தர்ஷன் பிலிம்ஸ் தயாரிப்பில் தேவயானி, விஜித் கண்மணி, இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘நிழற்குடை’
விமர்சனம்:
திரைப்படத்தின் ஆரம்பம் முதியோர் காப்பகத்தில் தொடங்குகிறது. முதியோர் இல்லம் நடத்துபவருக்கு முதல் அமைச்சரிடம் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. உங்கள் முதியோர் இல்லம் முதல் இடம் என்றும் அரசு அறிவித்த உதவித் தொகையும் கிடைக்கும் என்று முதல்வர் கூறுகிறார். பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கு காரணம் தேவயானி தான் என்று உரிமையாளர் கூறுகிறார். இது ஒரு புறம் இருக்க, நிரஞ்சன் – லான்ஸி தம்பதிகளுக்கு இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவிற்கு சென்று வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது இலட்சியமாக இருக்கிறது. இதற்காக இருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். இதன் காரணமாக தங்களது பெண் பிள்ளையை பராமரிக்கும் தாதியராக இளம் பெண் ஒருவரை நியமிக்கிறார்கள். அந்த இளம் பெண் நிலாவை சரியாக பார்க்காமல் அசிங்க வேலையை செய்கிறாள். பிறகு தேவயானி கவனிக்க தொடங்குகிறார். சில நாட்களில் குழந்தை கடத்தப்படுகிறது. கடத்தியது யார்? அதன் பின்னணி என்ன என்பதே கதை….
அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்கும் ஒரு தாயின் கதை தான் படத்தின் கரு. சமூகத்தின் இன்றைய யதார்த்தத்தை திரையில் பிரதிபலிக்க வேண்டும் என்ற இயக்குநரின் நோக்கம் சரி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி, தற்போதைய இளம் தலைமுறை தம்பதியினருக்கு பாடம் எடுக்கும் வகையில் நடித்திருக்கிறார். குழந்தை மீது அவர் காட்டும் அன்பும், அக்கறையும் பணம் சம்பாதிப்பது, வசதியாக வாழ்வது என்றே பயணிக்கும் பெற்றோர்களுகு சவுக்கடியாக உள்ளது. இளம் தம்பதியாக நடித்திருக்கும் விஜித் மற்றும் கண்மணி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா இருவரது நடிப்பும் சிறப்பு.
கதையை இன்னும் அழுத்தமாக சொல்லி பதிய வைத்திருக்கலாம்…. பாடல்களில் கூடுதல் கவனம் வேண்டும்……
மொத்தத்தில் இந்த நிழற்குடையை ஒரு முறை பிடிக்கலாம்.
RAJKUMAR- CINEMA REPORTER