2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேநேரத்தில், 2025 வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போது, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், ரூ.75,000 நிலையான கழிப்பைக் கணக்கில் கொண்டால், ரூ.12.75 லட்சம் வரை மொத்த வருமானம் பெறுவோருக்கு வருமான வரி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்ஜெட்டில் வரி விதிப்பு மற்றும் சலுகைகளின் எதிரொலியாக விலை குறையும் பொருட்கள்:
-
17 புற்றுநோய் மருந்துகள்
-
மின்சார வாகன பேட்டரிகள்
-
விளையாட்டு உபகரணங்கள்
-
சோலார் பேனல்கள்
-
ஸ்மார்ட் போன்கள்
-
தோல் உபகரணங்கள்
-
மைக்ரோவேவ் ஓவன்கள்
-
லித்தியம் பேட்டரி பாகங்கள்
-
சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள்
-
7 உயிர்காக்கும் மருந்துகள்
-
நீரிழிவு தொடர்பான மருந்துகள்
-
வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்
-
வெளிநாட்டு கல்வி
-
மதுபான கழிவுகள்
-
காலணி பாகங்கள் ஏற்றுமதி
-
மைக்ரோவேவ் ஓவன்
-
தோல் ஏற்றுமதி
எவற்றின் விலை அதிகமாகும்?
-
சிகரெட்
-
பீடி
-
பான் மசாலா
-
குட்கா
-
இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள்
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர் வெளியிட்ட அறிவிப்புகள்…
“12 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பதவியேற்றதில் இருந்து ஸ்திரத்தன்மை, நிதி ஒழுக்கம், நீடித்த வளர்ச்சி, மிதமான பணவீக்கம் ஆகியவற்றைக் கொண்டதாக நாட்டின் பொருளாதாரப் பாதை வகைப்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமற்ற மற்றும் இடையூறான காலங்களில்கூட நாங்கள் எடுத்த விவேகமான முடிவுகளின் விளைவால் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் உள்ளது” என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
நிர்மலா சீதாராமன்:
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் நிலைநிறுத்தவும், ஆறு விஷயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை நான் முன்மொழிகிறேன். அவை:
-
ஏழு முக்கியத் துறைகளில் உற்பத்தியை அதிகரித்தல்
-
பாரம்பரிய தொழில் துறைகளுக்கு புத்துயிர் ஊட்டுதல்
-
வெற்றிகரமான சிறு, குறு, நடுத்தர தொழில்களை (MSME) உருவாக்குதல்
-
உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல்
-
நீண்டகால பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல்
-
நகர பொருளாதாரப் பகுதிகளை உருவாக்குதல்

















