ஜெயவேல் முருகன் இயக்கத்தில் யாக்கை பிலிம்ஸ் – கார்த்திக் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை போபோ சசி. இந்த படத்தில் ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரில்லா, பிரியதர்ஷன், ஹரிபிரியா, சங்கர்நாக் விஜயன், ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் ‘வருணன்

விமர்சனம்:

வடசென்னையின் ஒரு பகுதியில் அய்யாவு, ஜான் இருவரும் தண்ணீர் கேன் வியாபாரிகள். இருவருக்கும் தொழில் போட்டி இருந்தாலும் அவரவர் வடிக்கையாளர்களுக்கு சுமுகமாக தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார்கள். தில்லை மற்றும் மருது ஆகியோர் அய்யாவுவிடம் வேலை பார்த்து வருபவர்கள். ஆனால், ஜானின் பேராசை கொண்ட மனைவி ராணி மற்றும் அவரது மைத்துனர் டப்பா ஆகியோர் எப்படியாவது அய்யாவுவின் தொழிலைச் சரிக்க நேரம் பார்த்து நாசம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் தில்லை மற்றும் மருதுவிடம் அடிக்கடி வம்பிழுக்கின்றனர். அவர்கள் தண்ணீர் கேன்களுக்கு அடியில் சட்டவிரோத சாராயம் விற்று பணக்கார வாழ்க்கையை நடத்த முயற்சிக்கின்றனர். அதே நேரத்தில் ஒரு ஊழல் போலீஸ்காரர் மதுரைவீரன் ஜான் கோஷ்டியை ஆதாரத்துடன் பிடிக்க எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் இரு கோஷ்டி மோதல் துரோகங்கள் மற்றும்  கொலை வரை விரிவடைகிறது. கடைசியில் சண்டை தொடர்ந்ததா? முடிந்ததா? என்பதே கதை….

அய்யாவு கதாபாத்திரத்தில் ராதாரவி ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வழங்கி உள்ளார். ஜான்னாக சரண்ராஜ், தில்லையாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், சிட்டுவாக கேப்ரியேலா, க்னியாக ஹரிப்ரியா, டப்பாவாக ஷங்கர்நாக் விஜயன், மருதுவாக பிரியதர்சன், மதுரைவீரனாக ஜீவா ரவி, ராணியாக மகேஸ்வரி, யாளியாக அர்ஜுனன் கீர்த்திவாசன், ஹைடுவாக ஹைட் கார்டி, ரம்யாவாக கிரண்மாய், கமுதியாக தும்கன் மாரி, துளசி, உட்பட அனைவரும் கதாபாத்திரங்களுக்கு உரிய நடிப்பைத் தந்திருக்கிறார்கள். இப்பொழுது நாம் பயன்படுத்தும் மினரல் வாட்டர் அதை 1995இல் இருந்தே விற்பனை நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. சென்னையில் ஒரு பிரபல ஏரியாவில் ஒரு இரு கோஷ்டிக்குள்ளும் நடக்கும் அடிதடிகளும் பழிவாங்கும் எண்ணங்களுமே இந்தப் படம்.

படத்தை தாங்கிப் பிடிப்பது ராதா ரவியும் சரண்ராஜும்தான். சரண்ராஜ் பாத்திரத்தை பேசுவதற்கு சிரமப்படும் மாற்றுத் திறனாளி போல் அமைத்திருப்பது புதுமை என்று இயக்குனர் ஜெயவேல் முருகன் நினைத்திருக்கிறார். ஆனால் அந்த பாத்திரம் இயக்குனர் நினைத்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை என்றே சொல்லலாம். முத்தையாவின் படத்தொகுப்பு காட்சிகளை கொஞ்சம் விறுவிறுப்பாக்கி இருக்கிறது. படம் காதல், மோதல், அடிதடி, கொலை, துரோகம் என அனைத்தும் வட சென்னையின் வாழ்க்கையின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதையாக இருக்கிறது. “நீரின்றி அமையாது உலகு” என்பது படத்தின் மையக்கருத்தாக உள்ளது.

கதை புதிதாக இல்லை… பாடல்களில் கூடுதல் கவனம் வேண்டும்…. காட்சிகள் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவில்லை……

மொத்தத்தில் இந்த ‘வருணன்’ வற்றிய நீர்.

ராஜ்குமார் (சினிமா நிருபர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here