இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், சாயாதேவி, எம் எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘பரமசிவன் பாத்திமா’
விமர்சனம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் மதத்தால் மூன்று ஊர்களுக்கும் பிரிவினை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு ஊரின் பெயர் சுப்ரமணியபுரம், மற்றோரு ஊரின் பெயர் யாக்கோபுரம், இன்னொரு ஊரின் பெயர் சுல்தான் பேட்டை. சுப்ரமணியபுரம் இந்துக்கள் வழிபடும் ஊராகவும், யாக்கோபுரம் கிறிஸ்தவர்கள் வழிபடும் ஊராகவும், சுல்தான் பேட்டை இஸ்லாமியர்கள் வழிபடும் ஊராகவும் இருக்கிறது. இதில் விமல் மற்றும் சாயாதேவி இருவரும் இரு இளைஞர்களை கொலை செய்து விடுகின்றனர். அதோடு மேலும் சில கொலைகள் செய்ய முயற்சி செய்கின்றனர். இந்த கொலை வழக்குகளை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் வருகிறார். யார்? கொலையாளி என காவல்துறையினர் திணறுகின்றனர். விமலும் சாயாதேவியும் இணைந்து எதற்கு கொலை செய்தார்கள் என்பதே கதை….
விமல் கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயாதேவியும் கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார். கிறிஸ்தவ தேவாலய பாதரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். இசை ஓகே தான். இந்து மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களை விமர்சிக்கும் வகையிலும், மற்ற மதங்களை குறை சொல்லும் விதமாகவும் திரைக்கதை அமைந்துள்ளது.
மைனஸ்: கதை சொல்ல வந்ததை தெளிவாக சொல்லவில்லை… சில காட்சிகள் மத கலவரத்தை தூண்டும் அளவில் இருக்கிறது.
மொத்தத்தில் இந்த ‘பரமசிவன் பாத்திமா’ மதத்திற்கு வந்த சோதனை…