மயிலாடுதுறையில் பிறக்கும் கிட்டு (விஜய் ஆண்டனி) இந்திய அரசே திரும்பிப் பார்க்கும் விஷயத்தைச் செய்கிறார். அதாவது, இந்த அரசியல்வாதிகள் செய்த ஊழல்களைப் பொதுமக்கள் அறிய வேண்டும் என்பதற்காக கச்சிதமான பொறிகளை வைக்கிறார். அரசியல்வாதிகளிடமிருந்து ஏமாந்து வருபவர்களின் பணத்தை தன் அறிவு திறமையால் பெற்று தருகிறார். அவர் ஏன் இந்த வேலையை செய்கிறார் அதன் பின்னணி என்ன? என்ன என்பதே கதை….
விஜய் ஆண்டனி, தன் பார்வையின் மூலமாகவே தன் மூளையில் பல விசயங்கள் ஓடிக்கொண்டிருப்பதை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஊழலுக்கு எதிராக தமிழ் சினிமா நிறைய திரைப்படங்களை உருவாக்கிவிட்டது. ஆனால், அக்கதைகள் அன்றைய காலகட்ட அரசியல் சித்தாங்களுடன் கூடிய வெளிப்படையான அநீதிகளைப் பெரிதாக முன்வைக்கவில்லை.
அந்தக்குறைகளை நீக்கி, அப்பட்டமாக இன்றைய இருதுருவ அரசியலை முன்வைத்து மிகப்பெரிய அரசியல் ஆலோசகர்களால் நாடு என்னென்ன நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது என்பதையும் அரசு அதிகாரங்களில் உள்ளவர்களின் ஊழல்களால் தனிமனிதர்கள் சந்திக்கும் அவலமும் காட்சிக்குக் காட்சி சக்தித் திருமகனில் பேசப்பட்டிருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் திருப்தி ரவீந்திராவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
செல் முருகன், கிரண் குமார், ஷோபா விஸ்வநாத், ரியா ஜித்து, வாகை சந்திரசேகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரமும், நடிப்பும் நிறைவு. தோசை மாவுக்கு போடப்படும் ஜி.எஸ்.டி என அரசு திட்டங்களினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதை படம் தெளிவாக சொல்லுகிறது.
மைனஸ்: இரண்டாம் பாதியில் கதை ஓட்டம் குறைவு…. கருத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்…..
மொத்தத்தில் இந்த ‘சக்தித் திருமகன்’ அறிவு நிறைந்தவன்.