புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 604 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் `டிஸ்சார்ஜ்’ ஆனவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து730 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு தற்போது 565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு மாவட்டத்தில் மேலும் ஒருவர் பலியாகினார். இதனால் இறப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.