சென்னை: 

தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 50-வது நினைவு தினத்தையொட்டி அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பனை தொழிலாளர் நல வாரிய தலைவர் நாராயணன்,  கார்த்திக் நாராயணன், சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் ஆகியோர் கிண்டியில் உள்ள காமராஜரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்தப் புகைப்படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்திய விடுதலைக்காகப் போராடி இன்னல்களை எதிர்கொண்டு, பின்னாளில் முதலமைச்சராகத் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் தொழில்வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களது நினைவுநாள்! காந்தியப் பாதையிலிருந்து கடைசிவரை விலகாத கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம்!

என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here