விருத்தாசலம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக, விருத்தாசலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் ஜங்ஷன் சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், 60. என்பவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ராமலிங்கத்தை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.