திருப்பூர் மாவட்டம் உடுமலை முக்கோணத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் C.மகேந்திரன் MLA அவர்கள் சிறப்புரையாற்றினார்.
 
அவர் கூறுகையில்:
 
கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் மாண்புமிகு டாக்டர் எடப்பாடி யார் அவர்களின் ஆணைப்படி கழக தலைமை நிலைய செயலாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு எஸ் பி வேலுமணி அவர்களின் வழிகாட்டுதல் படி இன்று உடுமலை வடக்கு ஒன்றியம் இ ராகுல் பாவி ஊராட்சி முக்கோணத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C. மகேந்திரன் MA, MLA. அவர்கள் விழாவில் ஏழை எளிய மக்களுக்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கேந்திரா வித்யாலயா பள்ளி உடுமலையில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாகவும், அதற்காக அவர் சொந்த நிலத்தை ஐந்து ஏக்கர் தானமாக கொடுத்துள்ளதாகவும் எழுச்சி பொங்க கூறினார்.
 
நிகழ்ச்சியில் உடுமலை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இரா செழியன் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். தலைமை கழக பேச்சாளர் திருமதி சிங்கை எம் அம்புஜம் அவர்கள் சிறப்புரையாற்றினார். வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு M. S. காளீஸ்வரன் அவர்கள் நன்றி உரையாற்றினார். மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நகர கழக பேரூர் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
 
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here