Wednesday, October 7, 2026
Blog

Dorothy Movie Thanks meet

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 
 
தயாரிப்பாளர் அச்சின் ஜெயின், “இந்த படம் சிறந்த அனுபவமாக மாற்றி கொடுத்த ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.
 
ஷபிதா, “கடந்த 16 வருடங்களாக திருநங்கை மற்றும் திருநர் சமூகத்திற்காக வேலை பார்த்து வருகிறோம். நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், நிறைய படங்கள் வந்திருந்தாலும் ‘டோரதி’ எப்போதுமே ஸ்பெஷல். படம் பார்த்து முடித்ததும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டேன். எங்கள் சமூகத்தின் குரலாக இந்தப் படம் உள்ளது. நிஜ வாழ்க்கையிலும் என்னை ஏற்றுக் கொண்டது என் அண்ணிதான். அதனால், ‘டோரதி’ என்னை நெகிழ வைத்தது. திருநங்கைகள் திருமணமே செய்து கொள்ளலாம் என சட்டமே வந்துவிட்டது. அப்படி இருக்கும்போது இந்த படத்தின் கிளைமேக்ஸில் என்ன பிரச்சினை? திருநர் சமூகம் இன்னும் பல உயரத்திற்கு செல்வார்கள். அதற்கு இந்த படமே சாட்சி”.
 
மாளவிகா, “கார்த்தி-ஹீரோ, சுப்பு- ஹீரோயின், ராஜ்- இளையராஜா சார் என கார்த்திக் சுப்புராஜாக இணைந்து ‘டோரதி’ படம் உருவாகியிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். ரிஷிகாந்த், சனந்த் என இரண்டு அற்புதமான நடிகர்களை கார்த்திக் சுப்புராஜ் வெளிக்கொண்டு வந்துள்ளார். எங்களை மதிக்கவில்லை என்றாலும் எங்களை அவமானப்படுத்தாதீர்கள். இந்த வருடம் நமக்கு கிடைத்த பரிசு ‘டோரதி’. நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும். ஊரோரம் புளியமரம் என யுவன் சங்கர் ராஜா கொடுத்த கசப்பான பாடல் அனுபவத்தை அவரது அப்பா இளையராஜா மீனாட்சி, காமாட்சி எனப் பாடல் கொடுத்து நீக்கிவிட்டார். அனைவருக்கும் நன்றி”. 
 
சுபா, “இந்த சமூகத்திற்கான புரட்சிதான் இந்தப் படம். ‘பாம்பே’, ‘காஞ்சனா’, ‘அருவி’ போன்ற படங்களில் திருநர் சமூகத்தை சிறப்பாக காட்டியிருப்பார்கள். ஆனால், ஜென்ஸீ காலத்தில் ‘டோரதி’ பேசியிருக்கும் விஷயம் மிக முக்கியமானது. 2050 வரை சிந்திக்க வைக்கும் படமாக இது வெளியாகியுள்ளது. வியாபார நோக்கத்தில் இல்லாமல் சமூக நோக்கத்தில் இந்தப் படத்தை இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். சனந்த், ரிஷிகாந்த் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. நாம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம்” என்றார். 
 
இயக்குநர் வசந்தபாலன், “ஆணாதிக்கம், மாஸ் என நினைத்து நிறைய தவறான விஷயங்களை சினிமாவில் திணித்து கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் சம்பட்டியில் அடித்தாற்போலதான் ‘டோரதி’ வந்திருக்கிறது. ரோமியோ-ஜூலியட் போல ‘டோரதி’யும் அற்புதமான காதல் படம். இந்தப் படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்க வேண்டும். ஒளிப்பதிவு படத்தின் பலம். ராஜா சார் தன் இசையால் இந்தப் படத்தை ஆசீர்வதித்திருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”. 
 
இயக்குநர் சசி, ” நான் ஒரு தமிழ் சினிமா இயக்குநர் என்பதில் பெருமை. அதற்கு காரணம் ‘டோரதி’. மூன்றாம் பாலினத்தவருக்காக ஒரு படம் செய்ய வேண்டும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முன்வந்திருப்பது பெரிய விஷயம். இன்னும் பெரிதாக அவர் ஜெயிக்க வேண்டும்”. 
 
இயக்குநர் லிங்குசாமி, “பேரன்பும் தைரியமும் கொண்ட ஒருவரால் தான் இந்த ‘டோரதி’ மாதிரியான படம் எடுக்க முடியும். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு அது இருக்கிறது. இரண்டு முறை இந்த படம் பார்த்தேன். பேரன்போடு இந்தப் படம் எடுத்த கார்த்தியை வாழ்நாள் முழுக்க கொண்டாடலாம். ராஜா சாரின் இசை இந்தப் படத்திற்கு பெரும் பலம். ரஜினி- கமல் போல ரிஷி- சனந்த். வாழ்த்துக்கள்”. 
 
இயக்குநர் மிஷ்கின், “‘டோரதி’ திரைப்படம் மூலம் திருநர் சமூகத்தை மிக உயர்ந்த இடத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் எடுத்து சென்றுள்ளார். சீர்கெட்ட சமூகத்தை ‘டோரதி’ மூலம் தூக்கி நிறுத்தியுள்ளார். வசூலை தாண்டி சிறந்த படமாக இது காலத்திற்கும் நிற்கும். இளையராஜாவை அடுத்து நான் கார்த்தி காலில்தான் விழ வேண்டும். இந்த படத்தையும் விமர்சனம் செய்ய வேண்டும். நம் எல்லோரையும் விட வாழ்க்கையை நன்கு புரிந்தவர்கள் திருநங்கைகள். சகிப்புத்தன்மையை இந்தப் படம் நமக்கு சொல்லி தருகிறது. காதுகள் இருப்பது இளையராஜா இசை கேட்க, கண்கள் இருப்பது டோரதி போன்ற படங்கள் பார்க்க. கடைசி விவசாயி, கொட்டுக்காளி படங்களை விட 100 மடங்கு சிறப்பான படம் டோரதி. மாஸ் ஹீரோ டெம்ப்ளேட்டை உடைத்து ரிஷி, சனந்த் பெரிய ஹீரோவாகி இருக்கிறார்கள். பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. கீர்த்தி இந்தப் படத்தின் உயிர். நன்றி”. 
 
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, சக்திவேலன், “டோரதி படத்தின் வெற்றி விழாவை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இந்த படத்தின் மீது பல கருத்து வன்முறைகள் படம் பார்க்காமலேயே ஆரம்பத்தில் கட்டவிழ்க்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் இந்த வார இறுதியில் முதலிடம் பிடிக்கும். பல மாதங்கி, மரகதமணி, மீனாட்சி கொடுத்த ஆசீர்வாதம்தான் இது. ரிஷி, சனந்த் என இரு திறமையாளர்களை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நானும் ஒரு பங்கு என்பதில் மகிழ்ச்சி”. 
 
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ” சினிமா வலுவான ஆயுதம். மக்கள் மனதை மாற்றும் சக்தி கொண்டது. திருநர் சமூகத்தை இதுநாள் வரை பார்த்த பார்வையை இந்த படம் நிச்சயம் மாற்றும் என பலர் என்னிடம் சொன்னார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றி என கருதுகிறேன். என்னுடைய தனிப்பட்ட வெற்றியாகவும் பார்க்கிறேன். எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம் ராஜா சார் இசை. படத்தின் இன்னொரு ஹீரோ திரு சார். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நிர்வாகிகள் மத்தியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு இந்த வருடம் சென்னை போரூர் அருகில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

இந்த அமைப்பு என்பது நம்மால் முடிந்த உதவிகள் அனைவருக்கும் செய்வதுதான் நோக்கமே தவிர யாருக்கும் போட்டியாகவோ அல்லது யாரையும் எதிர்க்கவோ இந்த அமைப்பு இல்லை என்பதில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடல் ஆரோக்கியம் தான் மிகப்பெரிய விஷயம் என்பதை உணர்த்தி அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பிறகு நன்றாக சம்பாதிக்க வேண்டும் சம்பாதித்து முதலில் உங்களது குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படமும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து கொண்டிருக்கிறேன். இரண்டு படங்களும் ஜனராஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக படமாக இருக்கும்.

நற்பணி என்ற பெயரில் ஓரிரு நாள் மட்டும் செய்து முடித்து விடாமல் நாள்தோறும் நற்பணி செய்வோம் என்ற பெயரில் வருடம் 365 நாளும் குறைந்தபட்சம் 10 நபர்களுக்கு நற்பணி செய்து வருவதை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். முக்கியமாக ஒரு நாளில் குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆவது புத்தகம் படியுங்கள் என்று கூறினார்.

பிறகு அந்நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது அங்கிருந்து முதல் புத்தகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

Kauvery Hospital Radial Road Launches SAMATVA

Kauvery Hospital Radial Road has launched SAMATVA, Centre for Obesity, Metabolic Health & Lifestyle Transformation, a dedicated centre offering comprehensive and coordinated care for people with obesity and related metabolic health concerns. Dr. Tamilisai Soundararajan, former Governor of Telangana and former Lieutenant Governor of Puducherry, launched the clinic. The latest National Family Health Survey-6 (2023-24) indicates that 44.2% of women aged 15-49 in Tamil Nadu are overweight or obese, highlighting the growing burden of excess weight and its associated health risks.

Against this backdrop, SAMATVA takes an integrated approach that moves beyond conventional weight-loss programmes. The centre brings together medical expertise and evidence-based lifestyle interventions to assess an individuals medical, metabolic, nutritional, physical and behavioural needs and develop a personalised care pathway accordingly. The multidisciplinary team at SAMATVA includes physicians, endocrinologists, gastroenterologists, hepatologists and allied health professionals, enabling patients to access coordinated care under one roof. The approach focuses not only on weight reduction, but also on improving metabolic health, reducing obesity-related health risks and supporting sustainable lifestyle changes.

Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director, Kauvery Group of Hospitals, said:

At Kauvery, we believe healthcare must evolve with the changing health needs of the communities we serve. The growing burden of obesity and metabolic disorders calls for a more integrated and long-term approach to care. With SAMATVA, we are bringing together medical expertise and lifestyle interventions to create a structured model that goes beyond weight management and focuses on improving overall health and quality of life.

The centre also places emphasis on structured follow-up, as sustainable lifestyle change requires continued guidance and monitoring. Patients will receive ongoing support through their health journey, with interventions adapted based on their progress and evolving healthcare needs. Through SAMATVA, Kauvery Hospital aims to provide a structured, coordinated and patient- centred approach to obesity management, with continuous monitoring and guidance focused on improving metabolic health, reducing associated health risks and supporting sustainable lifestyle changes. 

Commenting on the launch, Dr. Piyush Bawane, Clinical Lead, Medical Gastroenterology, Kauvery Hospital, Radial Road, said:

Obesity can have a significant impact on metabolic health and is often associated with conditions such as diabetes, fatty liver disease, hypertension and cardiovascular risk. At SAMATVA, our approach is to assess these associated risks comprehensively and develop an appropriate treatment plan for each patient. This allows us to address obesity as a health condition while also managing the broader metabolic risks associated with it.

Dr. Rameez Raja B, Consultant, Endocrinology, Kauvery Hospital, Radial Road said:

Obesity is a complex metabolic condition, and its impact can extend across multiple organ systems. A comprehensive assessment helps identify individual risks and determine the appropriate treatment approach. SAMATVA brings together multidisciplinary expertise to support a more personalised approach to obesity management.

About Kauvery Hospital:

Kauvery Hospital is a leading multi-specialty healthcare provider in India, recognized for its commitment to clinical excellence, patient-centric care, and advanced medical infrastructure. The hospital group operates a network of twelve hospitals across six key locations – Trichy, Chennai, Salem, Hosur, Tirunelveli, and Bengaluru – and employs over 11000 healthcare professionals. Serving millions of patients annually, Kauvery Hospital is dedicated to delivering high-quality secondary and tertiary care, supported by a strong focus on innovation, clinical outcomes, and continuous advancement in healthcare delivery.

தாய் நிலம்- விமர்சனம் RATING 3/5


இயக்கம்: அபிலாஷ் ஜி. தேவன்
நடிப்பு: அமர் ராமச்சந்திரன், நேஹா அமர், பாலா சிங், நிமிஷா நம்பியார்
இசை: அவுசப்பச்சன்

இலங்கைப் போரின் பின்னணியில், சொந்த மண்ணையும் உறவுகளையும் இழந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு தந்தையும் அவரது மகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட படம் ‘தாய் நிலம்’.

சேதுராமன் தனது மகளுடன் புதிய இடத்தில் வாழ்வைத் தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். இருப்பிடம், உணவு, வேலை என ஒவ்வொரு நாளையும் போராடிக் கடக்கும் அவர்களின் வாழ்க்கையை படம் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்கிறது.

அமர் ராமச்சந்திரன் தந்தை கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். மகளாக நடித்த நேஹா அமர், தந்தையின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு நடிக்கும் காட்சிகளில் சிறப்பாக கவனம் ஈர்க்கிறார். பாலா சிங் மனிதநேயமிக்க கதாபாத்திரத்தில் தனது அனுபவமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் தந்தை–மகள் பாசம் மற்றும் மனிதநேயம். அகதியாக மாறும் மனிதர்களின் வலி, புதிய இடத்தில் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சி ஆகியவை அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளன.

அவுசப்பச்சனின் இசை படத்தின் உணர்வுகளுக்கு துணையாக அமைந்துள்ளது. குறிப்பாக பின்னணி இசை கதையின் சோகத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது. ஒளிப்பதிவும் எளிமையான காட்சிகளின் மூலம் கதையின் சூழலை அழகாக பதிவு செய்கிறது.

‘தாய் நிலம்’ வேகமான பொழுதுபோக்கு திரைப்படம் அல்ல. மனிதர்களின் இழப்பு, பாசம், போராட்டம் மற்றும் நம்பிக்கையைப் பேசும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படம்.

M.GIRIJA- Cinema Reporter 

‘EYES’ மலையாள தொடர்!

காதல் எப்படி மெல்ல கட்டுப்பாடாகவும், பயமாகவும் மாறுகிறது என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள Sony LIV-ன் புதிய மலையாள Original தொடரான ‘EYES’, அக்டோபர் 9 முதல் Sony LIV-ல் வெளியாகின்றது.

‘EYES’ தொடரின் மையக் கதாபாத்திரம் காவல்துறை அதிகாரியான டினா செபாஸ்டியன், இவரது கதாபாத்திரத்தில் கனி குஸ்ருதி நடித்துள்ளார்.

காதல், அதீத ஈடுபாடு மற்றும் கட்டுப்பாடு எல்லை மீறும் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை டினா விசாரிக்கத் தொடங்குகின்றார். விசாரணை நகர நகர, காதலுக்கும் ஆபத்துக்கும் இடையிலான எல்லைகள் மங்குகின்றன. பயம், பாதுகாப்பின்மை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் டினாவின் முன் வருகின்றன,ஆனால், உண்மையை நெருங்க நெருங்க, டினா கண்டுபிடிக்கும் விஷயங்கள் அவர் எதிர்பார்த்ததைவிட மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கின்றது.

இந்தத் தொடர் குறித்து இயக்குநர் மனு அசோகன் கூறுகையில்,

“EYES என்பது நான் நேர்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்ல விரும்பிய ஒரு கதையாகும். ஒருவரை பின்தொடர்வது என்பது வெறும் குற்றம் மட்டுமல்ல அது ஒருவரின் பாதுகாப்பு மற்றும் மனநிலையையே ஆழமாக பாதிக்கக்கூடியதாகும். அந்த உண்மையை சுவாரஸ்யமான த்ரில்லர் வடிவில் சொல்ல முயற்சித்திருக்கின்றோம்..இ ந்தக் கதையை சிறப்பாக உருவாக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கின்றேன். Sony LIV பார்வையாளர்கள் இந்தத் தொடருடன் இணைவார்கள் என்றும் இந்த விஷயத்தை வேறு ஒரு கோணத்தில் பார்க்கத் தொடங்குவார்கள் என்றும் நம்புகிறேன்,” என்றார்.

மனு அசோகன் இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு பாபி–சஞ்சய் எழுத்தும்,அஞ்சனா நாயர் கதையை உருவாக்கியுள்ளார். Uyare மற்றும் Kaanekkaane படங்களுக்குப் பிறகு, மனு அசோகன் – பாபி–சஞ்சய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படைப்பு இது. DreamKatcher தயாரித்துள்ள இந்தத் தொடரில் நிகிலா விமல், தேவ் மோகன், சானியா ஐயப்பன் மற்றும் ஸ்ருதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.

‘EYES’  –  அக்டோபர் 9, வெள்ளிக்கிழமை முதல் Sony LIV-ல் மட்டும்.

ஆல் பாஸ் விமர்சனம் RATING 3.2/5

All Pass திரைப்படத்தை மைதீன் இயக்கியுள்ளார். துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஜனனி, ஜெயபிரகாஷ், செந்தில்குமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

விமர்சனம்

வடசென்னையில் வசிக்கும் மூன்று குடும்பங்கள் பொருளாதார சிரமங்களுக்கு மத்தியிலும் அன்பு, நட்பு, ஒற்றுமையுடன் ஒரே குடும்பம் போல வாழ்கின்றன. வன்முறை, பகை போன்ற வழக்கமான வடசென்னை சித்தரிப்பைத் தவிர்த்து, அங்குள்ள மக்களின் இயல்பான குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. இந்த குடும்பங்களின் வாழ்க்கையில் இயற்கை ஏற்படுத்தும் ஒரு சோதனையே கதையின் முக்கிய திருப்பமாக அமைகிறது.

குடும்ப உறவுகள், பாசம், நட்பு, ஒற்றுமை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியிருப்பது படத்தின் சிறப்பு. வடசென்னையை வேறுபட்ட கோணத்தில் காட்ட வேண்டும் என்ற இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் சில இடங்களில் கதை நகர்வு இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். துஷ்யந்த் தனது கதாபாத்திரத்திற்கு இயல்பான நடிப்பை வழங்குகிறார். ஜனனி குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். அனுபவம் வாய்ந்த ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஜேம்ஸ் வசந்தனின் இசை குடும்ப உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சிகரமான தருணங்களுக்கு துணை நிற்கின்றன.

மொத்தத்தில்: பெரிய ஆக்‌ஷன், வன்முறை இல்லாமல் குடும்ப பாசம், நட்பு, ஒற்றுமை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை பேசும் முயற்சியாக ஆல் பாஸ் அமைந்துள்ளது. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய எளிமையான உணர்வுப்பூர்வமான படமாக இது அமைகிறது. பெரிய பட்ஜெட், பிரம்மாண்டமான காட்சிகள் இல்லாமல், கதையையும் கதாபாத்திரங்களையும் நம்பி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு எளிமையான, அதே நேரத்தில் சுவாரஸ்யமான திரை அனுபவத்தை வழங்குகிறது.

ஆல் பாஸ்- மெய்யான மனநிலை.

M.கிரிஜா- சினிமா நிருபர்

ஏழு கடல் ஏழு மலை விமர்சனம் RATING 3/5

ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என தொடங்கும் இந்த கதையில் நிவின் பாலி எட்டாயிரம் ஆண்டுகள் உயிர் துறக்காமல் சாகா வரம் பெற்று வாழ்பவனாக வந்திருக்கிறார். துபையில் வேலை செய்து வரும் நடிகர் சூரி எட்டு ஆண்டுகள் கழித்து தீபாவளிக்கு தனது குடும்பத்தையும் மகனையும் பார்ப்பதற்காக சொந்த ஊர் வருகிறார். அவசர அவசரமாக ரயில் பெட்டியை ஏற வரும் அவர் நிவின் பாலி உறங்கிக் கொண்டிருக்கும் கடைசி பெட்டியில் தஞ்சமடைகிறார். 8000 ஆண்டுகள் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நிவின் பாலியும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தைக் காண வரும் சூரியும் அந்த ரயில் பெட்டியில் இரண்டரை மணி நேரம் பயணிக்கும் கதை ஏழு கடல் ஏழு மலை.

ரயில் பெட்டியில் சூரியால் கதவிடுக்கில் எலி ஒன்று மாட்டிக் கொள்கிறது. எலியின் கதறல் நிவின் பாலியை எட்டுகிறது. ஆள் அரவம் இல்லா அந்த ரயில் பெட்டியில் நிவின் பாலியின் தோற்றமும் நடவடிக்கைகளும் சூரியை அச்சுறுத்த, எப்படியாவது தப்பித்து விட முயற்சிக்கிறார் அவர். ஆனால் எலியின் உயிரை துச்சமாக மதிக்கும் சூரிக்கு உயிர் பயத்தை கொடுக்கிறார் நிவின் பாலி. நிவின் பாலியிடமிருந்து எப்படி தப்பித்தார் சூரி என்பதே மீதி கதை…

நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி என அனைவரும் தங்களுடைய பங்களிப்பை சரியாக செய்துள்ளனர். இவர்களை தாண்டி அந்த எலியும் ஒரு கதாபாத்திரமாக மாறி நம்முடன் பயணிக்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் பலம். கிராஃபிக்ஸ், AI பயன்படுத்தி செய்த காட்சிகள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என தோன்றியது.

படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அது பின்னணி இசையும் பாடல்களும் தான். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பாடல்கள் நம்மை தாலாட்டி அழைத்து செல்லும் விதம் நன்றாக இருந்தது. பல்லாயிரம் ஆண்டு காதலையும் தத்துவச் சிந்தனைகளையும் எளிமையான, அதேசமயம் ஆழமான தமிழ் வார்த்தைகளில் வடித்துள்ளனர் பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, மதி புகழேந்தி. புதுமுகமாக அறிமுகமாகியுள்ள மதி புகழேந்தியின் வரிகள் மதன் கார்க்கியின் முதிர்ச்சியான சொல்லாட்சிக்கு ஈடுகொடுத்து, கவிதை நயத்துடன் காட்சி அமைப்புகளுக்கு உயிரூட்டி உள்ளன.

ஒவ்வொரு சட்டகத்தையும் ஒரு தூரிகை ஓவியம் போலக் கலைநயத்துடன் செதுக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் ரயிலின் குறுகிய இடத்தையும், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் நிலப்பரப்புகளையும் தனது கேமரா கோணங்களால் பிரம்மாண்டமாக காட்டி, ரசிகர்களுக்கு காட்சி விருந்து படைத்துள்ளார்.

மைனஸ்: திரைக்கதையில் கூடுதல் கவனம் தேவை…

ஏழு கடல் ஏழு மலை- எலியின் குமுறல்

நேற்று மட்டும் தான் இலவச பயணம்! இன்று டிக்கெட் எடு…!

சென்னை:

கோயம்பேட்டில் அக்டோபர் 2, 2026 நேற்று காலை 10 மணியளவில் மகளிருக்கான ‘வெற்றி பயணம்’ திட்டம் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 3, 2026 இன்று பேருந்து எண் 99, பதிவு எண் PEK 5184- ல் பயணம் செய்த மகளிரிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், அந்தப் பேருந்திலேயே ‘வெற்றி பயணம்’ என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பயணி ஒருவர் நடத்துநரிடம் கேட்டபோது, “இந்த வழித்தடத்தில் இன்னும் வெற்றி பயணத்தை கொண்டு வரவில்லை” என நடத்துநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதே பயணி நேற்று அதே பேருந்தில் இலவசமாக பயணித்ததாக கூறுகிறார்.

இதனால், பேருந்தில் ‘வெற்றி பயணம்’ என குறிப்பிடப்பட்டிருந்தும், மகளிரிடம் ஏன் கட்டணம் வசூலிக்கப்பட்டது? மேலும், அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்பட்டதாக கூறப்படும் இத்திட்டம் மறுநாளே குறிப்பிட்ட வழித்தடத்தில் நடைமுறையில் இல்லாததற்கான காரணம் என்ன? முதல்வர் விஜய் கோயம்பேடு வந்ததால் தான் இலவச பயணமா? என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எமது நிருபர் M.கிரிஜா

Online Abuse Sexual Exploitation and Human Trafficking among Youth Awarness

Chennai:

The Indian Community Welfare Organisation (ICWO), in collaboration with Just Rights for Children (JRC) and Chevalier T. Thomas Elizabeth College for Women (CTTE), organised an awareness and capacity-building programme on “Online Abuse, Sexual Exploitation and Human Trafficking among Youth” at the JJ Auditorium, CTTE College for Women, Chennai.

The programme brought together students, faculty members, volunteers, media representatives and civil society representatives to create awareness on the growing risks of online abuse, sexual exploitation and human trafficking and to equip young people to recognise and prevent such risks. The programme commenced with a prayer song and registration of students, followed by the gathering of students, guests and media representatives.

Dr. S. Sridevi Principal, CTTE College for Women, delivered the Welcome Address and welcomed the guests and participants. She spoke about the increasing freedom and choices available to women, including the freedom to make decisions regarding marriage and divorce, while emphasising that freedom must also be accompanied by awareness and the ability to protect oneself from risks and exploitation. She said the programme had been organised to provide students with such awareness and knowledge.

Mementos were presented to Dr. P.M. Nair, IPS (Retd.), International Expert on Human Trafficking Matters, and Mr. A.J. Hariharan, Founder Secretary, ICWO.

Dr. P.M. Nair Calls for Awareness Programmes Across Colleges The key session was delivered by *Dr. P.M. Nair, IPS (Retd.) who spoke about online sexual exploitation, human trafficking and the increasing risks faced by children and youth.

Dr. P.M.Nair said:
“This event on capacity building of the youth in understanding, preventing and fighting Online Sexual Exploitation and related issues organised by CTTE College along with ICWO and Just Rights For Children on 29.9.26 is an important event which will have tremendous impact in the youth. Thousands of youth and children are being lured or deceived or coerced by online abusers and traffickers in the name of job and so many other things. Eventually, many of them are landing as victims of these predators. Once the children and youth are aware of the issues, they will ensure that they do not fall into the trap. Therefore, we need to carry out such programmes across all colleges in the country. I am so happy that I have been called in as a resource person to address the issues and suggest the solutions and guide the youth. It is not just honour for me, it is my profound duty in national interest. Our nation is safe only when our youth and children are also safe. This is a great step in ensuring national security. Jai Hind.”

Hariharan Highlights Anti-Human Trafficking Clubs

Mr. A.J. Hariharan, Founder Secretary, ICWO, addressed the gathering and highlighted the importance of youth participation in preventing human trafficking and exploitation. He spoke about ICWO’s Anti-Human Trafficking Clubs (AHTCs) and appreciated CTTE College for Women for being the first college to start an AHTC. He noted that the initiative has since expanded to more than 100 colleges with AHTC Clubs, providing young people with opportunities to learn about trafficking, exploitation, prevention and responsible action.

Mr. A.J.Hariharan also stressed that awareness is essential in protecting young people in the digital age. “Awareness is the first and most powerful step towards protecting young people. Our objective is not to discourage young people from using technology, but to empower them to use it safely and constructively.”

He appreciated the collaboration between ICWO, JRC and CTTE College for Women and emphasised the importance of partnerships between civil society organisations and educational institutions in strengthening child protection and prevention. As part of the programme, awareness posters were released and an oath-taking ceremony was conducted with students and volunteers. The Humanities Club of CTTE College for Women also presented an enactment on online abuse, sexual exploitation and trafficking. The programme highlighted the shared responsibility of young people, families, educational institutions, civil society organisations and communities in preventing exploitation and creating safer online and offline environments.

Ms. Dhrisya, Professor, Department of English, CTTE College for Women, proposed the Vote of Thanks.

The programme concluded with a call for continued capacity-building and awareness programmes across educational institutions, empowering young people to become responsible digital citizens and active participants in preventing online abuse, sexual exploitation and human trafficking

மீசைய முறுக்கு2 விமர்சனம்! படம் எப்படி இருக்கு? RATING 3/5

2017 ஆம் ஆண்டு இதே குஷ்பு, ஹிப் ஹாப் ஆதி கூட்டணியில் மீசையை முறுக்கு முதல் பாகம் வந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இரண்டாம் பாகம் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், அவ்னி மூவிஸ் சார்பில், குஷ்பூ சுந்தர் தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் நடிகர்கள் ஹிப் ஹாப் ஆதி, கெடிகா சர்மா, நாசர், ரம்யா ரங்கநாதன், யோகி பாபு , சைத்ரா ஆச்சார் , பாபா பாஸ்கர், கருணாஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ளது.

விமர்சனம்:

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில் கானா பாடல்களை பாடி சாதிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைகின்றன. இதே கனவை அவரது மகனும் தொடர்ந்து, இசைத்துறையில் சாதிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரது முயற்சியும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதையடுத்து மூன்றாவது தலைமுறையாக கானா இசையை உலகறியச் செய்யும் போராட்டத்தை ஹிப்ஹாப் ஆதி முன்னெடுக்கிறார். தனது தாத்தா மற்றும் தந்தையின் கனவை நிறைவேற்ற அவர் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? கானா இசையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றாரா? என்பதே மீசைய முறுக்கு 2 கதை….

சென்னை கானா இசைக்காக ஆதி முன்னெடுக்கும் போராட்டங்களும், அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளும் கவனம் பெறுகின்றன. குறிப்பாக வடசென்னை பின்னணியையும், அங்குள்ள இசைக் கலாசாரத்தையும் திரையில் கொண்டுவந்த விதம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஆதி வழக்கமான பாணியில் தனது ‘அட்வைஸ்’ வசனங்களால் ரசிகர்களை ரசிக்க வைப்பதோடு, ஆட்டம், பாட்டம் என படம் முழுவதும் உற்சாகமான என்டர்டெயின்மென்ட்டை வழங்கியுள்ளார். மூன்று தலைமுறை கானாபாடகராகவும் ஹிப்ஹாப்தமிழா ஆதியே நடித்திருக்கிறார்.அந்தந்தக் காலகட்டத்துக்கேற்ற உடைகள்,சிகையலங்காரம் ஆகியன மட்டுமின்றி உடல்மொழியிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார்.

சைத்ரா,கீதிகா சர்மா,ரம்யா ரங்கநாதன் ஆகிய மூன்று நாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்… ரம்யா ரங்கநாதன் கொஞ்சம் முன்னிலை பெறுகிறார். கருணாஸ், ஹர்சத் கான் ஆகியோர் நல்லநடிப்புடன் நகைச்சுவையையும் கலந்து கொடுத்து சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் என படத்தில் முக்கியமான நடிகர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுடைய அனுபவ நடிப்புகள் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. ஹிப்ஹாப் ஆதியின் இசை படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் வகையில் உள்ளன. குறிப்பாக ‘ஆரா பத்துக்கு பத்து…’ பாடல் கொண்டாட்டத்தின் உச்சமாக அமைந்துள்ளது. கானா இசை, இளைஞர்களுக்கான கருத்துகள், பாடல், நடனம் மற்றும் கொண்டாட்டம் என பொழுதுபோக்கு அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டுள்ள ‘மீசைய முறுக்கு 2’, ஹிப்ஹாப் ஆதி ரசிகர்களுக்கு உற்சாகமான விருந்தாக அமைந்துள்ளது.

மைனஸ்: காமெடியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம், முதல் பாதி கதையை இன்னும் ஜாலியாக கொண்டுபோயிருக்கலாம், கதையை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்.

மீசைய முறுக்கு 2 – கானா வெறி ஆட்டம்.