ராஜ் கமல் பிலிம் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கமல், சிம்பு, நாசர், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், சின்னி ஜெயந்த், வையாபுரி, வடிவுக்கரசி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் தான் ‘தக் லைப்’
விமர்சனம்:
டெல்லியில் கேங்ஸ்டராக இருக்கும் கமலுக்கும் போலீஸுக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் பேப்பர் போடும் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறார். இதனால் அவரது மகனான சிறுவன் சிம்பு ஆதரவின்றி நிற்கிறார். அவருடைய தங்கை சந்திராவும் காணாமல் போகிறார். பின்னர் சிம்பு வை தத்தெடுத்து தன் சொந்த மகன் போல வளர்க்கிறார் கமல். தன் அண்ணன் நாசரின் மகளின் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் கமல். இதனால் தன்னுடைய பொறுப்புகளை சிம்புவிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார். ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன பிறகு தன்னை விட மற்றவர்கள் சிம்புவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கமலுக்கு நெருடுகிறது. இருவருக்கும் இடையே மோதல் தொடங்குகிறது. பிறகு என்ன நடந்தது? என்பதே கதை….
நடிகர் கமல் ஹாசனின் இளவயது தோற்றத்தை டீ-ஏஜிங் மூலம் அட்டகாசமாகத் திரைக்குக் கொண்டுவர, விசில் சத்தம் பறக்கிறது. கமலின் நடிப்பு, சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் அருமை. ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு ஓகே தான். ‘ஜிங்குச்சா’, ‘அஞ்சுவண்ணப் பூவே’ பாடல்கள் கொஞ்சம் கேட்க வைக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ரவுடிகளாக வரும் நாசர், ஜோஜூ ஜார்ஜ், சின்னி ஜெயந்த், வையாபுரி, வடிவுக்கரசி என அனைவருமே அவரது கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.
இயக்குநர் மணிரத்னம் படமென்றால் கதையுடன் இணைந்த உணர்வுப்பூர்வமான காட்சிகள் எங்காவது நம்மை இழுக்கும். ஆனால் இந்த படத்தின் கதை நம்மை விட்டால் போதும் டா சாமி….. என நினைக்க வைக்கிறது. ‘விண்வெளி நாயகா’ பாடல் எதற்கு? என தோணுகிறது. சிம்பு எப்படி இந்த படத்தில் சிக்கினார் என நினைக்க வைக்கிறது. சிம்புவுக்கு கதை, சண்டை காட்சிகள் எதுவும் இந்த படத்தில் ஒர்கவுட் ஆகவில்லை.
ரசிகர்கள் பதிவு: முதல் பாதி ஆக்கம்… இரண்டாம் பாதி தூக்கம்… விண்வெளி நாயகா… உங்களை நம்பி வந்ததற்கு நாங்கள் பரலோகத்திற்கு சென்றிருப்போம் அய்யா… என்று ரசிகர்கள் வேதனையுடன் சமூக வலைத்தளங்களில் படத்தை பற்றி பதிவு செய்து வருகின்றனர். கதையில் கூடுதல் கவனம் செலுத்த மணிரத்தினம் தவறிவிட்டார் என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் இந்த ‘தக் லைப்’ தத்தளிக்கும்…..
#THUGLIFEREVIEW #THUGLIFEMOVIE #THUGLIFEVIMARSANAM #THUGLIFESTORY