சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தவெகவின் பொதுக்கூட்டத்திற்குள் மதுபாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா தலைமையில், தவெக பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மதுபாட்டில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அங்கிருந்த தவெக தொண்டர்கள் இதுகுறித்து போலீசிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

















