டிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், வருமையில் சிக்கித்தவிக்கும் நாயகன் வெற்றி திருடுகிறார். வேலை கிடைக்கும் வரை அதையே தொழிலாக வைத்துக்கொண்டு பயணிக்கும் அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை குற்றவாளியாகிறார். வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தன் குற்றத்திற்கான தண்டனையாக இருந்தாலும், அதன் மூலம் தனக்கான நீதி மறுக்கப்பட்டிருக்கும் வாதத்தை வெற்றி முன் வைக்கிறார். அவரது வாதம் சரியா? தவறா? என்பதே கதை…

இறுக்கமான மனநிலையோடு இருந்தாலும், தனது கருத்துகளை தெளிவாக எடுத்துக்கூறும் வெற்றி, படம் முழுவதும் பேசிக்கொண்டு இருந்தாலும், அந்த காட்சிகளை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

நாயகியாக வருகிறார் பிரிகிடா சகா. மூக்கும் முழியுமாக சிரிக்கும் கண்களுடன் அந்த கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக வருகிறார்.காதல் காட்சிகளிலும் கடைசியில் ஒரே ஒரு திருட்டு என்று கணவனைத் திசை மாற்றுவதிலும் என்று தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

வெற்றியின் நண்பராக வரும் லொள்ளு சபா மாறன், அம்மாவாக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்‌ஷ்மிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி, வெற்றியைத் தூக்கிலிடும் ‘ஹேங்மேன்’ பணி செய்பவராக வரும் சுப்பிரமணியம் சிவா, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோர் தங்களது எல்லை தாண்டாத நடிப்பின் மூலம் ஈர்க்கிறார்கள்.

தர்புகா சிவாவின் இசையும், பாடல் வரிகளும்கதையின் தன்மை உணர்த்தும் வகையில் உள்ளன. முதல் பாதியில் நிறைய பேசிக் கொண்டிருப்பதாக தோன்றினாலும் அந்த சலிப்பு தெரியாத அளவிற்கு சரளமாகப் படத்தொகுப்பு செய்துள்ளார்படத்தொகுப்பாளர் பூபதி வேதகிரி.

சிறைச்சாலையில் உள்ள காவல்துறை அதிகாரியாக வருகிறார் ரங்கராஜ் பாண்டே.கண்டிப்பும் அதே நேரம் கருத்துகளைக் கவனிக்கிற நுண்ணுணர்வும் கொண்டவராக வருகிறார்.தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்த அவர் இதில் கைதியுடன் ஆன கருத்து மோதலில் தனது பாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

மைனஸ்: படத்தில் ரெட்டியார் என்ற சமூக பெயர் எதற்கு? என்றே தோணுகிறது….. கதையில் கூடுதல் கவனம் தேவை…

மொத்தத்தில் இந்த ‘லக்‌ஷ்மி காந்தன் கொலை வழக்கு’ மனித துடிப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here