கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரிப்பில் மஞ்சள் சினிமாஸ் சார்பில் அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில், ஹரிகிருஷ்ணன், ஷீலா , மாரிமுத்து, ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வேம்பு’

விமர்சனம்:

பள்ளிப் பருவம் தொட்டே சிலம்பம் கற்று வரும் வேம்புவுக்கு மாநில அளவில் ஸ்டேட் லெவல் சாம்பியன் ஆகி அதன் மூலம் அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பது வேம்புவின் கனவு. அதற்காக படிப்பு நேரம் தவிர இடைவிடா தீவிர சிலம்பாட்ட பயிற்சியில் இருக்கிறாள். இந்நிலையில் ஹரிகிருஷ்ணனுக்கும் , ஷீலாவிற்கு திருமண செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள். திடீர் திருமணம் தனது சிலம்ப லட்சியத்துக்கு இடையூறாக வந்து விடுமோ என்று பயப்படும் வேம்பு, தன் கணவனிடம் இது பற்றி பேசுகிறாள்.

அவனும் சிலம்பத்தில் சாதிக்கும் உன் லட்சியத்துக்கு நம் இல்லற வாழ்க்கை ஒருபோதும் இடையூறாக இருக்காது என்று உறுதி அளிக்கிறார் நாயகன். பெரியவர்கள் நிச்சயித்தபடி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஒரு நாள் கோவிலுக்கு சென்று விட்டு ஹரிகிருஷ்ணனும் ஷீலாவும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டு ஹரிகிருஷ்ணனுக்கு கண்பார்வை பறிபோகிறது. பிறகு வேம்புவின் கனவு என்ன ஆனது? நாயகனுக்கு பார்வை மீண்டும் கிடைத்ததா? என்பதே மீதி கதை.

கதை சமூக அக்கறையுடன் பெண்களின் பாதுகாப்பிற்கு தற்காப்புக் கலையைப் பற்றிய அழுத்தமான பதிவு. காதல் கணவராக வரும் ஹரிகிருஷ்ணன் கிராமத்து எதார்த்த மனிதனாக நடிப்பில் வாழ்ந்திருக்கிறார். பார்வையற்ற நிலையிலும் மனைவிக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்.

நாயகியின் தந்தையாக வரும் கர்ணன், மகள் மீதான பாசப்பெருக்கில் ஒரு இயல்பான கிராமத்து தந்தையை நடிப்பில் வார்த்து இருக்கிறார். நாயகி அம்மாவாக ஜானகி, எம்.எல்.ஏ.வாக மாரிமுத்து மனதில் நிற்கிறார்கள். இசை அருமை. கிராமத்து வாடை காட்சியில் வீசுகிறது.

மைனஸ்: கதையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்…. எடிட்டிங் பணியில் கவனம் வேண்டும் அய்யா….

மொத்தத்தில் இந்த ‘வேம்பு’ பெண்களின் தன்னம்பிக்கை…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here