Monday, September 14, 2026
Blog

ஒரே மாதிரியான படங்களே வருகின்றன- நடிகை ரித்விகா ஆதங்கம்

சென்னை:
 
நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர். அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
இப்படத்திற்கு
ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே
படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம்
இசை: சக்தி பாலாஜி
பாடல் வரிகள்: லாவர்தன்
கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பு
 
கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம், முக்கூடல், தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.
 
செப்டம்பர் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிற இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது.
 
அறிமுக விழாவில் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,
 
“நான் ஏற்கெனவே ’உடன்பால்’, ’ஜாக்கி ’ படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். க்ரைம் திரில்லர் படத்திற்கு இசையமைத்தது இதுதான் முதல் முறை. இயக்குநர் பாலாஜி முதலில் அப்படிச் சொன்ன இந்தக்கதை எனக்குப் பிடித்திருந்தது. அவர் சொன்ன ஒன்லைன் மிகவும் சுவாரஸ்யமானது. அதேபோல படத்தை எடுத்திருக்கிறார்.இந்தப் படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம்.
படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தின் காட்சிகளை மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணி .ஒரு பெரிய படத்திற்குரிய திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து படத்தைப் பார்க்க வேண்டும் ஆதரிக்க வேண்டும் “என்றார்.
 
ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே பேசும்போது,
 
“நான் இயக்குநர் பாலாஜியுடன் ஏற்கெனவே ’டி3 ’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இது அவருடன் பணியாற்றும் இரண்டாவது படம் .வழக்கமாக மலைப் பிரதேசங்களில் அழகான இடங்களில் படிப்பு நடத்துவது என்பது வேறு. மர்மமும் திகிலும் நிறைந்த ஒரு கதைக்கு அதே இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது என்பது வேறு. கிரைம் திரில்லர் படங்களுக்கு இயற்கை அழகோடு மர்மமும் திகிலும் நிறைந்து காணப்படும் இடங்களாக இருக்க வேண்டும். அப்படி அழகும் மர்மமும் இணைந்த இடங்களைத் தேடி தேடிக் கண்டுபிடித்து இயக்குநர் படப்பிடிப்பு நடத்தினார். நாங்களும் அப்படிக் காடு,மலை என்று சிரமப்பட்டு சென்று படமாக்கினோம்.வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் நீண்ட தூரம் படப்பிடிப்புக் கருவிகளைச் சுமந்து கொண்டு சென்று படப்பிடிப்பு நடத்தினோம்.அந்த சிரமங்கள் எல்லாம் காட்சிகளைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் பாராட்டும் போது இப்போது தெரிவதில்லை” என்றார்.
 
படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் புகழ் தர்ஷிகா பேசும்போது,
 
’தி டார்க் ஹெவன்’ எனது முதல் படம். பொதுவாக எனக்கு த்ரில்லர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அனைவரும் விரும்பிப் பார்க்கும் படங்களாக இருக்கக்கூடியவை த்ரில்லர் படங்கள்தான்.அப்படி ஒரு படமாக இந்த ’தி டார்க் ஹெவன்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் ஒளிப்பதிவு, இசை எல்லாம் சிறப்பாக உள்ளன. நடித்திருக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்திற்காகக் கடினமாக உழைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்கில் சென்று இந்தப் படத்தை பார்த்து ஆதரியுங்கள்.உங்களது நேர்மையான விமர்சனங்களைக் கூறுங்கள் “என்றார்.
 
நடிகை ரித்விகா பேசும்போது,
 
“பெரிய படங்களின் வெளியீடுகள் காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மாறிமாறிப் போய்க்கொண்டிருந்தது. இப்போது செப்டம்பர் 18 அன்று உறுதியாக திரையரங்குகளில் வெளியாகிறது. நிறைய த்ரில்லர் படங்கள் வருகின்றன. போலீஸ்காரர், முகமூடி மனிதர், இன்வெஸ்டிகேஷன் என்று எல்லாம் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே இருக்கும். ஆனால் இது கண்டிப்பாக அப்படி இருக்காது. வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் படமாக இது இருக்கும்.
 
ஏற்கெனவே எடுத்த படத்தை அப்படியே வைத்துவிட்டு மீண்டும் படம் எடுப்பது என்பது இரட்டை உழைப்பைப் போட வேண்டிய நிலை.கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அப்படி இந்தப் படத்திற்காக படக்குழுவினர் அனைவரும் இருமடங்கு உழைத்து இருக்கிறார்கள். சவாலான இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஒரே ஒரு ஷாட்டுக்காகக் கூட மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் சென்று காத்திருந்து எடுத்திருக்கிறார் இயக்குநர். தொழில்நுட்ப ரீதியாகவும் நன்றாக உழைத்து இருக்கிறார்கள்.
நாங்கள் நடிப்புக் கலைஞர்கள் ஒருமுறை நடித்தால் அவர்கள் இரண்டு மடங்கு உழைத்தார்கள்.இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் ஒரு திருப்தியான அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.
 
படங்கள் திரையரங்குப் படங்கள், ஓடிடி படங்கள் என்று இரண்டு பிரிவாகப் பார்க்கப்படுகின்றன. எல்லாப் படங்களையும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்.திரையரங்குக்கு வந்த பிறகு ஓடிடியில் வந்தால் மட்டும் அப்போது பார்க்கலாம் .அதுவரை திரையரங்கில் பார்ப்பது தான் நல்ல அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.’தி டார்க் ஹெவன்’ கண்டிப்பாக நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும். நம்பி வரலாம். ஏமாற்றாது” என்றார்.
 
படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது,
 
“ஒரு படத்தைப் பாதிக்கு மேல் எடுத்து முடித்து அப்படியே வைத்து விட்டு பிறகு ஆரம்பிப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். மீண்டும் இந்தப் படத்தைத் தொடங்கி முடித்து இன்று நான் உங்கள் முன் நிற்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உதவி செய்தவர்களை மறக்க முடியாது. அப்படி மூன்று பேருக்கு நான் நன்றி கூற வேண்டும்.ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று நான் தடுமாறிக் கொண்டிருந்த போது மீண்டும் எடுக்கும் போது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது சரண் ,கோபால் சார், மற்றும் எனது படக்குழுவினர்.இந்த மூவரும் இல்லை என்றால் இந்தப் படம் எடுத்து இருக்கவே முடியாது.அவர்களுக்கு நான் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தை முக்கால்வாசி எடுத்துவிட்டு மீண்டும் அதே படத்தை மறுபடியும் எடுப்பது என்பது மன ரீதியாக மிகவும் அழுத்தம் தரக்கூடிய தொந்தரவு தரக்கூடிய ஒரு விஷயம். அதைத் தொடர்ந்து கொண்டு செல்வது என்பது சிரமமாகத்தான் இருக்கும்.அப்படி இருந்த எனது நெருக்கடியான சூழலில் சித்து சார் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. அவர் கடந்த காலத்தைப் பற்றி எதுவும் நினைக்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.கடந்த காலத்தைப் பற்றி அவர் எதுவுமே கேட்கவில்லை.அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று வரை சுதந்திரமாக பணியாற்றுவதற்கு அது ஒரு பெரிய காரணம்.அதற்கு அவருக்கு மிகவும் நன்றி.
 
அதேபோல இரண்டாவது முறை ஆரம்பித்தபோது பழையதைப் பற்றியும் கடந்த காலத்தைப் பற்றியும் யாருமே பேசவில்லை கேட்கவில்லை. இந்தப் படத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதில் தான் அனைவரது கவனமும் இருந்தது .அதற்கு அனைவருக்கும் நன்றி.அப்படியே படத்தை முடிக்கவும் செய்தோம்.துணை நிற்பவர்கள் சரியாக இருந்தால் நாம் போய்ச் சேர வேண்டிய இடம் சரியாக அமையும் என்பதற்கு இந்தப் படமே ஒரு சாட்சி. அவர்களே எனது பாடம்.அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் பெரிய அளவில் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டு சென்றோம்.
 
இந்த படத்திற்காக அனைவரும் சிரமப்பட்டோம். சிரமங்களில் நான் பெரிதாக நினைப்பது என்னவென்றால் தூக்கம் இல்லாமல் உழைப்பது என்பதைத்தான்.மூன்று மணி நேரம் கூடத் தூங்க முடியாமல் சில நேரம் உழைத்து இருக்கிறோம். அப்போது தூக்கம் இல்லாத அந்த உடல் ரீதியான பிரச்சினை எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அந்தத் தொந்தரவிலிருந்து மீள்வது பெரும் போராட்டமாக இருந்தது.
அதிலிருந்து மீள்வதற்கு நாங்கள்  நீண்ட நாள்கள் மிகவும் சிரமப்பட்டோம்.எனது படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா என அனைவருமே நன்றாக நடித்தார்கள் .அதுமட்டுமல்லாமல் அவர்களோடு அனுபவமுள்ள பெரிய நட்சத்திரங்களும் நடித்து இருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி சார் , நிழல்கள் ரவி சார் , ஜெயக்குமார் சார் போன்ற அனுபவம் உள்ள நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் படப்பிடிப்பில் இருந்ததால் இன்று வர முடியவில்லை.
 
மிகவும் முக்கியமான விஷயம் இது ஒரு நாட்டார் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் த்ரில்லர் படம் என்பதுதான்.டீஸர்,டிரெய்லர் எல்லாம் பார்த்து விட்டு அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என்றால் அதற்கு ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் இருவருக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். அது படைப்பு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தானே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல. எங்களது மனஸ்தாபங்கள் எல்லாம் பேக் அப் சொல்வதற்குள் காணாமல் போய்விடும்.
அவர் நல்ல திறமைசாலி .அவர் பெரிய இடத்துக்கு வருவார். எனது இதயத்தில் இருந்து இதை நான் கூறுகிறேன். இந்தப் படத்தில் ரித்விகா வருவதற்கு முன்பு இந்த படத்தின் தரம் வேறு மாதிரி இருந்தது. வந்த பிறகு அது வேறு மாதிரியான உயரத்துக்குச் சென்றது. முக்கியமாக இந்தப் படத்தில் வரும் நான்கு பாத்திரங்களைப் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறேன்.
 
பாரி,உமையாள், கனி இன்னொரு பாத்திரம் என இந்த நான்கையும் பிரதானமாக வைத்து நான் உருவாக்கி இருக்கிறேன். ரித்விகா ஏற்றுள்ள பாத்திரம் இந்தப் படத்திற்குப் பிறகு பேசக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அவரிடம் இதைக் கேட்பார்கள்.இவர்கள் எல்லாம் இல்லை என்றால் இந்தப் படம் இந்த நிலைக்கு இன்று வந்து இருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்வேன். அனைவருக்கும் மிக்க நன்றி. செப்டம்பர் 18ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாகிறது. நல்லதொரு திரையரங்க அனுபவமாக நிச்சயமாக இந்தப் படம் இருக்கும் .படத்தைப் பார்த்து விட்டு உங்கள் உங்கள் நேர்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள் .நல்லதைக் கேட்டுக்கொள்கிறோம். கேட்டதை மாற்றிக் கொள்கிறோம். நன்றி” என்றார்.
 
கதை நாயகன் சித்து பேசும்போது,
 
“இதே சாலிகிராமத்தில் பல்வேறு சினிமா கம்பெனி அலுவலகங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.இதே பிரசாத் லேபில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் வந்திருக்கிறேன். நான் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றியிருந்தாலும் இது எனக்கு முதல் படம். இதையே நான் ஒரு சாதனையாகப் பார்க்கிறேன் .அதுவும் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.முதல் படத்திலேயே காவல்துறை கதாபாத்திரம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது; எனக்குக் கிடைத்திருக்கிறது. இதற்காக இயக்குநர் பாலாஜிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.அவர் என்னை அழைத்து இந்தக் கதையைச் சொல்லி நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அது ஒரு த்ரில்லர் கதையாக இருந்தது.எல்லா கதாநாயக நடிகர்களுக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட ’காப் ஸ்டோரி ’ என்று ஒன்று கிடைப்பது அரிதாக இருக்கும் .எனக்கு முதல் படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு கதையாகக் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது .அதுவும் காவல் துறை சம்பந்தப்பட்ட திரில்லர் கதை என்று அமைந்திருப்பது எனக்கு ஒரு அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும் .நான் கதாநாயகனாக நடிக்கும்போது அதுவும் த்ரில்லர் படத்தில் நடிப்பது பல பரிமாணங்களைக் காட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும் .அப்படிப்பட்ட படம் முதல் படமாக வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அப்போது நான் கண்டிப்பாக நான் செய்கிறேன் என்றேன். அவர் அப்பொழுது சொன்னார், இது முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கதை என்றெல்லாம் சொன்னார். நான் அதைப் பற்றி எதுவுமே கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்தப் படத்தை எப்படி மேலே கொண்டு செல்வது என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற அவர் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது .ஒரு முடிந்து போன முடிவைப் பற்றி நான் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனக்கு வந்திருக்கும் வாய்ப்பை எப்படி நான் பயன்படுத்திக் கொண்டு மேலே முன்னேற வேண்டும் என்பதில் தான் என் கவனமும் இருந்தது. எனவே முடிவைப் பற்றி நான் பேசவில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.
 
அவரது படக்குழுவினரைப் பார்த்த பிறகு இந்தப் படம் மிக நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சுலபமாகப் படப்பிடிப்பு இடங்களில் படம் எடுப்பதற்கும் காடு, மலை என்று அலைந்து சிரமமான இடங்களில் எடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் அப்படி சிரமப்பட்டு எடுத்தார்கள்.அந்த இடங்களில் மற்றவர்கள் அவ்வளவு சுலபமாக எடுத்து விட முடியாது.படக் குழுவினர் நான் நினைத்தது போலவே கடினமாக உழைத்தார்கள்.இந்தப் படத்தில் நிறைய நல்ல நல்ல நடிப்புக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ரித்விகா, தர்ஷிகா மட்டுமல்ல அனுபவமுள்ள மதிப்பிற்குரிய வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருந்தது. 
 
வருகிற 18-ஆம் தேதி அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் ஆதரியுங்கள்”என்றார்.

எண்டோஸ்கோபிக் ஸ்பைனல் ஃபியூஷன் சிகிச்சை அறிமுகம்!

சென்னை:

காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை, ‘எண்டோஸ்கோபிக் ஃபியூஷன்’ அறுவைசிகிச்சையை சென்னையில் முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் தனது முதுகுத்தண்டுவடப் பராமரிப்புத் திட்டத்தை இம்மருத்துவமனை மேம்படுத்தியுள்ளது. திறந்தநிலை அறுவைசிகிச்சை அல்லது வழக்கமான குறைந்த ஊடுருவல் உள்ள அறுவைசிகிச்சையை (MIS) விட சிறிய துளை மூலம் தண்டுவட அறுவைசிகிச்சை மூலம் பலன் பெறக்கூடிய நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மாற்று முறையாகும். சுமார் 8 மி.மீ அளவுள்ள சிறிய துளை மூலம் அதிக துல்லியமான கேமரா மற்றும் நுண் கருவிகளைச் செலுத்தி இந்த எண்டோஸ்கோபிக் ஃபியூஷன் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் நரம்புகளில் உள்ள அழுத்தம் நீக்கப்பட்டு, சுற்றியுள்ள தசைகள், எலும்புகள் மற்றும் தசைநார்கள் பாதிக்கப்படாமல் உட்பதியம் (இம்ப்ளாண்ட்) செய்யப்படுகிறது. வழக்கமான அறுவைசிகிச்சைகளில் ஏற்படும் பெரிய தழும்புகள், தசை பாதிப்புகள், அதிக இரத்த இழப்பு மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி ஆகியவை இதில் மிகக் குறைவாகவே இருப்பதால், நோயாளிகள் விரைவாக குணமடைய இந்த சிகிச்சை உத்தி உதவுகிறது.

வழக்கமான திறந்தநிலை அறுவைசிகிச்சையில் பெரிய அளவிலான கீறல்களும், அதிகளவு தசைப் பிரித்தலும் தேவைப்படும். வழக்கமான குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைசிகிச்சையிலும் சுமார் 20 மி.மீ அளவில் கீறலிடப்படுவதால் திசுக்களுக்குச் சிறிய அளவில் பாதிப்பு உண்டாகலாம். ஆனால், எண்டோஸ்கோப்பிக் ஃபியூஷன் என்ற இந்த நவீன சிகிச்சை உத்தியில் திசு சேதம், இரத்த இழப்பு மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி ஆகியவை மிக குறைவாகவே இருப்பது, நோயாளிகள் மிக விரைவில் குணமடைய உதவுகிறது.

தண்டுவட வட்டு தேய்மானம், தண்டுவடக் கால்வாய் சுருக்கம் (Spinal stenosis) மற்றும் சில ஆரம்பநிலை தண்டுவட தளர்வுகள் போன்ற தேய்மானத்தால் ஏற்படும் இடுப்புத் தண்டுவடப் பிரச்சனைகள். முறையான ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும் குணமாகாமல், தொடர்ச்சியான நரம்பு அழுத்த கால் வலியால் அவதிப்படுபவர்கள், ஏற்கனவே திறந்தநிலை அறுவைசிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் உருவாகி, மீண்டும் அதே முறையில் அறுவைசிகிச்சை செய்வது அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் நபர்கள் மற்றும் நீண்ட நேரம் நடைபெறும் திறந்தநிலை அறுவைசிகிச்சையின் சுமையைத் தாங்க முடியாத சில முதியவர்களுக்கும் இச்சிகிச்சை முறை பொருத்தமானதாக இருக்கும்.

இது குறித்து ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் மூத்த தண்டுவட மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் பி. கீர்த்திவாசன் கூறுகையில், “எண்டோஸ்கோபிக் முறையானது தண்டுவட வட்டு விலகல் மற்றும் நரம்பு அழுத்தத்திற்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் தண்டுவடத்தின் இயற்கையான நிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் வழியாக, விரிவான இணைவுக்கான தேவையை தவிர்க்க இது உதவக்கூடும். நோயாளியின் உடல்நிலை மற்றும் முழுமையான பரிசோதனைக்குப் பிறகே இச்சிகிச்சை யாருக்குப் பொருந்தும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து நோயாளிகளுக்கும் இம்முறை பொருந்தாது; கடுமையான தண்டுவடப் பிறழ்வுகளுக்கு வழக்கமான அறுவைசிகிச்சையே தேவைப்படும்,” என்றார்.

ஏற்கனவே தண்டுவட அறுவைசிகிச்சை (L4-L5) செய்திருந்த 56 வயதுப் பெண்மணிக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டபோது, எண்டோஸ்கோபிக் முறை மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இரத்த இழப்பு 50 மி.லிட்டருக்கும் குறைவாகவே இருந்தது. நோயாளி சிகிச்சைக்குப் பிறகு இரண்டு மணி நேரத்திலேயே நடக்கத் தொடங்கி, இரண்டே நாட்களில் வீடு திரும்பினார். கடுமையான கால் வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் ஒருவருக்குப் பெரிய அறுவைசிகிச்சை தவிர்க்கப்பட்டு, எண்டோஸ்கோபிக் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் விரைவாகக் குணமடைந்து தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பினார். மருத்துவர் பி. கீர்த்திவாசன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக எண்டோஸ்கோபிக் தண்டுவட அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார். இப்போது இந்த அதிநவீன சிகிச்சை முறையை இம்மையத்தில் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

சென்னை, ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையின் முதுகுத்தண்டு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பாலமுரளி இது குறித்துக் கூறுகையில்: “இந்த நவீன மருத்துவ செயல்முறை உத்தி, எங்களின் விரிவான முதுகுத்தண்டு சிகிச்சைத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துகிறது. சிகிச்சைக்குப் பொருத்தமான நோயாளிகளை தேர்வு செய்வது, துல்லியமான திட்டமிடல் மற்றும் பல்வேறு மருத்துவத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவையே சிகிச்சையின் சிறந்த பலன்களைத் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எண்டோஸ்கோபிக் ஃபியூஷன் அறுவை சிகிச்சை என்பது சிறிய அளவிலான கீறல்களை ஏற்படுத்துவது என்பதைத் தாண்டி, நோயாளியின் நிலைக்கேற்ப மிகச் சரியான சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்த நவீன உத்தியின் மூலம், சிகிச்சைக்கான வரம்பை மேலும் விரிவுபடுத்தி, நோயாளிகளின் தனிப்பட்ட தேவைக்கேற்ற சிறந்த மருத்துவத் தீர்வுகளை எங்களால் வழங்க முடிகிறது. குறிப்பாக, மிகவும் சிக்கலான மற்றும் மறுசீரமைப்பு தேவைப்படும் முதுகுத்தண்டு பாதிப்புகளில் இது சிறந்த பலனளிக்கும்,” என்று தெரிவித்தார்.

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும் செயல் இயக்குநருமான மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “அறுவைசிகிச்சையின் சிரமங்களையும், பக்கவிளைவுகளையும் குறைத்து, மருத்துவ நிபுணத்துவத்துடன் நவீன தொழில்நுட்பத்தை இணைத்து மக்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்கி குணம்பெறச் செய்வதே எங்களின் நோக்கம். எண்டோஸ்கோபிக் ஃபியூஷன் அறுவைசிகிச்சை உத்தியின் அறிமுகம், பொருத்தமான நோயாளிகளுக்கு குறைந்தபட்ச கீறல் மற்றும் வலியுடன் பாதுகாப்பான சிகிச்சையை வழங்கி விரைவாக குணமளிப்பதில் எங்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,” என்று தெரிவித்தார்.

மண்டாடி விமர்சனம் RATING 3.2/5

ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ், மிதுன் ஜெய்சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மண்டாடி’

மீனவ சமூகத்தின் வாழ்க்கை, கடல், பாரம்பரிய படகுப் பந்தயம் மற்றும் தனிப்பட்ட பகை ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முத்துக்காளி என்ற கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். கடலில் மீன்பிடிப்பதில் திறமை வாய்ந்தவராக மட்டுமல்லாமல், படகுப் பந்தயத்திலும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியவராக முத்துக்காளி காட்டப்படுகிறார். சில தனிப்பட்ட காரணங்களால் தனது சொந்த ஊரை விட்டு விலகியிருக்கும் அவர், மீண்டும் தனது மக்களுக்காக திரும்பி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது நீண்ட காலமாக அவருடன் மோதலில் இருக்கும் சட்டைப் புலி என்ற கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய சவாலாக மாறுகிறது. அதை சூரி எப்படி கையாண்டார் என்பதே கதை.

முத்துக்காளி கதாபாத்திரத்திற்காக நடிகர் சூரி தன் உடலமைப்பை முழுமையாக மாற்றி, மீனவ மக்களின் மொழிநடையை உள்வாங்கி அப்படியே வாழ்ந்திருக்கிறார். சூரி மற்றும் சுஹாஸ் இடையிலான சண்டைகாட்சி, உணர்வுப்பூர்வமான ஃப்ளாஷ்பேக் மற்றும் ஜி.வி-யின் பின்னணி இசை ஆகியவை வேற லெவல். கடலில் படகில் நடக்கும் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. படத்தின் மிகச்சிறந்த பகுதிகள் க்ளைமாக்ஸ் காட்சியில் தான் வருகிறது.

சற்று நீளமான ஃப்ளாஷ்பேக் காட்சிக்குப் பிறகு, திரைக்கதை மீண்டும் வேகம் பிடிக்கிறது. குறிப்பாக, பிரம்மாண்டமான படகுப் பந்தயக் காட்சியுடன் அமையும் க்ளைமாக்ஸ், கண்டிப்பாகப் பெரிய திரையில் அனுபவிக்கப்பட வேண்டிய ஒன்று. படம் முழுவதும் சூரி மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை உறுதியுடன் தாங்கிப் பிடிக்கிறார்.

முதல் பாதி முழுவதும் கொஞ்சம் போர் அடிக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி படத்தை ஓரளவுக்குக் காப்பாற்றுகிறது. காளி தன் கடந்த காலத்தைச் சொல்லும் காட்சிகள், புலியுடனான நட்பு, சத்யராஜ் கதாபாத்திரம் ஆகியவை நன்றாக வொர்க்-அவுட் ஆகியுள்ளது. மஹிமா உடனான காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன. க்ளைமாக்ஸில் வரும் படகுப் போட்டி காட்சிகள் விறுவிறுப்பாகவும், எமோஷனலாகவும் எடுக்கப்பட்டுள்ளன. படத்திற்கு இரண்டாம் பாதியும், படகுப் போட்டிகளும்தான் முக்கிய பலம்.

மொத்தத்தில் இந்த ‘மண்டாடி’ படகு மன்னன்

ஹைக்கூ திரைப்பட டீசர்!

கன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில், சித்துகுமார் இசையில் உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டீசரை ரொமாண்டிக் ஸ்டார் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டார்.

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீசரை ரொமாண்டிக் ஹீரோ ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். கண்ணைக் கவரும் பிரமாண்டமான காட்சியமைப்புகள், இளமைத் துள்ளல் நிறைந்த தருணங்கள் மற்றும் ரசிக்க வைக்கும் காதல் உணர்வுகளுடன், புத்துணர்ச்சியான ஒரு காதல் உலகத்தை இந்த டீசர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த அழகான கதையில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரியும், உணர்வுப்பூர்வமான நடிப்பும் டீசரின் சிறப்பம்சங்களில் ஒன்று. ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் தனது இயல்பான மற்றும் கிராமத்து கதாபாத்திர நடிப்பால் பாராட்டைப் பெற்ற ஏகன், இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், நவீனமான, கூலான மற்றும் அப்பாவித்தனம் நிறைந்த இளைஞராக நடித்துள்ளார். அவருக்கு இணையாக ஸ்ரீதேவியும், ஃபெமினா ஜார்ஜூம் தங்களது அழகான நடிப்பால் கவனம் ஈர்க்கின்றனர். இவர்களுக்கிடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி டீசரின் இனிமையான தருணங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது. மேலும், டீசரின் ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டும் விதமாக ஃபெமினா ஜார்ஜ் வருகிறார். குறுகிய நேரமே தோன்றினாலும், தனது அழுத்தமான தோற்றத்தின் மூலம் உடனடியாக கவனம் ஈர்க்கிறார்.

‘ஹைக்கூ’ படத்தின் காதல் உணர்வுகளுக்கு சித்து குமாரின் இசை கூடுதல் உயிர் கொடுக்கிறது. குறிப்பாக, கிளாசிக்கல் ராகங்களுடன் இணைந்த மென்மையான வயலின் இசையும், நவீன ஃபியூஷன் இசையும் டீசரின் இதமான காட்சியமைப்புடன் அழகாகப் பொருந்துகின்றன. அவரது பின்னணி இசை, டீசருக்கு மயக்கும் இசை அனுபவத்தை வழங்குகிறது. குறுகிய நேரத்தில், பார்வையாளர்களை ஒரு வண்ணமயமான காதல் உலகிற்குள் அழைத்துச் செல்லும் அனுபவத்தை டீசர் உருவாக்குகிறது. எழுத்தாளர் மற்றும் இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் புதுமையான திரை அணுகுமுறை, அனைவருக்கும் பரிச்சயமான காதல் உணர்வுகளை புத்துணர்ச்சியுடன் தருகிறது.

காதல் கதைகள் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனி கவனம் பெற்று வரும் நிலையில், ‘ஹைக்கூ’ டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.  இளம் நடிகர்கள், வண்ணமயமான காட்சிகள், மனதை வருடும் இசை மற்றும் புத்துணர்ச்சியான திரை அணுகுமுறை ஆகியவற்றுடன், இந்தப் படம் காதல் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம், படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே கைப்பற்றியுள்ளது. படத்தின் புதுமையான கதை மற்றும் தனித்துவமான திரை அணுகுமுறை ஓடிடி தளத்தின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, இந்த டிஜிட்டல் உரிமை கணிசமான தொகைக்கு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை டாக்டர் டி. அருளானந்து மற்றும் மாத்யூ அருளானந்து ஆகியோர் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். பிரேம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

காதல் உலகத்தின் அழகிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் வெளியாகியுள்ள டீசரை தொடர்ந்து, ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏஜிஎஸ் 29 படம் பூஜையுடன் தொடங்கியது

பிளாஸ்ட் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’ ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக், அருள் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரில்லராக நகைச்சுவை மற்றும் இதர அம்சங்களுடன் உருவாகவுள்ள ‘ஏஜிஎஸ் 29’ தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியது.


கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை இதற்கு முன்னர் இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’ என்று அழைக்கப்படும் இந்த படத்தில் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் அருள் தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன், “தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியிலேயே அமர வைக்கும் விறுவிறுப்பான அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இது அமையும். அதே சமயம், நகைச்சுவை போன்ற இதர சுவாரஸ்யமான அம்சங்களும் சரியான அளவில் இடம்பெறும். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இப்படத்தை இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்று தெரிவித்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும். இந்த திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றுகின்றனர்.

‘கேஜிஎஃப்’ மற்றும் சமீபத்திய ‘பிளாஸ்ட்’ படங்கள் மூலம் பிரபலமான ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்; பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை ஃபீனிக்ஸ் பிரபு இயக்க, தினேஷ் மனோகரன், பல்லவி சிங் மற்றும் செல்வி தங்கராஜ் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளர்களாகவும், டூனி ஜான் விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியா மோகன், யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’ படத்தின் பூஜை (செப்டம்பர் 6) நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு நாளை 10ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

அப்போலோ மருத்துவமனை சாதனை!!

சென்னை:

சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, முழுமையான மற்றும் பகுதி மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகள், மற்றும் முழுமையான இடுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவியுடனான (Robotic-assisted) எலும்பியல் அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இந்த மைல்கல், தொழில்நுட்பம் சார்ந்த மூட்டு மாற்று சிகிச்சையில் மருத்துவமனையின் பயணத்தில் ஒரு முக்கிய படியைக் குறிப்பதுடன், நவீன அறுவைசிகிச்சை அமைப்புகளை மருத்துவ நிபுணத்துவத்துடன் ஒருங்கிணைப்பதில் அதன் வளர்ந்து வரும் அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு நோயாளியின் தேவைக்கேற்ப மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகளைத் துல்லியமாகச் செய்ய, ஸ்ட்ரைக்கரின் Mako® SmartRobotics™ தொழில்நுட்பம், 3D CT ஸ்கேன் இமேஜிங் மற்றும் அறுவைசிகிச்சைக்கு முந்தைய விரிவான திட்டமிடல் ஆகியவற்றை இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கிறது. இந்த தொழில்நுட்பம் நோயாளியின் உடல் அமைப்பு பற்றிய விரிவான தகவல்களை மருத்துவர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப அறுவைசிகிச்சையைத் திட்டமிட்டுச் செய்ய முடிகிறது. அறுவை சிகிச்சைக்கு முந்தைய திட்டத்தை செயல்படுத்துவதில் ரோபோடிக் கை உதவினாலும், சிகிச்சை முடிவுகளும் அறுவை சிகிச்சை தொடர்பான தீர்மானங்களும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரிடமே இருக்கும்.

முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு, ரோபோ உதவியைப் பயன்படுத்துவது மிகக்குறைந்த அளவு கீறல்களைக் கொண்ட அறுவை சிகிச்சை முறைக்கு உதவுவதோடு, ஒட்டுமொத்தமாக சிறந்த சீரமைப்பு மற்றும் துல்லியம், விரைவாக குணமடைதல் மற்றும் பொருத்தப்படும் சாதனங்களின் மேம்பட்ட ஆயுட்காலம் உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறவும் பங்களிக்கும். அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு, குறிப்பாக சிக்கலான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளைக் கையாளும் போது, உடற்கூறியலை மதிப்பிடவும், எலும்பைத் தயார்படுத்துவதைத் திட்டமிடவும், மற்றும் அறுவை சிகிச்சையின் போது சீரான தன்மையைப் பராமரிக்கவும் இந்தத் தொழில்நுட்பம் கூடுதல் கருவிகளை வழங்குகிறது.

இந்தச் சாதனையின் ஒரு பகுதியாக, முதுநிலை எலும்பியல் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர்களான டாக்டர் அருண் கண்ணன், டாக்டர் கோர்னாட் கோசிகன், டாக்டர் குணால் பட்டேல், டாக்டர் நாவலடி சங்கர், டாக்டர் விஜய் கிஷோர் ரெட்டி மற்றும் டாக்டர் மதன் திருவேங்கடம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ரோபோடிக் உதவியுடனான மூட்டு மாற்று அறுவைசிகிச்சையின் பரிணாம வளர்ச்சி மற்றும் மிகவும் துல்லியமான, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை வழங்குவதில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து அவர்கள் விளக்கினர்.

அப்போலோ மருத்துவமனையின் (கிரீம்ஸ் சாலை) முதுநிலை எலும்பியல் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் கண்ணன் தனது சிறப்புரையில் கூறியதாவது: “2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகளைக் கடந்திருப்பது எங்கள் குழுவிற்கு ஒரு பெரிய மைல்கல்லாகும். ரோபோடிக் மூட்டு மாற்று சிகிச்சையில் பல ஆண்டுகளாக நாங்கள் பெற்றுள்ள அனுபவத்தை இது காட்டுகிறது. சிக்கலான பல சிகிச்சைகள் உட்பட, நாங்கள் செய்துள்ள பல்வேறு வகையான மூட்டு மற்றும் இடுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் இந்தச் சாதனையை மிகவும் சிறப்பானதாக ஆக்குகின்றன. ஒவ்வொரு நோயாளிக்கும் ரோபோடிக் உதவியை எந்த அளவுக்கு, எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்ள இந்த அனுபவம் எங்களுக்கு உதவியுள்ளது. இனி வருங்காலங்களில் இந்த நிபுணத்துவத்தை மென்மேலும் வளர்த்து, எலும்பியல் சிகிச்சையில் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவோம். நோயாளிகளுக்குப் பாதுகாப்பான, துல்லியமான மற்றும் சிறந்த சிகிச்சையை வழங்குவதில் எங்கள் கவனம் தொடரும்.”

இந்நிகழ்ச்சியில் பேசிய அப்போலோ மருத்துவமனைகளின் (சென்னை மண்டலம்) தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் காளியமூர்த்தி கூறியதாவது: “மருத்துவ சிகிச்சைகளில் தொழில்நுட்பத்தின் அர்த்தமுள்ள முன்னேற்றங்களைக் கொண்டு வருவதில் அப்போலோ மருத்துவமனையின் தொடர்ச்சியான கவனத்தை இந்த மைல்கல் பிரதிபலிக்கிறது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் சிறப்பான பராமரிப்புச் சூழல் ஆகியவற்றை ஒன்றிணைப்பதே எங்கள் அணுகுமுறையின் பலமாகும். எங்கள் திறன்களை நாங்கள் விரிவுபடுத்தும் அதே வேளையில், நோயாளிகளின் பராமரிப்பிற்கு மதிப்பு சேர்க்கும் மற்றும் சிறந்த அறுவைசிகிச்சை முடிவுகளை வழங்குவதில் எங்கள் மருத்துவர்களுக்கு ஆதரவளிக்கும் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதில் எங்கள் கவனம் தொடர்ந்து இருக்கும்.”

இந்தச் சாதனை, பல்வேறு மருத்துவத் துறைகளில் ரோபோடிக் உதவியுடன் அறுவைசிகிச்சை செய்வதில் அப்போலோ மருத்துவமனை பெற்றுள்ள பரந்த அனுபவத்தின் ஒரு பகுதியாகும். பிப்ரவரி 2026-ல், அப்போலோ மருத்துவமனை 8,000 ரோபோடிக் அறுவைசிகிச்சைகளைக் கடந்ததாக அறிவித்தது. இது மேம்பட்ட அறுவைசிகிச்சைத் திறன்களில் அப்போலோவின் நீண்டகால முதலீட்டை எடுத்துக்காட்டுகிறது. கிரீம்ஸ் சாலை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் எலும்பியல் சிகிச்சைகள், தொழில்நுட்பம் சார்ந்த மூட்டு மற்றும் இடுப்பு மாற்றுச் சிகிச்சைகளில் அப்போலோவின் நிபுணத்துவத்தை மேலும் வலுவாக்குகின்றன.

Launched MSOCK

Chennai:

Intellect Design Arena Ltd a global leader in AI-First, enterprise-grade financial technology, today announced the launch of MSOCK — Multidimensional Multilayer System of Connected Knowledge, an AI-native engineering system designed to address one of the biggest barriers to enterprise AI adoption: AI can generate code, but it does not inherently understand the enterprise it is being asked to change. Intellect has filed 39 patents relating to MSOCK technology and is launching the technology to the world for the first time on September 9, 2026, at Global FinTech Fest 2026.

MSOCK introduces a new enterprise knowledge infrastructure that makes institutional knowledge connected, computable and visual, enabling AI to understand the relationships across business, operations, compliance and technology before it acts. MSOCK marks Intellect’s shift from coding-led software engineering to cognitive engineering, where transformation begins with understanding business intent, institutional knowledge and architectural dependencies, not writing code. Despite investments in foundation models, copilots, agents and AI-enabled pipelines, transformation timelines have not reduced proportionately because, as Arun Jain states, “AI knows the world. It doesn’t know your bank.” Knowledge remains fragmented across codebases, databases, APIs, documents and institutional memory, leaving AI unable to inherently understand why a transaction rule exists, which customer journeys depend on a legacy service, what a change means or which downstream systems it could affect.

MSOCK provides this context so changes can be assessed and executed under governance. Designed to complement and not replace existing AI investments, it is foundational knowledge infrastructure rather than another copilot or AI wrapper. Built for banks, financial institutions, FinTech product companies, GCCs, capital markets firms, financial advisories and insurance carriers, it also reflects India’s shift from three decades of engineering-led software delivery to cognitive architecture as generative AI produces code in seconds. This is particularly important in regulated, interconnected and mission-critical financial environments, where small changes can affect customer journeys, products, operations and regulatory obligations. Intellect’s three-week challenge will demonstrate how MSOCK maps these dependencies and identifies the precise blast radius before code is modified.

Making Enterprise Knowledge Computable MSOCK addresses this problem by creating a connected, evidence-backed representation of an enterprise’s software estate — from business rules and processes down to APIs and code. The underlying principle draws from a fundamental shift that transformed enterprise computing five decades ago. Relational Database Management Systems made fragmented enterprise data structured and queryable. MSOCK applies a similar principle to enterprise knowledge, making it connected and computable for the AI era. MSOCK connects knowledge spanning business, operations, compliance and technology, linking products, processes, policies, APIs and code through a 21-dimensional Enterprise Spatial Graph. It organises these assets into Connected Knowledge Units, providing AI systems with the enterprise context and architectural ground truth required to reason and act with greater precision.

Five Layers from Understanding to Governed Action MSOCK combines five connected capabilities that take enterprise engineering from understanding to governed execution: SOCK — System of Connected Knowledge: Connects business rules and processes to implementation and code through an evidence-backed view of the software estate.

21-Dimensional Enterprise Spatial Graph: Visualises the enterprise across business journeys, processes, applications, APIs and implementation evidence. Precise Blast Radius: Identifies what a proposed change or failure could affect, the dependencies involved and the confidence of the assessment. Four Engineering Machines: Applies reusable intelligence to BUILD, RUN, CHANGE and MODERNISE on a common knowledge foundation. Command Centre: Enables oversight, control and compliance for near-autonomous engineering.

Keep Your Agents. Keep Your AI-DLC. Add MSOCK. Banks can retain their foundation models, copilots, AI agents, engineering tools and AI-DLC pipelines. MSOCK provides the missing knowledge infrastructure beneath these investments, feeding them the architectural and enterprise context required to operate on mission-critical systems.

Arun Jain, Founder & Chairman, Intellect Design Arena and Chief Architect, Purple Fabric, said:

“Over the last several months, our Applied AI Research Lab has been examining a fundamental question: if AI can write code, why hasn’t an eleven-month transformation become a six-month transformation? The answer is understanding. AI is extraordinarily capable, but it does not inherently understand the enterprise — why a rule exists, what depends on a service, or what could break when something changes.

MSOCK was built to solve that problem. Just as RDBMS made enterprise data structured and queryable, MSOCK makes enterprise knowledge connected and computable. It gives AI the context to understand before it acts. This is the foundation for moving from coding-led engineering to cognitive engineering, and ultimately towards truly AI-native enterprise transformation.”

A Three-Week Open Challenge: As part of the launch, Intellect is issuing an open challenge to financial institutions. Organisations can bring one of their complex application modules to Intellect. Within three weeks, MSOCK will map the application and its connected knowledge, enabling the institution to ask one of the most consequential questions in enterprise technology: “If I change this, what exactly will break?”

For Intellect, MSOCK represents a shift in the foundational architecture required for the AI era: RDBMS connected applications to data; MSOCK connects AI to enterprise knowledge.

பொள்ளாச்சியில் புதிய சித்தா மருத்துவமனை!

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சித்தா மருத்துவர்களுக்கான நோயாளிகள் பகுதி கட்டடம் திறக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் கட்டடத்தை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட பேட்டரி கார் அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும், தனியார் நிறுவனம் சார்பில் பொள்ளாச்சியில் அமைக்கப்பட்ட காந்தி சிலை, ரேக்ளா சிலை மற்றும் தென்னை மரம் சிலைகளையும் அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார்.

நமது நிருபர் P.பிரேமா

நிர்வாணமாக்கி ரசித்த கிளி ஜோசியர்!

லங்​கையை பூர்வி​க​மாகக் கொண்ட 37 வயது பெண் ஒரு​வர் கனடா நாட்​டின் குடி​யுரிமை பெற்று அங்கு வசித்து வரு​கிறார். இவர், சென்​னை​யில் உள்ள ஒரு பிரபல தனி​யார் தொலைக்​காட்​சி​யில் நடை​பெற்ற பாட்​டுப்​போட்​டி​யில் கலந்து கொள்ள சில மாதங்​களுக்கு முன்பு சென்னை வந்​தார். அப்​போது அவர், பெசன்ட் நகர் கடற்​கரைக்​குச் சென்​ற​போது, அங்கு கிளி ஜோசி​யம் பார்த்து வந்த தென்​காசி​யைச் சேர்ந்த இசக்கி முத்து (48) என்​பவரிடம் ஜோசி​யம் பார்த்​துள்​ளார்.

அவர் அந்​தப் பெண்​ணின் கடந்த கால வாழ்க்​கையை சரி​யாகக் கணித்​துக் கூறிய​தால், ஜோசி​யர் மீது அந்​தப் பெண்​ணுக்கு நம்​பிக்கை ஏற்​பட்​டது. இதற்​காக முதல்​கட்​ட​மாக ரூ.20 ஆயிரம் கட்​ட​ண​மாகக் கொடுத்​துள்​ளார். இதை தனக்கு சாதக​மாகப் பயன்​படுத்​திக் கொண்ட ஜோசி​யர், பரி​கார பூஜைகள் செய்​தால் வாழ்க்​கை​யில் மேலும் உயரலாம் என ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார். மேலும், தோஷம் நீங்க நிர்​வாண பூஜை செய்ய வேண்​டும் என்​றும் வற்​புறுத்​தி​யுள்​ளார். அதை நம்​பிய அந்​தப் பெண், தனது தங்​கும் அறை​யில் இருந்​த​வாறே நிர்​வாண பூஜை செய்ய, அதை ஜோசி​யர் தனது செல்​போன் வீடியோ காலில் கண்டுகளித்​துள்​ளார். இதற்கு கட்​ட​ண​மாக ரூ.70 ஆயிரத்​தை​யும் பெற்​றுக்​கொண்​டார்.

மீண்டும் சென்னைக்கு வந்த செய்தியை அறிந்த கேடி கிளி ஜோதிடர் அந்​தப் பெண்​ணைத் தொடர்பு கொண்​டு, “பூஜை செய்ய வேண்​டும், உன்​னுடைய நிர்​வாண புகைப்​படங்​களை அனுப்​பு” எனக் கேட்டு பெற்​றுள்​ளார். பின்​னர், தனக்கு ரூ.1 லட்​சம் பணம் தர வேண்​டும் என்​றும், தங்​கும் அறைக்கு வந்து செல்ல வேண்​டும் என்​றும் மிரட்​டி​யுள்​ளார். அதற்கு அந்த பெண் மறுக்​கவே, புகைப்​படங்​களை சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு விடு​வ​தாகக் கூறி மிரட்​டல் விடுத்​துள்​ளார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த அந்​தப் பெண், தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​பேரில் வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார், தென்​காசி சென்று கிளி ஜோசி​யர் இசக்கி முத்​துவை நேற்​று முன்​தினம்​ இரவு கைது செய்​தனர்​.

 

கே என் நேரு வருமான ரெய்டு! அவரே விளக்கம்

திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கே.என். நேரு பேசியதாவது, “டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு வீட்டில் சோதனை நடத்துவதாகக் கூறினர். திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய வீடுகள், எனது சகோதரரின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

இருப்பினும், முறைகேடு நடந்ததாக எந்த ஆவணமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அலுவலகம் சார்ந்த குறிப்பையும், சகோதரர் வைத்திருந்த வரவு – செலவுக் கணக்கு குறிப்பை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அவர்கள் எடுத்துச் சென்ற பொருள்கள் தொடர்பாக ஆவணங்களில் கையெழுத்து வாங்கிச் சென்றனர். காலை 8 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரையில் சோதனை நடத்தினர்.

அவர்களுக்கான முழு ஒத்துழைப்பை நாங்கள் வழங்கினோம். நீதிமன்றத்தில் ஏற்கெனவே அமலாக்கத் துறை வழக்கு இருப்பதால், புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்கு குறித்து எதுவும் விசாரிக்கவில்லை.

அரசும் காவல்துறையும் சோதனை நடத்த அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறலாம். ஆனால், அரசியல்ரீதியாக பார்க்கும்போது, எங்களை மிரட்டி வைப்பதற்காக நடந்திருக்கலாம். இது பழிவாங்கும் நடவடிக்கைதான்”

என்று தெரிவித்தார்.