வ.கவுதமன் இயக்கத்தில் வி.கே. புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘படையாண்ட மாவீரா’. ‘மாவீரா’ என தலைப்பிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் ‘படையாண்ட மாவீரா’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விமர்சனம்:
காடுவெட்டி குரு அவர்களின் உண்மை கதையை எடுத்துரைக்கும் விதமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் காடுவெட்டி குருவின் தாத்தா வெள்ளைக்காரர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறார். அவரது மகனை பட்டாளத்தில் வேலை பார்க்க அனுப்புகிறார். பட்டாளத்தில் வேலை பார்த்து முடிக்க குருவின் தந்தை காடுவெட்டி ஊரில் கவுன்சிலர் ஆகிறார். ஒரு நாள் அவருடைய உறவினருடன் கைகலப்பு உண்டாகிறது. குருவின் தந்தையை கொலை செய்து விடுகின்றனர். தன் தந்தையை கொலை செய்தவர் தலை சூலத்தில் இருக்க வேண்டும் என்று தனது தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறார். கனிம வளங்களை திருடும் அதிகாரிகளிடம் இருந்தும் அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களுக்கு தேவையான நிலத்தை மீட்டுக் கொடுக்கிறார் குரு. இதனால் கோபமுற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் குருவை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சியில் இருந்து குரு தப்பிக்கிறாரா? தனது மக்களுக்கு என்னென்ன நன்மை செய்கிறார்? என்பதே இப்படத்தில் மீதி கதை….
மூன்று தலைமுறைகளாக அனைத்து தரப்பு மக்களுக்காக உழைக்கும் ஒரு வீரரின் கதையே இந்த ‘படையாண்ட மாவீரா’ கதை. வ.கவுதமன் இந்த படத்தில் இயக்கி நடித்திருக்கிறார். காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘படையாண்ட மாவீரா’ படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், இயக்குனர் கவுதமன் பதிலளிக்க சென்னை உரிமையியல் கோர்ட்டு உத்தரவிட்டது. அனைத்து தடையையும் மீறி இந்த படம் வெளியாகியுள்ளது. நடித்த அனைவரும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குருவின் இளமைப் பருவ காட்சிகள் ரசிக்கும் படியாகவும் சிறப்பாகவும் இருந்தது .
மைனஸ்: உண்மை கதையை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம் …. பாடல்களில் கூடுதல் கவனம் தேவை…
மொத்தத்தில் இந்த ‘படையாண்ட மாவீரா’ வீரன்.

















