த்தோம் என்ற திருப்தி நிச்சயம் இருக்கும். இந்தப் படம் பார்வையாளர்கள் அனைவரையும் பாதிக்கும். விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”

இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது,

“விஜய் ஆண்டனி என்னுடைய நண்பர். ‘வேலாயுதம்’ படத்தில் பணியாற்றிய காலத்திலிருந்தே எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. அவருக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். விஜய் ஆண்டனி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான கலைஞர். இசையமைப்பாளர், எடிட்டர் எனப் பல துறைகளில் தனது திறமையை நிரூபித்தவர். ஒரு வெற்றிப் படத்தை உருவாக்குவதற்கு ஒரு குழுவாக எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பது சினிமா தெரிந்தவர்களுக்குப் புரியும். அந்த வகையில் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் எதிர்காலத்தில் பல சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இன்று ‘அப்பா குட்டி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ஒரு நல்ல, உணர்வுபூர்வமான படத்தைப் பார்த்த திருப்தியுடன் நிற்கிறேன். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான உறவில் ஒரு தனித்துவமான விஷயத்தை இயக்குநர் மு. மாறன் சொல்லியிருக்கிறார். படத்தின் கதை எதிர்பாராத தளங்களுக்குப் பயணிப்பது ஆச்சரியமாக இருந்தது. சில வெற்றிப் படங்களின் நினைவுகள் வந்தாலும், இப்படத்தின் உணர்வுகள் தனித்துவமாக இருக்கின்றன. குறிப்பாக, விஜய் ஆண்டனி தொடர்ந்து தனது படங்களில் வெளிப்படுத்த முயற்சிக்கும் மனிதநேய உணர்வு இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. நடிகர்கள் தேர்வு, இரண்டாம் பாதியில் வரும் புதிய கதாபாத்திரங்கள், குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பு என அனைத்துமே சிறப்பாக இருந்தது. நாயகி ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பும் மிகவும் அழகாக இருந்தது.

சிறிய பட்ஜெட் பரிசோதனைத் திரைப்படங்கள், பெரிய பட்ஜெட் நட்சத்திரத் திரைப்படங்கள் ஆகியவற்றுடன் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களும் வெற்றிபெற வேண்டும். ஏனென்றால், நடுத்தர பட்ஜெட் படங்களின் வெற்றிதான் திரைத்துறையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இப்படிப்பட்ட படங்கள் வெற்றிபெறும்போது இயக்குநர் மு. மாறன் போன்ற திறமையான படைப்பாளிகள் தொடர்ந்து பல படங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வகையில் ‘அப்பா குட்டி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது,

“‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் இரண்டாம் பாதி எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. முதல் பாதியைப் பார்த்துவிட்டு படம் முடிந்ததும் நிகழ்ச்சியில் என்ன பேசுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இரண்டாம் பாதி தொடங்கியதும் கதையின் சுவாரசியம் அதிகரித்து, எதிர்பாராத திருப்பங்களுடன் மிகவும் உணர்வுபூர்வமாகச் சென்றது. உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை மிகவும் அழகாகவும் உணர்ச்சிகரமாகவும் இயக்குநர் மு. மாறன் சொல்லியிருக்கிறார். கதையின் முக்கியமான அம்சத்தை இன்னும் முன்பாகவே தொடங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று இயக்குநரிடமே தெரிவித்தேன்.

படத்தில் வரும் நீதிமன்றக் காட்சிகள், கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு, குறிப்பாக ஜே.பி.யின் கதாபாத்திரம் என அனைத்தும் சிறப்பாக இருந்தன. முருகானந்தம் ஆங்காங்கே வழங்கும் நகைச்சுவை வசனங்களும் ரசிக்கும்படி இருந்தன. படத்தின் ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியது. குறிப்பாக, கிளைமாக்ஸில் ஒரு பெண் நீதிமன்றத்திற்கு வந்து குழந்தையைத் தொட்டுப் பார்க்கும் காட்சியில் ஒளிப்பதிவாளரின் கேமரா கோணமும் ஒளியமைப்பும் அற்புதமாக இருந்தன.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் எப்படி அனைத்து தரப்பு மக்களுடனும் உணர்வுபூர்வமாகக் கனெக்ட் ஆனதோ, அதேபோல் ‘அப்பா குட்டி’ திரைப்படமும் ரசிகர்களுடன் நல்ல உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும். இரண்டாம் பாதி நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று இந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயமாக அனைவருக்கும் பிடித்த திரைப்படமாக இருக்கும்.”

தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது,

“இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் உணர்ச்சிபூர்வமாகப் பேசியதை நாம் பார்த்தோம். குறிப்பாக, திரையரங்கில் படம் பார்த்த பெண்கள் கண்கலங்கிய காட்சிகளைப் பார்க்கும்போது, இந்தத் திரைப்படம் எந்த அளவுக்கு மக்களின் மனதைத் தொட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, அவர்களுடைய எதிர்வினையே இப்படத்தின் உணர்வுப்பூர்வமான வெற்றியை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கு முக்கியமான காரணம் விஜய் ஆண்டனியைப் பற்றிப் பேச வேண்டும் என்பதுதான். ஒரு இலக்கைத் தீர்மானித்துக்கொண்டு, அதை நோக்கி உண்மையாக உழைத்துப் பயணித்தால் வெற்றி பெற முடியும் என்பதற்கு விஜய் ஆண்டனி சிறந்த உதாரணம். பல விமர்சனங்களையும் கடந்து தனது மன உறுதி, உழைப்பு, விடாமுயற்சியால் இந்த நிலையை அடைந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கடந்த 14 ஆண்டுகளாகப் பயணித்து வரும் விஜய் ஆண்டனி இதுவரை 28 படங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அவரது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஒரு படம் முடிந்ததும் அடுத்த படத்திற்கான பணிகளில் உடனடியாக இறங்கிவிடுகிறார். ஏற்கெனவே அடுத்தடுத்த படங்களுக்கான திட்டங்களையும் தயாராக வைத்திருக்கிறார். இந்தத் தொடர் முயற்சியும், அர்ப்பணிப்பும்தான் சினிமாவில் மிகவும் முக்கியம். அவரது இசையும் இப்படத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது. இசையமைப்பாளர், பாடகர் என ஏற்கெனவே தனது திறமையை நிரூபித்த விஜய் ஆண்டனி, இந்தப் படத்திலும் அதை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் மு. மாறனைப் பொறுத்தவரை, இப்படத்தின் நடிகர்கள் தேர்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ப்ரீத்தி அஸ்ராணி மிகச் சிறந்த நடிகை. விஜய் ஆண்டனி – ப்ரீத்தி அஸ்ராணி ஜோடியைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசியதாவது,

“இன்று காலையில் நான் படம் பார்க்கவில்லை. அதனால் படத்தைப் பற்றி என்னால் எதுவும் பேச முடியாது. ஆனால் விஜய் ஆண்டனிக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். நானும் விஜய் ஆண்டனியும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். ‘கொலைகாரன்’ படத்தின் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல இடங்களில் என்னைத் தனது வகுப்புத் தோழன், நண்பன் என்றுதான் அவர் அறிமுகப்படுத்துவார். ஆனால் உண்மையில் எனக்குத் திரையுலகில் ஒரு நல்ல திருப்புமுனையைக் கொடுத்தவர் விஜய் ஆண்டனிதான். ‘கொலைகாரன்’ படத்தில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால், என்னுடைய திரைப்பயணம் இன்னும் எவ்வளவு போராட்டமாக இருந்திருக்கும் என்று தெரியாது. நண்பர் என்பதையும் தாண்டி அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது.

‘கொலைகாரன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து அவரிடம் பேசியிருக்கிறேன். அப்போது நான் வேறு தயாரிப்பு நிறுவனங்களுடன் பணியாற்ற ஒப்பந்தமாகியிருந்ததால் அவருடன் உடனடியாக இணைந்து பணியாற்ற முடியவில்லை. இருப்பினும், எந்தச் சூழலிலும் எனக்குத் திருப்புமுனை கொடுத்தவர் என்ற விஷயத்தை அவர் ஒருபோதும் வெளிப்படுத்திப் பெருமை தேடிக்கொண்டதில்லை. அப்படிப்பட்ட நல்ல நண்பர் விஜய் ஆண்டனி.

இந்த நிகழ்ச்சியில் ஃபாத்திமாவைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். நுங்கம்பாக்கம் புனித தெரசா தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் திருப்பலிக்கு நான் அடிக்கடி செல்வேன். அப்போது எனக்கு எதிரே அமர்ந்திருக்கும் இடத்தில் ஃபாத்திமா ஒவ்வொரு முறையும் திருப்பலி முழுவதும் கண்ணீருடன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவருடைய வலியைப் பார்ப்பது எனக்குக் கடினமாக இருந்ததால், ஒரு கட்டத்தில் நான் அமரும் இடத்தையே மாற்றிக்கொண்டேன். இருப்பினும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்காகத் தனியாகப் பிரார்த்தனை செய்வேன். அவருக்கு இறைவன் மனவலிமையைக் கொடுக்க வேண்டும். அவர் நிச்சயமாக ஒரு நல்ல இடத்தில் இருப்பார். விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு என்னுடைய அன்பும் பிரார்த்தனைகளும்.”

இயக்குநர் நிதிலன் சாமிநாதன் பேசியதாவது,

“விஜய் ஆண்டனி சாருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடன் எனக்குப் பல ஆண்டுகளாகப் பழக்கம் இருக்கிறது. அவர் மிகவும் எளிமையானவர், நடைமுறைக்கு ஏற்ற வகையில் சிந்திக்கக்கூடியவர். அவரைச் சந்திக்கச் சென்றால், அவரே நேரில் கவனித்துக்கொள்வார். காபி, டீ என அனைத்தையும் அவரே எடுத்துக்கொண்டு வருவார். பேசத் தொடங்கும்போது தனது செல்போனை அணைத்து வைத்துவிடும் அளவுக்கு மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் இணைந்து பணியாற்றுவேன்.

இன்று மாலை இரண்டு மணிக் காட்சியில் ‘அப்பா குட்டி’ படத்தைப் பார்த்தேன். மிகவும் வித்தியாசமான, சுவாரசியமான அதேசமயம் சிக்கலான ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. கொஞ்சம் தவறாகக் கையாண்டிருந்தாலும் வேறு மாதிரியான படமாக மாறியிருக்கக்கூடிய கதையை இயக்குநர் மு. மாறன் மிகவும் பக்குவமாகவும் சமநிலையுடனும் கையாண்டிருக்கிறார். குறிப்பாகப் படத்தின் இறுதிக்காட்சிகள் எனக்கு மிகவும் ஆச்சரியத்தையும் பதற்றத்தையும் கொடுத்தன. படத்தின் முழுவதும் நேர்மையான ஓர் உணர்வு இருந்தது. குழந்தைகளுக்காகச் செய்யும் விஷயங்களில்கூட நேர்மையாக இருக்க வேண்டும் என்ற கருத்து அழகாக வெளிப்பட்டிருக்கிறது.

படத்தின் நடிகர்கள் தேர்வு மிகவும் சிறப்பாக இருந்தது. விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நீதிபதியாக நடித்தவரின் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது. உண்மையான நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி பேசுவதைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினார். சுசீந்திரன் சார் குறிப்பிட்டதுபோல, அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவரின் இயல்பான வசன உச்சரிப்பும் நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தன. இயக்குநர் மு. மாறன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ‘அப்பா குட்டி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

இயக்குநர் மந்திரமூர்த்தி பேசியதாவது,

“‘அப்பா குட்டி’ திரைப்படத்தை இன்று காலையில் பார்த்தேன். படத்தின் முதல் பாதி மிகவும் அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது. இரண்டாம் பாதியும் அதேபோல் உணர்ச்சிகரமாகச் செல்லும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், இரண்டாம் பாதியில் வந்த எதிர்பாராத திருப்பங்களும் சுவாரசியமான சம்பவங்களும் ஆச்சரியப்படுத்தின. அதேசமயம் படத்தின் உணர்வுப்பூர்வமான தன்மையும் குறையாமல் இயக்குநர் மு. மாறன் மிகவும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். கடந்த வாரம் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தனஞ்செயன் சார், படம் முடியும் நேரத்தில் பார்வையாளர்களின் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீராவது வரவில்லை என்றால் தன்னிடம் கேள்வி கேட்கலாம் என்று கூறியிருந்தார். இன்று படத்தின் இறுதியில் எனக்கு மட்டுமல்லாமல் திரையரங்கில் இருந்த அனைவருக்குமே அந்த உணர்வு ஏற்பட்டது. அவர் சொன்னது உண்மையாகியிருக்கிறது.

விஜய் ஆண்டனி நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர், தயாரிப்பாளர் எனப் பல பொறுப்புகளை ஏற்று இந்தப் படத்தை மிகவும் அழகாக உருவாக்கியிருக்கிறார். படத்திற்குத் தேவையான அனைத்தையும் சரியான முறையில் கொடுத்திருக்கிறார். பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, கிளைமாக்ஸில் நீதிமன்றத்தில் இடம்பெறும் சுமார் ஐந்து நிமிடக் காட்சிகள் மிகவும் அருமையாக இருந்தன. முருகானந்தம் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

நடிகர் நடராஜன் பேசியதாவது,

“இந்தப் படத்தில் நான் நீதிபதியாக நடித்திருக்கிறேன். ஏற்கெனவே பல படங்களில் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், இனிமேல் நீதிமன்றத்தில் ஏதாவது நீதிபதி விடுமுறையில் சென்றால் என்னைக் கூப்பிடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு நிறைய நீதிபதி கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி எனக்கு மிகவும் நெருக்கமானது. படப்பிடிப்பின்போது குழந்தை ஒன்று தனது அப்பாவைத் தேடி வந்து ‘அப்பா குட்டி’ என்று அழைக்கும் அந்த நொடியிலேயே என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. நான் ஒரு தந்தைக்குப் பிள்ளையாகவும், இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகவும் இருப்பதால் அந்தப் பாசத்தை என்னால் உணர முடிந்தது. அந்த உணர்வைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்த வரமாக நினைக்கிறேன்.

இந்தக் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்த இயக்குநர் மு. மாறன் மற்றும் விஜய் ஆண்டனி சாருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குழந்தைகளையும் அவர்களுக்கான உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் ஒரு சிறப்பான முயற்சி. அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இப்படம் மிகப்பெரிய வெற்றிபெறுவதுடன், பல விருதுகளையும் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.”

நடிகர் பக்ஸ் எனும் பகவதி பெருமாள்  பேசியதாவது,

“விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் நான் பணியாற்றும் நான்காவது படம் ‘அப்பா குட்டி’. இதற்கு முன்பு ‘பிச்சைக்காரன்’, ‘கொலைகாரன்’, ‘நூறு சாமி’ ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இந்த நான்கு படங்களுமே எனக்கு மிகவும் சிறப்பானவை. ரசிகர்களுக்கும் அந்தப் படங்கள் நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றன. விஜய் ஆண்டனி படங்களைப் பொறுத்தவரை கதைகளின் தேர்வு எப்போதும் தனித்துவமாக இருக்கும். அது டிராமாவாக இருந்தாலும், ஆக்‌ஷன் படமாக இருந்தாலும் அதில் சுவாரசியமான ஒரு அம்சம் நிச்சயம் இருக்கும்.

இன்று காலையிலேயே ‘அப்பா குட்டி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டேன். அனைவரும் படத்தைப் பற்றிச் சிறப்பாகப் பேசியிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த விஷயம் படத்தின் பின்னணி இசை. குறிப்பாக, பின்னணி இசை மிகவும் உணர்வுபூர்வமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று இப்படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”

நடிகர் மூணாறு ரமேஷ் பேசியதாவது,

“அனைவருக்கும் வணக்கம். விஜய் ஆண்டனி சாரின் இசையில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இசையில் பாடல் இடம்பெறுவது மிகப்பெரிய விஷயம். இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குநர் மு. மாறனுக்கு நன்றி. இதுவரை காவல்துறை அதிகாரியாகப் பார்த்த என்னை இந்தப் படத்தில் வேறொரு பரிமாணத்தில் நடிக்க வைத்திருக்கிறார். முக்கியமான வசனங்களைப் பேசுவதற்கும் வாய்ப்பளித்திருக்கிறார்.

‘அப்பா குட்டி’ திரைப்படம் அனைவருடைய மனதையும் தொடக்கூடிய கதையாக இருக்கும் என்று நம்புகிறேன். குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனால் குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தக் கதை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அடுத்து இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கும் படமும் புதிய கதைக்களத்துடன் உருவாகிறது என்று தெரிகிறது. தொடர்ந்து வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம், விஜய் ஆண்டனி மிகவும் அழகாகச் சிரிக்கக்கூடியவர். அவரை ஒரு ஜாலியான காதல் கதையில், லவ்வர் பாய் கதாபாத்திரத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ‘அப்பா குட்டி’ திரைப்படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகள்.”

நடிகை லிஸ்ஸி ஆண்டனி பேசியதாவது,

“நான் இன்னும் ‘அப்பா குட்டி’ திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், நவம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியான பிறகு எல்லா மகள்களும் தங்களுடைய அப்பாவை ஆசையாக ‘அப்பா குட்டி’ என்று அழைப்பார்கள் என்று நினைக்கிறேன். விஜய் ஆண்டனியின் படத் தேர்வுகள் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த நம்பிக்கையும் ஆர்வமும் உண்டு. அவருடைய கதைத் தேர்வுக்கு நான் மிகப்பெரிய ரசிகை என்று ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன். சமீபத்தில் அவர் ரொமான்டிக் காமெடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகத் தெரிந்துகொண்டேன். தன்னை யாரும் ரொமான்டிக் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் வருத்தப்பட்டதாகவும் சொன்னார்கள். ஆனால், உலகத்தைக் காப்பாற்றும் அளவுக்கு பிரம்மாண்டமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் அவரை எப்படி ரொமான்டிக் ஹீரோவாகப் பார்ப்பது? அவர் அடுத்ததாக ஒரு அழகான ரொமான்டிக் கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இப்படத்தைப் பற்றிய செய்திகளைப் பத்திரிகையாளர்கள் அனைவரும் சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”

நடிகர் முருகானந்தம் பேசியதாவது,

“ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விஜய் ஆண்டனி சாரை மீண்டும் இப்படியொரு நிகழ்ச்சியில் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ‘அப்பா குட்டி’ படத்தின் கதையைக் கேட்டபோது மிகவும் பிடித்திருந்தது. படப்பிடிப்பில் நடித்தபோது நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் இன்று காலையில் படத்தைப் பார்த்த பிறகு இது நிச்சயம் வெற்றிபெறும் என்ற உறுதியான நம்பிக்கை வந்துவிட்டது. படத்தைப் பார்க்கும்போது எனக்கு ஒரு பக்கம் சுசீந்திரன் சாரும், மறுபக்கம் சசி சாரும் அமர்ந்திருந்தார்கள். படத்தின் இறுதியில் உணர்ச்சிவசப்பட்டு எனக்குக் கண்ணீர் வந்தது. அதை மறைத்துக்கொள்ள முயன்றபோது சுசீந்திரன் சாரும் கண்கலங்கியதைப் பார்த்தேன். அந்தத் தருணத்திலேயே இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று முடிவு செய்துவிட்டேன். எங்களை இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட வைத்த இயக்குநர் மு. மாறனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

விஜய் ஆண்டனியுடன் நான் முதன்முறையாக இந்தப் படத்தில்தான் இணைந்து நடித்தேன். அவரிடம் அதிகமாகப் பேசி இடையூறு செய்யாமலும், அதே நேரத்தில் பேசாமல் இருந்து நட்பை வளர்த்துக்கொள்ளாமல் போய்விடாமலும் ஒரு சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் அனைவரையும் எளிதாகத் தன்னுடைய இயல்பான சூழலுக்குக் கொண்டுவந்துவிடுவார். அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வும், ஜாலியான ரொமான்டிக் ஹீரோவுக்கான தன்மையும் மிகவும் அழகானது. அவர் ஒரு ரொமான்டிக் கதையில் நடித்தால் நிச்சயம் சிறப்பாக இருக்கும். அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது.

இயக்குநர் மு. மாறன் மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் லோகன், பிரியா, சுந்தர் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் என்னுடைய நன்றிகள். ஒவ்வொருவரும் தங்களுடைய பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்கள். குறிப்பாக, காஸ்ட்யூம் முதல் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் அவர்கள் காட்டிய கவனம் வியக்க வைத்தது. ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பான குழுவின் உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். ‘அப்பா குட்டி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

விஜய் ஆண்டனியின் மகள் லாரா பேசியதாவது,

“இந்தத் திரைப்படத்திற்காக என்னுடைய அப்பா இரவு, பகல் பாராமல் கடினமாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை நான் பார்த்திருக்கிறேன். ஒரு தந்தை தனது குழந்தை மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றிப் பேசும் திரைப்படமாக ‘அப்பா குட்டி’ உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்கும் குழந்தைகள் அனைவரும் தங்களுடைய அப்பாவின் அன்பையும் உழைப்பையும் இன்னும் அதிகமாகப் புரிந்துகொண்டு அவர்களைப் பாராட்டுவார்கள் என்று நினைக்கிறேன். இந்தப் படம் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கிறது. அனைவரும் படத்தைப் பார்க்க வேண்டும். நன்றி.”

நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசியதாவது,

“இங்கு வந்திருக்கும் மதிப்பிற்குரிய இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று காலையில் படத்தைப் பார்த்த அனைவரும் தங்களுடைய பாராட்டுகளையும் நேர்மறையான கருத்துகளையும் தெரிவித்து வருவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஒரு திரைப்படத்திற்காக இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அதற்குச் சிறப்பான வரவேற்பும் பாராட்டுகளும் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, இயக்குநர்கள் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டுவது எனக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

‘அப்பா குட்டி’ அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான உறவைப் பேசும் திரைப்படம். தனிப்பட்ட முறையிலும் எனக்கு மிகவும் நெருக்கமான, உணர்வுபூர்வமாகத் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய படமாக இது அமைந்திருக்கிறது. இப்படத்தில் உணர்ச்சிகள் மட்டுமின்றி பல்வேறு சுவாரசியமான அம்சங்களும், கமர்ஷியல் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அப்பா – மகளின் அழகான பயணத்துடன் பல கதாபாத்திரங்களும், நடிகர்களும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சமமான முக்கியத்துவமும் இடமும் கொடுத்து இயக்குநர் மு. மாறன் வடிவமைத்திருப்பது சிறப்பானது. இப்படத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

நவம்பர் 20ஆம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’ திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க வேண்டும். இன்றைய நிகழ்ச்சியில் கிடைத்திருக்கும் பாராட்டுகளைப் போலவே, படம் வெளியாகும்போதும் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது,

“அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். முதலில் ஃபாத்திமா மேடத்தை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததற்குப் பிறகு இன்று அவரைப் பார்ப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல் லாரா அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது படக்குழுவினருக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். விஜய் ஆண்டனியின் மகள் லாரா மேடையில் பேசியது மிகவும் அழகாக இருந்தது. பொதுவெளியில் பேசுவது எளிதான விஷயம் அல்ல. தமிழிலும் மிக அழகாகப் பேசியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். ‘அப்பா குட்டி’ திரைப்படத்தை விஜய் ஆண்டனி தனது மகள் மீதான அன்பின் வெளிப்பாடாக உருவாக்கியிருக்கிறார் என்றே நான் பார்க்கிறேன். நிஜ வாழ்க்கையிலும் மகள் என்ன கேட்டாலும் அன்புடன் நிறைவேற்றும் தந்தையாக விஜய் ஆண்டனியைப் பார்த்திருக்கிறேன். அந்தத் தந்தையின் அன்புக்கு ஒரு திரைப்பரிசாக இப்படம் அமைந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு வெளிவந்த சிறப்பான படங்களின் வரிசையில் ‘அப்பா குட்டி’யும் இடம்பெறும். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு ‘தெய்வத்திருமகள்’ போன்ற உணர்வுபூர்வமான திரைப்படத்தைப் பார்த்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. இயக்குநர் மு. மாறன் மிகவும் அழகாக இந்த உணர்வுகளைக் கையாண்டிருக்கிறார். விஜய் ஆண்டனியிடமிருந்து சிறப்பான நடிப்பையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். கடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும்போது குறைந்தபட்சம் ஒரு சொட்டுக் கண்ணீராவது வரவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள் என்று கூறியிருந்தேன். இன்று நிகழ்ச்சியில் பலரும் அதே உணர்வைப் பகிர்ந்துகொள்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வை இயக்குநர் நிச்சயம் ஏற்படுத்துவார்.

நவம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாகும்போது சில திரையரங்குகள் மற்றும் வெளியீட்டுத் தொடர்பான சவால்கள் இருக்கலாம். அதே நாளில் எதிர்பார்ப்புள்ள பெரிய படங்களும் வெளியாகின்றன. ஆனால் நல்ல படங்களை ஊடகங்களும் மக்களும் ஒருபோதும் கைவிட்டதில்லை. ஆரம்பத்தில் 200 திரைகள் கிடைத்தாலும், முதல் காட்சிகளுக்குப் பிறகு வரவேற்பைப் பொறுத்து அது 250, 300 என அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதற்கு உதாரணமாக, மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ‘ராமாயணா’ திரைப்படத்திற்குத் தமிழகத்தில் கிடைத்த வரவேற்பைக் குறிப்பிடலாம். அதேபோல் ‘அப்பா குட்டி’யும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் இதுவரை வெளியான படங்கள் வணிக ரீதியாகத் தோல்வியடையாமல் தொடர்ந்து பயணித்திருக்கின்றன. அதற்குப் பின்னால் பார்திமா விஜய் ஆண்டனியின் தயாரிப்புத் திட்டமிடலும் உழைப்பும் முக்கியமானவை. இந்தப் படமும் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்று நம்புகிறேன்.

பக்ஸ் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தைப் பார்க்கும்போது உண்மையிலேயே அவர் மீது கோபம் வரும் அளவுக்கு நடிப்பில் ஈடுபட்டிருக்கிறார். அதுதான் ஒரு நடிகராக அவருடைய வெற்றி. அதேபோல் நீதிபதியாக நடித்த குமார் நடராஜன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். நீதிபதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் சிறப்பாக இருந்தன. ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பும், விஜய் ஆண்டனி மற்றும் குழந்தைக்கு இடையிலான அன்பை வெளிப்படுத்திய விதமும் பாராட்டுக்குரியவை. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். பத்திரிகையாளர்களுக்காக விரைவில் சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டிருக்கிறேன். படத்தைப் பார்த்து உங்களுடைய உண்மையான கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தால் இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங்கும் வெற்றியும் கிடைக்கும். அந்த வெற்றியைக் கொண்டாடும் அடுத்த நிகழ்ச்சியில் நாம் அனைவரும் மீண்டும் சந்திப்போம்.”

இயக்குநர் மு. மாறன் பேசியதாவது,

“ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஃபாத்திமா மேடம் ‘அப்பா குட்டி’ நிகழ்ச்சிக்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியிருப்பதற்கு முக்கியக் காரணம் விஜய் ஆண்டனி சார் மற்றும் ஃபாத்திமா மேடம் ஆகிய இருவரும்தான். நான் கேட்ட அனைத்தையும் எந்தக் குறையும் வைக்காமல் செய்து கொடுத்தார்கள். இன்று அனைவரும் படத்தைப் பாராட்டுவதற்கு அவர்கள்தான் முக்கியமான தூண்கள். அதற்குப் பிறகு எங்களுடைய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படப்பிடிப்பின்போது யாரிடமும் எந்தவிதமான மனக்கசப்பும் ஏற்படவில்லை. விஜய் ஆண்டனியை எப்படிக் கையாண்டீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்பார்கள். ஆனால் அவர் மிகவும் இயல்பான மனிதர். தண்ணீர் எந்தச் சூழலிலும் தன்னைப் பொருத்திக்கொள்வதைப் போல, அவரும் எந்தச் சூழலுக்கும் எளிதாகப் பொருந்திக்கொள்வார். ஒரு புரமோஷன் படப்பிடிப்பின்போது கை கழுவத் தண்ணீர் இல்லாத சூழலில் மழைநீரிலேயே கைகளைக் கழுவிக்கொண்டார். அந்த அளவுக்கு எளிமையானவர். அவர் கோபப்பட்டாலும் அதற்குப் பின்னால் ஒரு நியாயம் இருக்கும் என்பதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

‘அப்பா குட்டி’ திரைப்படம் எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக அமைந்திருக்கிறது. படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. நவம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை பல படங்களுடன் போட்டிக்கு மத்தியில் வெளியாகிறோம். இருப்பினும் எங்களுடைய உழைப்பைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக மக்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஊடக நண்பர்கள்தான் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவ வேண்டும். மேலும், மீரா எங்களுடன் நேரில் இல்லாவிட்டாலும் எங்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறார். உலகத்தில் இருக்கும் அனைத்து மீராக்களுக்கும் இந்தப் படத்தைச் சமர்ப்பிக்கிறோம். அனைவருக்கும் நன்றி.”

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது,

இயக்குநர் மு. மாறன் கடந்த 10–15 ஆண்டுகளாக உதவி இயக்குநராகப் பணியாற்றி, இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறார். இதற்கு முன்பு மூன்று படங்களை இயக்கியுள்ள அவர், இந்தப் படத்தின் மூலம் இன்னும் பெரிய அங்கீகாரத்தைப் பெறுவார் என நம்புகிறேன். மிகவும் நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. அவருக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான வெற்றியைத் தேடித்தரும். இந்தப் படம் தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்த பைஜாவுக்கும், தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் நன்றி. விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. காதல் கதாபாத்திரத்தில் நடிப்பதைவிட, திருமணமான ஆணைக் காதலிக்கும் உணர்வுகளையும் காதலையும் முதிர்ச்சியுடன் வெளிப்படுத்துவது எளிதானதல்ல. அதை அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார். எதிர்காலத்தில் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றுவோம். அதேபோல், இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, லாரா மேடையில் பேசியது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

இந்தப் படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து மகிழலாம். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொருவரும் தங்களது அப்பாவுக்கு ஒரு போன் செய்து பேசுவீர்கள். அந்த அளவுக்கு தந்தை–மகள் உறவை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறோம். படத்தில் இடம்பெற்றுள்ள ‘அப்பாவைப் போல இங்கே யாரிருக்கா?’ பாடலும் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். பாடலாசிரியர் ஏகாதசி, அருண்பாரதி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம். நன்றி.
 
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில், இனிகோ பிரபாகர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
 
அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தில் இனிகோ பிரபாகர், அஞ்சு கிருஷ்ணா அசோக், ‘பிக் பாஸ்’ சத்யா, சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி, ராஜன், உதயராஜ், ‘அருவி’ பாலா, யாசர், பிரதிக்ஷா, பசுபதி ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
 
சுரேஷ் குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரணவ் சூரஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை எஸ்.என். ஃபாசில் கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரித்திருக்கிறார். எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் குகன் இப்படத்தை வழங்குகிறார்.
 
எதிர்வரும் நவம்பர் 27ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், மணிகண்டன் மற்றும் ‘எகெய்ன் ஃபிலிம் மேக்கர்ஸ்’ அரவிந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் எஸ்.ஆர். பிரபாகரன் ஆகியோர் இணைந்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
 
தயாரிப்பாளர் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் பேசுகையில்,
 
”நாகர்கோவிலைச் சேர்ந்த நான், கடந்த ஆண்டு ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். அதன் பிறகு இயக்குநர் சிவபிரபு என்னைச் சந்தித்து ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் கதையைச் சொன்னார். கதை நன்றாக இருந்தது. ஒரு கிராமத்தில் ஓர் இரவில் ஒருவருக்குப் புதையல் கிடைக்கிறது. அது எப்படி கிடைத்தது? அது நல்லதா, கெட்டதா? என்பதுதான் கதையின் சுவாரசியமான அம்சம். அதன் பிறகு படத்தின் பணிகளைத் தொடங்கினோம்.
 
படத்தின் கதை முழுவதும் இரவில் நடைபெறுவதால், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இரவு நேரத்திலேயே நடைபெற்றது. நான் சில நாட்கள் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று படத்தின் பணிகளைப் பார்வையிட்டிருக்கிறேன். இது ஒரு நல்ல, இனிமையான பயணமாக இருந்தது. படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.
 
படத்தின் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம். நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறோம். உங்களுடைய அன்பும் ஆதரவும் எங்களுக்குத் தேவை” என்றார்.
 
நடிகர் உதயராஜ் பேசுகையில்,
 
”என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. படம் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். படம் தொடங்கிய 15 நிமிடங்களிலிருந்து பார்வையாளர்களைப் பரபரப்பாக வைத்திருக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. இரவு முழுவதும் நடைபெறும் கதை இது.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்றபோது குளிர் அதிகமாக இருந்தது. படத்தின் நாயகனான இனிகோ அண்ணன் கடுமையாக உழைக்கக்கூடியவர். அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர். அவருக்கு இந்தப் படம் ஒரு கம்பேக் படமாக இருக்கும். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன்” என்றார்.
 
தயாரிப்பாளர் அரவிந்த் பேசுகையில்,
 
”இயக்குநர் சிவபிரபுவிற்கு வாழ்த்துகள். நீண்ட நாட்களாக முயற்சி செய்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இப்படம் 27ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாகிறது. உங்களுடைய ஆதரவால் இந்தத் திரைப்படம் மின்ன வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
 
ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமார் சுந்தரம் பேசுகையில்,
 
”நண்பர்கள் ஒன்றாக இணைந்து ஐந்து நண்பர்களைப் பற்றிய கதையை ‘மின்னும் ஓர் இரவு’ என்ற திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படத்தின் கதை 24 மணி நேரத்தில், அதாவது ஒரு இரவு மற்றும் ஒரு பகலில் நடைபெறுகிறது.
 
தொழில்நுட்ப ரீதியாக விவரிக்க வேண்டும் என்றால், எங்களுக்குக் கிடைத்த அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். படத்தின் திரைக்கதைக்கு என்ன தேவையோ, அதனைத் திரையில் பிரதிபலிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவற்றைச் கச்சிதமாகச் செய்திருக்கிறோம்.
 
படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. அனைவரும் இணைந்து நல்லதொரு படைப்பை வழங்கியிருக்கிறோம்” என்றார்.
 
விநியோகஸ்தர் குகன் பேசுகையில்,
 
”மின்னும் ஓர் இரவு மிகவும் சுவாரசியமான கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம். ஐந்து நண்பர்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தின் மூலம் இயக்குநர், இசையமைப்பாளர் எனப் பல புதிய திறமையாளர்கள் அறிமுகமாகியுள்ளனர். இளம் திறமையாளர்கள் ஒன்றிணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
 
ஒரு கிராமத்தில், இரவு நேரத்தில் இவர்களுக்கு ஒரு விஷயம் கிடைக்கிறது. அது அந்த நண்பர்களை எத்தகைய விபரீதங்களுக்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் விவரித்திருக்கிறார்கள்.
 
படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நாங்கள் கேட்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் படக்குழுவினர் கடுமையாக உழைத்து வழங்கி வருகிறார்கள். இவை அனைத்தும் திரைக்குப் பின்னால் நடைபெறும் பணிகளாக இருந்தாலும், அதற்காக அவர்கள் காட்டும் ஈடுபாடும் உழைப்பும் அபாரமானது.
 
எங்கள் நிறுவனம் தொடர்ந்து புதிய தயாரிப்பு நிறுவனங்கள், புதிய இயக்குநர்கள் மற்றும் அறிமுகக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. எங்கள் நிறுவனம் சார்பில் அண்மையில் ‘ஆல்பாஸ்’ எனும் திரைப்படத்தை வழங்கினோம். இதற்கு ஊடகங்கள் நல்ல முறையில் ஆதரவு வழங்கின. இதன் காரணமாக அப்படத்தின் வெளிநாட்டு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை விற்பனை செய்வதும் எளிதாக இருந்தது.
 
இதேபோல் ஒவ்வொரு திரைப்படத்தையும் வணிக ரீதியாக வெற்றி பெறச் செய்ய இயலும் என்ற நம்பிக்கையில் பணியாற்றி வருகிறோம். இந்தப் படமும் அதுபோன்றதொரு களத்தில் இருக்கிறது. இளமையான படக்குழுவினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள். இனிகோவிற்கு வாழ்த்துகள். அவருடைய அனுபவம் இந்தப் படத்திற்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது.
 
திரைப்படத் துறையைப் பற்றி இரண்டு முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இன்று டிக்கெட் முன்பதிவுத் தளங்களில் ரேட்டிங் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. இது பெரிய படங்களையும் சிறிய படங்களையும் வித்தியாசப்படுத்துகிறது. இந்த நடைமுறைக்கு எதிராக, அதாவது ரேட்டிங் முறை கூடாது எனப் பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள்கூட நீதிமன்றத்தை நாட முடியும்.
 
தமிழ் சினிமாவில் முதல் ஐந்து அல்லது ஆறு இடங்களில் இருக்கும் நட்சத்திர நடிகர்களைக் கடந்து, சிறிய முதலீட்டில் திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வு இல்லை.
 
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் முதல் ஐந்து அல்லது ஆறு நட்சத்திர நடிகர்களுக்கு அனைத்துவிதமான ஆதரவும் கிடைக்கிறது. உதாரணமாக, அவர்களுடைய சட்டக் குழுக்கள் இந்த ரேட்டிங் முறைக்கு எதிராக முழுமையாகப் பணியாற்றி, அதைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
 
ஒரு திரைப்படம் தரமானதாக இருந்தாலும், ரேட்டிங் முறையின் மூலம் அதன் வணிகத்தைப் பாதிக்க முடியும். சிலர் நூறு டிக்கெட்டுகளை வாங்கி, படத்தைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து அதன் வணிகத்தைக் குறைத்துவிடுகிறார்கள். இது மற்ற திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கடுமையான சவால்களை ஏற்படுத்துகிறது.
 
இதனால் தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட்ட பிறகும் தொடர்ந்து திரையரங்குகளில் நிலைநிறுத்துவது கடினமாகிறது. ஒரு திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடினால்தான் அதற்கான வெளிநாட்டு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்பும் உருவாகிறது.
 
இதனால் ரேட்டிங் முறை என்பதே தவறு என நான் கருதுகிறேன். என்னுடைய தொழில்சார்ந்த அனுபவத்தின் அடிப்படையில் இதைப் பகிர்ந்துகொள்கிறேன். இது என்னுடைய சொந்தக் கருத்தும்கூட.
 
இதனைத் தொடர்ந்து, ஒரு திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அட்டவணை மற்றும் திட்டமிடலில் தெளிவு வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
 
இன்று ஒரு திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது என்றால், தமிழகத்தில் உள்ள ஒரு சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமே புதன்கிழமைகளில் அதற்கான அறிவிப்புகளை ஒழுங்குபடுத்துகின்றன. மற்ற திரையரங்குகளில் வியாழக்கிழமை இரவில்தான் இதுபற்றிய அறிவிப்புகள் வெளியாகின்றன. இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் யதார்த்தமான நடைமுறையாக இருக்கிறது. இதில் மாற்றம் வேண்டும் என்பதுதான் என்னுடைய இரண்டாவது வேண்டுகோள்.
 
பொதுவாக ஒவ்வொரு இயக்குநரும் பல ஆண்டுகள் கடுமையாகப் போராடி ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறார்கள். தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படம் குறைந்தபட்சம் இத்தனை திரையரங்குகளில் வெளியாக வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறார்கள். ஆனால், அவை நிறைவேறுவதில்லை.
 
இன்றைய சூழலில் சாதாரணமான வாரங்களில்கூட வெள்ளிக்கிழமைகளில் 10 அல்லது 12 திரைப்படங்கள் வெளியாகின்றன. அதனால் திரையரங்குகள் தங்களது வெளியீடு குறித்த திட்டமிடலை ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெளிவாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
 
சினிமா மிகவும் ஆரோக்கியமாகவே இருக்கிறது. 2021ஆம் ஆண்டில் 210 திரைப்படங்கள் வெளியானதாகவும், தற்போது 300 திரைப்படங்கள் வெளியாகி வருவதாகவும் கூறலாம். இந்த வளர்ச்சி 2030ஆம் ஆண்டில் 450 திரைப்படங்களாக உயரும் என நம்புகிறேன்.
 
இன்று நம்மில் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திப் பிரபலமாகிறார்கள். அவர்களின் ஒவ்வொரு காணொளியும் பத்தாயிரம் முதல் பல மில்லியன் வரையிலான பார்வைகளைப் பெறுகிறது. இந்த வளர்ச்சி அவர்களைச் சினிமா உருவாக்கத் தூண்டும். ஏராளமான புதிய முகங்கள் அறிமுகமாவார்கள். அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
 
இவர்கள் அனைவரையும் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும். ரசிகர்களைக் கவரும் தரமான உள்ளடக்கங்களுக்கு எப்போதும் ஆதரவு உண்டு. அந்த வகையில் ‘மின்னும் ஓர் இரவு’ படத்திற்கும் உங்களுடைய ஆதரவு அவசியம். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
 
இசையமைப்பாளர் பிரணவ் சூரஜ் பேசுகையில்,
 
”நான் ஒரு சுயாதீன இசைக்கலைஞர். பத்தாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்திலிருந்தே பாடல்களுக்கு இசையமைத்து வருகிறேன். இதுவரை 50க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியிருக்கிறேன். ஆனால், இதுவரை எனக்கு எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
 
நிறைய இசை நிறுவனங்களுக்குச் சென்று வாய்ப்புக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் என் இசைத் திறமையைவிட என் பின்புலத்தைத் தெரிந்துகொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள்.
 
அதன் பிறகு, என் சகோதரருடன் சென்னைக்கு வந்தபோது இப்படத்தின் இயக்குநரைச் சந்தித்தேன். அவர் என் இசைத் திறமையைப் பார்த்து இப்படத்திற்கான வாய்ப்பை வழங்கினார். முதலில் எனக்கு நம்பிக்கை குறைவாகவே இருந்தது. அதன் பிறகு நான் இசையமைத்த பாடலை இயக்குநர் கேட்டார். அதைக் கேட்டுப் பாராட்டினார். தொடர்ந்து பின்னணி இசையையும் கேட்டுப் பாராட்டுத் தெரிவித்தார்” என்றார்.
 
நடிகர் ‘பிக் பாஸ்’ சத்யா பேசுகையில்,
 
”இது எனக்கு மற்றொரு மிகப்பெரிய மேடை. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் நேரத்தில், இப்படத்தில் வில்லனாக நடிக்க முடியுமா என என்னிடம் கேட்டார்கள். ‘தாராளமாக நடிக்கிறேன்’ என்று சொல்லி ஒப்புக்கொண்ட திரைப்படம் இது.
 
படப்பிடிப்புத் தளத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. வாய்ப்பளித்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. இப்படம் 27ஆம் தேதி வெளியாகிறது. இது ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர். ஃபன் கேரண்டி” என்றார்.
 
நடிகை அஞ்சு கிருஷ்ணா அசோக் பேசுகையில்,
 
”நான் தமிழில் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் எனக்கு ஆதரவளித்தனர். அதனால் எந்தவிதமான பதற்றமும் இன்றி மகிழ்ச்சியாகப் பணியாற்ற முடிந்தது” என்றார்.
 
இயக்குநர் – நடிகர் சுப்பிரமணிய சிவா பேசுகையில்,
 
”பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு ‘ஓர் இரவு’ எனும் பெயருக்கு முன்னால் ‘மின்னும்’ என்பதைச் சேர்த்து இயக்குநர் சிவபிரபு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
 
இந்தப் படக்குழு இளமையானதுதான். என்னிடம் ஆறு நாட்கள் கால்ஷீட் கேட்டனர். என்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கும் என்று நம்பினேன். ஆனால், இரண்டு நாட்களிலேயே என்னுடைய கதாபாத்திரம் தொடர்பான காட்சிகளைப் படமாக்கிவிட்டு அனுப்பிவிட்டனர்.
 
படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமாரின் பணியைப் பார்த்து வியந்தேன். அவருடைய வேகத்தை இதற்கு முன்பு ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் பார்த்திருக்கிறேன்.
 
இயக்குநர் சிவபிரபு தெளிவின் உச்சம். அவர் ஏராளமான விளம்பரப் படங்களில் பணியாற்றியிருப்பதால் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.
 
இது இரவில் நடைபெறும் கதை. ‘இரவு என்பது மனிதர்களைக் காப்பாற்றும். பகல் என்பது மனிதர்களைக் காட்டிக்கொடுக்கும்’ என எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு நாவலில் குறிப்பிடுவார்.
 
மனிதனுக்கு இரவில்தான் கண் தெரியும். பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக மனிதன் இரவில்தான் வாழ்ந்தான். தாயின் கருவறை எனும் இருளில்தான் மனிதன் இருந்தான். குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகிறது என்றால், அதற்குப் பகல் பழக்கமில்லை. அதனால் அழுகிறது. அதனால்தான் குழந்தைகள் பகலில் உறங்கி, இரவில் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
 
சினிமாவும் இரவில்தான் நடைபெறுகிறது. பகலில் இருந்தால் சினிமாவைக் காட்சிப்படுத்த முடியாது. இருளில் நடைபெறும் தொழில்களில் சினிமா முக்கியமானது. ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் சிறப்பான கவனத்தைப் பெற்றதற்குக் காரணம், அவர் இருளைக்கூடத் திரை அழகாகக் காண்பிப்பதுதான்.
 
இந்தப் படம் ஆசையைப் பற்றிச் சொல்கிறது. உலகியல் வாழ்க்கையில் இருக்கும் நாம் யாரும் ஆசையைத் துறக்க முடியாது. ஒவ்வொருவரும் ஆசையின் காரணமாகவே மிக உயர்ந்த இடத்திற்குச் செல்கிறார்கள். மனம் இருக்கும் அனைவரும் ஆசைப்படத்தான் செய்வார்கள். அதனால் ஏற்படும் துன்பத்தையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இந்தத் தத்துவத்தை இந்தப் படத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.
 
இயக்குநர் மணிகண்டன் பேசுகையில்,
 
”இயக்குநர் சிவபிரபு என்னுடன் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு முதலில் நன்றி.
 
இயக்குநர் சிவபிரபு நிறைய படங்களைப் பார்ப்பார். உலக சினிமாவையும் பார்ப்பார். ஆனால், யாரிடமும் சரளமாகப் பேச மாட்டார். இந்தக் கதையை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் சொல்லியிருக்கிறார். இதை முதலில் குறும்படமாக எடு என்று சொன்னேன். உடனடியாகத் தனது செல்போனிலேயே படமாக்கி, படத்தொகுப்பும் செய்து காண்பித்தார். அது நன்றாக இருந்தது.
 
அதன் பிறகு இதுதான் சரியான தருணம். தயாரிப்பாளர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்கு என்று சொன்னேன். அதன் பிறகு நிறைய பேரைச் சந்தித்தார். தொடர்ந்து ராபர்ட் ராஜ் அவருக்கு இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார்.
 
ஒளிப்பதிவாளர் சுரேஷும் என்னுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். சுரேஷும் சிவபிரபுவும் விளம்பரப் படங்களில் பணியாற்றியிருப்பதால் ஒரு காட்சியை விரைவாகவும் தரமாகவும் உருவாக்குவார்கள். இந்தப் படமும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.
 
நடிகர் இனிகோ பிரபாகர் பேசுகையில்,
 
”இந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தைப் படித்தவுடன் இதைத் தவறவிடக்கூடாது. இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதன் பிறகு இயக்குநரைச் சந்தித்து முழுக் கதையையும் கேட்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் பணியாற்றிய அனைவரும் நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது உற்சாகமாக இருந்தது.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இயக்குநரின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருந்தாலும் படப்பிடிப்புத் தளத்தில் இயல்பாகவும் அமைதியாகவும் அனைவரையும் உற்சாகப்படுத்திக்கொண்டே இயக்குநர் பணியாற்றினார். இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. அவர் எதிர்காலத்தில் பெரிய இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கிறது. அவர் அப்படி உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
 
ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், சண்டைப் பயிற்சி இயக்குநர் என அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
 
ராபர்ட் ராஜ் போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்களுக்குக் கிடைத்ததைப் பாக்கியமாகக் கருதுகிறேன். ‘இப்படி செய்தால் சிறப்பாக வருமா? வருமென்றால் அதை உருவாக்குங்கள்’ என்பார். இந்தப் படத்தை அவர் தன்னுடைய குழுவினருடனும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் பார்வையிட்டார். படம் நிறைவடைந்த பிறகு மகிழ்ச்சியாக இருந்தார். அவருடைய மகிழ்ச்சியைப் பார்த்து நாங்களும் மகிழ்ந்தோம்” என்றார்.
 
இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் பேசுகையில்,
 
”நான் இந்த மேடையில் நிற்பதைப் பார்க்க வேண்டும் என்று என்னுடைய தந்தை ஆசைப்பட்டார். ஆனால், அவர் இப்போது இல்லை. இருந்தாலும் அவருடைய ஆசி எனக்கு இருக்கும்.
 
இந்தத் திரைப்படம் நன்றாக உருவாகியிருக்கிறது. படம் பார்த்த அனைவரும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். இருப்பினும், ஒரு இயக்குநராகச் சில காட்சிகளை இன்னும் சிறப்பாக மேம்படுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறது.
 
நான் சினிமாவில் ஒளிப்பதிவாளர் ரவியிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அதன் பிறகு சண்முகம் என்பவர் மூலமாக உதவி இயக்குநராகவும் பணியாற்றினேன். தொடர்ந்து விளம்பரப் படங்களில் இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் அரவிந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினேன்.
 
ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமாரும் நானும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இயக்கி, இன்னும் வெளியாகாத ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினோம். அந்தப் படப்பிடிப்பின்போது சிக்கலான தருணங்களில் அவர் பணியாற்றிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைத்தொடர்ந்து விளம்பரப் படங்களிலும் என்னுடன் இணைந்து பணியாற்றினார்.
 
அவர் மூலமாக இந்தத் தயாரிப்பாளரைச் சந்தித்துக் கதையைச் சொன்னேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. அதன் மூலம் இயக்குநராகியிருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அவருக்கு என்னுடைய முதல் நன்றி.
 
கதை முழுவதும் இரவில் நடைபெறுவதால் படப்பிடிப்புத் தளங்களைத் தேர்வு செய்வதில் கடுமையான சவால்கள் இருந்தன. நாங்கள் தேர்வு செய்த கிராமத்தில் மொத்தம் 34 குடும்பங்கள்தான் இருக்கின்றன. அதிலும் அந்தக் குடும்பங்களின் மூத்த உறுப்பினர்கள் மட்டுமே அங்கு வசிக்கிறார்கள். அவர்களுடைய வாரிசுகள் வெளியூர்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் தராமல் படப்பிடிப்பை நடத்த வேண்டிய சூழல் இருந்தது. இதனை உணர்ந்து படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என்றார்.
 
இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் பேசுகையில்,
 
”மின்னும் ஓர் இரவு படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். இதற்கு மிக முக்கியமான காரணம் என்னுடைய நண்பரான இனிகோ பிரபாகர். முதலில் இந்தப் படத்திற்காகப் புதிய இயக்குநருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி.
 
இயக்குநரை வரவேற்கிறேன். அவர் ஒரு கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால், அவருடைய மேடைப்பேச்சு ரசிக்கும்படியும் கேளிக்கையாகவும் இருந்தது. இப்படி பேசும் ஒருவர் கிரைம் திரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் என்றால், அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
 
இந்த மேடை இசையமைப்பாளருக்கான மேடை. அவர் இங்கு பேசும்போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை விவரித்தார். சினிமாவில் ஆரம்பத்தில் இப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கும். அவற்றை எளிதாகக் கடந்து செல்ல வேண்டும். எதிர்காலத்தில் சினிமாவில் உங்களுக்கான ஓர் இடம் நிச்சயம் உண்டு. அதை சினிமாவே உங்களுக்கு வழங்கும். அதற்கான அனைத்துத் தகுதிகளும் உங்களுக்கு இருக்கின்றன. அது இந்தப் படத்தின் பாடல்களிலும் முன்னோட்டத்திலும் எதிரொலித்தது.
 
இந்தப் படத்தைப் பற்றி இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணிய சிவா பேசியதிலிருந்து, இந்தப் படம் எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. நிச்சயமாக இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்புகிறேன்.
 
என்னுடைய நண்பர் இனிகோவைப் பற்றிப் பேச வேண்டும் என்றால், மீண்டும் என்னுடைய முதல் படமான ‘சுந்தரபாண்டியன்’ படத்தைப் பற்றித்தான் பேச வேண்டும். அந்தப் படத்தில் நண்பர்கள் விஜய் சேதுபதி, சூரி, சௌந்தர், இனிகோ பிரபாகர் ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்கள் அனைவரும் சசிகுமாருக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். விஜய் சேதுபதி, சூரி, சௌந்தர் என ஒவ்வொருவரும் இன்று முன்னணி நட்சத்திரங்களாக உயர்ந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் உயர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளித்தாலும், இனிகோவிற்கு அதுபோன்ற வாய்ப்புகள் அமையவில்லையே என்ற வருத்தம் என்னுள் இருக்கிறது.
 
ஒரு நடிகர் தனது திரை வாழ்க்கையில் வெற்றிகரமாகப் பயணிப்பதற்கு நடிப்புத் திறன் மட்டுமே முக்கியம். அது அவரிடம் முழுமையாக இருக்கிறது. அவரிடம் ஒரு காட்சியை விளக்கமாகச் சொல்லிவிட்டு, அழ வேண்டும் என்றால் உடனடியாக அழுதுவிடுவார். அந்த அளவிற்கு ஒரு காட்சியை நேர்த்தியாக உள்வாங்கி, நடிப்புத் திறனை வெளிப்படுத்தக்கூடியவர். இவ்வளவு நுட்பமான திறமை படைத்த இனிகோ, அவருக்கான உயரத்தை எட்டவில்லையே என்ற வருத்தம்தான் இன்னும் என்னுள் இருக்கிறது.
 
ஒரு நடிகருக்கு வெற்றி மிகவும் முக்கியம். அது அவரைத் தொடர்ந்து பல தளங்களுக்கு அழைத்துச் செல்லும். ஆனால், வெற்றிகளைத் தாண்டி ஒருவர் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறார் என்றால், அதுவும் முக்கியமானது. இனிகோ வெற்றிகளைச் சந்தித்ததைவிட தோல்விகளையே அதிகம் பார்த்திருக்கிறார். இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளாக அதைப்பற்றிக் கவலைப்படாமல், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிப்பது பெரும் சவாலான விஷயம்.
 
திறமையான கலைஞர்களைத் தமிழ் சினிமா ஒருபோதும் கைவிடாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் மூலம் இனிகோவிற்கு அந்த அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
 
அவர் இதுவரை எத்தனையோ படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் தலைப்பில்தான் இனிகோ வின் ‘மின்னும் ஓர் இரவு’ என இடம்பெற்றிருக்கிறது. இதை அவருடைய வெற்றியின் தொடக்கமாகப் பார்க்கிறேன். இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று, அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ‘இனிகோவின் படங்கள்’ என வெளியாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
 
இந்தப் படத்தின் இயக்குநர் பேசும்போது, ‘இந்தக் கதையில் பிரபலமான ஐந்து நடிகர்கள் நடிக்கச் சம்மதம் தெரிவித்தும், பட்ஜெட் காரணமாக இனிகோ பிரபாகரைத் தேர்வு செய்தோம்’ என்று சொன்னார். ஆனால், அவருக்கே தெரியாத ஒரு விஷயத்தை நான் இப்போது பகிர்ந்துகொள்கிறேன்.
 
நானும் இனிகோவும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்வோம். இந்தக் கதைக்காக அவர் ஐந்து கதைகளை நிராகரித்தார் என்பதுதான் உண்மை. அவர் வாரந்தோறும் இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்பார். அந்தக் கதைகளைப் பற்றி என்னிடம் விவாதிப்பார். நான் அவரிடம், ‘கதை நன்றாகத்தான் இருக்கிறது. சினிமாவில் ஏதேனும் ஒரு பணியைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்’ என்று சொல்வேன். ஆனால், அவர் அந்தக் கதைகளை நிராகரித்துவிடுவார்.
 
தனக்கு வாய்ப்புகள் இல்லாதபோதும் பொருத்தமான கதைக்காகப் பொறுமையுடன் காத்திருந்தார். இதற்கும் தனித் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் இனிகோ பிரபாகரிடம் இருக்கிறது. இந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தைப் பார்த்தவுடன் முழுக் கதையையும் கேட்டு, ‘இதைத் தவறவிடக்கூடாது’ என்று சொல்லி நடித்திருக்கிறார் என்றால், இந்தப் படம் நிச்சயம் நல்ல படமாக இருக்கும். பெரிய வெற்றியைப் பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

These two children are in good health! The parents thanked the doctors

Rainbow Children’s Hospital, India’s leading pediatric multi-specialty and perinatal care hospital chains, today organized a press conference in Chennai to highlight advancements in neonatal care and the hospital’s experience in managing complex preterm deliveries, delivered at the limits of viability, which has been defined in India as 24 – 25 weeks. The session brought together the hospital’s team of neonatologists, who shared details of many challenging cases involving extremely premature babies who overcame multiple critical complications with specialized medical interventions and intensive neonatal care. The discussion also highlighted the increasing need for advanced neonatal facilities, timely diagnosis and comprehensive medical support to improve outcomes for periviable premature babies. The first highlighted case involved a baby girl born at 24 weeks and 3 days and weighing 712 grams.

The baby required 12 minutes of CPR immediately after birth and subsequently battled severe respiratory complications, pulmonary haemorrhage, bleeding on both sides of the brain and a drug-resistant bloodstream infection. She also underwent laser treatment in both eyes for retinopathy of prematurity.  Despite two courses of medication, the vessel remained open, necessitating surgical closure with clips when were just four weeks old. They have now recovered well after nearly 75 days of hospital stay and are ready to go home.  After 105 days of oxygen support and intensive NICU care, she was discharged weighing 1.944 kg. The second case were babies, born as twinsat 24 weeks and 2 days and weighing 600 grams, again battling complex respiratory concerns. They were also diagnosed with a significant patent ductus arteriosus (PDA), a condition in which a blood vessel near the heart remains open after birth.

Rainbow children’s hospital reports survival of 68% at 24 weeks of gestational age and 86% at 25 weeks, which is on par with the outcome of these infants in high income countries.  This niche care is offered only by selected units in India, again underlining the complexity of care required and the availability of expertise. Previable babies are those born 26 weeks before gestation, are at the maximal higher risk of complications due to the underdevelopment of their lungs, brain, immune system and other vital organs. This makes access to specialized neonatal care and timely medical intervention critical to their survival and long-term development. These statistics should be seen in the context of the high preterm load in India. According to estimates published in The Lancet, India recorded approximately 3.02 million preterm births in 2020, accounting for 13% of all births in the country and over 20% of preterm births worldwide which is the highest number of preterm births globally. 

Elaborating on common neonatal complications and the role of technology, Dr. Shobana Rajendran, Senior Consultant –Neonatologist, Rainbow Children’s Hospital, Annanagar,said, “Extremely premature babies are vulnerable to complications such as respiratory distress, brain haemorrhages, infections, feeding difficulties and retinopathy of prematurity, as several vital organs are still developing. Advancements in neonatal ventilation, surfactant therapy, continuous monitoring and laser treatment for eye complications have significantly improved the management of these conditions. A multidisciplinary approach is equally important to address complications as they arise and support the baby’s growth and development beyond the initial critical phase.“

Highlighting maternal health and the importance of preventing premature births, Dr. Monisha R, Consultant – Neonatologist, Rainbow Children’s Hospital, Sholinganallur, said, “Preterm births can be associated with several factors, including multiple pregnancies, maternal hypertension, diabetes, infections, cervical insufficiency and placental complications. While not all premature births can be prevented, regular antenatal check-ups, timely screening and appropriate management of underlying maternal conditions can help identify and address certain risks. High-risk pregnancies require closer medical supervision and early consultation with specialists to plan for potential complications. Awareness and timely intervention are key to ensuring that mothers and babies receive appropriate care.“

Speaking on the broader challenges and advancements in neonatal care, Dr. Giridhar S, Clinical Lead – Neonatology, Rainbow Children’s Hospital, Guindy, said, “India accounts for the highest number of preterm births globally, making this an important public health concern. Care for periviable preterm infants is even more challenging considering the complexity of medical and surgical problems faced by these babies. At Rainbow Children’s Hospital, we have created a tiny baby ecosystem combining specialized instruments, advanced monitoring, standardized clinical evidence-based protocols, and developmental supportive care. Our units are backed by a dedicated multidisciplinary team of specialists, including senior neonatologists and nurses, backed by round-the-clockavailability of surgeons, cardiologists and radiologists with special expertise in handling these vulnerable babies. Parents must understand that a periviable birth does not necessarily mean an unfavorable outcome. With the right medical support, many of these babies can overcome critical challenges and progress towards healthy development.“

The hospital highlighted that managing previable premature babies requires comprehensive care, from antenatal counselling and delivery planning to specialized NICU interventions, nutritional support and long-term developmental monitoring. This calls for advanced neonatal infrastructure and coordinated expertise across specialties to address the evolving needs of these newborns.

எங்கள் அம்மன் அருளால் தான் பிரச்சனை முடிந்தது என நம்பிக்கை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் தேவ நல்லூர் கிராமம் அருள்மிகு தேவி ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் இரு பிரிவினர் கருத்து வேறுபாடு காரணமாக முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த வழிமுறைகளை சில தரப்பினர் வழிமுறையை மாற்றி முறை இன்றி பேனர்களை வைத்து பட்டாசு வெடி வைத்து முன்னோர்கள் சம்பிரதாயத்தை மீறி நடந்தனர்.
 
கிராம பொதுமக்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் செயல்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகள் அலுவலர்களை சந்தித்து முறையிட்டு பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலக அலுவலர்களிடம் பொதுமக்கள் முறையிட சென்றபோது செயல் அலுவலர் வராததால் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
 
அதன் பின் காவல் ஆய்வாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நாங்கள் அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்து ஊருக்கு 5 மணிக்கு வருகிறோம் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று சொன்னவுடன் அனைவரும் திரும்பிச் சென்றனர். பிறகு இன்று மாலை தேவ நல்லூர் அருள்மிகு தேவி ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் வைத்து செயல் அலுவலர் காவல் துறை ஆய்வாளர்கள் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர் அறநிலையத்துறை தக்கார் கோவில் திருப்பணி குழு மற்றும் பெருந்திரளான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பேசி பழைய முன்னோர்கள் வழிபட்ட வழிமுறைகளை மாற்றாமல் கடைபிடிக்க வேண்டும் புதிய வழிமுறைகளை செயல்படுத்த கூடாது என்று அலுவலர்களும் திரளான ஊர் பொதுமக்களும் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டது அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையை உடனடியாக அகற்றப்பட்டது. அருள்மிகு தேவி ஸ்ரீ காளியம்மன் சக்தியாலும் அருளாலும் பிரச்சனை சுமூகமாக முடிவுற்றது என அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். 
 
REPORTER- P.PREMA

டைட்டானிக் விமர்சனம் RATING 3/5

இயக்கம்: எம். ஜானகிராமன்
நடிகர்கள்: கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி
இசை: நிவாஸ் கே. பிரசன்னா
தயாரிப்பு: சி.வி. குமார்

விமர்சனம்:

பூமிநாதனாக காளி வெங்கட், சூர்யாவாக கலையரசன், சந்துருவாக ராகவ் விஜய் என மூன்று மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் ரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்கின்றன. கல்லூரிக் காதலியான அம்முவின் (கயல் ஆனந்தி) பிடிவாதங்களையும், கொடைக்கானலில் நிகழ்ந்த காதல் சம்பவங்களையும், இறுதியில் ஏற்பட்ட பிரிவையும் சூர்யா விவரிக்கிறார். பள்ளிப் பருவத்தில் காவேரி மீது கொண்ட ஒருதலைக் காதலை பூமிநாதன் நினைவுகூர்கிறார்.

மறுபுறம், காதலியுடன் (அஷ்னா ஜவேரி) பிரிந்துவிட்ட சந்துரு, தீபாவைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராகிறார். ஆனால், தனது கடந்தகாலக் காதல் வாழ்க்கையை மறைக்காமல் வரப்போகும் மனைவியிடம் சொல்லிவிட வேண்டும் என்பது அவரது எண்ணம். இதற்கு பூமிநாதன் கொடுக்கும் அறிவுரை வேறு!

இப்படிப் பேசிக்கொண்டே செல்லும் மூவரின் பயணம் பெங்களூருவை அடைகிறது. சந்துருவின் திருமண அழைப்பை ஏற்று அவரது நண்பர்களும் செல்கின்றனர். அங்கிருந்து கதை எடுக்கும் திருப்பங்களும், வெளிப்படும் ரகசியங்களும் படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கின்றன. சந்துரு தனது கடந்தகாலக் காதலை மணமகளிடம் சொன்னாரா? திருமணத்தில் காத்திருக்கும் எதிர்பாராத சம்பவங்கள் என்ன? என்பதே கதை…

காதல் என்றாலே மகிழ்ச்சி மட்டுமல்ல, சில நேரங்களில் ஏமாற்றமும் வலியும் கூடவே வரும் என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாகச் சொல்ல முயற்சிக்கும் திரைப்படம் ‘டைட்டானிக்.

கலையரசன் தனது இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மை சேர்க்கிறார். காதல், கோபம், குழப்பம் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறார். நாயகியாக நடித்த ஆனந்தி, தனது எதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காதல் காட்சிகளிலும் உணர்ச்சிகரமான தருணங்களிலும் கதைக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ஆஷ்னா சவேரி தனது கதாபாத்திரத்தின் மூலம் படத்திற்கு கூடுதல் வண்ணம் சேர்க்கிறார். காளி வெங்கட் மற்றும் ஜாங்கிரி மதுமிதா ஆகியோரின் நகைச்சுவை பங்களிப்புகள் சில இடங்களில் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கின்றன. சென்னை, கொடைக்கானல், கோவை உள்ளிட்ட இடங்களின் பின்னணியில் பயணிக்கும் கதை, நகைச்சுவை மற்றும் காதல் உணர்வுகளுடன் நகர்கிறது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன.

இந்தப் படத்தின் மற்றொரு பலம் அதன் திரைக்கதை அமைப்பு. சாதாரணமாகக் கடந்து போகும் சில வசனங்கள்கூட பின்னர் நிகழும் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது இயக்குநரின் கவனத்தையும் உழைப்பையும் வெளிப்படுத்துகிறது.

பலம்:
இளைஞர்களின் காதல் மனநிலையைப் பிரதிபலிக்கும் கதைக்களம்.

பலவீனம்:
சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைகிறது.

இறுதி தீர்ப்பு:
காதலில் விழுந்தவர்கள், காதலில் தோற்றவர்கள், காதலைத் தேடுபவர்கள் என ஒவ்வொருவருக்கும் காதல் குறித்த அனுபவங்கள் வேறுபட்டிருக்கும். அந்த அனுபவங்களின் சில பக்கங்களை நகைச்சுவையுடன் நினைவுபடுத்துகிறது இந்தப் படம்.

1-நிமிட பொதுச் சேவை அறிவிப்பு வீடியோ போட்டி!

சென்னை:
 
​இந்திய மக்கள் தொடர்பு கழகத்தின் (PRSI) சென்னை கிளை சார்பில், கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் (Coromandel International Limited) நிறுவனத்தின் ஆதரவுடன், உணவுப் பாதுகாப்பு குறித்த “1-நிமிட பொதுச் சேவை அறிவிப்பு (PSA) வீடியோ போட்டி” சென்னை மயிலாப்பூரில் உள்ள ஹோட்டல் சவேராவில்  (நவம்பர் 13) வெற்றிகரமாக நடைபெற்றது.
 
​”உணவைச் சேமிப்போம் – வீணாக்குவதைத் தவிர்ப்போம், சிறப்பாக வாழ்வோம்” (Save Food – Waste Less, Live Better) என்ற மையக்கருத்தில், இளம் தகவல் தொடர்பாளர்களிடையே உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூக மாற்றத்தை ஊக்குவிக்கவும் இப்போட்டி நடத்தப்பட்டது.
 
​இவ்விழாவில், கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் (AVP & Head) திரு. தினேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். “சிந்திப்போம், படைப்போம், பேசுவோம்!” (Think, Create, Speak!) என்ற வாசகத்தின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தங்களது படைப்புகளைச் சமர்ப்பித்தனர்.
 
​போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் நடுவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன:
 
​முதல் பரிசு (ரூ. 25,000): செல்வி. எஸ். தேஜஸ்வினி, காட்சித் தொடர்பியல் துறை (Department of Visual Communication), சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
 
​இரண்டாம் பரிசு (ரூ. 15,000): திரு. எஃப். கிராஸ் ஷெரூன் (Cross Sheroon. F), காட்சித் தொடர்பியல் துறை, வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனம் (VISTAS), சென்னை.
 
​மூன்றாம் பரிசு (ரூ. 10,000): திரு. ஆர். இர்பான், காட்சித் தொடர்பியல் துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
 
​பி.ஆர்.எஸ்.ஐ (PRSI) சென்னை கிளையின் தலைவரும், சென்னை வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் காட்சித் தொடர்பியல் துறை இணைப் பேராசிரியருமான டாக்டர் என். ராஜா இவ்விழாவிற்குத் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கிக் கௌரவித்தார்.
 
இந்நிகழ்விற்கு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

கமலாலயத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் பாஜக தேசிய துணை தலைவர், பாஜக தமிழக பொறுப்பாளருமான ராம் மாதவ் அவர்கள், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
 
இந்த சந்திப்பில் பாஜக இணை பொறுப்பாளர்கள் திரு நிர்மல் குமார் சுரானா, திருமதி பி கே அருணா அவர்கள், முன்னாள் தேசிய செயலாளர் திரு எச் ராஜா அவர்கள், மாநில துணைத்தலைவர்கள் திரு வி பி துரைசாமி அவர்கள், திரு டால்பின் ஸ்ரீதர் அவர்கள், பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் திரு நாராயணன் திருப்பதி அவர்கள், பாஜக மாநில நிர்வாகி திரு கே எஸ் ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

BLACK GOLD – திரை விமர்சனம் RATING 3/5

இயக்கம்: தீரன் அருண்குமார்
இசை: கவாஸ்கர் அவினாஷ்
தயாரிப்பு: எம். மூர்த்தி
நடிகர்கள்: வெற்றி, லிவிங்ஸ்டன், பிரியாலயா, அபிராமி வெங்கடாசலம், ஏ. வெங்கடேஷ், அருள் டி. சங்கர் மற்றும் பலர்.
 
தமிழ் சினிமாவில் தங்கம், வைரம், போதைப்பொருள் கடத்தல் எனப் பல்வேறு கதைக்களங்களில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், மனித முடி வியாபாரத்தின் பின்னணியில்பொதுவாக நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் தலைமுடிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய வியாபாரம் இருக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது BLOCK GOLD திரைப்படம்.
 
கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் தலைமுடி சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தலைமுடி வியாபாரத்தின் பின்னணியில் இயங்கும் குழுக்கள், அவர்களுக்குள் ஏற்படும் தொழில் போட்டி, அதிகாரப் போட்டி, பணத்திற்காக அரங்கேறும் குற்றச் சம்பவங்கள் எனக் கதை நகர்கிறது.
 
பல கோடி மதிப்புள்ள தலைமுடியை ஏற்றிச் செல்லும் வேன் மர்மமான முறையில் காணாமல் போகிறது. அந்த வேனை ஓட்டிச் சென்ற லிவிங்ஸ்டனும் காணாமல் போகிறார். தனது தந்தையைத் தேடி மகன் வெற்றி மேற்கொள்ளும் பயணமே படத்தின் முக்கியக் கதைக்களம். இதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? கடத்தலுக்குக் காரணம் யார்? என்பதற்கான பதில்களைப் பரபரப்புடன் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.
 
வெற்றி தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற அமைதியான நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாகத் தந்தைக்காகப் போராடும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். லிவிங்ஸ்டன் அனுபவம் வாய்ந்த நடிப்பால் தந்தை கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். அருள் டி. சங்கரின் வில்லத்தனமும், சண்டைக் காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
 
பிரியாலயா காதல் காட்சிகளில் இடம்பெற்றாலும், அவருக்கான கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது. அபிராமி வெங்கடாச்சலம் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறது. சந்தோஷ்குமார் வீராசாமியின் ஒளிப்பதிவு கதையின் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
 
 பலம்: 
•வித்தியாசமான கதைக்களம்.
 பலவீனம்:
• இன்னும் வலுவான கிளைமாக்ஸ் அமைந்திருக்கலாம்.
 
இறுதி தீர்ப்பு:
பணம் சம்பாதிப்பதற்காக மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள்என்றாலும்,தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத தலைமுடி வியாபாரத்தை மையமாகக் கொண்டு புதிய கதைக்களத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் BLOCK GOLD

‘மௌன மொழிகள்’ கவித்துவமான தலைப்பு- தொல். திருமாவளவன்

ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் (Sri Vaari Entertainment) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில், பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘மௌன மொழிகள்’ (Mouna Mozhigal). ஸ்ரீமன், திவ்யா, தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், அர்ஜுன், இளவரசு, அஞ்சலிதேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து மகிழும் ஒரு கலகலப்பான கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘மௌன மொழிகள்’ உருவாகியுள்ளது.
 
வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக நட்சத்திரங்கள், சமூக ஆளுமைகள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
 
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், பிரபல பின்னணிப் பாடகர் மனோ, சிறு படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே. அன்புசெல்வன், இசையமைப்பாளர் சிற்பி, லியாகத் அலிகான், பாடகர் கானா பாலா, நடிகர் விஸ்வநாத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
இந்நிகழ்வினில்… 
 
பாடகர் கானா பாலா பேசியதாவது,
 
‘மௌன மொழிகள்’ திரைப்படத்தில் ஷாகிர் மனோ மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். மனோ அண்ணன் ஒரு சிறந்த பாடகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது மகன் ஷாகிர் மனோ நடிப்பிலும் தனது திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திற்காக நான் இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறேன். குறிப்பாக, இளைஞர்களைக் கவரும் வகையில் பாடல்களும் இசையும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
 
மனோ அண்ணனின் மகன் என்பதற்காக மட்டுமே ஷாகிர் மனோவைப் பாராட்டவில்லை. அவருக்கென்று தனிப்பட்ட திறமை இருக்கிறது. சினிமாவில் குடும்பப் பின்னணி வாய்ப்புகளைப் பெற்றுத் தரலாம். ஆனால், திறமைதான் ஒருவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் ஷாகிர் மனோவிடம் நல்ல திறமை இருக்கிறது. அவர் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வளர வேண்டும்.
 
இந்தத் திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். ஷாகிர் மனோவுக்கும், ‘மௌன மொழிகள்’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். நன்றி.
 
இசையமைப்பாளர் சிற்பி பேசியதாவது,
 
‘மௌன மொழிகள்’ என்ற தலைப்பே மிகவும் அழகாக இருக்கிறது. பொதுவாக மௌனம் என்பது மிகப்பெரிய ஆயுதம். எந்தப் பிரச்சினை வந்தாலும் உடனடியாகப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தால் பல பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அதேபோல் பல வெற்றிகளையும் பெற முடியும். அந்த வகையில் இந்தப் படத்தின் தலைப்பும், படத்தின் உள்ளடக்கமும் நிச்சயம் ரசிகர்களைக் கவரும் என்று நம்புகிறேன்.
 
மனோ சார் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய அற்புதமான பாடகர். அவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் இத்தனை பாடல்களை நம்மால் ரசித்திருக்க முடியாது. இறைவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் அவர். அவரது மகன் ஷாகிர் மனோ ஏற்கெனவே ‘பட்டாக்கத்தி’ படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்திலும் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடியிருப்பதுடன், உணர்வுகள் மற்றும் ஆக்ஷன் எனப் பல்வேறு பரிமாணங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் ஒரு சிறந்த கதாநாயகனாக வளர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
 
இந்தப் படத்திற்காக முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் முதல் உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்கள். ஒரு திரைப்படத்தின் கதை மற்றும் உள்ளடக்கம் நன்றாக இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்கள். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ திரைப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்திய எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி.
 
பிரபல பின்னணிப் பாடகர் மனோ பேசியதாவது,
 
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தொல். திருமாவளவன் ஐயா, சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள், கானா பாலா தம்பி, தயாரிப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மாலை வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்திற்காகப் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், மேலாளர், ஒளிப்பதிவாளர் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
 
எவ்வளவோ ஆசைகளுடனும் கனவுகளுடனும் பல மாதங்கள் கஷ்டப்பட்டு இந்தப் படத்தை உருவாக்கியிருப்பார்கள். ஒரு திரைப்படத்தின் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். எனவே, ஊடக நண்பர்கள் இந்தப் படக்குழுவினருக்கு நிச்சயம் ஆதரவு கொடுக்க வேண்டும். உங்கள் ஆதரவின் மூலமாக இந்தத் திரைப்படம் மக்களிடம் சென்றடையும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துகள். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். நன்றி.
 
தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஆர்.கே. அன்புசெல்வன் பேசியதாவது,
 
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் பிஸியான அரசியல் பணிகளுக்கு இடையிலும், நேரம் ஒதுக்கி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது படக்குழுவினருக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆதரவு. அதேபோல், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இந்த நிகழ்ச்சியை ஒரு குடும்ப விழாவைப் போல அனைவரையும் அழைத்து நடத்திருப்பது பாராட்டுக்குரியது. அவருடைய இந்த அணுகுமுறைதான் ஒரு நல்ல இயக்குநருக்கான அடையாளம்.
 
தமிழகத்தில் சிறிய திரைப்படங்களுக்கான அரசு மானியத் திட்டத்தை 1989-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தொடங்கினார். ஆனால், தொடர்ந்து எல்லா ஆண்டுகளிலும் இந்த மானியம் வழங்கப்படவில்லை. தற்போது ஆண்டுக்கு 28 திரைப்படங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. இன்றைய சூழலில் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான சிறிய திரைப்படங்கள் தயாராகின்றன. எனவே, ஆண்டுக்கு குறைந்தது 100 திரைப்படங்களுக்காவது அரசு மானியம் வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் அவர்களிடம், திருமாவளவன் அவர்கள் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ஓடுகிறதா இல்லையா என்பதைத் தாண்டி, அரசிடமிருந்து கிடைக்கும் அந்த ஏழு லட்ச ரூபாய் மானியம் ஒரு சிறிய தயாரிப்பாளரின் குடும்பத்திற்குப் பெரிய ஆதரவாக இருக்கும். சிறிய தயாரிப்பாளர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் காப்பாற்ற அரசு தொடர்ந்து உதவ வேண்டும்.
 
இயக்குநர் ஏ.சி. சௌந்தர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். தயாரிப்பாளர்களும் பல்வேறு சிரமங்களைக் கடந்து படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறார்கள். படத்தின் பாடல்களையும் பார்த்தேன். நன்றாக வந்திருக்கின்றன. ஒரு திரைப்படத்தை உருவாக்குவது மட்டுமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் ஆதரவு தேவை. தயாரிப்பாளர்கள் யாரையும் ஏமாற்றாமல் நேர்மையாகப் படங்களை எடுக்க வேண்டும். சினிமாவில் யாருடைய முயற்சியையும் யாராலும் தடுக்க முடியாது. அதேபோல், ஏமாற்றி யாரும் நிரந்தரமாக வெற்றி பெற முடியாது. சிறிய படங்களுக்கும் ஆதரவு அளித்து, ஒவ்வொரு தயாரிப்பாளர் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். அந்த வகையில் திருமாவளவன் போன்ற தலைவர்கள் சிறிய திரைப்படங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். ‘மௌன மொழிகள்’ திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள். நன்றி.
 
இசையமைப்பாளர்  நள இளந்திரையன். பேசியதாவது,
 
இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியக் காரணம் இயக்குநர் ஏ.சி. சௌந்தர் அவர்களின் புரிதலும் ஆதரவும்தான். அவர் நினைத்திருந்தால் இந்த விழாவை நடத்தாமலேயே படத்தை வெளியிட்டிருக்க முடியும். ஆனால், நாங்களும் நண்பர் சௌந்தரராஜனும் பல ஆண்டுகளாக அவருடன் பயணித்து வருகிறோம். நாங்கள் ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.
 
அதேபோல், நண்பர் சௌந்தரராஜன் பல்வேறு பணிகளும் சிரமங்களும் இருந்தாலும் தினமும் காலையில் எங்கள் வீட்டிற்கு வந்து இசையமைப்புப் பணிகளில் ஈடுபடுவார். எங்கள் வீட்டிலேயே பாடல்களுக்கான கம்போஸிங் பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாகப் பாடல்களுக்காக உழைத்திருக்கிறோம். அந்த உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவைச் சிறப்பிக்க வருகை தந்த பாடகர் மனோ சார், சித்து சார், நடிகர் ஷாகிர் மனோ, கானா பாலா, அர்ஜுன் மற்றும் எழுச்சி தமிழன் திருமாவளவன்  உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
 
இயக்குநர் ஏ.சி. சௌந்தர் பேசியதாவது,
 
இவ்வளவு பெரிய ஆளுமைகள் முன்னிலையில் பேசுவதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது. இந்த மேடையில் நான் நிற்பதற்கு முக்கியக் காரணம் என்னுடைய தயாரிப்பாளர்தான். அவர் என்மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை உருவாக்க வாய்ப்பளித்தார். ஒரு மீடியம் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அதற்கு ஊடக நண்பர்கள் வழங்கும் ஆதரவு மிகவும் முக்கியம்.
 
இந்த விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக மனோ சார், எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பெரிய ஆளுமைகளை அழைக்க விரும்பினோம். எங்களுக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் விளம்பரப் பணிகளில் உதவிய கானா பாலா சாருக்கும், இசையமைப்பாளர் சிற்பி சாருக்கும், எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் ஆர்.கே. அன்புசெல்வன் சாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எங்களுக்காக நேரம் ஒதுக்கி ஆதரவு அளித்த முதல்வர் விஜய் அவர்களுக்கும் நன்றி. தயாரிப்பாளரும் அவரது மகன் ஸ்ரீமனும் இந்தப் படத்திற்காக மிகுந்த ஆதரவும் ஊக்கமும் அளித்தனர். நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.
 
இந்தப் படத்திற்காக அனைவரும் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, ஊடக நண்பர்களும் ரசிகர்களும் இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்து திரையரங்கில் பார்த்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்ததாக ‘இதயத்தில் காதல்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறேன். இன்றைய விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
 
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பேசியதாவது,
 
‘மௌன மொழிகள்’ என்ற அழகான தமிழ்த் தலைப்பைத் தேர்வு செய்த இயக்குநர் ஏ.சி. சௌந்தர் அவர்களை முதலில் பாராட்டுகிறேன். தமிழில் திரைப்படங்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாங்கள் வலியுறுத்திப் போராடியிருக்கிறோம். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ என்பது கவித்துவமான தலைப்பு. பிரபல பாடகர் மனோ அவர்களின் மகன் ஷாகிர் மனோ, சிறு முதலீட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெரிய முதலீடுகளைக் கொண்ட திரைப்படங்களுடன் போட்டியிடுவது கடினமான சூழலில், பாலச்சந்திரன், ஸ்ரீமன், வேலுமணி போன்றவர்கள் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
 
இன்றைய திரைப்பட உலகம் வெறும் பொழுதுபோக்குத் துறையாக மட்டும் இல்லை. சமூக மாற்றத்திலும், அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை கொண்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கும் அரசியலுக்கும் நீண்டகாலத் தொடர்பு இருந்து வருகிறது. ‘ரத்தக்கண்ணீர்’, ‘தண்ணீர் தண்ணீர்’ போன்ற திரைப்படங்கள் வணிகத்தைத் தாண்டி சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. இன்றைய இளம் இயக்குநர்கள் முற்போக்குச் சிந்தனையுடன் திரைப்படங்களை உருவாக்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. சாதிப் பெருமிதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றுக்கு இடமளிக்காமல், சமூக சமத்துவம், பெண்களின் ஆளுமை, ஜனநாயகச் சிந்தனை ஆகியவற்றை முன்னிறுத்தும் படைப்புகள் அதிகரிக்க வேண்டும்.
 
திரைப்படத்திற்கும் அரசியலுக்கும் தமிழ்நாட்டில் நீண்டகாலத் தொடர்பு இருந்து வருகிறது. திரைத்துறையின் தாக்கம் அரசியல் களத்திலும் பிரதிபலிக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் நடிகர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இதனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகப் பார்க்க வேண்
 
காதல் என்பது மனித வாழ்வியலோடு இயல்பாக இணைந்திருக்கும் ஓர் உணர்வு. அதை நல்ல காதல், தவறான காதல் என்று வரையறுக்க முடியாது. சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய திரைப்படங்கள் வரை காதல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் காதல் வெவ்வேறு கோணங்களில் பேசப்படும். அதேபோல், திரைப்படங்கள் வெறும் லாபத்தைக் கணக்கிடும் வணிகமாக இல்லாமல், சமூக முன்னேற்றத்திற்கும் மாற்றத்திற்கும் பங்களிக்கும் களமாக இருக்க வேண்டும். இளம் இயக்குநர்கள் இந்தப் புரிதலுடனும் உறுதிப்பாட்டுடனும் தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ திரைப்படம் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
 
மேலும், சிறு முதலீட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆர்.கே. அன்புசெல்வன் முன்வைத்துள்ளார். ஆண்டுதோறும் குறைந்தது 100 சிறிய திரைப்படங்களுக்காவது அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முயற்சி செய்வேன். சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதும், அவர்களை ஊக்கப்படுத்துவதும் எங்களைப் போன்றவர்களின் பொறுப்பு. புதிய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்குவதற்கு உரிய ஆதரவு கிடைக்க வேண்டும். ‘மௌன மொழிகள்’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
 
இப்படத்திற்கு ஏ.சி. சௌந்தர் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளதுடன் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். நள இளந்திரையன் இசையமைத்துள்ளார். எம்.ஜி. ராய் ஒளிப்பதிவு செய்ய, சேது ரமணா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். டான் பாலா கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டைப் பயிற்சியையும், விஜய் முருகன் வடிவமைப்புப் பணிகளையும் கவனித்துள்ளனர். படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை சரண் மேற்கொள்கிறார். பி. வேலுமணி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
 
வரும் நவம்பர் 27  ஆம் தேதி உலகமெங்கும்  ‘மௌன மொழிகள்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
 
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பேசியதாவது,
 
‘மௌன மொழிகள்’ என்ற அழகான தமிழ்த் தலைப்பைத் தேர்வு செய்த இயக்குநர் ஏ.சி. சௌந்தர் அவர்களை முதலில் பாராட்டுகிறேன். தமிழில் திரைப்படங்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாங்கள் வலியுறுத்திப் போராடியிருக்கிறோம். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ என்பது கவித்துவமான தலைப்பு. பிரபல பாடகர் மனோ அவர்களின் மகன் ஷாகிர் மனோ, சிறு முதலீட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெரிய முதலீடுகளைக் கொண்ட திரைப்படங்களுடன் போட்டியிடுவது கடினமான சூழலில், பாலச்சந்திரன், ஸ்ரீமன், வேலுமணி போன்றவர்கள் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
 
இன்றைய திரைப்பட உலகம் வெறும் பொழுதுபோக்குத் துறையாக மட்டும் இல்லை. சமூக மாற்றத்திலும், அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை கொண்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கும் அரசியலுக்கும் நீண்டகாலத் தொடர்பு இருந்து வருகிறது. ‘ரத்தக்கண்ணீர்’, ‘தண்ணீர் தண்ணீர்’ போன்ற திரைப்படங்கள் வணிகத்தைத் தாண்டி சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. இன்றைய இளம் இயக்குநர்கள் முற்போக்குச் சிந்தனையுடன் திரைப்படங்களை உருவாக்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. சாதிப் பெருமிதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றுக்கு இடமளிக்காமல், சமூக சமத்துவம், பெண்களின் ஆளுமை, ஜனநாயகச் சிந்தனை ஆகியவற்றை முன்னிறுத்தும் படைப்புகள் அதிகரிக்க வேண்டும்.
 
திரைப்படத்திற்கும் அரசியலுக்கும் தமிழ்நாட்டில் நீண்டகாலத் தொடர்பு இருந்து வருகிறது. திரைத்துறையின் தாக்கம் அரசியல் களத்திலும் பிரதிபலிக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் நடிகர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இதனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகப் பார்க்க வேண்
 
காதல் என்பது மனித வாழ்வியலோடு இயல்பாக இணைந்திருக்கும் ஓர் உணர்வு. அதை நல்ல காதல், தவறான காதல் என்று வரையறுக்க முடியாது. சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய திரைப்படங்கள் வரை காதல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் காதல் வெவ்வேறு கோணங்களில் பேசப்படும். அதேபோல், திரைப்படங்கள் வெறும் லாபத்தைக் கணக்கிடும் வணிகமாக இல்லாமல், சமூக முன்னேற்றத்திற்கும் மாற்றத்திற்கும் பங்களிக்கும் களமாக இருக்க வேண்டும். இளம் இயக்குநர்கள் இந்தப் புரிதலுடனும் உறுதிப்பாட்டுடனும் தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ திரைப்படம் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
 
மேலும், சிறு முதலீட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆர்.கே. அன்புசெல்வன் முன்வைத்துள்ளார். ஆண்டுதோறும் குறைந்தது 100 சிறிய திரைப்படங்களுக்காவது அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முயற்சி செய்வேன். சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதும், அவர்களை ஊக்கப்படுத்துவதும் எங்களைப் போன்றவர்களின் பொறுப்பு. புதிய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்குவதற்கு உரிய ஆதரவு கிடைக்க வேண்டும். ‘மௌன மொழிகள்’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
 
இப்படத்திற்கு ஏ.சி. சௌந்தர் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளதுடன் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். நள இளந்திரையன் இசையமைத்துள்ளார். எம்.ஜி. ராய் ஒளிப்பதிவு செய்ய, சேது ரமணா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். டான் பாலா கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டைப் பயிற்சியையும், விஜய் முருகன் வடிவமைப்புப் பணிகளையும் கவனித்துள்ளனர். படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை சரண் மேற்கொள்கிறார். பி. வேலுமணி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
 
வரும் நவம்பர் 27  ஆம் தேதி உலகமெங்கும்  ‘மௌன மொழிகள்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

FLAG – திரை விமர்சனம் RATING 3/5

இயக்கம்: எஸ்.பி. பொன்சங்கர்
தயாரிப்பு: வைரபிரகாஷ்
இசை: ராஜாரவிவர்மா பாலசுப்ரமணியன்
நடிப்பு: மிக்கி மகிஜா, கிரி துவாரகீஷ், மாஸ்டர் தீஹான் உள்ளிட்டோர்.
 
தேசப்பற்றையும் தேசியக் கொடியின் பெருமையையும் பேசும் உணர்ச்சிப்பூர்வமான திரைப்படம்! இந்திய தேசியக் கொடியின் பெருமையையும் தேசப்பற்றையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் FLAG.
 
விமர்சனம்:
 
வேலு என்ற சிறுவன் தனது பெற்றோரை இழந்து தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். தேசியக் கொடி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் தாத்தாவுக்கு, டெல்லி இந்தியா கேட் பகுதியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்றப்படுவதை நேரில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும்போது, அவரது ஆசையை நிறைவேற்ற சிறுவன் மேற்கொள்ளும் முயற்சிகளே கதையின் மையம்.
 
தேசப்பற்று, குடும்பப் பாசம், ஒற்றுமை, தேசியக் கொடியின் மரியாதை என நல்ல கருத்துகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவனின் கதாபாத்திரமும் தாத்தா – பேரன் இடையிலான பாசப்பிணைப்பும் உணர்வுப்பூர்வமான அம்சங்களாக அமைகின்றன. இயக்குநர் எஸ்.பி. பொன்சங்கர் எடுத்துக்கொண்டுள்ள கதைக்களம் பாராட்டுக்குரியது. இசையும் ஒளிப்பதிவும் கதையின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகின்றன.
 
பொழுதுபோக்குடன் தேசப்பற்றையும் குடும்ப உறவுகளின் மதிப்பையும் நினைவூட்டும் திரைப்படமாக FLAG அமைந்துள்ளது. தேசியக் கொடியின் பின்னணியில் ஒரு சிறுவனின் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தைச் சொல்லும் முயற்சி பாராட்டுக்குரியது.
 
 தேசப்பற்றை உணர்த்தும் குடும்பப் படம்!
 
– M.GIRIJA (Cinema Reporter)