Sunday, May 24, 2026
Blog

ஆப்ரேஷன் தியேட்டரில் 20 வயது பெண்ணை சீரழித்த டாக்டர்!

த்திர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கின் இந்த வழக்கில் தலையிட்டத்தை அடுத்து, சுகாதாரத்துறை மருத்துவமனைக்கு சீல் வைத்தது. மருத்துவரின் உரிமத்தை இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியது. லக்னோவின் பக்ஷி-கா-தலாப் பகுதியில் உள்ள இந்தௌரபாக் என்ற இடத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில், வலிப்பு நோய்க்கான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவரிடமிருந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மே 21 அன்று அறுவை சிகிச்சை அறைக்குள் மாணவிக்கு மயக்க ஊசி செலுத்திய பின்னர், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் விஜயகுமார் கிரி அவரைக் கற்பழித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் தந்தையின் கூற்றுப்படி, அவரது மகள் மீண்டும் மீண்டும் ஏற்படும் வலிப்பு நோய் தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக மே 19 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 21 ஆம் தேதி பிற்பகல் சுமார் 3 மணியளவில் தனது மகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு டாக்டர் கிரி, ஆக்சிஜன் உதவி அளிப்பதாகக் கூறி அவரை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.

ஆரம்பத்தில் நோயாளியின் மூத்த சகோதரியும் ஒரு செவிலியரும் அவருடன் அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றனர், ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவர் அவர்கள் இருவரையும் வெளியே செல்லுமாறு கேட்டுக் கொண்டார். காவல்துறையிடம் அளித்த புகாரில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, மருத்துவர் அவரது கையில் பொருத்தப்பட்டிருந்த நரம்புவழி ஊசி மூலம் மயக்க மருந்தைச் செலுத்தியதாகவும், அதன் பிறகு அவர் சுயநினைவை இழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, சிறிது நேரம் கழித்து அவருக்குப் பகுதி சுயநினைவு திரும்பியதும், மருத்துவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டி அழுதுகொண்டே அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளியே ஓடினார். தனது உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் சில ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததாகவும், தற்போது 12-ஆம் வகுப்பில் படித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமைக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏடிசிபி (வடக்கு) ட்விங்கிள் ஜெயின் உறுதிப்படுத்தினார். துணை முதல்வர் பிரஜேஷ் பதக் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பதக், “மாநில அரசு பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறுதுணையாக நிற்கிறது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும்” என்று கூறியுள்ளார். மருத்துவமனைக்கு சீல் வைக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரின் மருத்துவ உரிமத்தை இடைநீக்கம் செய்யவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

10வயது சிறுமியின் சடலம்! கோவையில் பரபரப்பு!!

கோவை சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த மே 21 அன்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார். இருட்டியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. எனவே அச்சமடைந்த பெற்றோர்கள் உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் குமார் ரெட்டி, சூலூர் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார். போலீஸார் தனிப்படை அமைத்து நடத்திய அதிரடி விசாரணையில், வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அதே பகுதியை சேர்ந்த 2 சந்தேக நபர்கள் பிடிபட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, தற்போது சூலூர் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கார்த்தி என்பவன் சிறுமியைக் கடத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். மேலும், அவனுக்கு உதவியதாக மோகன்ராஜ் என்பவனையும் போலீசார் பிடித்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த முன்பே குழந்தைக்கு அறிமுகமான கார்த்திக் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதும், அவருடன் மோகன்ராஜ் இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும், பொதுமக்களும் திரண்டு சூலூர் காவல் நிலையத்தின் முன்பாக விடிய விடியத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். “குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் அல்லது என்கவுண்டர் செய்யப்பட வேண்டும்” என்று அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர்.

இரவு முழுவதும் நீடித்த இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்தது, அங்கு குவிக்கப்பட்டிருந்த உயர்தர போலீஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் நள்ளிரவிலும், அதிகாலையிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். “குற்றவாளிகள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூலூர் காவல் நிலைய முன்பாக இன்னமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் கோவை பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தற்போதைய அமைச்சர்கள் பற்றி ஓர் பார்வை!

ஏ.ஸ்ரீநாத் – தமிழக முதல்வர் விஜய்யின் நண்பரான இவர், தூத்துக்குடியில் திமுக அமைச்சர் கீதாஜீவனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 52 வயதான இவர் விஜய் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். இவருக்கு மீன்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்.கமலி – நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த எஸ்.கமலி, அவிநாசி சட்டப்பேரவை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். அத்தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை தோற்கடித்தவர். இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தமிழக அமைச்சரவையின் இளம் அமைச்சர்களில் கமலியும் ஒருவர். இவருக்கு வயது 28. இவருக்கு கால்நடை வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சி.விஜயலட்சுமி: தமிழ வெற்றிக் கழகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார் சி.விஜயலட்சுமி. இவர் நாமக்கல் மாவட்ட குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றார். அங்கு அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பி.தங்கமணியை வீழ்த்தினார். இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். சுயதொழில் செய்துவந்தார். இவருக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்.வி.ரஞ்சித்குமார் – இவர் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 50 வயதான இவர் வேளாண், ரியல் எஸ்டேட் தொழில்களை செய்துவருகிறார். இவருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பி.ராஜ்குமார் – கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.ராஜ்குமாருக்கு வயது 46. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளார். இவருக்கு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பி.மதன்ராஜா – தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் பொறியியல் பட்டதாரி. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்.ராஜேஷ் குமார் – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ராஜேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் இந்தத் தொகுதியில் 3-வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராகவும் உள்ளார். இவர் சட்டம் பயின்றுள்ளார். இவருக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சராகப் பதவியேற்றபோது, “காமராஜ், ‘ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி வாழ்க’ என அவர் முழக்கமிட்டதை ஆளுநர் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.விஜய் பாலாஜி – ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற எம்.விஜய் பாலாஜி, கடந்த காலங்களில் 2 இடைத்தேர்தல்களை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவற்றில் வெற்றி பெறவில்லை. இவர் வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவராவார். சொந்தத் தொழில் செய்கிறார். இவருக்கு நெசவு, கைத்தறித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் – ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன், அதிமுக மூத்த தலைவர், சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.தனபாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திமுக அமைச்சர் மதிவேந்தனை வீழ்த்தினார்.

தவெகவில் இணையும் முன்னர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் இவர் நீலகிரி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அவரது தந்தை தனபால், தமிழக சட்டப்பேரவைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை பட்டமும், டெல்லி ஐஐபிஎம் மையத்தில் எம்பிஏவும் முடித்துள்ளார். இவருக்கு வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பெ.விசுவநாதன் – மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விசுவநாதன், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சி இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசியாக அறிவித்த வேட்பாளர் இவர்தான்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே பட்டியலின வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். 2009 – 2014 காலக்கட்டத்தில் இவர் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உயர் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்.குமார் – சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.குமார் ஒரு தொழிலதிபர். அவர் பொறியியல் பயின்றுள்ளார். அண்மையில் ஐஐஎம் பெங்களூருவில் பிசினஸ் லீடர்ஷிப் பயின்றுள்ளார். இவருக்கு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், இணைய சேவை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கே.விக்னேஷ் – கிணத்துக்கடவு தொகுதியில் வெற்றி பெற்ற கே.விக்னேஷுக்கு வயது 38. கோவை கிணத்துக்கடவு அதிமுக கோட்டையாகக் கருதப்பட்ட நிலையில், அவர் அங்கு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள மச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். 38 வயதான இவர் பிஎஸ்சி கணினி அறிவியல் பட்டம் பெற்றவர். இவர், மச்சாம்பாளையம் பகுதியில் சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் மன்றத்தில் பணியாற்றி வந்த இவர், தவெக-வில் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

வி.சம்பத்குமார் – கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற வி.சம்பத்குமார், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனை வீழ்த்தி கவனம் பெற்றார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வாயிலாக எம்பிஏ முடித்துள்ளார். சுயதொழில் புரிந்துவருகிறார். இவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் – ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராஜீவ் ஒரு மருத்துவர். 33 வயதான இவர், தவெக இளம் எம்எல்ஏக்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவருக்கு சுற்றுசூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

வி.காந்திராஜ் – 52 வயதான இவர், அரக்கோணம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் சிவில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். 12-ம் வகுப்பு வரையிலும் படித்துள்ளார். இவருக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெகதீஸ்வரி.கே – ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு வயது 40. இவர் ஒரு பட்டதாரி. பத்திரிகை துறை அனுபவம் கொண்டவராகவும் அறியப்படுகிறார். இவருக்கு சமூக நலத் துறை, மகளிர் மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

விஜய் தமிழன் பார்த்திபன் ஏ – சேலம் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற இவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தவெகவில் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து தற்போது வரை பயணித்த பலருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ விஜய் தமிழன் பார்த்திபனும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர். பழைய பேருந்து நிலையத்தில் சிறியதாக மொபைல் கடை ஒன்றை நடத்தி வந்தார். தீவிர விஜய் ரசிகராக இருந்தார். சேலம் மாவட்ட அளவில் விஜய் ரசிகர் மன்றத்தை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது பழைய பேருந்து நிலையம் அருகில் பெரிய மொபைல் ஷோரூம் ஒன்றை வைத்திருக்கிறார். விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர். இவருக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர். ரமேஷ் – ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 10-ம் வகுப்புவரை படித்த இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தவர் ஆவார். இவருக்கு இந்து சமய அறநிலையத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்னரசு.கே – ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் வெற்றி பெற்ற இவருக்கு 36 வயது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். கமிஷன் ஏஜன்ட்டாக பணிபுரிவதாக தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

முகமது ஃபர்வாஸ்.ஜே – 31 வயதான இவர், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அச்சுத் தொழில் செய்துவந்தார். இவருக்கு தொழிலாளர் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

டி.சரத்குமார் – சென்னைக்கு அருகிலுள்ள முக்கியத் தொகுதியான தாம்பரத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்எல்ஏ டி.சரத்குமார். இவர் எம்.எம்.ஜெயின் கல்லூரியில் பி.பி.ஏ பட்டம் பெற்றார். முதன்முறையாகத் தேர்தலில் நின்று, திமுக-வின் கோட்டையாகக் கருதப்பட்ட தாம்பரத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். திமுகவின் ஆர்.எஸ்.கிருத்திகா தேவியை இவர் 35,621 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, இவர் கட்டுமானத் துறையில் சிவில் ஒப்பந்ததாரராக தொழில் செய்து வந்தார். இவருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

என்.மரிய வில்சன் – ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற மரிய வில்சன் நிதியமைச்சர் ஆகியிருக்கிறார். முனைவர் பட்டம் பெற்றவராக அறியப்படுகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழகத்தில் பிரபல கல்வி நிறுவன அதிபராக விளங்கிய ஜேப்பியாரின் மருமகன்தான் மரிய வில்சன். ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் கணவரான இவர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்டியலின அமைச்சர்கள் 7 பேர்!

முதல்வர் விஜய் அமைச்சரவையில் கமலி, விஸ்வநாதன் , ராஜ்மோகன், லோகேஷ் தமிழ்செல்வன், தென்னரசு, காந்திராஜ், மதன்ராஜா ஆகியோர் ஆகிய 7 பேர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்களாவர். அதேபோல் விஜய்யின் அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். எஸ்.கமலி, சி.விஜயலக்‌ஷ்மி, கீர்த்தனா, ஜெகதீஸ்வரி ஆகியோர் அமைச்சர்களாகியுள்ளனர்.

 

நண்பனை குழிதோண்டி புதைத்த மாணவர்கள்!

கோவை மாவட்டம், இருகூர் அருகில் உள்ள நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா (42). இவரது மூத்த மகன் தாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (13), ஆர்.ஜி. புதூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால், வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன், கடந்த 15ஆம் தேதி பிற்பகலில் தனது இரு நண்பர்களுடன் இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளான்.

ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் தாஸ் வீடு திரும்பாததால் பயத்தில் பதற்றம் அடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்துள்ளனர். மேலும், அருகிலுள்ள பகுதிகளிலும் தேடியுள்ளனர். பின்னர், தனது மகனுடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்துள்ளனர். அதற்கு தாஸின் நண்பர்கள், “யாரோ ஒரு மர்ம நபருடன் அவன் தனியாக சென்றான்” எனக் கூறி மழுப்பியுள்ளனர்.

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசாரிடம், சிறுவனைக் காணவில்லை என பதற்றத்தில் அவசரப் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பெற்றோரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், சிறுவனுடன் கடைசியாகச் சென்ற இரு சிறுவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் தனியாக அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது சிறுவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது.

தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிறுவர்களுக்கிடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. அந்த வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த இரண்டு சிறுவர்கள், அங்கு கீழே கிடந்த காலி மதுபாட்டிலால் தாஸின் தலையில் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதனால் பயந்துபோன அந்தச் சிறுவர்கள், சம்பவத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக உடலை அங்கேயே ரகசியமாக குழி தோண்டி புதைத்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் சிறுவர்கள் காட்டிய அடையாளத்தின்படி, நேற்று (மே 18) காலை சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, புதைக்கப்பட்ட மாணவன் தாஸின் உடலை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. (ESI) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விளையாடச் சென்ற இடத்தில் இரு நண்பர்களால் ஏழாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இந்தத் திடுக்கிடும் சம்பவம், இருகூர் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, அந்தச் சிறுவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள சிங்காநல்லூர் போலீசார், கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களிடமும் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 13 வயது சிறுவன், நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல் மற்றும் மதுபாட்டிலால் கொடூரமாக தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அந்த இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை! நீதி கேட்டு கதறும் பெற்றோர்!!

ரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் முருகேசன், இவரது மூத்த மகள் ரோகினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ரோகினி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார்.

தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இரவு, 4 மாதங்களாக ஒரு இளைஞருடன் நட்பு ரீதியாக பேசி வந்ததாகவும், தற்போது அந்த இளைஞர் தன்னை பாலியல் ரீதியாக மிரட்டுவதாகவும் பெற்றோரிடம் தெரிவித்தார். அந்த இளைஞர் மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விஷயம் தெரிந்ததும், அச்சமடைந்த ரோகினி குடும்பத்தினர், மாணவியை பாட்டி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சென்ற மாணவி, மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், மாணவியின் புகைப்படங்களை வைத்து விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, அந்தியூர் காவல் நிலையத்தில் குடுப்பதினர் புகார் அளித்திருந்தும் இதுவரை குற்றச்சாட்டில் தொடர்புடைய இளைஞர் கைது செய்யப்படவில்லை என மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பிரேத பரிசோதனை முடிந்திருந்தாலும் அதன் அறிக்கை இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுத்து, மாணவிக்கு நீதி கிடைக்க மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் மொத்தம் 285 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெற்றோர் கதறி அழுத காட்சிகள் அங்கிருந்தவர்களை உருக்கமடைய செய்தது. மேலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து மீண்டும் கவலை எழுந்துள்ளது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் நடத்திய மக்கள் குறைதீர் முகாமில், அந்தியூர் தவிட்டுப்பாளையம் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

 ‘பிளாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
 
‘பிளாஸ்ட்’ படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,  கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.
 
இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில், ”இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய ‘லவ் டுடே’ படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி- அர்ச்சனா கல்பாத்தி- அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.
 
இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி- ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் – இசையமைப்பாளர்- பட தொகுப்பாளர் -சண்டை பயிற்சி இயக்குநர் – என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.
 
‘பிளாஸ்ட்’ ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
 
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், ”தமிழ் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால்.. அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.
 
புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதை பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழு படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.
 
ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் ‘ஜூம்’ செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்கு தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை ‘ஜூம்’ செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
‘கே ஜி எஃப்’ படத்திலிருந்து என் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வகையில் புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். அப்போதுதான் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு பிடிக்கும். இது தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்த படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்,” என்றார்.
 
நடிகை பிரீத்தி முகுந்தன் பேசுகையில், ” என்னுடைய திரையுலக பயணத்தில் இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்றதொரு கதையை தேர்வு செய்து அதற்கு என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.
 
நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையை சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னை போன்ற வளரும் கலைஞர்களுக்கு கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனை காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அர்ஜுன், அபிராமி ஆகியோருடன் திரையை பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாதது. இவர்களிடமிருந்து படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
 
ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
 
நடிகை அபிராமி பேசுகையில், ”இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஆண்டில் என்னுடைய நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். அதனால் அவருக்கு என் நன்றி. எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.
 
ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி.
 
பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாள்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.
 
நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல அவருடைய குழுவின் பணியாற்றிய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
 
நான் சினிமாவில் காமெடி- ஹாரர்- ரொமாண்டிக் -என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என் மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டை பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி.‌
 
இந்தப் படத்தில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது .இதற்காக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கும் நன்றி.
 
இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவருடைய வெற்றியில் நானும் சிறிய பங்காக இருந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய எழுத்து அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது . இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அவருடைய அம்மா தான் இன்ஸ்பிரேஷன். அவருடைய அம்மாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். அதனால் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு தான் பெருமை. அதை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தப் படம் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கான எல்லா எலிமெண்ட்ஸும் கொண்ட படம். சின்ன திரைகளில் பார்த்தால் இதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. மியூசிக் -ஆக்ஷன்- கேமரா- என எல்லா விஷயங்களையும் பெரிய திரையில் பார்த்து அனுபவியுங்கள். எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்,” என்றார்.
 
கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ”ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி.
 
எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமை படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌
 
இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த ‘பிளாஸ்ட்’ திரைப்படம். இந்த கருத்திற்காகவே இந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தீர்மானித்தோம்
 
இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை  அவர்   சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.
 
இந்தக் கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் உண்டு. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நன்றி. அவர்கள் இந்த படத்திற்காக அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினர். 
 
இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும்.
 
இந்த திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.
 
நடிகர் அர்ஜுன் பேசுகையில், ”வரலாறு காணாத ஒரு வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த என் நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
 
‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.
 
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
 
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல்  ஏஜிஎஸ் நிறுவனம்  ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் , இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.
 
நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் அருண், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு, கலை இயக்குநர் வீரமணி என ஒவ்வொரு கலைஞர்களும் டீம் ஒர்க் ஆக பணியாற்றினர்,” என்றார்.

‘அதிரடி’ படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி

யக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அதிரடி.” பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. தமிழில் இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இந்த நிலையில் அதிரடி படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசும் போது, “இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தின் தலைப்பு குறித்து ஆலோசனை செய்தோம். அப்போது, பசில் ஜோசப் தான் “அதிரடி” என்ற தலைப்பை பரிந்துரைத்தார். அதிரடி என்பது சுத்தமான தமிழ் பெயர் தான். அதிரடி என்ற வார்த்தைக்கு ஒரு தாக்கம் இருக்கிறது, இதேபோல் இந்தப் படத்திற்கும் அதன் தலைப்பிற்கும் ஏற்றவாரு ஒரு தாக்கம் இருக்கிறது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தை கொண்டாடி மகிழ வேண்டும். பசில் ஜோசப், டொவினோ தாமஸ் ஆகியோருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப் படம் கல்லூரி நிகழ்வு சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்,” என்று தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய எழுத்தாளர் பால்சன் சக்ரியா பேசும் போது, “தமிழ் கற்றுக் கொண்டு பேசுகிறேன். எல்லாரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். என்டர்டெயின்மென்ட் மற்றும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். மலையாளத்தில் இந்தப் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். இந்தப் படத்தின் வசனம் மலையாளம் – தமிழ் என்று மொழி பெயர்ப்பு செய்வதை தாண்டி அதிக மெனக்கெடலுடன் வசனங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாரு எழுதப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,” என்றார்.
 
பசில் ஜோசப் பேசும் போது, “எல்லாருக்கும் வணக்கம், இந்தப் படத்திற்கு தமிழில் நான் தான் டப்பிங் செய்துள்ளேன். இதனால் தமிழ் தெரியும். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. சிறு வயதில் இருந்து அதிரடி என்ற வார்த்தையை அதிகம் கேட்டிருக்கிறேன். தற்போது இதே வார்த்தையை தலைப்பாக கொண்ட படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மலையாளத்தில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தமிழ் ரசிகர்களுக்காக இந்தப் படத்தின் வசனங்கள் சிறப்பு கவனத்துடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள், கலாச்சாரத்துடன் ஒற்றுப் போகும் வகையில் நிறைய முயற்சிகள் செய்திருக்கிறோம். படத்தில் தமிழ் பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வருகை தந்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு நன்றிகள். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தோம், ஆனால் அவர் விரும்பவில்லை.
 
இந்தப் படம் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும். தமிழில் டப் செய்யும் போது அருமையான அனுபவமாக இருந்தது. ஆரம்பத்தில் சிறு சிறு வார்த்தைகள் கடினமாக இருந்தது, பிறகு தமிழ் அருமையாக வந்தது. எழுத்தாளர்கள் நிறைய உதவியாக இருந்தனர். உண்மையான உழைப்புக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளனர். தமிழில் கிடைக்கும் வரவேற்பு, அவர்கள் அளிக்கும் பாசம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த முறை சென்னை வந்த போது கிடைத்த ஆதரவு மறக்க முடியாதது. எப்போதும் தமிழ் ரசிகர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். நடிப்பு, இயக்கம் இரண்டிலும் எனக்கு இயக்கம் தான் அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பின் போது நான் பயணிகள் இருக்கையில் இருப்பது போன்றது, இயக்கத்தின் போது நானே ஓட்டுநர் இருக்கையில் இருப்பதை போன்றதாகும். எனக்கு ஓட்டுநர் இருக்கையில் இருப்பது அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பு, இயக்கம் என இரண்டையும் செய்வது பற்றி இதுவரை நான் யோசிக்கவில்லை, இரண்டையும் ஒருசேர செய்வது கடினமாக இருக்கும் என நினைக்கிறேன்,” என்றார்.
 
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பேசும் போது, “அனைவருக்கும் வணக்கம், திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்வது புதிய அனுபவமாக இருக்கிறது. நண்பர் அழைக்கும் போது வந்தே ஆக வேண்டும். மிக்க மகிழ்ச்சி மற்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க சிறிய கதாபாத்திரமாக இருந்ததால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். நடித்தால் கொஞ்சம் பெரிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும். எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வர். பசில் பார்க்க எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார், ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர் மிகவும் சீரியசாக இருப்பார். நண்பர்கள் டின்னருக்கு அழைத்தால் கூட முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே என்பார்.
 
கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கான அட்டவணையுடன் செயல்படக்கூடியவர். அவர் கமிட் செய்யும் எந்தவொரு விஷயத்திற்கும் அதீத உழைப்பை கொடுப்பார். இந்த நிகழ்வுக்கு அழைக்கும் போதும், அவர் கொடுத்திருக்கும் உழைப்பு, அதற்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன். சி.எஸ்.கே. அணிக்கு வந்த பிறகு அதிக பொறுப்பு கூடியிருக்கிறது. பெரிய ஃபிரான்சைஸ், அதிக கோப்பைகள் வென்ற அணியில் இருக்கும் போது அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கிரிக்கெட்டை தாண்டி வெளியில் செல்லும் போது ரசிகர்கள், சேட்டா அடுத்த போட்டி ஜெயிங்கள், கோப்பையை வெல்லுங்கள், தட்றோம், தூக்குறோம் என்ற வார்த்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொது மக்கள் அளிக்கும் அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ரசிகர்கள் மனதில் இருந்து கொடுக்கும் அன்பை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மிக அழகான பயணத்தை சென்னையில் துவங்கி இருப்பதாக நினைக்கிறேன். சிறு வயதில் நிறைய தமிழ் படங்களை பார்த்தே வளர்ந்து இருக்கிறேன். தற்போது தமிழ் நாடு மற்றும் சென்னை அணிக்காக விளையாடுவது எனக்கு தமிழகம் தற்போது இரண்டாவது வீடாக மாறி இருக்கிறது. சென்னையில் கிடைக்கும் உணவு எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் நாயர் மெஸ்ஸில் சாப்பிட்டேன், உணவு அற்புதமாக இருந்தது, என்றார்.

யாருக்கு எந்த துறை? அமைச்சர் பட்டியல்!!

மிழக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதல்வர் விஜய்யின் வசம் பொது நிர்வாகம், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், காவல் உள்ளிட்ட துறைகள் உள்ளன.

மேலும், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளும் முதல்வர் விஜய் வசமே உள்ளன.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு மிக முக்கியமான நிதித்துறை மற்றும் ஓய்வூதியத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன் சுமை மற்றும் நீர்ப்பாசனம், நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்டவை உள்ளன.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அருண் ராஜுக்கு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வெங்கட் ரமணனுக்கு உணவு, பொது விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்பு, சட்டப்பேரவை, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் அச்சுத்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம் உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சர் டி.கே.பிரபுவுக்கு சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மது விற்பனை விவகாரம்! காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!!

திருவொற்றியூர் காவல் நிலை​யத்​தில் சட்​டம் – ஒழுங்கு காவல் ஆய்​வாள​ராக இருப்​பவர் அலெக்​ஸ். இவர் விடுப்​பில் சென்​ற​தால் அக்காவல் நிலைய குற்​றப்​பிரிவு ஆய்​வாளர் மோகன்​தாஸ், கூடு​தல் பொறுப்​பாகச் சட்​டம் – ஒழுங்கு பணி​களைக் கவனித்து வந்​தார்.

இந்​தச் சூழலில் திருவொற்​றியூர் பகு​தி​யில் உள்ள டாஸ்​மாக் கடை ஒன்​றில் அனு​ம​திக்​கப்​பட்ட நேரத்​துக்கு முன்​னரும் (மதி​யம் 12 மணி), அனு​ம​திக்​கப்​பட்ட நேரத்​தைத் தாண்​டி​யும் (இரவு 10 மணி) சட்ட விரோத​மாக மது விற்பனை நடை​பெறு​வ​தாகப் புகார்​கள் எழுந்​தன.

இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் அண்​மை​யில் வைரலானது. சென்​னை​யில் சட்​ட​விரோத மது விற்​பனையை இரும்​புக்​கரம் கொண்டு அடக்க வேண்​டும் என்று காவல் ஆணை​யர் அபின் தினேஷ் மோடக் ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில் தன் பொறுப்​பில் இருந்த பகுதியில் கள்​ளச்​சந்தை மது விற்பனையைத் தடுக்​கத் தவறிய காவல் ஆய்​வாளர் மோகன்தாஸை பணி​யிடை நீக்​கம் செய்து காவல் ஆணை​யர் உத்​தர​விட்​டுள்​ளார்.

“இது போன்ற சட்​ட​விரோத செயல்​களில் ஈடு​படு​வோர் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். தேவைப்​பட்​டால் குண்​டர் சட்​டத்​தில் குற்றவாளி​கள் சிறை​யில் அடைக்கப்​படு​வார்​கள். சட்​ட​விரோத மது விற்​பனையை தடுக்​கத் தவறும் காவல் துறை​யினர் மீதும் பாரபட்​சம் இன்றி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும்” என காவல் ஆணை​யர்​ எச்​சரிக்​கை விடுத்​துள்​ளார்​.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு! அரசியல் தலைவர்கள் கோரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்​திய அரசு உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும் என்று முதல்​வர் விஜய் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் விஜய்: 5 மாநிலங்​களில் தேர்​தல் முடிந்​த​பின் பெட்​ரோலியப் பொருட்​களின் விலையை உயர்த்​தி​யிருப்​பது ஏற்​புடையதல்ல. இந்த விலை உயர்வு இருசக்கர வாக​னங்​கள் மற்​றும் பேருந்​துகளை பயன்​படுத்​தும் ஏழை, எளிய, நடுத்தர மக்​களின் மாத வரு​வா​யில் பெரு​மளவு பாதிப்பை ஏற்​படுத்​தும்.

அன்​றாடப் பொருட்​களின் விலை உயர்​வுக்கு காரண​மாக அமைவதுடன் ஏழை, எளிய மக்​களின் வாங்​கும் திறனை​யும் பாதிக்​கும். குறு, சிறு தொழில் நிறு​வனங்​களுக்கு உற்​பத்​திச் செல​வும் அதி​கரிப்​ப​தால், சந்​தை​யிலும், ஏற்​றும​தி​யிலும் மந்​தநிலை ஏற்பட வாய்ப்​புள்​ளது. எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்​கள் மற்​றும் குறு, சிறு தொழில் நிறு​வனங்​களைப் பாதிக்​கும் பெட்​ரோலியப் பொருட்​களின் விலை உயர்வை மத்​திய அரசு உடனடி​யாக திரும்​பப்​பெற வேண்​டும்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தமிழகத்​தில் புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு மாற்​றம் வேண்​டும் என்ற கொள்​கையை அடிப்​படை​யாக வைத்து செயல்​படு​கிறதென்று சொல்​கிறார்​கள். பெட்​ரோலுக்​கும், டீசலுக்​கும், எரி​வாயு சிலிண்​டருக்​கும் உள்ள விற்​பனை வரியை குறைக்க வேண்​டும் என்று கேட்​டுக்​கொள்​கிறேன்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: ஏற்​கெனவே அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை உயர்​வால் பொது​மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், இந்த எரிபொருள் விலை உயர்வு மேலும் பணவீக்​கத்தை அதி​கரித்​து, நடுத்தர மற்​றும் ஏழை மக்​களின் வாழ்​வா​தா​ரத்தை பெரிதும் பாதிக்​கும்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் சண்​முகம்: பெட்​ரோல், டீசல் விலை உயர்வு மக்​களின் அன்​றாட வாழ்க்​கை​யில் சங்​கி​லித் தொடர் போன்ற பாதிப்​பு​களை உரு​வாக்​கும். புயலில் சிக்​கிய படகு போல குடும்​பங்​கள் தள்​ளாடும் நிலை ஏற்​படும். மத்​திய அரசு இந்த விலை உயர்வை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: இந்​தி​யா​வில் பெட்​ரோல், டீசல் விலை ஏற்​கெனவே அதி​க​மாக உள்​ளன. இத்​தகைய சூழலில் கச்சா எண்​ணெய் விலை உயர்​வின் தாக்​கத்தை இயன்​றவரை எண்​ணெய் நிறு​வனங்​களும், மத்​திய அரசும் தாங்​கிக் கொண்டு விலை உயர்வை தவிர்த்​திருக்க வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: பெட்ரோல்​-டீசல் விலையை லிட்​டருக்கு ரூ.3 என உயர்த்​தி​யிருப்​ப​தன் மூலம் பாஜக அரசு எளிய மக்​களின் அடிவ​யிற்​றில் கை வைத்​துள்​ளது. இதனால் மிக​வும் பாதிக்​கப்படப் போவது விளிம்​புநிலை​யைச் சார்ந்த ஏழை-எளிய உழைக்​கும் மக்​கள்​தான்.

அமமுக பொதுச்​செய​லா​ளார் டிடி​வி.​தினகரன், தவக தலை​வர் வேல்​முரு​கன், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், உள்ளிட்டோரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.