டத்துக்குளத்தில் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர், வருங்கால தமிழக முதலமைச்சர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கிணங்க, கழக தலைமை நிலைய செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி கொறடா, முன்னாள் அமைச்சர் மாண்புமிகு எஸ்.பி. வேலுமணி அவர்களின் வழிகாட்டுதல்படி, கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து, மடத்துக்குளம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட கழக செயலாளர், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு மடத்துக்குளம் மகேந்திரன் அவர்கள் தலைமையிலும், அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.சண்முகவேலு அவர்கள், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் திரு விஜயராகவன் அவர்கள், மாவட்ட பொதுச்செயலாளர் திரு வடுகநாதன் அவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் முன்னிலையில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அஇஅதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, நகரக் கழக, பேரூர் கழக செயலாளர்கள் – நிர்வாகிகள்; சார்பு அணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் – நிர்வாகிகள்; கிளைக் கழக, வார்டு கழக செயலாளர்கள் – நிர்வாகிகள்; முன்னாள் – இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here