இயக்குனர் உதயகுமார் இயக்கத்தில் நடிகர் சார்லி, ஜெகன், அடிடி பாலன், சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள உண்மை கதையின் படம் தான் ‘லைன் மேன்’. இந்த படத்தில் சுப்பையா அவர்கள் தூத்துக்குடியில் லைன் மேனாக பணிபுரிகிறார். திருட்டுதனமாக சிலர் மின்சாரம் எடுக்கும் போது அவரது மனைவி ஒயர் மாட்டி இறந்துவிடுகிறார். இதனை பார்த்து மனம் உடையும் நம்ம ஹீரோ செந்தில் எலக்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து தன் அம்மாவுக்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்க கூடாது என எண்ணி மின்சார தானியங்கி கருவியை கண்டுபிடிக்கிறார்.

அந்தக் கருவியை அரசு அங்கீகாரம் பெற பல வழிகளில் முயற்சி செய்கிறார். அனைத்து முயற்சிகளும் தோல்வியடையும் பட்சத்தில் முதலமைச்சரை காண சென்னை வருகிறார். அதுவும் தோல்வியடைய தனது சொந்த ஊருக்கே திரும்பி செல்கிறார். ஊரின் மாவட்ட ஆட்சியாளர் இந்தக் கருவியின் அங்கீகாரம் பெற்று தருவதற்கு தன்னாலான முயற்சி செய்வதாக உறுதி கூறுகிறார். மகிழ்ச்சியில் இருக்கும் சூழ்நிலையில் தந்தை சுப்பையா மின்சாரம் தாக்கி இறந்து விடுகிறார். அந்த வேலை செந்திலுக்கு கிடைக்கிறது. பிறகு கருவிக்கு அரசு அங்கீகாரம் வாங்கினாரா? இல்லையா? என்பதே கதை.

சுப்பையா எதார்த்தமாக நடித்திருக்கிறார். செந்தில் மற்றும் அனைவரும் தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். இசை ஓகே. கதையின் கரு ‘ஒரு தனி மனிதன் கண்டுபிடிப்பு மற்றும் அதை அங்கீகரிப்பதற்கான முயற்சி’ கதையை இன்னும் திருத்தமாக சொல்லியிருக்கலாம்.

இந்த ‘லைன் மேன்’ – கிட்ட போனால் ஒரு முறை மின்சாரம் தாக்கும்.     

ராஜ்குமார்- சினிமா நிருபர் 

#LinemanReview #iruthitheerppucinema #Reviews

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here