S.P. சக்திவேல் இயக்கத்தில், DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS தயாரிப்பில், நடிகர்கள் குணநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, ரெஜின் ரோஸ் மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகயிருக்கும் படம் தான் ‘அலங்கு’
பழங்குடியினச் சிறுவனான தர்மன், தன் தாய்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, காளி என்ற தனது விசுவாசமான நாயுடன் கேரளாவிற்கு பயணம் செய்கிறார். வழியில், அவர் இரக்கமற்ற அரசியல் பிரமுகர்களையும் ஆபத்தான சவால்களையும் சந்திக்கிறார். பிறகு என்னெல்லாம் நடந்தது? என்பதே ஆக்ஷன் கலந்த உண்மை கதை….
தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் SP. சக்திவேல்.
குணநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, ரெஜின் ரோஸ் என அனைவரது நடிப்பும் ஓகே. ஆனால் படத்தில் நாயின் நடிப்பு வேற லெவல் என்றே சொல்லலாம். சிறப்பாக பயிற்சி கொடுத்துள்ளனர்.
இரண்டாம் பாதியில் சில இடங்களில் கதை நீளமாக செல்கிறது….
மொத்தத்தில் இந்த ‘அலங்கு’- பாச உணர்வு….
ராஜ்குமார்- சினிமா நிருபர்