சென்னை:

உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் பத்தாவது ஆண்டு பாரதி உலா நிறைவு விழா ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகை ஆசிரியர் கிரிஜா ராகவன் தலைமையில் சென்னையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது.

பத்மபூஷன் விருதாளர் நல்லி குப்புசாமி செட்டிக்கு ‘பாரதி போராளி’ விருதையும் பாரதியின் படைப்புகளை கால வரிசைப்படி தொகுத்த பத்மஸ்ரீ விருதாளர் சீனி விசுவநாதனுக்கு ‘பாரதி பணி வேந்தர்’ விருதினையும் திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்துராமன் வழங்கினார்.

பாரதி உலா பாடல், போட்டி, நடனப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை நல்லி குப்புசாமி செட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் சென்னை ஸ்ரீராம் சமாஜத் தலைவர் ஆடிட்டர் என் ஆர் கே, கலைமாமணி ஜெ.பாலசுப்பிரமணியன், சாயி சங்கரா பஞ்சாபகேசன், தொழிலதிபர் தபம்ஸ் மேகநாதன், டெக்னோ முரளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் பத்மினி பட்டாபிராமன் பொதுச் செயலாளர் உதயம்ராம் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here