அப்பா குட்டி – திரை விமர்சனம் RATING 3.5/5
ஹைபெக் கீமோதெரபி சிகிச்சை: 200-க்கும் அதிகமாக செய்து காவேரி மருத்துவமனை சாதனை!
சென்னை:
காவேரி மருத்துவமனை 200-க்கும் மேற்பட்ட ஹைபெக் (HIPEC) எனும் ‘ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி’ சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது. இந்த சிகிச்சை பெரிட்டோனியம் எனும் வயிற்றுப் பகுதியின் உட்சவ்விற்கு பரவியுள்ள புற்றுநோய்களுக்கு அளிக்கப்படும் ஒரு அரிதான கீமோதெரபி சிகிச்சையாகும். இதில் வெப்பமூட்டப்பட்ட கீமோதெரபி மருந்து பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஹைபெக் சிகிச்சை ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் செய்யப்படுகிறது. இந்த துறையில் தனது நிபுணத்துவத்தை மேலும் வலுப்படுத்த காவேரி மருத்துவமனை, ஹைபெக் மற்றும் ‘சைட்டோரிடக்டிவ்’ என்னும் புற்றுநோய் கட்டியைக் குறைக்கும் அறுவை சிகிச்சைக்களுக்கென்று ஒரு பிரத்யேக மையத்தையும் தொடங்கியுள்ளது. இம்மையம் முற்றிய நிலையிலுள்ள வயிற்றுப் புற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்தும்.
சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையில் கண்ணுக்கு தெரிந்த புற்றுநோய் கட்டிகள் அகற்றப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து, ஹைபெக் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையின் போது வெப்பமூட்டப்பட்ட கீமோதெரபி மருந்து நேரடியாக வயிற்றுக் குழிக்குள் செலுத்தப்பட்டு எஞ்சியிருக்கும் கண்களுக்குத் தெரியாத நுண்ணிய புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது. சைட்டோரிடக்டிவ் மற்றும் ஹைபெக் சிகிச்சைகளை இணைந்து செய்வதன் மூலம், நோய் பாதித்த இடத்தில் தீவிர சிகிச்சை அளிக்கவும், கீமோதெரபி மருந்து உடலின் மற்ற பகுதிகளின் மேல் அதிகம் படாமல் பார்த்துக் கொள்ளவும் முடிகிறது.
கருப்பை மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் உட்பட, வயிற்றுக்குழி மற்றும் வயிற்று உட்சவ்வைப் பாதித்துப் பரவும் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மருத்துவரீதியாக தகுதியானவர்களுக்கு இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹைபெக் சிகிச்சை அளிப்பது ஒரு கூட்டு முயற்சியாகும். சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவில் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவப் புற்றுநோயியல் நிபுணர்கள், நோயியல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும். இந்த அறுவை சிகிச்சை நீண்ட நேரம் நடைபெறும் என்பதாலும், கணிசமான இரத்த இழப்பு மற்றும் வெப்ப அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாலும், அனுபவம் வாய்ந்த மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைக் குழுவும் இதற்கு அவசியமாகிறது. இவர்களுக்குத் துணையாக இத்தகைய நோயாளிகளைப் பராமரிப்பதில் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். முன்னதாக நோயாளிகளை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும்.
இதற்கு நோய் பரவியுள்ள அளவை துல்லியமாக கண்டறிவதற்கு மேம்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்படும். இதற்கு அனுபவம் வாய்ந்த கதிரியக்கவியல் நிபுணர்கள் தேவை. இச்சிகிச்சைக்கு கீமோதெரபி திரவத்தைச் சுமார் 41-43°C வெப்பநிலைக்குச் சூடாக்கி, வயிற்றுக்குழிக்குள் சுழலச் செய்து, அதன் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் பிரத்யேக இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய பன்றுபட்ட தேவைகளால் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மருத்துவ மையங்களில் மட்டுமே ஹைபெக் சிகிச்சை வழங்கப்படுகிறது.
ஹைபெக் சிகிச்சை குறித்து பேசிய காவேரி மருத்துவமனையின் புற்றுநோயியல் மூத்த ஆலோசகர் டாக்டர் சுஜய் சுசிகர் கூறுகையில்:
“200 ஹைபெக் சிகிச்சைகள் என்ற மைல்கல்லை நாங்கள் கடந்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதில் எங்கள் குழுவின் அனுபவத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. பெரிட்டோனியத்திற்குப் பரவியுள்ள முற்றிய நிலை புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஹைபெக் ஒரு முக்கியமான சிகிச்சை வாய்ப்பை வழங்குகிறது. வழக்கமான நரம்பு வழி கீமோதெரபி மருந்துகள் இப்பகுதியில் உள்ள புற்றுநோய் படிவுகளை முழுமையாகச் சென்றடையாமல் போகலாம். ஆனால், சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து வெப்பமூட்டப்பட்ட கீமோதெரபியை நேரடியாக வயிற்றுக்குழிக்குள் சுழலச் செய்வதன் மூலம் ஹைபெக் இந்தப் பிரச்னைக்கு தீர்வு அளிக்கிறது,” என்றார்.
காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் தனது கருத்தில்:
“முற்றிய நிலையிலுள்ள வயிற்றுப் புற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பது எப்போதுமே மிகவும் சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. ஹைபெக் சிகிச்சையின் மூலம் நோயாளிகளுக்குப் பயனுள்ள சிகிச்சை தீர்வுகளை எங்களால் வழங்க முடிகிறது. சிகிச்சைகளின் பலன் சிறப்பாக அமைவதற்காக, சரியான வசதிகள், மருத்துவ நிபுணத்துவம் மற்றும் பல்துறை அணுகுமுறை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்,” என்று தெரிவித்தார்.
சமீபத்தில் சிகிச்சை பெற்றவர்களில், முற்றிய நிலை கருப்பை புற்றுநோய் மற்றும் பெரிட்டோனியல் பாதிப்புடன் சிறப்பு சிகிச்சைக்காக மொரீஷியஸ் நாட்டில் இருந்து சென்னை வந்த ஒரு பெண்மணியும் அடங்குவார். சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைபெக் சிகிச்சைக்குப் பிறகு, அவர் முழுமையாக குணமடைந்து நாடு திரும்பினார். மற்றொருவர், கருப்பை புற்றுநோய் மற்றும் பெரிட்டோனியல் பரவலால் பாதிக்கப்பட்ட 32 வயது தாய் ஆவார். அவருக்கும் விரிவான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஹைபெக் சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.
அப்பா குட்டி திரைப்பட முன் வெளியீட்டு விழா
தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம், பிணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஊட்டி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படம் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, இயக்குநர் மு. மாறன், ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய திரைப்பிரபலங்கள் படத்தின் உருவாக்க அனுபவங்கள், கதைக்களம், நடிகர்களின் நடிப்பு, தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு மற்றும் படத்தின் சுவாரசியமான தகவல்கள் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில்..
தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி பேசியதாவது,
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புக்குப் பிறகு என்னை மீண்டும் இந்த இடத்திற்கு அழைத்து வந்ததில் விஜய் ஆண்டனிக்கும், எனது நெருங்கிய நண்பர்களான இயக்குநர்கள் சசி, சுசீந்திரன், தனஞ்செயன், தங்கர் பச்சான் உள்ளிட்ட அனைவருக்கும் முக்கியப் பங்கு உண்டு. இந்த ஐந்து ஆண்டுகளிலும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் எனக்கு அளித்த ஆதரவையும் அன்பையும் மறக்க முடியாது. மீரா நல்ல இடத்தில் இருக்கிறாள். இனி அவளைப் பற்றிக் கவலைப்படாமல், நீங்கள் மீண்டும் திரையுலகிற்கு வர வேண்டும்; நிறைய படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். நீங்கள் அனைவரும் எங்கள் நண்பர்களும் நலன் விரும்பிகளும்தான்.
எங்கள் குடும்பம் எப்போதும் எளிமையாகவும் வெளிப்படையாகவும் வாழ்ந்திருக்கிறது. மீரா பயன்படுத்திய பொருட்களையும் அவளுடைய அறையையும் இன்றுவரை நினைவாகப் பாதுகாத்து வருகிறோம். விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. மீராவுக்காக வாங்கி வைத்திருந்த காலணிகளைப் பார்த்த பிறகு, இனி வாழ்க்கை முழுவதும் செருப்பு அணியப் போவதில்லை என்று அவர் முடிவு செய்தார். அதேபோல், மீரா வாங்கிக் கொடுத்த சுமார் நான்காயிரம் ரூபாய் மதிப்புள்ள கடிகாரத்தை மட்டுமே இப்போது அணிந்து வருகிறார். முன்பு பயன்படுத்திய விலையுயர்ந்த கடிகாரங்களைக்கூட ஒதுக்கிவிட்டார். அந்தக் கடிகாரத்திலேயே மீரா தன்னைக் கவனித்துக்கொள்வதாக அவர் நம்புகிறார். இவை அனைத்தும் எங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய மிகவும் தனிப்பட்ட உணர்வுகள்.
இன்று நடைபெறுவது ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் முன்வெளியீட்டு விழா. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எங்களை மகிழ்வித்த திரையுலகப் பிரபலங்கள், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் நிறைய பேச வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. இப்போது நிகழ்ச்சியைத் தொடங்குவோம். நன்றி.
தங்கர் பச்சான் பேசியதாவது,
“முதலில் விஜய் ஆண்டனிக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழில் பெயர் வைத்ததற்காக அவரைப் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டில் உருவாகும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ் பெயர்கள் வைக்கப்படுவது மிகவும் அவசியம். ஆனால் வாரத்திற்கு வெளியாகும் பத்து படங்களில் இரண்டு படங்களுக்குக் கூட தமிழில் பெயர் இருப்பதில்லை. இதுகுறித்து ஊடகங்களோ, கலைஞர்களோ யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மக்களுடைய பணம் மட்டும் வேண்டும் என்று நினைப்பது வருத்தமளிக்கிறது. முன்பு கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம், சமஸ்கிருதப் பெயர்களைத் தவிர்த்து தமிழ்ப் பெயர்களை ஊக்குவிப்பதற்காக வரிச்சலுகை வழங்கப்பட்டது. இப்போது இந்த விஷயத்தில் அரசுகள் கவனம் செலுத்துகின்றனவா என்று தெரியவில்லை. இது அவமானமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
விஜய் ஆண்டனி என்னுடைய நண்பர். அவர் ஒரு கலைஞராகவும், மனிதராகவும் தரமானவர். அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இந்தப் படத்தைப் பார்க்க எனக்கு இரண்டு முறை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தும் பார்க்க முடியவில்லை. இன்றைய மனித வாழ்க்கை உறவுகளைக் கடந்து பணத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் நேசிப்பவர்களுடன் ஐந்து நிமிடங்கள் அமர்ந்து பேசக்கூட நேரமில்லாமல் கைபேசியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால்தான் இப்படிப்பட்ட திரைப்படங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம். குறிப்பாக, குழந்தைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் உலக அளவில் குறைந்துவிட்டன. குழந்தைகளின் உலகமே அவர்களிடமிருந்து திருடப்பட்டுவிட்டது. மண்ணையும், நீரையும், உணவையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டோம். குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சியைப் பெற்றோரின் கைபேசிகளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திலும் வீட்டிலும் குழந்தைகளை இயந்திரத்தனமாக நடத்துகிறோம். அவர்களுக்கு அன்பு எங்கே கிடைக்கும்?
இவற்றையெல்லாம் பேசுவதற்கான கலைதான் திரைப்படக் கலை. ஆனால் இன்றைக்கு நம்மிடம் இருக்கும் நவீன கேமராக்கள், ஒளி, ஒலி உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பெரும்பாலும் வன்முறையைக் காட்சிப்படுத்தவும், போதைப்பொருள் கடத்தல், மது அருந்துதல் போன்றவற்றை விதவிதமாகக் காட்டவும் பயன்படுத்துகிறோம். அப்படிப்பட்ட படங்கள் எத்தனை கோடி வசூல் செய்கின்றன என்று தொடர்ந்து எழுதுகிறோம். அந்தப் பணத்தால் சமூகத்திற்கு என்ன பயன்? மீண்டும் மீண்டும் அதே போன்ற படங்களைத்தான் உருவாக்குகிறார்கள். அதற்குப் பதிலாக, மக்களிடம் உறவுகளையும் அன்பையும் பேசக்கூடிய இப்படிப்பட்ட திரைப்படங்கள் கவனிக்கப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும். ‘அப்பா குட்டி’ திரைப்படம் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் என்பது என்னுடைய கணிப்பு. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும், படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
இயக்குநர் சசி பேசியதாவது,
“ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியிலும், டிரெய்லர் வெளியீட்டிலும் இந்தப் பாடல்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று காலையில் முழுப் படத்தையும் பார்த்த பிறகு, இந்தப் பாடல்கள் கதையில் எந்த அளவுக்குப் பொருத்தமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இடம்பெற்றிருக்கின்றன என்பது புரிந்தது. படம் பார்த்த பிறகு மீண்டும் அந்தப் பாடல்களைக் கேட்கும்போது அழகான உணர்வைக் கொடுக்கின்றன. பாடல்களைச் சரியான இடத்தில் பொருத்திய இயக்குநர் மாறனுக்கு என்னுடைய பாராட்டுகள்.
இன்று ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த திருப்தியுடன் இருக்கிறேன். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான உறவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு தனித்துவமான விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் இந்தப் படத்தின் யுஎஸ்பி. அதைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு நல்ல படத்தைப் பார்த்தோம் என்ற திருப்தி நிச்சயம் இருக்கும். இந்தப் படம் பார்வையாளர்கள் அனைவரையும் பாதிக்கும். விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”
இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது,
“விஜய் ஆண்டனி என்னுடைய நண்பர். ‘வேலாயுதம்’ படத்தில் பணியாற்றிய காலத்திலிருந்தே எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. அவருக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். விஜய் ஆண்டனி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான கலைஞர். இசையமைப்பாளர், எடிட்டர் எனப் பல துறைகளில் தனது திறமையை நிரூபித்தவர். ஒரு வெற்றிப் படத்தை உருவாக்குவதற்கு ஒரு குழுவாக எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பது சினிமா தெரிந்தவர்களுக்குப் புரியும். அந்த வகையில் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் எதிர்காலத்தில் பல சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இன்று ‘அப்பா குட்டி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ஒரு நல்ல, உணர்வுபூர்வமான படத்தைப் பார்த்த திருப்தியுடன் நிற்கிறேன். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான உறவில் ஒரு தனித்துவமான விஷயத்தை இயக்குநர் மு. மாறன் சொல்லியிருக்கிறார். படத்தின் கதை எதிர்பாராத தளங்களுக்குப் பயணிப்பது ஆச்சரியமாக இருந்தது. சில வெற்றிப் படங்களின் நினைவுகள் வந்தாலும், இப்படத்தின் உணர்வுகள் தனித்துவமாக இருக்கின்றன. குறிப்பாக, விஜய் ஆண்டனி தொடர்ந்து தனது படங்களில் வெளிப்படுத்த முயற்சிக்கும் மனிதநேய உணர்வு இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. நடிகர்கள் தேர்வு, இரண்டாம் பாதியில் வரும் புதிய கதாபாத்திரங்கள், குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பு என அனைத்துமே சிறப்பாக இருந்தது. நாயகி ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பும் மிகவும் அழகாக இருந்தது.
சிறிய பட்ஜெட் பரிசோதனைத் திரைப்படங்கள், பெரிய பட்ஜெட் நட்சத்திரத் திரைப்படங்கள் ஆகியவற்றுடன் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களும் வெற்றிபெற வேண்டும். ஏனென்றால், நடுத்தர பட்ஜெட் படங்களின் வெற்றிதான் திரைத்துறையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இப்படிப்பட்ட படங்கள் வெற்றிபெறும்போது இயக்குநர் மு. மாறன் போன்ற திறமையான படைப்பாளிகள் தொடர்ந்து பல படங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வகையில் ‘அப்பா குட்டி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது,
படத்தில் வரும் நீதிமன்றக் காட்சிகள், கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு, குறிப்பாக ஜே.பி.யின் கதாபாத்திரம் என அனைத்தும் சிறப்பாக இருந்தன. முருகானந்தம் ஆங்காங்கே வழங்கும் நகைச்சுவை வசனங்களும் ரசிக்கும்படி இருந்தன. படத்தின் ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியது. குறிப்பாக, கிளைமாக்ஸில் ஒரு பெண் நீதிமன்றத்திற்கு வந்து குழந்தையைத் தொட்டுப் பார்க்கும் காட்சியில் ஒளிப்பதிவாளரின் கேமரா கோணமும் ஒளியமைப்பும் அற்புதமாக இருந்தன.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் எப்படி அனைத்து தரப்பு மக்களுடனும் உணர்வுபூர்வமாகக் கனெக்ட் ஆனதோ, அதேபோல் ‘அப்பா குட்டி’ திரைப்படமும் ரசிகர்களுடன் நல்ல உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும். இரண்டாம் பாதி நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று இந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயமாக அனைவருக்கும் பிடித்த திரைப்படமாக இருக்கும்.”
தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது,
“இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் உணர்ச்சிபூர்வமாகப் பேசியதை நாம் பார்த்தோம். குறிப்பாக, திரையரங்கில் படம் பார்த்த பெண்கள் கண்கலங்கிய காட்சிகளைப் பார்க்கும்போது, இந்தத் திரைப்படம் எந்த அளவுக்கு மக்களின் மனதைத் தொட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, அவர்களுடைய எதிர்வினையே இப்படத்தின் உணர்வுப்பூர்வமான வெற்றியை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கு முக்கியமான காரணம் விஜய் ஆண்டனியைப் பற்றிப் பேச வேண்டும் என்பதுதான். ஒரு இலக்கைத் தீர்மானித்துக்கொண்டு, அதை நோக்கி உண்மையாக உழைத்துப் பயணித்தால் வெற்றி பெற முடியும் என்பதற்கு விஜய் ஆண்டனி சிறந்த உதாரணம். பல விமர்சனங்களையும் கடந்து தனது மன உறுதி, உழைப்பு, விடாமுயற்சியால் இந்த நிலையை அடைந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 14 ஆண்டுகளாகப் பயணித்து வரும் விஜய் ஆண்டனி இதுவரை 28 படங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அவரது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஒரு படம் முடிந்ததும் அடுத்த படத்திற்கான பணிகளில் உடனடியாக இறங்கிவிடுகிறார். ஏற்கெனவே அடுத்தடுத்த படங்களுக்கான திட்டங்களையும் தயாராக வைத்திருக்கிறார். இந்தத் தொடர் முயற்சியும், அர்ப்பணிப்பும்தான் சினிமாவில் மிகவும் முக்கியம். அவரது இசையும் இப்படத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது. இசையமைப்பாளர், பாடகர் என ஏற்கெனவே தனது திறமையை நிரூபித்த விஜய் ஆண்டனி, இந்தப் படத்திலும் அதை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இயக்குநர் மு. மாறனைப் பொறுத்தவரை, இப்படத்தின் நடிகர்கள் தேர்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ப்ரீத்தி அஸ்ராணி மிகச் சிறந்த நடிகை. விஜய் ஆண்டனி – ப்ரீத்தி அஸ்ராணி ஜோடியைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசியதாவது,
“இன்று காலையில் நான் படம் பார்க்கவில்லை. அதனால் படத்தைப் பற்றி என்னால் எதுவும் பேச முடியாது. ஆனால் விஜய் ஆண்டனிக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். நானும் விஜய் ஆண்டனியும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். ‘கொலைகாரன்’ படத்தின் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல இடங்களில் என்னைத் தனது வகுப்புத் தோழன், நண்பன் என்றுதான் அவர் அறிமுகப்படுத்துவார். ஆனால் உண்மையில் எனக்குத் திரையுலகில் ஒரு நல்ல திருப்புமுனையைக் கொடுத்தவர் விஜய் ஆண்டனிதான். ‘கொலைகாரன்’ படத்தில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால், என்னுடைய திரைப்பயணம் இன்னும் எவ்வளவு போராட்டமாக இருந்திருக்கும் என்று தெரியாது. நண்பர் என்பதையும் தாண்டி அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது.
‘கொலைகாரன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து அவரிடம் பேசியிருக்கிறேன். அப்போது நான் வேறு தயாரிப்பு நிறுவனங்களுடன் பணியாற்ற ஒப்பந்தமாகியிருந்ததால் அவருடன் உடனடியாக இணைந்து பணியாற்ற முடியவில்லை. இருப்பினும், எந்தச் சூழலிலும் எனக்குத் திருப்புமுனை கொடுத்தவர் என்ற விஷயத்தை அவர் ஒருபோதும் வெளிப்படுத்திப் பெருமை தேடிக்கொண்டதில்லை. அப்படிப்பட்ட நல்ல நண்பர் விஜய் ஆண்டனி.
இந்த நிகழ்ச்சியில் ஃபாத்திமாவைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். நுங்கம்பாக்கம் புனித தெரசா தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் திருப்பலிக்கு நான் அடிக்கடி செல்வேன். அப்போது எனக்கு எதிரே அமர்ந்திருக்கும் இடத்தில் ஃபாத்திமா ஒவ்வொரு முறையும் திருப்பலி முழுவதும் கண்ணீருடன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவருடைய வலியைப் பார்ப்பது எனக்குக் கடினமாக இருந்ததால், ஒரு கட்டத்தில் நான் அமரும் இடத்தையே மாற்றிக்கொண்டேன். இருப்பினும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்காகத் தனியாகப் பிரார்த்தனை செய்வேன். அவருக்கு இறைவன் மனவலிமையைக் கொடுக்க வேண்டும். அவர் நிச்சயமாக ஒரு நல்ல இடத்தில் இருப்பார். விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு என்னுடைய அன்பும் பிரார்த்தனைகளும்.”
இயக்குநர் நிதிலன் சாமிநாதன் பேசியதாவது,
“விஜய் ஆண்டனி சாருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடன் எனக்குப் பல ஆண்டுகளாகப் பழக்கம் இருக்கிறது. அவர் மிகவும் எளிமையானவர், நடைமுறைக்கு ஏற்ற வகையில் சிந்திக்கக்கூடியவர். அவரைச் சந்திக்கச் சென்றால், அவரே நேரில் கவனித்துக்கொள்வார். காபி, டீ என அனைத்தையும் அவரே எடுத்துக்கொண்டு வருவார். பேசத் தொடங்கும்போது தனது செல்போனை அணைத்து வைத்துவிடும் அளவுக்கு மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் இணைந்து பணியாற்றுவேன்.
இன்று மாலை இரண்டு மணிக் காட்சியில் ‘அப்பா குட்டி’ படத்தைப் பார்த்தேன். மிகவும் வித்தியாசமான, சுவாரசியமான அதேசமயம் சிக்கலான ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. கொஞ்சம் தவறாகக் கையாண்டிருந்தாலும் வேறு மாதிரியான படமாக மாறியிருக்கக்கூடிய கதையை இயக்குநர் மு. மாறன் மிகவும் பக்குவமாகவும் சமநிலையுடனும் கையாண்டிருக்கிறார். குறிப்பாகப் படத்தின் இறுதிக்காட்சிகள் எனக்கு மிகவும் ஆச்சரியத்தையும் பதற்றத்தையும் கொடுத்தன. படத்தின் முழுவதும் நேர்மையான ஓர் உணர்வு இருந்தது. குழந்தைகளுக்காகச் செய்யும் விஷயங்களில்கூட நேர்மையாக இருக்க வேண்டும் என்ற கருத்து அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
படத்தின் நடிகர்கள் தேர்வு மிகவும் சிறப்பாக இருந்தது. விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நீதிபதியாக நடித்தவரின் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது. உண்மையான நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி பேசுவதைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினார். சுசீந்திரன் சார் குறிப்பிட்டதுபோல, அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவரின் இயல்பான வசன உச்சரிப்பும் நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தன. இயக்குநர் மு. மாறன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ‘அப்பா குட்டி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
இயக்குநர் மந்திரமூர்த்தி பேசியதாவது,
“‘அப்பா குட்டி’ திரைப்படத்தை இன்று காலையில் பார்த்தேன். படத்தின் முதல் பாதி மிகவும் அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது. இரண்டாம் பாதியும் அதேபோல் உணர்ச்சிகரமாகச் செல்லும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், இரண்டாம் பாதியில் வந்த எதிர்பாராத திருப்பங்களும் சுவாரசியமான சம்பவங்களும் ஆச்சரியப்படுத்தின. அதேசமயம் படத்தின் உணர்வுப்பூர்வமான தன்மையும் குறையாமல் இயக்குநர் மு. மாறன் மிகவும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். கடந்த வாரம் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தனஞ்செயன் சார், படம் முடியும் நேரத்தில் பார்வையாளர்களின் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீராவது வரவில்லை என்றால் தன்னிடம் கேள்வி கேட்கலாம் என்று கூறியிருந்தார். இன்று படத்தின் இறுதியில் எனக்கு மட்டுமல்லாமல் திரையரங்கில் இருந்த அனைவருக்குமே அந்த உணர்வு ஏற்பட்டது. அவர் சொன்னது உண்மையாகியிருக்கிறது.
விஜய் ஆண்டனி நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர், தயாரிப்பாளர் எனப் பல பொறுப்புகளை ஏற்று இந்தப் படத்தை மிகவும் அழகாக உருவாக்கியிருக்கிறார். படத்திற்குத் தேவையான அனைத்தையும் சரியான முறையில் கொடுத்திருக்கிறார். பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, கிளைமாக்ஸில் நீதிமன்றத்தில் இடம்பெறும் சுமார் ஐந்து நிமிடக் காட்சிகள் மிகவும் அருமையாக இருந்தன. முருகானந்தம் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
நடிகர் நடராஜன் பேசியதாவது,
“இந்தப் படத்தில் நான் நீதிபதியாக நடித்திருக்கிறேன். ஏற்கெனவே பல படங்களில் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், இனிமேல் நீதிமன்றத்தில் ஏதாவது நீதிபதி விடுமுறையில் சென்றால் என்னைக் கூப்பிடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு நிறைய நீதிபதி கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி எனக்கு மிகவும் நெருக்கமானது. படப்பிடிப்பின்போது குழந்தை ஒன்று தனது அப்பாவைத் தேடி வந்து ‘அப்பா குட்டி’ என்று அழைக்கும் அந்த நொடியிலேயே என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. நான் ஒரு தந்தைக்குப் பிள்ளையாகவும், இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகவும் இருப்பதால் அந்தப் பாசத்தை என்னால் உணர முடிந்தது. அந்த உணர்வைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்த வரமாக நினைக்கிறேன்.
இந்தக் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்த இயக்குநர் மு. மாறன் மற்றும் விஜய் ஆண்டனி சாருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குழந்தைகளையும் அவர்களுக்கான உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் ஒரு சிறப்பான முயற்சி. அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இப்படம் மிகப்பெரிய வெற்றிபெறுவதுடன், பல விருதுகளையும் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.”
நடிகர் பக்ஸ் எனும் பகவதி பெருமாள் பேசியதாவது,
“விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் நான் பணியாற்றும் நான்காவது படம் ‘அப்பா குட்டி’. இதற்கு முன்பு ‘பிச்சைக்காரன்’, ‘கொலைகாரன்’, ‘நூறு சாமி’ ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இந்த நான்கு படங்களுமே எனக்கு மிகவும் சிறப்பானவை. ரசிகர்களுக்கும் அந்தப் படங்கள் நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றன. விஜய் ஆண்டனி படங்களைப் பொறுத்தவரை கதைகளின் தேர்வு எப்போதும் தனித்துவமாக இருக்கும். அது டிராமாவாக இருந்தாலும், ஆக்ஷன் படமாக இருந்தாலும் அதில் சுவாரசியமான ஒரு அம்சம் நிச்சயம் இருக்கும்.
இன்று காலையிலேயே ‘அப்பா குட்டி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டேன். அனைவரும் படத்தைப் பற்றிச் சிறப்பாகப் பேசியிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த விஷயம் படத்தின் பின்னணி இசை. குறிப்பாக, பின்னணி இசை மிகவும் உணர்வுபூர்வமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று இப்படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”
நடிகர் மூணாறு ரமேஷ் பேசியதாவது,
“அனைவருக்கும் வணக்கம். விஜய் ஆண்டனி சாரின் இசையில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இசையில் பாடல் இடம்பெறுவது மிகப்பெரிய விஷயம். இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குநர் மு. மாறனுக்கு நன்றி. இதுவரை காவல்துறை அதிகாரியாகப் பார்த்த என்னை இந்தப் படத்தில் வேறொரு பரிமாணத்தில் நடிக்க வைத்திருக்கிறார். முக்கியமான வசனங்களைப் பேசுவதற்கும் வாய்ப்பளித்திருக்கிறார்.
‘அப்பா குட்டி’ திரைப்படம் அனைவருடைய மனதையும் தொடக்கூடிய கதையாக இருக்கும் என்று நம்புகிறேன். குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனால் குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தக் கதை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அடுத்து இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கும் படமும் புதிய கதைக்களத்துடன் உருவாகிறது என்று தெரிகிறது. தொடர்ந்து வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம், விஜய் ஆண்டனி மிகவும் அழகாகச் சிரிக்கக்கூடியவர். அவரை ஒரு ஜாலியான காதல் கதையில், லவ்வர் பாய் கதாபாத்திரத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ‘அப்பா குட்டி’ திரைப்படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகள்.”
நடிகை லிஸ்ஸி ஆண்டனி பேசியதாவது,
“நான் இன்னும் ‘அப்பா குட்டி’ திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், நவம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியான பிறகு எல்லா மகள்களும் தங்களுடைய அப்பாவை ஆசையாக ‘அப்பா குட்டி’ என்று அழைப்பார்கள் என்று நினைக்கிறேன். விஜய் ஆண்டனியின் படத் தேர்வுகள் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த நம்பிக்கையும் ஆர்வமும் உண்டு. அவருடைய கதைத் தேர்வுக்கு நான் மிகப்பெரிய ரசிகை என்று ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன். சமீபத்தில் அவர் ரொமான்டிக் காமெடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகத் தெரிந்துகொண்டேன். தன்னை யாரும் ரொமான்டிக் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் வருத்தப்பட்டதாகவும் சொன்னார்கள். ஆனால், உலகத்தைக் காப்பாற்றும் அளவுக்கு பிரம்மாண்டமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் அவரை எப்படி ரொமான்டிக் ஹீரோவாகப் பார்ப்பது? அவர் அடுத்ததாக ஒரு அழகான ரொமான்டிக் கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இப்படத்தைப் பற்றிய செய்திகளைப் பத்திரிகையாளர்கள் அனைவரும் சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”
நடிகர் முருகானந்தம் பேசியதாவது,
“ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விஜய் ஆண்டனி சாரை மீண்டும் இப்படியொரு நிகழ்ச்சியில் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ‘அப்பா குட்டி’ படத்தின் கதையைக் கேட்டபோது மிகவும் பிடித்திருந்தது. படப்பிடிப்பில் நடித்தபோது நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் இன்று காலையில் படத்தைப் பார்த்த பிறகு இது நிச்சயம் வெற்றிபெறும் என்ற உறுதியான நம்பிக்கை வந்துவிட்டது. படத்தைப் பார்க்கும்போது எனக்கு ஒரு பக்கம் சுசீந்திரன் சாரும், மறுபக்கம் சசி சாரும் அமர்ந்திருந்தார்கள். படத்தின் இறுதியில் உணர்ச்சிவசப்பட்டு எனக்குக் கண்ணீர் வந்தது. அதை மறைத்துக்கொள்ள முயன்றபோது சுசீந்திரன் சாரும் கண்கலங்கியதைப் பார்த்தேன். அந்தத் தருணத்திலேயே இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று முடிவு செய்துவிட்டேன். எங்களை இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட வைத்த இயக்குநர் மு. மாறனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
விஜய் ஆண்டனியுடன் நான் முதன்முறையாக இந்தப் படத்தில்தான் இணைந்து நடித்தேன். அவரிடம் அதிகமாகப் பேசி இடையூறு செய்யாமலும், அதே நேரத்தில் பேசாமல் இருந்து நட்பை வளர்த்துக்கொள்ளாமல் போய்விடாமலும் ஒரு சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் அனைவரையும் எளிதாகத் தன்னுடைய இயல்பான சூழலுக்குக் கொண்டுவந்துவிடுவார். அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வும், ஜாலியான ரொமான்டிக் ஹீரோவுக்கான தன்மையும் மிகவும் அழகானது. அவர் ஒரு ரொமான்டிக் கதையில் நடித்தால் நிச்சயம் சிறப்பாக இருக்கும். அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது.
இயக்குநர் மு. மாறன் மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் லோகன், பிரியா, சுந்தர் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் என்னுடைய நன்றிகள். ஒவ்வொருவரும் தங்களுடைய பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்கள். குறிப்பாக, காஸ்ட்யூம் முதல் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் அவர்கள் காட்டிய கவனம் வியக்க வைத்தது. ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பான குழுவின் உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். ‘அப்பா குட்டி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
விஜய் ஆண்டனியின் மகள் லாரா பேசியதாவது,
“இந்தத் திரைப்படத்திற்காக என்னுடைய அப்பா இரவு, பகல் பாராமல் கடினமாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை நான் பார்த்திருக்கிறேன். ஒரு தந்தை தனது குழந்தை மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றிப் பேசும் திரைப்படமாக ‘அப்பா குட்டி’ உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்கும் குழந்தைகள் அனைவரும் தங்களுடைய அப்பாவின் அன்பையும் உழைப்பையும் இன்னும் அதிகமாகப் புரிந்துகொண்டு அவர்களைப் பாராட்டுவார்கள் என்று நினைக்கிறேன். இந்தப் படம் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கிறது. அனைவரும் படத்தைப் பார்க்க வேண்டும். நன்றி.”
நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசியதாவது,
“இங்கு வந்திருக்கும் மதிப்பிற்குரிய இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று காலையில் படத்தைப் பார்த்த அனைவரும் தங்களுடைய பாராட்டுகளையும் நேர்மறையான கருத்துகளையும் தெரிவித்து வருவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஒரு திரைப்படத்திற்காக இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அதற்குச் சிறப்பான வரவேற்பும் பாராட்டுகளும் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, இயக்குநர்கள் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டுவது எனக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.
‘அப்பா குட்டி’ அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான உறவைப் பேசும் திரைப்படம். தனிப்பட்ட முறையிலும் எனக்கு மிகவும் நெருக்கமான, உணர்வுபூர்வமாகத் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய படமாக இது அமைந்திருக்கிறது. இப்படத்தில் உணர்ச்சிகள் மட்டுமின்றி பல்வேறு சுவாரசியமான அம்சங்களும், கமர்ஷியல் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அப்பா – மகளின் அழகான பயணத்துடன் பல கதாபாத்திரங்களும், நடிகர்களும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சமமான முக்கியத்துவமும் இடமும் கொடுத்து இயக்குநர் மு. மாறன் வடிவமைத்திருப்பது சிறப்பானது. இப்படத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நவம்பர் 20ஆம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’ திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க வேண்டும். இன்றைய நிகழ்ச்சியில் கிடைத்திருக்கும் பாராட்டுகளைப் போலவே, படம் வெளியாகும்போதும் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது,
“அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். முதலில் ஃபாத்திமா மேடத்தை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததற்குப் பிறகு இன்று அவரைப் பார்ப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல் லாரா அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது படக்குழுவினருக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். விஜய் ஆண்டனியின் மகள் லாரா மேடையில் பேசியது மிகவும் அழகாக இருந்தது. பொதுவெளியில் பேசுவது எளிதான விஷயம் அல்ல. தமிழிலும் மிக அழகாகப் பேசியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். ‘அப்பா குட்டி’ திரைப்படத்தை விஜய் ஆண்டனி தனது மகள் மீதான அன்பின் வெளிப்பாடாக உருவாக்கியிருக்கிறார் என்றே நான் பார்க்கிறேன். நிஜ வாழ்க்கையிலும் மகள் என்ன கேட்டாலும் அன்புடன் நிறைவேற்றும் தந்தையாக விஜய் ஆண்டனியைப் பார்த்திருக்கிறேன். அந்தத் தந்தையின் அன்புக்கு ஒரு திரைப்பரிசாக இப்படம் அமைந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு வெளிவந்த சிறப்பான படங்களின் வரிசையில் ‘அப்பா குட்டி’யும் இடம்பெறும். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு ‘தெய்வத்திருமகள்’ போன்ற உணர்வுபூர்வமான திரைப்படத்தைப் பார்த்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. இயக்குநர் மு. மாறன் மிகவும் அழகாக இந்த உணர்வுகளைக் கையாண்டிருக்கிறார். விஜய் ஆண்டனியிடமிருந்து சிறப்பான நடிப்பையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். கடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும்போது குறைந்தபட்சம் ஒரு சொட்டுக் கண்ணீராவது வரவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள் என்று கூறியிருந்தேன். இன்று நிகழ்ச்சியில் பலரும் அதே உணர்வைப் பகிர்ந்துகொள்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வை இயக்குநர் நிச்சயம் ஏற்படுத்துவார்.
நவம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாகும்போது சில திரையரங்குகள் மற்றும் வெளியீட்டுத் தொடர்பான சவால்கள் இருக்கலாம். அதே நாளில் எதிர்பார்ப்புள்ள பெரிய படங்களும் வெளியாகின்றன. ஆனால் நல்ல படங்களை ஊடகங்களும் மக்களும் ஒருபோதும் கைவிட்டதில்லை. ஆரம்பத்தில் 200 திரைகள் கிடைத்தாலும், முதல் காட்சிகளுக்குப் பிறகு வரவேற்பைப் பொறுத்து அது 250, 300 என அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதற்கு உதாரணமாக, மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ‘ராமாயணா’ திரைப்படத்திற்குத் தமிழகத்தில் கிடைத்த வரவேற்பைக் குறிப்பிடலாம். அதேபோல் ‘அப்பா குட்டி’யும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் இதுவரை வெளியான படங்கள் வணிக ரீதியாகத் தோல்வியடையாமல் தொடர்ந்து பயணித்திருக்கின்றன. அதற்குப் பின்னால் பார்திமா விஜய் ஆண்டனியின் தயாரிப்புத் திட்டமிடலும் உழைப்பும் முக்கியமானவை. இந்தப் படமும் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்று நம்புகிறேன்.
பக்ஸ் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தைப் பார்க்கும்போது உண்மையிலேயே அவர் மீது கோபம் வரும் அளவுக்கு நடிப்பில் ஈடுபட்டிருக்கிறார். அதுதான் ஒரு நடிகராக அவருடைய வெற்றி. அதேபோல் நீதிபதியாக நடித்த குமார் நடராஜன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். நீதிபதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் சிறப்பாக இருந்தன. ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பும், விஜய் ஆண்டனி மற்றும் குழந்தைக்கு இடையிலான அன்பை வெளிப்படுத்திய விதமும் பாராட்டுக்குரியவை. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். பத்திரிகையாளர்களுக்காக விரைவில் சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டிருக்கிறேன். படத்தைப் பார்த்து உங்களுடைய உண்மையான கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தால் இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங்கும் வெற்றியும் கிடைக்கும். அந்த வெற்றியைக் கொண்டாடும் அடுத்த நிகழ்ச்சியில் நாம் அனைவரும் மீண்டும் சந்திப்போம்.”
இயக்குநர் மு. மாறன் பேசியதாவது,
“ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஃபாத்திமா மேடம் ‘அப்பா குட்டி’ நிகழ்ச்சிக்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியிருப்பதற்கு முக்கியக் காரணம் விஜய் ஆண்டனி சார் மற்றும் ஃபாத்திமா மேடம் ஆகிய இருவரும்தான். நான் கேட்ட அனைத்தையும் எந்தக் குறையும் வைக்காமல் செய்து கொடுத்தார்கள். இன்று அனைவரும் படத்தைப் பாராட்டுவதற்கு அவர்கள்தான் முக்கியமான தூண்கள். அதற்குப் பிறகு எங்களுடைய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படப்பிடிப்பின்போது யாரிடமும் எந்தவிதமான மனக்கசப்பும் ஏற்படவில்லை. விஜய் ஆண்டனியை எப்படிக் கையாண்டீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்பார்கள். ஆனால் அவர் மிகவும் இயல்பான மனிதர். தண்ணீர் எந்தச் சூழலிலும் தன்னைப் பொருத்திக்கொள்வதைப் போல, அவரும் எந்தச் சூழலுக்கும் எளிதாகப் பொருந்திக்கொள்வார். ஒரு புரமோஷன் படப்பிடிப்பின்போது கை கழுவத் தண்ணீர் இல்லாத சூழலில் மழைநீரிலேயே கைகளைக் கழுவிக்கொண்டார். அந்த அளவுக்கு எளிமையானவர். அவர் கோபப்பட்டாலும் அதற்குப் பின்னால் ஒரு நியாயம் இருக்கும் என்பதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
‘அப்பா குட்டி’ திரைப்படம் எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக அமைந்திருக்கிறது. படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. நவம்பர் 20ஆம் தேதி, வெள்ளிக்கிழமை பல படங்களுடன் போட்டிக்கு மத்தியில் வெளியாகிறோம். இருப்பினும் எங்களுடைய உழைப்பைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக மக்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஊடக நண்பர்கள்தான் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவ வேண்டும். மேலும், மீரா எங்களுடன் நேரில் இல்லாவிட்டாலும் எங்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறார். உலகத்தில் இருக்கும் அனைத்து மீராக்களுக்கும் இந்தப் படத்தைச் சமர்ப்பிக்கிறோம். அனைவருக்கும் நன்றி.”
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது,
இயக்குநர் மு. மாறன் கடந்த 10–15 ஆண்டுகளாக உதவி இயக்குநராகப் பணியாற்றி, இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறார். இதற்கு முன்பு மூன்று படங்களை இயக்கியுள்ள அவர், இந்தப் படத்தின் மூலம் இன்னும் பெரிய அங்கீகாரத்தைப் பெறுவார் என நம்புகிறேன். மிகவும் நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. அவருக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான வெற்றியைத் தேடித்தரும். இந்தப் படம் தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்த பைஜாவுக்கும், தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் நன்றி. விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. காதல் கதாபாத்திரத்தில் நடிப்பதைவிட, திருமணமான ஆணைக் காதலிக்கும் உணர்வுகளையும் காதலையும் முதிர்ச்சியுடன் வெளிப்படுத்துவது எளிதானதல்ல. அதை அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார். எதிர்காலத்தில் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றுவோம். அதேபோல், இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, லாரா மேடையில் பேசியது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.
இந்தப் படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து மகிழலாம். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொருவரும் தங்களது அப்பாவுக்கு ஒரு போன் செய்து பேசுவீர்கள். அந்த அளவுக்கு தந்தை–மகள் உறவை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறோம். படத்தில் இடம்பெற்றுள்ள ‘அப்பாவைப் போல இங்கே யாரிருக்கா?’ பாடலும் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். பாடலாசிரியர் ஏகாதசி, அருண்பாரதி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம். நன்றி.
‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு
These two children are in good health! The parents thanked the doctors
Rainbow Children’s Hospital, India’s leading pediatric multi-specialty and perinatal care hospital chains, today organized a press conference in Chennai to highlight advancements in neonatal care and the hospital’s experience in managing complex preterm deliveries, delivered at the limits of viability, which has been defined in India as 24 – 25 weeks. The session brought together the hospital’s team of neonatologists, who shared details of many challenging cases involving extremely premature babies who overcame multiple critical complications with specialized medical interventions and intensive neonatal care. The discussion also highlighted the increasing need for advanced neonatal facilities, timely diagnosis and comprehensive medical support to improve outcomes for periviable premature babies. The first highlighted case involved a baby girl born at 24 weeks and 3 days and weighing 712 grams.
The baby required 12 minutes of CPR immediately after birth and subsequently battled severe respiratory complications, pulmonary haemorrhage, bleeding on both sides of the brain and a drug-resistant bloodstream infection. She also underwent laser treatment in both eyes for retinopathy of prematurity. Despite two courses of medication, the vessel remained open, necessitating surgical closure with clips when were just four weeks old. They have now recovered well after nearly 75 days of hospital stay and are ready to go home. After 105 days of oxygen support and intensive NICU care, she was discharged weighing 1.944 kg. The second case were babies, born as twinsat 24 weeks and 2 days and weighing 600 grams, again battling complex respiratory concerns. They were also diagnosed with a significant patent ductus arteriosus (PDA), a condition in which a blood vessel near the heart remains open after birth.
Rainbow children’s hospital reports survival of 68% at 24 weeks of gestational age and 86% at 25 weeks, which is on par with the outcome of these infants in high income countries. This niche care is offered only by selected units in India, again underlining the complexity of care required and the availability of expertise. Previable babies are those born 26 weeks before gestation, are at the maximal higher risk of complications due to the underdevelopment of their lungs, brain, immune system and other vital organs. This makes access to specialized neonatal care and timely medical intervention critical to their survival and long-term development. These statistics should be seen in the context of the high preterm load in India. According to estimates published in The Lancet, India recorded approximately 3.02 million preterm births in 2020, accounting for 13% of all births in the country and over 20% of preterm births worldwide which is the highest number of preterm births globally.
Elaborating on common neonatal complications and the role of technology, Dr. Shobana Rajendran, Senior Consultant –Neonatologist, Rainbow Children’s Hospital, Annanagar,said, “Extremely premature babies are vulnerable to complications such as respiratory distress, brain haemorrhages, infections, feeding difficulties and retinopathy of prematurity, as several vital organs are still developing. Advancements in neonatal ventilation, surfactant therapy, continuous monitoring and laser treatment for eye complications have significantly improved the management of these conditions. A multidisciplinary approach is equally important to address complications as they arise and support the baby’s growth and development beyond the initial critical phase.“
Highlighting maternal health and the importance of preventing premature births, Dr. Monisha R, Consultant – Neonatologist, Rainbow Children’s Hospital, Sholinganallur, said, “Preterm births can be associated with several factors, including multiple pregnancies, maternal hypertension, diabetes, infections, cervical insufficiency and placental complications. While not all premature births can be prevented, regular antenatal check-ups, timely screening and appropriate management of underlying maternal conditions can help identify and address certain risks. High-risk pregnancies require closer medical supervision and early consultation with specialists to plan for potential complications. Awareness and timely intervention are key to ensuring that mothers and babies receive appropriate care.“
Speaking on the broader challenges and advancements in neonatal care, Dr. Giridhar S, Clinical Lead – Neonatology, Rainbow Children’s Hospital, Guindy, said, “India accounts for the highest number of preterm births globally, making this an important public health concern. Care for periviable preterm infants is even more challenging considering the complexity of medical and surgical problems faced by these babies. At Rainbow Children’s Hospital, we have created a tiny baby ecosystem combining specialized instruments, advanced monitoring, standardized clinical evidence-based protocols, and developmental supportive care. Our units are backed by a dedicated multidisciplinary team of specialists, including senior neonatologists and nurses, backed by round-the-clockavailability of surgeons, cardiologists and radiologists with special expertise in handling these vulnerable babies. Parents must understand that a periviable birth does not necessarily mean an unfavorable outcome. With the right medical support, many of these babies can overcome critical challenges and progress towards healthy development.“
எங்கள் அம்மன் அருளால் தான் பிரச்சனை முடிந்தது என நம்பிக்கை!

டைட்டானிக் விமர்சனம் RATING 3/5
இயக்கம்: எம். ஜானகிராமன்
நடிகர்கள்: கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி
இசை: நிவாஸ் கே. பிரசன்னா
தயாரிப்பு: சி.வி. குமார்
விமர்சனம்:
பூமிநாதனாக காளி வெங்கட், சூர்யாவாக கலையரசன், சந்துருவாக ராகவ் விஜய் என மூன்று மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் ரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்கின்றன. கல்லூரிக் காதலியான அம்முவின் (கயல் ஆனந்தி) பிடிவாதங்களையும், கொடைக்கானலில் நிகழ்ந்த காதல் சம்பவங்களையும், இறுதியில் ஏற்பட்ட பிரிவையும் சூர்யா விவரிக்கிறார். பள்ளிப் பருவத்தில் காவேரி மீது கொண்ட ஒருதலைக் காதலை பூமிநாதன் நினைவுகூர்கிறார்.
மறுபுறம், காதலியுடன் (அஷ்னா ஜவேரி) பிரிந்துவிட்ட சந்துரு, தீபாவைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராகிறார். ஆனால், தனது கடந்தகாலக் காதல் வாழ்க்கையை மறைக்காமல் வரப்போகும் மனைவியிடம் சொல்லிவிட வேண்டும் என்பது அவரது எண்ணம். இதற்கு பூமிநாதன் கொடுக்கும் அறிவுரை வேறு!
இப்படிப் பேசிக்கொண்டே செல்லும் மூவரின் பயணம் பெங்களூருவை அடைகிறது. சந்துருவின் திருமண அழைப்பை ஏற்று அவரது நண்பர்களும் செல்கின்றனர். அங்கிருந்து கதை எடுக்கும் திருப்பங்களும், வெளிப்படும் ரகசியங்களும் படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கின்றன. சந்துரு தனது கடந்தகாலக் காதலை மணமகளிடம் சொன்னாரா? திருமணத்தில் காத்திருக்கும் எதிர்பாராத சம்பவங்கள் என்ன? என்பதே கதை…
காதல் என்றாலே மகிழ்ச்சி மட்டுமல்ல, சில நேரங்களில் ஏமாற்றமும் வலியும் கூடவே வரும் என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாகச் சொல்ல முயற்சிக்கும் திரைப்படம் ‘டைட்டானிக்.
கலையரசன் தனது இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மை சேர்க்கிறார். காதல், கோபம், குழப்பம் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறார். நாயகியாக நடித்த ஆனந்தி, தனது எதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காதல் காட்சிகளிலும் உணர்ச்சிகரமான தருணங்களிலும் கதைக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளார்.
ஆஷ்னா சவேரி தனது கதாபாத்திரத்தின் மூலம் படத்திற்கு கூடுதல் வண்ணம் சேர்க்கிறார். காளி வெங்கட் மற்றும் ஜாங்கிரி மதுமிதா ஆகியோரின் நகைச்சுவை பங்களிப்புகள் சில இடங்களில் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கின்றன. சென்னை, கொடைக்கானல், கோவை உள்ளிட்ட இடங்களின் பின்னணியில் பயணிக்கும் கதை, நகைச்சுவை மற்றும் காதல் உணர்வுகளுடன் நகர்கிறது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன.
இந்தப் படத்தின் மற்றொரு பலம் அதன் திரைக்கதை அமைப்பு. சாதாரணமாகக் கடந்து போகும் சில வசனங்கள்கூட பின்னர் நிகழும் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது இயக்குநரின் கவனத்தையும் உழைப்பையும் வெளிப்படுத்துகிறது.
பலம்:
இளைஞர்களின் காதல் மனநிலையைப் பிரதிபலிக்கும் கதைக்களம்.
பலவீனம்:
சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைகிறது.
இறுதி தீர்ப்பு:
காதலில் விழுந்தவர்கள், காதலில் தோற்றவர்கள், காதலைத் தேடுபவர்கள் என ஒவ்வொருவருக்கும் காதல் குறித்த அனுபவங்கள் வேறுபட்டிருக்கும். அந்த அனுபவங்களின் சில பக்கங்களை நகைச்சுவையுடன் நினைவுபடுத்துகிறது இந்தப் படம்.
















