பெரம்பூரில் பிரச்சாரம் செய்ய தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து விஜய் இன்று மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தலைமைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர், ஏடிஜிபி, நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பிரச்சாரம் செய்ய தனக்கு அனுமதி மறுக்கப்படுவதற்காக 10 காரணங்களையும் அவர் தனது மனுவில் பட்டியலிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here