Sunday, May 31, 2026
Blog

 ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
 
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
 
இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பில்,  படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு பேசியதாவது..,
 
“நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தது போல, பெத்தி திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.
 
இயக்குநர் புச்சி பாபு இந்தப் படத்திற்காக அற்புதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் காகிதத்தில் எழுதப்படலாம். ஆனால் அதற்கு உயிர் கொடுப்பது இசை, காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்புதான். பெத்தி படத்தில் இவை அனைத்தும் மிகச் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன. இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
இது வெறும் படம் பார்த்து வெளியே வரும் அனுபவமாக இருக்காது. திரையரங்கில் முழுமையாக மூழ்கடிக்கும் அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில், படத்தில் ஒரு வலுவான கருத்தும் இருக்கிறது. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அதன் தாக்கம் நீண்ட நாட்கள் உங்கள் மனதில் இருக்கும்.
 
சிவராஜ் குமார் சார் இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு குரு என்ற கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் வலிமை மிகவும் சிறப்பானது. திவ்யேந்துவும் தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நடிப்பை படம்பிடிக்கும்போது சரியான கோணத்தைத் தேர்வு செய்யவே கேமரா தேடியது என்று சொல்லலாம்.
 
இந்தப் படத்தின் வெற்றிக்காக எனது உதவி இயக்குநர்கள் முதல் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.
 
ராம் சரண் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். இந்தப் படத்திற்காக அவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். ஒரு தோற்றத்திலிருந்து மற்றொரு தோற்றத்திற்கு மாறுவது என்பது வெறும் உடை மாற்றம் அல்ல. முழுமையான உடல் மாற்றம். கிரிக்கெட் வீரராகத் தோன்ற வேண்டிய கட்டத்தில் இருந்து, பின்னர் மண்ணின் மணம் வீசும் ஒரு கிராமத்து இளைஞனாகவும், அதன் பிறகு உடற்கட்டுடன் கூடிய வேறொரு பரிமாணத்திலும் அவர் தன்னை மாற்றிக் கொண்டார். அதற்காக தினமும் பல மணி நேரங்கள் கடுமையாக பயிற்சி செய்து உழைத்தார். இன்று அனைவரும் அவரது தோற்றத்தைப் பாராட்டுகிறார்கள் என்றால், அதன் பின்னால் மிகப்பெரிய அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இருக்கிறது. பின்னர் கதையின் மற்றொரு கட்டத்தில் அவரது வாழ்க்கை கீழிறங்கும் தருணங்களிலும், அதற்கேற்றவாறு தனது தோற்றத்தையும் நடிப்பையும் முழுமையாக மாற்றியுள்ளார். இது ராம் சரணின் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு விளையாட்டையும் கற்றுக்கொண்டு, அதற்கான ஒழுக்கத்தைப் பின்பற்றி அவர் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.
 
மேலும், இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் எங்களுடன் மீண்டும் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்திரன் படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அவரது இசையும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
 
நடிகர் திவ்யேந்து சர்மா பேசியதாவது..,
 
“இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பெத்தி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் அறிமுகமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
 
ஒரு நடிகராக என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து, புதிதாக ஏதாவது முயற்சி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக இந்த படம் அமைந்தது. ஒவ்வொரு கலைஞரும் தங்களிடம் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை கனவு காண்பார்கள். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படம் தான் பெத்தி.
 
இந்த பயணம் இயக்குநர் புச்சி பாபு சாருடன் தொடங்கியது. அவர் ஒரு சிறந்த மனிதர், சிறந்த இயக்குநர், அதைவிட சிறந்த நண்பர். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கும், கதாபாத்திரத்தை என் பாணியில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அளித்ததற்கும் அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடன் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.
 
ராம் சரண் சார், உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. முதல் நாளிலிருந்தே நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை மிகவும் சுதந்திரமாக  உணர வைத்தது. அந்த நினைவுகளை நான் எப்போதும் மனதில் வைத்திருப்பேன். ஒரு அற்புதமான மனிதராகவும், இணை நடிகராகவும் இருந்ததற்கு நன்றி.
 
இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் குறித்து என்ன சொல்வது? நீங்கள் ஒரு ஜாம்பவான். நீங்கள் இடம்பெற்றுள்ள ஒரு படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். என் பெயர் உங்கள் பெயருடன் இணைக்கப்படுவது கூட பெருமையான விஷயமாக கருதுகிறேன்.
 
மேலும், சிவராஜ்குமார் சாரின் முன்னிலையில் நிற்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருடன் காட்சிகளில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவரது சாதனைகள் மற்றும் ஆளுமை குறித்து நன்கு அறிந்திருக்கிறேன். அவரின் முன்னிலையில் இருப்பது கூட ஒரு கௌரவம்.
 
ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் எனக்கு மிகவும் பிடித்தவர். இதை நான் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறேன். ஒரு நடிகராக எனக்கு அவர் கொடுத்த நம்பிக்கையும், சுதந்திரமும் அளவிட முடியாதவை. இவ்வளவு அனுபவம் மிக்க ஒளிப்பதிவாளர் ஒருவருடன் இவ்வளவு எளிதாக பணியாற்ற முடியும் என்று நான் நினைத்ததே இல்லை.
 
நான் ஏதாவது புதிதாக செய்ய விரும்பினால், அதை எப்படி இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தலாம் என்று அவர் யோசிப்பார். ‘இதை இப்படிப் படம்பிடிப்போம், இன்னொரு க்ளோஸ் ஷாட் எடுப்போம்’ என்று அவர் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த அனுபவம் எப்போதும் எனக்கு மறக்க முடியாததாக இருக்கும்.
 
இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அனைவருக்கும் நன்றி.”
 
இயக்குநர் புச்சி பாபு  பேசியதாவது..,
 
எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த பல கலைஞர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் சார், ரத்னவேலு சார், தேவி ஸ்ரீ பிரசாத் சார் என நான் மதிக்கும் பலர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை என்பது வெறும் ஒரு நகரம் அல்ல, இங்கே சினிமாவே வாழ்கிறது. மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள், சினிமா கலைஞர்களை மதிக்கிறார்கள்.
 
எனக்கு பிடித்த  மூத்த ஆளுமைகள் அனைவரும் சென்னை பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போது எனக்கு அதன் மகத்துவம் முழுமையாகப் புரியவில்லை. ஆனால் இப்போது இங்கு வரும்போதெல்லாம் ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வது போன்ற உணர்வு வருகிறது.
 
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி சாரும் இங்கே இருக்கிறார். என்னுடைய முதல் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கும், சென்னை வரும்போதெல்லாம் அன்புடன் வரவேற்பதற்கும் அவருக்கு நன்றி.
 
பெத்தி பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் உணர்வுப்பூர்வமான படம். பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் ஒரு அனுபவமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் சார் கொடுத்திருக்கும் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பார்த்தால் யாராலும் எளிதில் மறக்க முடியாது.
 
கடந்த சில நாட்களாக நான் சென்னையில் இருந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். அதே நேரத்தில் ஹைதராபாத்திலும் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. படம் பார்த்த அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். ‘மிகச் சிறந்த படம்’, ‘மிக அழகாக உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
 
இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ராம் சரண் சார் தான். பெத்தி என்றாலே எனக்கு ராம் சரண் தான் நினைவுக்கு வருகிறார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.
 
திவ்யேந்து சாரின் நடிப்பைப் பார்த்தபோது, விஜய் சேதுபதி சாரை நினைவுபடுத்தியது. சிறிய சிறிய விஷயங்களில்கூட அவர் காட்டிய நுணுக்கமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு நன்றி.
 
இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் பற்றி பேச வேண்டுமென்றால், அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். சிறுவயதிலிருந்தே அவருடைய இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒருநாள் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளன.
 
ரத்னவேலு சார் இந்தப் படத்தை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் எழுதிய ஒவ்வொரு காட்சிக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். அவரது ஒளிப்பதிவு இல்லாமல் இந்தப் படம் இப்படியாக உருவாகியிருக்காது.
 
மேலும், சிவராஜ்குமார் சார் இந்தப் படத்தில் ஒரு உண்மையான குருவாகத் தோன்றுகிறார். குரு-சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் மதிப்பும், கம்பீரமும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும்.
 
இந்தப் படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”
 
 நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது..,
 
முதலில் இயக்குநர் புச்சி பாபுவுக்கு நன்றி. இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது.
 
ராம் சரணையும், அவருடைய குடும்பத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே வந்தது. புச்சி பாபு கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக்கொண்டேன்.
 
ஆனால் அதன் பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தப் படம் என்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் எனக்காக காத்திருந்தார்கள். அது என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
 
இசைப்புயல் A. R. ரஹ்மான் சாரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர்  பின்னணி கலைஞராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். பின்னர் இசையமைப்பாளராக அவர் இசையை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றார். பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரஹ்மான் சார் தனித்துவமான பாணியில் தனி அடையாளத்தை உருவாக்கினார். ஆஸ்கார் விருதை வென்றது இந்திய இசைக்கே பெருமை சேர்த்த தருணம். அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
 
ரத்னவேலு சாருடன் பணியாற்றிய அனுபவமும் சிறப்பானது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் காட்டிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. எங்களுக்குள் ஒரு சிறப்பு இணைப்பு உருவானது.
 
தயாரிப்பாளர் மற்றும் முழு படக்குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் எங்களுக்குள் இருந்த உறவும், ஒற்றுமையும் உங்களுக்குப் புரியும்.
 
ராம் சரண் சாரின் உழைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.
 
இந்தப் படத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். பெத்தி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஜூன் 4-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்களோ, நானும் அதே அளவு ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி. வணக்கம்.
 
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது..,
 
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் தோன்றியது. ஒரு மிகப் பெரிய ஆலமரமான சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் ராம் சரண் அதையும் தாண்டி தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் இன்னொரு ஆலமரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது என் மகனும் அங்கே இருந்தான். நான் அவனிடம், ‘நீ என்னைவிட பெரியவனாக வரலாம்’ என்று சொன்னேன். அதற்கான உதாரணமாக ராம் சரணைச் சுட்டிக்காட்டினேன். இளம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் மிகவும் முக்கியம்.
 
ஒரு நாள் சுகுமார் சார் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு புச்சி பாபுவை அறிமுகப்படுத்தினார்கள். அவர் இந்தக் கதையைப் பற்றி பேசினார். அந்த நேரத்தில் நான் பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும், வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் பெத்தி போன்ற ஒரு திரைப்படம் வந்தபோது அதில் இருக்கும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது.
 
இந்த மாதிரியான பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரையே கொடுத்து உழைக்கிறார்கள். நடிப்பிலும், நடனத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கிறது. மேலும் இப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. அதனால் அனைவரின் உழைப்பும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.
 
ராம் சரண் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது உழைப்பு தெரியும். இசையும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ரோஜா காலத்திலிருந்து இன்று வரை இசை மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் இருந்து ஊக்கமடைந்திருக்கலாம். ஆனால் நானும் பலரிடமிருந்து ஊக்கமடைந்திருக்கிறேன்.
 
தெலுங்குத் திரைப்படத் துறையில் M. M. கீரவாணி, தேவி ஸ்ரீபிரசாத் , தமன் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்கள் மிகவும் லட்சியத்துடன் செயல்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. பெத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு முதல் படம் செய்வது போன்ற புதிய உற்சாகத்தை அளித்தது.
 
இன்றுக் காலைதான் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் ‘இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?’, ‘இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?’ என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. அந்த உற்சாகமே இந்தப் படத்தின் சிறப்பு. சிவராஜ்குமார் சாருக்கும், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தை உருவாக்கிய அனுபவத்தை நாங்கள் அனைவரும் மிகவும் ரசித்தோம். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”
 
நடிகர்  ராம் சரண் பேசியதாவது..,
 
“சென்னை பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். உண்மையாகச் சொன்னால், சில நேரங்களில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். இப்போதும் அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் இப்படியான உணர்வு ஏற்படும்.
 
முதலில், இந்த மேடையில் இத்தனை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் என்ன பேசுவது என்ற எண்ணமே வருகிறது. இருந்தாலும் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், குறிப்பாக சென்னை மற்றும் தமிழ்நாடு ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
 
சென்னை எனக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம். நான் பிறந்து வளர்ந்த நகரம் இது. அதனால் ஆர்.ஆர்.ஆர்., மகதீரா அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும், சென்னைக்கு வந்து புரமோஷன் செய்யும் போது வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது. மேலும், என் அம்மாவும் இங்கு பிறந்தவர். அதனால் சென்னை எனக்கு என் தாயின் ஊர் என்ற பாசமான உணர்வை அளிக்கிறது.
 
பெத்தி திரைப்படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் ஏற்கனவே பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.
 
நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
 
இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.
 
சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும்.
 
ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் பற்றி என்ன சொல்வது? அவருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்’ என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.
 
ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு.
 
என்னைப்போலவே திவ்யேந்து இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
 
இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ‘போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
 
என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். ‘ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை. குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது. மிகவும் ஊக்கமளிக்கும், மனதைத் தொடும் திரைப்படமாக இருக்கும்.
 
என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை இயக்குநர் புச்சி பாபுவும், சுகுமார் சாரும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
 
இறுதியாக, முதல்வர் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநிலையிலிருந்த ஒரு திரைப்பட வாழ்க்கையையும், மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு விட்டு பொதுச் சேவைக்காக வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் வாழ்த்துகள்.
 
இந்தப் படம் எங்கள் அனைவரின் உழைப்பு . ஜூன் 4-ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்கில் இந்த அனுபவத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.”
 
ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பும் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
 
ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
 
இப்படம் வரும்  ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

நிதியாண்டு! எல்ஜிடி குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட்

சென்னை:

LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் (முன்பு ‘எல்ஜிடி பிசினஸ் கனெக்‌ஷன்ஸ் லிமிடெட்’), மார்ச் 2026-ல் முடிவடைந்த நிதியாண்டிற்கான (FY26) நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. பயணங்களுக்கான தேவை அதிகரிப்பு, சிறப்பான வணிக ஒருங்கிணைப்பு மற்றும் கார்ப்பரேட், சுற்றுலாப் பிரிவுகளில் கிடைத்த வரவேற்பால் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் வாடிக்கையாளர்களைச் சென்றடைதல், சேவைத் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டணிகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் மூலம், ‘ஒருங்கிணைந்த பயண மற்றும் ஹாஸ்பிடாலிட்டி சேவை நிறுவனம்’ என்ற தனது நிலையை இந்நிறுவனம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. MICE சேவைகள், டெஸ்டினேஷன் திருமணங்கள், கண்காட்சிகள் மற்றும் அனுபவப்பூர்வ சுற்றுலாக்களுக்கான தேவை அதிகரிப்பு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.

நீண்டகால வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் முக்கிய பிராந்திய சந்தைகளில் LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. நாகர்கோவில், கோயம்புத்தூர், புனே மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகர விரிவாக்கத் திட்டத்தின் கீழ், அடுத்தகட்டமாக அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில், உலகளாவிய வாடிக்கையாளர் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் துபாய் மற்றும் மலேசியாவை மையமாகக் கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும், ஆன்மீக மற்றும் சமயச் சுற்றுலாவை அதிக வளர்ச்சியடையும் பிரிவாகக் கருதி, அதில் பிரத்யேக கவனம் செலுத்துகிறது.

செயல்பாட்டு திறனில் மேம்பாடுகள்

கீழ்க்கண்ட முக்கிய வணிகப் பிரிவுகளில் நிறுவனம் தனது சேவைத் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தியுள்ளது:

  • கார்ப்பரேட் பயண மேலாண்மை
  • MICE (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்)
  • ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் விருந்தோம்பல் சேவைகள்
  • சொகுசுக் கப்பல் மற்றும் ஓய்வு நேரச் சுற்றுலா
  • டிக்கெட் முன்பதிவு மற்றும் விசா செயலாக்கச் சேவைகள்
  • பிரத்யேக உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணப் பேக்கேஜ்கள்
  • ஆன்மீக மற்றும் சமய சுற்றுலாச் சேவைகள்
  • கண்காட்சிகள்
  • வர்த்தக கண்காட்சிகள்
  • டெஸ்டினேஷன் திருமணங்கள்

LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. வில்ஃபிரட் செல்வராஜ் கூறுகையில்: “பயணத் தேவை அதிகரிப்பு மற்றும் புதிய பயண அனுபவங்கள் மீதான ஆர்வத்தால் சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிட்டி பிரிவுகளில் நாங்கள் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். கூட்டணிகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் மூலம் ஒருங்கிணைந்த பயணக் கட்டமைப்பை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கமாகும். Yaja, Travflix மற்றும் Holiday One இணைப்பு எங்களின் செயல்பாட்டுத் திறன்களை வலுப்படுத்த முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது. இந்தியா மற்றும் துபாய், மலேசியா போன்ற சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கி நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்வதில் நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.

‘காட்டாளன்’ விமர்சனம்

க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், பால் ஜார்ஜ் இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ் பெப்பே, சுனில், கபீர் துஹான் சிங், துஷாரா விஜயன், பார்த் திவாரி, ஹரிசங்கர் நாராயணன், அல்போன்ஸ் புத்ரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘காட்டாளன்’

விமர்சனம்:

கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள ‘ஆனக்கொள்ளி’ என்ற கிராமத்தில், காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காப்பாற்ற வரும் மாரி (ராஜ் திரன்தாசு -இளமைப் பருவத்து மாரியாக) என்பவரைச் சுற்றித் தொடங்குகிறது. ஆனால், மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் மாரி, அந்தப் பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கிராம மக்களை அடிமைகளாக்கி, ஒரு மாபெரும் சட்டவிரோத கடத்தல் கும்பலின் கொடூரமான தலைவனாக மாறுகிறான். யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை வெட்டி எடுத்து சர்வதேச அளவில், குறிப்பாக இலங்கைக்கு கடத்தி கோடிகளை குவிக்கும் மாபியா சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறான். அவனுக்கு கீழே 40-க்கும் மேற்பட்ட ஏழை பழங்குடி மக்கள் அடிமைகளாக வேலை செய்கிறார்கள். இந்த சூழலில், மாரிக்கு போட்டியாக ‘எடி’ (கபீர் துகான் சிங்) என்ற புதிய தொழில் எதிரி உருவாகிறான்.

எடி-யுடன் ஏற்படும் மோதலால் மாரியின் தந்தம் கடத்தல் தொழில் முடங்கும் நிலைக்கு வருகிறது. அதிலிருந்து தப்பிக்கவும், பறிபோன தனது கோடிக்கணக்கான மதிப்புள்ள தந்தங்களை மீட்டெடுக்கவும் மாரி, எடி-யின் பலத்தை அடக்கவும், தனது தந்தங்களை ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு பாதுகாப்பாக கடத்தவும் ஆண்டனி (ஆண்டனி வர்கீஸ் பெபே) என்ற துணிச்சலான இளைஞனைத் தனது வலதுகரமாக பயன்படுத்திக் கொள்கிறான்.

ஆண்டனி, மாரியின் கடத்தல் நெட்வொர்க்கை தன் கட்டுப்பாட்டில் எடுத்து மிக சாதுரியமாக பிண உடல்களுக்குள் தந்தங்களை ஒளித்து வைத்து கடத்தி மாரியின் நம்பிக்கையை பெறுகிறான். ஆரம்பத்தில் மாரிக்கு விசுவாசமாக செயல்பட்டு எதிரிகளை அழிக்கும் ஆண்டனி, கதையின் போக்கில் மாரியின் சுயரூபத்தை உணர்ந்து அவனுக்கே எதிராக திரும்புகிறான். மாரியின் கொடூரமும், அவன் காட்டின் (கிராம மக்கள்) அடிமைகளை நடத்தும் விதம் எல்லை மீறும் போது ஆண்டனிக்கும் மாரிக்கும் இடையே மோதல் வெடிக்கிறது.

மாரியை தீர்த்துக்கட்ட கிராமத்து மக்களும், அலி (ஜெகதீஷ்) போன்ற பெரியவர்களும் ஆண்டனியின் உதவியை நாடுகிறார்கள். கோபமடையும் மாரி, ஆண்டனியும் அவனுக்கு பின்னால் இருக்கும் ஒட்டுமொத்த கிராமத்தையும் அழிக்க துணிகிறான். இறுதியில், ஆண்டனி அந்தப் பெரிய கடத்தல் சாம்ராஜ்யத்தை ரத்தக் களரியாக்கி தடம் தெரியாமல் அழிக்கிறான் என்பதே மீதிக்கதை…..

ஆனைகொல்லி காடுகளின் தந்தம் கடத்தல் சிண்டிகேட்டின் பிரதான வில்லனாக வரும் சுனில், நரி குணம் கொண்ட கடத்தல் கார்டெல் தலைவனாக தந்தத்திற்காக காட்டு யானைகளை கொல்லும் சைக்கோத்தனமான வில்லனாக மிரட்டியுள்ளார். படத்தின் நாயகனாக வரும் ஆண்டனி வர்கீஸ் பெப்பே, அதிரடி இமேஜுக்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். அவரது உடல் மொழி, காடுகளுக்குள் பாய்ந்து பாய்ந்து சண்டை செய்யும் காட்சிகள், ஸ்டண்ட் பிளாக்குகளில் அசாத்திய வேகம் கொடுத்து மிரட்டியுள்ளது. ஹரிசங்கர் நாராயணன், சந்தீப் ரவிராஜ், ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் உட்பட அனைவரும் கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.

பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ‘மெண்டிஸ்’ என்ற ரகசியமான, புதிரான பாத்திரத்தில் எதிர்பாராத கேமியோ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

மைனஸ்: ஒரே சண்டை ரத்தம்…. பல காட்சிகள் லாஜிக்கே இல்லை…

மொத்தத்தில் இந்த ‘காட்டாளன்’ அலறல், குமுறல்.

புற்றுநோய் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை!

சென்னை:

ரோபோடிக் உதவியுடனான புற்றுநோய் சிகிச்சையில் முன்னணியில் திகழும் சென்னை அப்போலோ மருத்துவமனை, ஹியூகோ ரோபோடிக்-அசிஸ்டெட் சர்ஜரி (ஆர்ஏஎஸ்) அமைப்பைப் பயன்படுத்தி, பக்கவாட்டு அணுகுமுறை மூலமாக உலகின் முதல் வீடியோ எண்டோஸ்கோபிக் இங்வினல் லிம்பாடெனெக்டமி (விஇஐஎல்) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இது தொடையின் நடுப்பகுதிக்கு பதிலாக பக்கவாட்டுப் பகுதி வழியாக இடுப்பு இடுக்கில் உள்ள நிணநீர்முடிச்சுகளை அணுகும் ஒரு மிகக் குறைந்த ஊடுருவல் தொழில்நுட்பமாகும். ஆண்குறி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 40 வயதுள்ள நோயாளிக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் எந்தவொரு பெரிய பக்கவிளைவுகளும் இன்றி அவர் மிக விரைவாகவும், முழுமையாகவும் குணமடைந்துள்ளார்.

ஆண்குறி, பெண்குறி வெளிப்பகுதி, யோனி போன்ற புற்றுநோய்கள் இடுப்பு இடுக்குகளில் உள்ள நிணநீர்முடிச்சுகளுக்குப் பரவும் போது, இந்த இங்வினல் நிணநீர்முடிச்சு அகற்றும் முறை ஒரு வழக்கமான நடைமுறையாக மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரியமாக, இந்த அறுவை சிகிச்சையானது இடுப்புப் பகுதியில் பெரிய கீறல்களை ஏற்படுத்தி திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலமாகவே செய்யப்படுகிறது. இது சில நேரங்களில் சருமம் மற்றும் நிணநீர் நாளங்களை சேதப்படுத்தி, காயம் ஆறுவதில் சிக்கல்களையும், அறுவை சிகிச்சைக்குப் பின் நிணநீர் கசிவையும் ஏற்படுத்தக்கூடும்.

இருப்பினும், ரோபோடிக் தளங்களில் மிகக் குறைந்த ஊடுருவல் மற்றும் கேமரா வழிகாட்டுதலுடன் கூடிய விஇஐஎல் (VEIL) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் போது முடிவுகள் பெரும்பாலும் சிறப்பாக அமைகின்றன. ரோபோடிக் விஇஐஎல் அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் மிகவும் துல்லியமான ரோபோடிக் கருவிகள் மற்றும் மேம்பட்ட விஷுவல் கண்ட்ரோல் உதவியுடன் மிகச் சிறிய கீறல்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இதனால் சருமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன. மேலும், இந்த அணுகுமுறை வழக்கமான திறந்தநிலை அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நிணநீர் கசிவை கணிசமாகக் குறைக்கிறது.

புரோஸ்டேட், சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பல்வேறு வகையான ரோபோடிக் சிறுநீரகப் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு அப்போலோ மருத்துவமனை ‘ஹியூகோ ஆர்ஏஎஸ்’ அமைப்பைப் பயன்படுத்தி வருகிறது. தற்போது நிணநீர்முடிச்சை அகற்றுவதற்கான இந்த விஇஐஎல் செயல்முறையையும் இணைத்ததன் மூலம், இந்த மருத்துவமனை இந்த அமைப்பைப் பயன்படுத்தி அனைத்து வகையான ரோபோடிக் சிறுநீரகப் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளையும் முழுமையாக நிறைவு செய்துள்ளது.

இந்த வரலாற்று மைல்கல் குறித்து சென்னை மண்டல அப்போலோ மருத்துவமனையின் சிஇஓ டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார், “மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான அப்போலோவின் உறுதிப்பாடு ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை எட்டி வருகிறது. மருத்துவ மேன்மைக்கும், உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பின் மூலம் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் எப்போதும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒரு முற்போக்கான மருத்துவ நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் மேலும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.”

சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரகவியல், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான மூத்த ஆலோசகர் டாக்டர் என். ராகவன் அவர்கள் கூறியதாவது: “இந்த சாதனை பல மாத கால நுணுக்கமான திட்டமிடல், மருத்துவத் துல்லியம், ஒருங்கிணைந்த குழுப்பணி ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றியாகும். ஹியூகோ ஆர்ஏஎஸ் தளத்தைப் பயன்படுத்தி பக்கவாட்டு அணுகுமுறை மூலம் உலகின் முதல் ரோபோடிக் விஇஐஎல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது சவாலாகவும் அதே நேரத்தில் திருப்திகரமாகவும் இருந்தது. மேம்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சையின் ஒவ்வொரு மைல்கல்லும் தொடர்ச்சியான கற்றல், அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவ மேன்மையின் எல்லைகளை விரிவுபடுத்துவதில் உறுதியாக இருக்கும் திறமையான குழுக்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகிறது. இந்த வெற்றி நோயாளிகளின் குணமடையும் விகிதத்தை மேம்படுத்த உதவுவதுடன், மிகக் குறைந்த ஊடுருவல் புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.”

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சிறுநீரகவியல், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர், ஆலோசகர் டாக்டர் மாதவ் திவாரி அவர்கள் மேலும் கூறியதாவது: “நோயாளி குணமடைந்த விதம், இந்த அணுகுமுறையின் ஆற்றலையும் அதன் செயல்திறனையும் காட்டுகிறது. இடுப்பு இடுக்கு நிணநீர்முடிச்சு அகற்றம் தேவைப்படும் ஆண்குறி புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஒப்பீட்டளவில் அரிதானவை என்றாலும், அவற்றிற்கு பெரும்பாலும் மிகவும் சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சை தலையீடுகள் தேவைப்படுகின்றன. விஇஐஎல் போன்ற மேம்பட்ட ரோபோடிக் உதவி நடைமுறைகள் பக்கவிளைவுகளைக் குறைப்பதன் மூலமும், அறுவை சிகிச்சை காயங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், விரைவாக குணமடைய வழிவகுத்து நோயாளிகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன. சிறந்த சிகிச்சை விளைவுகளைப் பெறுவதற்கு விழிப்புணர்வை அதிகரிப்பதும், சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவதும் தொடர்ந்து அவசியமாக உள்ளது.”

டாக்டர் என். ராகவன், டாக்டர் மாதவ் திவாரி ஆகியோரின் தலைமையிலான பல்துறை நிபுணர் குழுவினரால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்கு டாக்டர் பிரதீப் சிருவர் தலைமையிலான குழுவினர் மயக்க மருந்து ஆதரவை வழங்கினர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மிகச் சிறந்த முறையில் குணமடைந்துள்ளார். இந்த வெற்றிகரமான சிகிச்சை, துல்லியம் சார்ந்த மற்றும் தொழில்நுட்ப உதவியுடனான புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை நோக்கிய மற்றொரு முக்கிய படியாகும்.

டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

வ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளை தாண்டி ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 
 
கிரியேட்டிவ் புரடியூசர் ஆனந்திதா சுந்தர் அவர்கள் பேசும்போது, நான் இந்த படத்தில் கிரியேட்டிவ் புரடியூசராக பணி புரிந்துள்ளேன். இந்த படக் குழு எனக்கு ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம். ஏசி சண்முகம் அவர்கள் மிகவும் சப்போர்ட் செய்தார்கள். அவர் இல்லை என்றால் நாங்கள் யாரும் இணைந்து இருந்திருக்க மாட்டோம். இந்த நேரத்தில் எனது அப்பா, அம்மா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த இயக்குனர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில விஷயங்கள் அதுவாக அமையும் என்று சொல்வார்கள். அது போல் எங்களுக்கு இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அமைந்துள்ளனர். அவர்கள் இல்லையென்றால் இவ்வளவு சிறப்பாக படம் அமைந்திருக்காது. அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படம் அனைவரது கனவு. கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். 
 
பகவதி பெருமாள் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அவ்னி மூவிஸில் எனக்கு இது இரண்டாவது படம். இந்த கதையை முதல் முறை கேட்கும் போது மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அடுத்த ஜெனரேஷனுக்கான கதை சொல்லல் ஆரம்பமாகி இருக்கிறது என்று உணர்ந்தேன். நிறைய கடின உழைப்பில் இந்த படத்தை எடுத்து உள்ளோம். சாம் சிஎஸ் அவர்களின் இசையில் முதல்முறையாக நடித்துள்ளேன். நன்றி 
 
ரேஷ்மா வெங்கடேஷ் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். குஷ்பு மேடம் அவர்களுக்கு மிகவும் நன்றி. இயக்குனர் அஸ்வின் கந்தசாமி மிகவும் திறமையானவர். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இது ஒரு ஒன்றரை வருட பயணம். இவர்கள் அனைவருடனும் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சந்தோஷ் அவர்களை பார்க்கும்போது அவருக்கு இது முதல் படம் போல தெரியவில்லை. பிரியா என்ற கதாபாத்திரத்தில் சாம்யுக்தா சிறப்பாக நடித்துள்ளார். வினோத் கிஷனுடன் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். சாம் சிஎஸ் அவர்களின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், எடிட்டர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ரஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் அந்த கதாபாத்திரம் பிடிக்கும் என்று நம்புகிறேன். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சப்போர்ட் என்றும் வேண்டும். 
 
சாம்யுக்தா விஸ்வநாத் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இந்த படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் ஆனது. குஷ்பு மேடம் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவ்னி மூவிஸ் வித்தியாசமான கதைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்கள் முதல் முறையாக கதை சொல்லும்போது நான் படத்திற்கு உள்ளே வந்து விட்டேன். இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தோஷ் உடன் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரேஷ்மாவை நான் சிரிக்காமல் பார்த்ததே இல்லை. படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் அதிகம் பேசியுள்ளோம். இந்த படத்தில் எனக்கு பின்னால் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் எங்களுக்கு சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி. 
 
நடிகர் சந்தோஷ் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். ஆனந்திதா சுந்தர் அவர்களை எனக்கு பள்ளியிலிருந்து தெரியும். அவர் எனது சிறந்த நண்பர். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கு மிகப்பெரிய நன்றி. குஷ்பு மேடம் அவர்களுக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பில்லர் ஆக இருந்துள்ளார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்கு அண்ணன் போல. அவர் வைத்திற்குக்கும் கதைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கும். அவரால் எந்த ஒரு ஹீரோவிடமும் சென்று கதை சொல்ல முடியும். ஆனால் என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் உழைப்பு மிகப் பெரியது. அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்துள்ளோம். VFX டீம் அருமையான வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கிடைத்த குறைந்த நேரத்திலும் சிறப்பாக பணி புரிந்துள்ளார்கள். ஸ்ருதி அவர்கள் என்னை மிகவும் அழகாக காண்பித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையில் அதிரடி ஆக்சன் கதைகள் தான் பார்த்திருப்போம். இது ஒரு வித்தியாசமான படமாக அவரது இசையில் இருக்கும். பக்ஸ் சார் அவர்களுடன் ரிகர்சல் செய்துவிட்டு நடிப்பது மிகவும் பிடிக்கும், அது சுவாரசியமாகவும் இருக்கும். 
 
வினோத் அவர்களை நீண்ட வருடமாக தெரியும். இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். ரேஷ்மா கதாபாத்திரத்தை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம். ஒரு சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார். சாம்யுக்தா அவர்கள் எனக்கு ஒரு முதுகெலுமாக இந்த படத்தில்  இருந்துள்ளார்கள். அவருடைய பெர்பாமென்ஸை விட்டுவிட்டு நான் நன்றாக நடிப்பதற்கு உதவினார்கள். அவர்களுடைய அன்புக்கு மிகப் பெரிய நன்றி. பிருந்தா மாஸ்டர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் கடவுள் மாதிரி. எனக்கேத்த ஸ்டைலை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் கொரியோகிராபி செய்துள்ளார்கள். சுந்தர் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதைக்கு ஓகே சொன்னதற்கு  நன்றி. கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். உங்கள் அனைவரையும் என்டர்டைன்மென்ட் செய்யும் விதமாக தான் இனி வரும் படங்களில் நடிப்பேன். என்னுடைய அப்பா அம்மாவிற்கு நன்றி.
 
ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் அவர்கள் பேசும்போது, தினேஷ் குமார் அவர்கள் தான் இந்த படத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். குஷ்பு மேம் மற்றும் சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் போது எனது அப்பா அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்கள். அப்போது குஷ்பூ மேடம் நீ எப்போது சரி ஆகி வருவாயோ அப்பொழுது ஷூட்டிங் போலாம் என்று சொன்னார்கள். அதற்கு நான் எப்போதும் நன்றி கடனாக இருப்பேன். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன சொன்னாலும், சலிக்காமல் சொன்னதை செய்தார்கள். என்னுடைய உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி 
 
இயக்குனர் அஸ்வின் கந்தசாமி அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். நான் ஒன்பது வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ஸ்டேஜில் பேசுவது இதுதான் முதல் முறை. இந்த மேடையில் ஏற வைத்த குஷ்பூ மேடம் அவர்களுக்கு நன்றி. மேடையில் ஏறி என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுத்த சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. அவரது வாழ்க்கையில் நடந்த பலவற்றை எனக்கு சொல்லி இருக்கிறார். படத்தில் தொழில்நுட்பக் குழுவினர் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. சாம் சிஎஸ் அவர்களின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. VFX டீமை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன். படத்தில் VFX காட்சிகள் அதிகமாக இருக்கும். என்னுடைய முதல் படத்திலேயே பிருந்தா மாஸ்டர் அவர்களுடன் வேலை செய்வது மிகப்பெரிய பெருமை. எனக்கு இது முதல் படம் என்ற உணர்வை யாரும் கொடுக்கவில்லை. இந்த படத்தை முதலில் ஒரு ஷார்ட் பிலிம் ஆக எடுக்க திட்டமிட்டோம். பிறகுதான் படமாக மாறியது. சந்தோஷ் தான் முதலில் இதனை ஒரு படமாக எடுக்கலாம் என்று சொன்னார். எனக்கு முழு கான்பிடண்ஸ் கொடுத்தது அவர்தான். இந்த படத்திற்கான கதாநாயகியை தேர்வு செய்ய மிகவும் சிரமப்பட்டோம். ரேஷ்மா அவர்கள் இந்த படத்திற்காக நான் கேட்டது, கேட்காதது அனைத்தையும் கொடுத்தார். வினோத் கிஷன் இந்த படத்திற்கு பிறகு ஆக்சன் படங்களை பண்ணுவதை தவிர்ப்பார் என்று நம்புகிறேன். படத்தின் செட் ஒர்க் மிகவும் சிறப்பாக இருந்தது. ஏசி சண்முகம் சார் அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களுடைய கனவு. பத்திரிகையாளர்கள் அனைவரின் சப்போர்ட்டும் எங்களுக்கு வேண்டும். 
 
குஷ்பு அவர்கள் பேசும்போது, இந்த டீம் மிக முக்கியமான டீம். இது ஒரு நல்ல ஒரு ராம்-காம் படம். சில நேரங்களில் இது போல ஒரு டீம் அமையும். இது கடவுள் எழுதி வைத்த கனெக்சன். அவர் தான் அனைத்தையும் முடிவு செய்கிறார். சந்தோஷம், ஆனந்திதாவும் பள்ளியிலிருந்து நண்பர்கள். ஆனால் பள்ளி காலத்தில் இருவருக்கும் ஆகாது. ஆனால் இப்போது காலை முதல் மாலை வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு பையன் கிடையாது, ஆனால் சந்தோஷ் போன்ற ஒரு அழகான பையன் எனக்கு கிடைத்துள்ளார். சந்தோஷ் மற்றும் ஆனந்திதா தான் இந்த கதையை கொண்டு வந்தார்கள். அப்போதுதான் அஸ்வின் கந்தசாமி வந்தார்கள். முதல் முறை கதை சொல்லும் போது எனக்கு பிடித்து விட்டது. இந்த படத்தில் காமெடி, எமோஷனல் அனைத்தும் இருக்கிறது. இது போன்ற கதையை நான் சமீபத்தில் கேட்கவில்லை. சந்தோஷை அவ்னியில் அறிமுகப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய பெருமை. ஒரு தாய்க்கு எந்த அளவுக்கு பெருமை இருக்குமோ அந்த அளவிற்கு எனக்கும் பெருமை உள்ளது. அவரிடம் அந்த ஃபேஷன், வெறித்தனம் என அனைத்தும் உள்ளது. அஸ்வினிடம் நிறைய கான்ஃபிடன்ஸ் உள்ளது. என்னுடைய படம், அதை எப்படி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது. இயக்குனருக்கு பிரீடம் கொடுக்க வேண்டும், அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று சுந்தர் சொன்னார்கள். சம்யுக்தா பிரியா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள். 
 
ரஜினி கதாபாத்திரத்திற்கு நிறைய பேரை தேர்வு செய்தோம். ரேஷ்மாவுக்கு நன்றிகள். நான் லொகேஷனுக்கு கூட போனதில்லை. சிவி சண்முகம் சார் அவர்களுக்கு எங்களது மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என்னுடைய மகள் இந்த படத்தில் ஒரு கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக அறிமுகமாகிறார். பொன்னியின் செல்வன் 2 படத்திலும் வேலை பார்த்தார். ஆனால் அவரது பெயரை போட மறந்து விட்டார்கள். இந்த படத்தில் அவருடைய பெயரை பார்க்கும் போது மனதிற்கு நிறைவாக உள்ளது. அவர்களுக்கு ஒரு புரொடியூசர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனந்திதாவிற்கு அவரது அப்பா போல வேலை செய்ய வேண்டும். ஒரு வேலையை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்று தேடுவார்கள். இந்த மேடையில் அவரை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கு. இன்றைய ஜெனரேஷனிடம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. டபுள் ஆக்குபன்சி படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும். வெளியில் வரும்போது நிச்சயம் கண் கலங்கி வருவீர்கள்.

“உயிரிணையே” இசை வெளியீட்டு விழா!

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது.

பிரபல இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், இயக்குநருமான கங்கை அமரன், இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் பேசியதாவது…

“அப்பெல்லாம் ஏவிஎம் (AVM) ஸ்டுடியோவில் மியூசிசியன்களை மாசக்கணக்குல புக் பண்ணி வச்சிருந்த காலங்கள். ஜானகி அம்மாவா இருக்கட்டும், எம்.எஸ். ராஜேஸ்வரியா இருக்கட்டும், குழந்தைகள் பாடுறதுக்காக அவங்கள மாச சம்பளத்துக்கு அங்கேயே வச்சிருப்பாங்க. தினசரி வந்து பாடல்களைக் கத்துக்கணும், ரிகர்சல் பண்ணணும்னு மாச சம்பளம் கொடுத்து வச்சிருந்த காலம் அது.

ஆனா இந்த காலத்துல கம்ப்யூட்டர்ல போட்டா மியூசிக் வந்துடுது. தன்னுடைய பரம்பரைய நினைக்கும்போது இவங்கள மாதிரி (சதா சுதர்சனம்) அப்பாக்கள் இல்லன்னா இன்னைக்கு மியூசிக்கே டெவலப் ஆயிருக்காது. நாங்கல்லாம் இளையராஜா அண்ணன் வீட்ல போயிட்டு உட்கார்ந்து பார்த்து ரசிச்சவங்க. சதா நிறைய இது மாதிரி பண்ணனும், என்ன அப்பப்ப சாங் எழுத கூப்பிடணும்.”

“சதா பற்றி சொல்லணும்னா, அவர் எந்த பரம்பரையில இருந்து வந்திருக்கார் அப்படிங்கறத பற்றி மிகச் சிறந்த கிட்டாரிஸ்ட். நாங்கல்லாம் ஒரே மாஸ்டர்ட்ட தான் படிச்சோம், ஜி. தர்மராஜ் மாஸ்டர்ட்ட. இளையராஜா அண்ணா, நானு, சதா எல்லாமே அவரிடம்தான் கத்துக்கிட்டோம். சதா அந்த டைம்ல ரொம்ப பிஸியான ஒரு கிட்டாரிஸ்ட். தேவராஜ் மாஸ்டர், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், அர்ஜுன் மாஸ்டர், தெலுங்குல ராஜா நாகேந்திரா, ஜி.கே. வெங்கடேஷ்னு எல்லார்ட்டயுமே வாசிச்சவர்.

அண்ணனுடைய (இளையராஜா) ஒரு 150 படங்கள், 200 படங்களுக்கு அவர் பக்கத்துல கிட்டார் வாசிச்சவன் நான். ‘பருவமே புதிய பாடல்’ எந்த பாட்டு எடுத்தாலும் ரிதம் கேட்டா நம்மதான் பெஸ்ட். பிலிப்ஸ் அப்படிங்கிறவர் தான் இந்த திரைப்பட உலகத்துல பெஸ்ட் கிட்டார் பிளேயர். எம்.எஸ். விஸ்வநாதன் சார் பேக்ரவுண்ட் எல்லாம் அவர்தான் வாசிப்பார். அப்படிப்பட்டவரோட ஒரே மைக்ல வாசிக்கும் போது அவர் சொன்ன வார்த்தை, ‘நான் பார்த்ததுல பெஸ்ட் ரிதம் கிட்டார் பிளேயர் நீதான்பா’ அப்படின்னு சொன்னது எனக்கு அவ்ளோ பெரிய பெருமை.”

“ஒரு ரீரெக்கார்டிங் நடக்குது, எனக்கு அவ்ளோ தூரம் சோலோ வாசிக்க தெரியாது. கிட்டார்ல எத்தனை கார்டு கொடுத்தாலும் வாசிச்சிருவேன். மெலடி வாசிக்கணும், காலைல 7 மணிக்கு வந்தாங்கன்னா 1 மணி வரைக்கும் ஒரு கால் ஷீட். வாகினி ஸ்டுடியோல ஜி தியேட்டர்ல தேவராஜ் மாஸ்டர்னா எல்லாம் பயப்படுவாங்க. ஏன்னா அங்க சத்தமே இருக்காது, அண்ணன் மாதிரிதான் அமைதியா இருப்பாங்க.

அவர் படத்தை பார்த்துட்டு, ‘அமர் இந்த இடத்துல நீ சோலோ வாசிச்சுக்கோ’ அப்படின்ட்டாரு. எனக்கு கொடுத்த நோட்ஸ் கொடுத்தா வாசிச்சிருவேன். ஆனா சோலோன்னா இஷ்டத்துக்கு வாசிக்கணும். எல்லாம் எட்டு மணி ஆகுது, அந்த ரீல முடிச்சாதான் கால்ஷீட் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு போகணும். இந்த சீன் வந்து லாஸ்ட்ல வருது. அப்ப எல்லாம் யாராவது தப்பா வாசிச்சாங்கன்னா மறுபடியும் ஃபர்ஸ்ட்ல இருந்து வாசிக்கணும், 10 நிமிஷம் ஓடக்கூடிய ரீல மறுபடியும் முதல்ல இருந்து மியூசிக் எல்லாரும் வாசிக்கணும்.

எனக்கா கை நடுங்குது. ஒன்பதாவது நிமிஷத்துல என்னோட சீன் வருது. அந்த பொண்ணு மாடி மேல இருந்து கீழ வந்து போஸ்ட்மேன்ட்ட லெட்டர் வாங்குற வரைக்கும் நீ சோலோ வாசிச்சுக்கோன்னு சொல்லிட்டாரு. நான் வாசிக்க ஆரம்பிக்கிறேன்… ‘டாடாடாடா…’ அப்படி வாசிச்சுட்டு இருக்கேன், அதுக்கு மேல எனக்கு தெரியல. கட் ஆயி போச்சு. இதே மாதிரி மூணு தரம் போச்சு. வயலின் வாசிக்கிறவங்க எல்லாம் ‘அமர் சீக்கிரம் வாசிச்சிருப்பா நாங்க வீட்டுக்கு போகணும்’னு சொல்றாங்க. எனக்கு இன்னும் உதறுது. இந்த மாதிரில்லாம் அனுபவப்பட்டு, திட்டு வாங்கி, அடி வாங்கி கத்துக்கிட்டு வந்தவங்கதான் நாங்க.”

“இப்ப நம்ம ஒரு லைனை எடுத்தோமா, அது எங்க வாசிக்கிறோம்னு எல்லாம் பீட் பண்ணி இனிமே ஏஐ (AI) தொழில்நுட்பத்துல கொடுத்தாச்சுன்னா அதுவே போட்டு கொடுத்துடுது. நம்ம கால தூக்கவே முடியாது. ஏஐ பண்ணி கொடுத்த பாட்டுலதான் நிறைய போயிட்டு இருக்கு. நிஜமாவே ஏஐ ஒர்க் நம்ம சிந்தனையை கெடுத்துட்டு இருக்கு அப்படிங்கறதை நான் உறுதியா சொல்றேன்.

அதை நம்பி நம்ம வேலை செஞ்சோம்னு சொன்னா பிற்காலத்துல நமக்கு மூளை வேலை செய்யாது. ஒரு டியூனை ஏஐ-ல கொடுத்துட்டு வார்த்தை எழுதுறது, பாடுறதுன்னு பண்ணா இதுல எப்படி நம்ம பேர் போட்டுக்கிறது? ஏன்னா அதை கிரியேட் பண்ணி கொடுத்துடுது, ஆனா இசை ‘கங்கை அமரன்’னு போட்டுக்கறது மரியாதையா? வருங்கால குழந்தைகள் தன்னால் சிந்திக்க கத்துக்கொள்ளணும், சிந்திக்க எழுதிக் கொள்ளணும். வளர்ற குழந்தைகளை நீங்க அப்படி வளங்க, ‘உனக்கு இருக்கிற சுயரூபத்தை வெளியே கொண்டு வா’ அப்படிங்கற மாதிரி சொல்லணும்ங்கறது என் மனசோட ஆசை.”

“நிஜமாவே இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்ததற்கு, கிளாடி அவர்களை பாராட்டணும். ஏன்னா நமக்கு ஒரு நல்ல புரொடியூசர் கிடைச்சிருக்காரு. உங்களோட எண்ணம் நிச்சயமாக ஆழமாக இருக்கும், ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதை சினிமா படமாக கொண்டு வரணும்னு மனசுல இருக்கறது எனக்கு தெரியும்.”

பயில்வான் ரங்கநாதன் சர்ச்சை மற்றும் இளையராஜா குறித்த விளக்கம்

“பிரஸ் நண்பர்கள் எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். நல்லவைகளை மட்டும் எழுதுங்கள். பயில்வான் ரங்கநாதன் மாதிரி, ‘அவருக்கு இட்லிக்கு வழி இல்ல, தோசைக்கு வழி இல்ல’ அது மாதிரில்லாம் எழுதாதீங்க தயவுசெய்து. கூப்பிட்டு பயல்வான்ட்டே சொல்லிட்டோம், ‘ஏன்யா இந்த மாதிரில்லாம் எழுதுறீங்க, இல்லாத பொல்லாததெல்லாம் எழுதுறீங்க’ன்னு. இந்த ஸ்டேஜ்ல சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு. இல்லாத பொல்லாததெல்லாம் சொல்லி எழுதுறதுக்கு, அவ்வளவு பெரிய ஆளா வளர்ந்த ஆட்களை நம்ம திட்டணுமா?

அவங்க கஷ்டப்படுறாங்க, குழந்தைகள் எல்லாம் ஒண்ணா இருக்காங்க வீட்ல. வேணும்னா எங்க வீட்ல ஒரு வாரம் வந்து இருந்து பாருன்னு சொன்னேன். யுவன் துபாயில செட்டில் ஆயிட்டான், கார்த்திக் அவனும் அங்கதான் இருக்கான். ‘அண்ணன் இதெல்லாம் இல்லாம அனாதையா இருக்காரு’ அப்படி என்னத்தையோ கிரியேட் பண்ணி இளையராஜாவை எதுக்கு இறக்குறீங்க? 50 வருஷம் ஒருத்தர் ஆளுமையா நிலையா நின்றுருக்காரு, அப்படிப்பட்ட ஆளை இறக்கணுமா? நல்லா யோசிச்சு பாருங்க, பயல்வான் எழுதினது கரெக்டா? பயல்வான் அவர்கள் அதற்கு மன்னிப்பு கேட்டே ஆகணும்.

எங்களை நேசிச்சு கொண்டு போங்க. ஏன்னா 50 வருஷம் வாழ்ந்துருக்கோம், அண்ணனுக்கு 82 வயசுக்கு மேல ஆகுது. ஆகவே எங்களை காப்பாத்துறதுக்காக எழுதுங்க. நாங்க இதுவரைக்கும் வேலை செஞ்சுட்டு இருக்கோம்யா. பயில்வான் அவர்களுக்கு போன் பண்ணி சொன்னப்ப ‘ஸாரி’ன்னு சொல்லி சொன்னாரு, ‘ஐயோ இது தெரியாம யாரோ சொன்னதை நான் போட்டுட்டேங்க தயவு செய்து மன்னிச்சிருங்க’ன்னாரு.

இளையராஜா தனிமையை நாடிக்கொண்டு இருக்கிறார், நான் போனாலே பேசாமல் எழுதிட்டு இருப்பாரு, அவ்வளவுதான் அவர் வேலை. அவரை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், அவரை அவரா இருக்க விடுங்க. எங்க கனவும் நினைவும் இசையே, இசை இருந்தால் மரணமேது என்று பாடுன மாதிரி இன்னைக்கு வரைக்கும் மியூசிக் லேனை தவிர வேற எங்கயாவது போயிருவோமா? எங்களுக்கு இருக்கற பணத்துக்கும் வசதிக்கும் பில்டிங் கட்டி வாடகைக்கு விட்டு நல்ல லாபம் சம்பாரிச்சு ஒரு பெரிய பில்டர்ஸ் ஆயிருக்கலாம், ஆனா அந்த மாதிரி எல்லாம் எண்ணம் வரல. இசையிலேயே இருக்கிறோம், ஆகையால் எங்கள் மேல் தவறுகளை எழுத வேண்டாம்.”

“இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு மிக ஆதாரமாக இருந்த நமது பாபு அவர்களுக்கு, டைமண்ட் பாபு அவர்களுக்கு ரொம்ப நன்றி. பாபு தான் அண்ணனுக்கும் (இளையராஜா) சரி, எங்களுக்கும் சரி ரொம்ப பக்கத்து துணையாக இருப்பவர். எந்த வேலைனாலும் நிமிஷத்துல அரேஞ்மெண்ட் பண்ணி கொடுப்பார். நாங்க அந்த காலத்துல நாடகத்துல வாசிக்கும் போது இவங்க அப்பாவோட எங்களுக்கு பழக்கம், அவங்க அப்பாதான் எங்களை அப்ப தூக்கி வளர்த்தவர். இன்றைக்கு பார்த்தால் அவங்க அப்பா எப்படி இருந்தாரோ அதே மாதிரி இவரும் எல்லாரோடையும் சேர்ந்து அரவணைப்பாக இருக்கிறார், ரொம்ப நன்றி பாபு” என்று கங்கை அமரன் தனது உரையை நிறைவு செய்தார்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் சதா சுதர்சனம் பேசியதாவது…

எல்லாருக்கும் வணக்கம். இந்த சாங் வந்து எனக்கு ஆப்பர்சுனிட்டி கொடுத்த கிளாடி ஜெராடு சாருக்கு ரொம்ப நன்றி. அதுல ரொம்ப ஹைலைட் கங்கை அமரன் அண்ணன் பாட்டு எழுதினதுதான். நான் அவர்கிட்ட, நாங்க கார்ல போயிட்டு இருக்கோம்… நான் டியூன் போட்டேன், அப்படியே உடனே கேட்டுட்டு ஒரு 10 நிமிஷத்துக்குள்ள பாட்டை எழுதி எனக்கு கொடுத்துட்டாரு. இந்த சாங் இவ்வளவு சூப்பரா வந்துருக்கு, நீங்க பார்த்தீங்களா இந்த பாட்டை?

அப்புறம் நான் இவ்வளவு தூரம் மியூசிக் பண்றதுக்குக் காரணம் இளையராஜா சார்தான். அவர்கிட்ட ஒர்க் பண்ண எக்ஸ்பீரியன்ஸ்… அவர் பார்த்தீங்கன்னா எனக்கு சேலபோன், வைப்ரோபோன், எலக்ட்ரிக் கிட்டார், அக்வாஸ்டிக் கிட்டார்னு எல்லா இன்ஸ்ட்ருமெண்ட்டையும் வாசிக்க என்கரேஜ் பண்ணிருக்காரு. அவர்கிட்ட ஒர்க் பண்ண அந்த எக்ஸ்பீரியன்ஸ இந்த ஜென்மம் இல்லை, எந்த ஜென்மத்திலயும் என்னால மறக்க முடியாது. இளையராஜா, ஐ லவ் யூ… 

 

இவ்விழாவில் தயாரிப்பாளரும் இயக்குநருமான கிளாடி ஜெராடு (Claude Gerard) பேசியதாவது…

“இங்கு வந்திருக்கும் பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள். இந்த மேடையில் என்னோடு அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய அண்ணன் கங்கை அமரன் அவர்களுக்கும், மூத்த இசைக்கலைஞர் மாஸ்டர் சதா சுதர்சனம் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்தாலும், தமிழ் மொழியின் மீதும், தமிழ் கலை-கலாச்சாரத்தின் மீதும் எனக்கு எப்போதுமே மிகப்பெரிய காதலும் பற்றும் உண்டு. அதன் வெளிப்பாடாகத்தான் இந்த ‘Drums Jerry Entertainment’ நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் இந்த ‘உயிரிணையே’ இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம்.”

“இன்றைய நவீன காலகட்டத்தில், பெரும்பாலான பாடல்கள் மற்றும் இசையமைப்புகள் கணினி மயமாக்கப்பட்ட (Computerized Loops) சூழலில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நான் ஒரு காலத்தால் அழியாத, மென்மையான மற்றும் தூய்மையான காதல் மெலடி பாடலை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு உண்மையான இசைக்கருவிகளை (Acoustic and Natural Instruments) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இசைஞானி இளையராஜா அவர்களின் குடும்பத்தின் மீதும், அவர்களின் இசைப் பயணத்தின் மீதும் எனக்கு எப்போதுமே அலாதியான மரியாதையும் அன்பும் உண்டு. அந்த வகையில், இந்த ‘உயிரிணையே’ பாடலுக்கு வரிகள் எழுத அண்ணன் கங்கை அமரன் அவர்களை அணுகியபோது, அவர் உடனடியாகச் சம்மதித்தது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். அவர் மிக அழகான, ஆழமான தமிழ் வரிகளை இந்த ஆல்பத்திற்காக எழுதிக் கொடுத்துள்ளார்.

அதேபோல், தமிழ் சினிமாவின் மிக மூத்த கிட்டார் கலைஞரும் இசையமைப்பாளருமான சதா மாஸ்டர், தனது அசாத்திய திறமையால் இந்த ஆல்பத்திற்கு மிக அற்புதமான மெல்லிசை அமைத்துக் கொடுத்து, பாடலுக்கு உயிர் சேர்த்துள்ளார்.”

“இந்த ‘உயிரிணையே’ பாடலை வெறும் தமிழ்நாட்டோடு மட்டும் நிறுத்தாமல், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, துபாய் என உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். உலக ரீதியாக தமிழ் இசை இன்னும் பெரிய உயரங்களை எட்ட வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

இந்த இசை ஆல்பம் என்பது எனது கலைப் பயணத்தின் ஒரு ஆரம்ப முயற்சிதான். உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் மற்றும் தமிழக ஊடகங்கள் எங்களுக்குத் தரும் ஆதரவை மூலதனமாகக் கொண்டு, மிக விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு முழு நீளத் திரைப்படத்தை (Feature Film) தயாரித்து இயக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான ஆரம்பக்கட்ட கதைக் களப் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.”

“இந்த ஆல்பத்தில் மிக அற்புதமாகப் பாடியுள்ள இளம் பாடகர்கள் தவசீலன், ஃபர்ஹான் நவாஸ் மற்றும் இதில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

அதேபோல், இந்த இசை வெளியீட்டு விழாவை இவ்வளவு பிரம்மாண்டமாகவும் நேர்த்தியாகவும் ஒருங்கிணைத்துக் கொடுத்த மக்கள் தொடர்பாளர் (PRO) டைமண்ட் பாபு அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் போன்ற சுயாதீனக் கலைஞர்களுக்கும் (Independent Artists), புதிய முயற்சியோடு வரும் தயாரிப்பாளர்களுக்கும் ஊடக நண்பர்களாகிய நீங்கள் எப்போதுமே பேராதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று கிளாடி ஜெராடு தனது உரையை நிறைவு செய்தார்.

Shree Jain Sahayak Samiti Announces “WeBe Mela 2026”

Chennai:

Shree Jain Sahayak Samiti proudly announces the launch of “WeBe Mela 2026” (Women Empowerment Beyond Entrepreneurship), a grand initiative dedicated to promoting women entrepreneurship, business empowerment, and community development. The much-awaited Maha Mega Mahila Mela will be held at YMCA, Royapettah, Chennai.

Shree Jain Sahayak Samiti provided 400 free stalls exclusively to women entrepreneurs spanning all communities. From vibrant clothing boutiques, handlooms, and creative games to artisanal food stalls, the venue transformed into a bustling, dynamic commercial hub. Women entrepreneurship stood out as the ultimate highlight of the day, offering these business owners a massive, rent-free platform to showcase their talents, network with industrial think-tank leaders, and scale up their brands. The response from the public was nothing short of historic, with an estimated 15,000 people streaming through the gates throughout the day, creating an energetic and electrifying atmosphere.

The day featured an enlightening Tech-Talk panel consisting of industrial and financial think-tank leaders. Following this, the prestigious Shashaktham Stree Awards ceremony commenced to celebrate inspiring female achievers. The award ceremony was graced by Esteemed Guests, Thiru Shankar, I.P.S. (A.D.G.P, Prisons, Tamil Nadu) and Mr. Manjit Singh (Gen. Secretary & Correspondent, Guru Nanak College and School). Shri C. Murugesan, I.R.S. and Shri P.K. Senthil Kumar, I.R.S.

A special Tech-Talk Session will feature an eminent panel of industry leaders, government officials, financial experts, and business mentors who will guide aspiring women entrepreneurs on business growth, finance, compliance, innovation, and scaling opportunities. The panel includes representatives from EDII-TN, MSME, NSIC, SIDBI, WEWA, and leading industry experts.

Speaking about the initiative, Shri.K.Subhashchand Ranka, President, Shree Jain Sahayak Samiti, shared that WeBe Mela is designed not only to encourage entrepreneurship among women but also to build confidence, economic independence, leadership, and social inclusion. The event will also showcase vibrant shopping, food, and entertainment zones, an exclusive Sponsors’ Pavilion, business support and networking opportunities, and the recognition and selection of outstanding “WeBe Yashashvini” women entrepreneurs. Shree Jain Sahayak Samiti warmly invites citizens, families, entrepreneurs, business leaders, and members of the media to attend and support this landmark initiative for women empowerment.

This grand execution was steered by the dedicated core leadership of the Samiti, including President Shri Subashchand Ji Ranka, Vice-President Shri Sampatraj Ji Bhandari and Shri Gautham Ji Kankariya, Secretary Shri Dhanpatraj Ji Sanklecha, Joint Secretary Shri Lalith Ji Ranka, Treasurer Shri Basanth Ji Baradiya, Joint Treasurer Shri Mahaveer Ji Gadiya and Project Chairman Shri Rajendraji Kumar Sanklecha. The managing committee extended their deep appreciation to all other trustees, associate members, lady co-ordinators, and youth delegates of Shree Jain Sahayak Samiti, whose tireless, round-the-clock efforts and meticulous planning ensured a flawless and exemplary experience for all.

The SHASHAKTHAM Stree – EMPOWERED WOMEN Awards will honor distinguished achievers including Smt. Nupur Jain, Squadron Leader, Indian Air Force; Smt. Rupa Rathod, Lady Jockey and World Championship participant; Dr. Priti Udhay Khetan, MS, DNB, FRCS, Oculoplastic & Aesthetic Surgeon; Smt. Meena Dadha of Mukti M.S. Dadha Foundation; Smt. Lalitha Jangra of Khushi Foundations; Smt. Pooja Dugar, Sound Healing Therapist; and Adv. Sheela Bhandari, Senior Counsel & SPP for Direct & Indirect Taxes at the Madras High Court.

ஆப்ரேஷன் தியேட்டரில் 20 வயது பெண்ணை சீரழித்த டாக்டர்!

த்திர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கின் இந்த வழக்கில் தலையிட்டத்தை அடுத்து, சுகாதாரத்துறை மருத்துவமனைக்கு சீல் வைத்தது. மருத்துவரின் உரிமத்தை இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியது. லக்னோவின் பக்ஷி-கா-தலாப் பகுதியில் உள்ள இந்தௌரபாக் என்ற இடத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில், வலிப்பு நோய்க்கான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவரிடமிருந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மே 21 அன்று அறுவை சிகிச்சை அறைக்குள் மாணவிக்கு மயக்க ஊசி செலுத்திய பின்னர், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் விஜயகுமார் கிரி அவரைக் கற்பழித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் தந்தையின் கூற்றுப்படி, அவரது மகள் மீண்டும் மீண்டும் ஏற்படும் வலிப்பு நோய் தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக மே 19 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 21 ஆம் தேதி பிற்பகல் சுமார் 3 மணியளவில் தனது மகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு டாக்டர் கிரி, ஆக்சிஜன் உதவி அளிப்பதாகக் கூறி அவரை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.

ஆரம்பத்தில் நோயாளியின் மூத்த சகோதரியும் ஒரு செவிலியரும் அவருடன் அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றனர், ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவர் அவர்கள் இருவரையும் வெளியே செல்லுமாறு கேட்டுக் கொண்டார். காவல்துறையிடம் அளித்த புகாரில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, மருத்துவர் அவரது கையில் பொருத்தப்பட்டிருந்த நரம்புவழி ஊசி மூலம் மயக்க மருந்தைச் செலுத்தியதாகவும், அதன் பிறகு அவர் சுயநினைவை இழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, சிறிது நேரம் கழித்து அவருக்குப் பகுதி சுயநினைவு திரும்பியதும், மருத்துவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டி அழுதுகொண்டே அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளியே ஓடினார். தனது உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் சில ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததாகவும், தற்போது 12-ஆம் வகுப்பில் படித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமைக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏடிசிபி (வடக்கு) ட்விங்கிள் ஜெயின் உறுதிப்படுத்தினார். துணை முதல்வர் பிரஜேஷ் பதக் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பதக், “மாநில அரசு பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறுதுணையாக நிற்கிறது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும்” என்று கூறியுள்ளார். மருத்துவமனைக்கு சீல் வைக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரின் மருத்துவ உரிமத்தை இடைநீக்கம் செய்யவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

10வயது சிறுமியின் சடலம்! கோவையில் பரபரப்பு!!

கோவை சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த மே 21 அன்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார். இருட்டியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. எனவே அச்சமடைந்த பெற்றோர்கள் உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் குமார் ரெட்டி, சூலூர் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார். போலீஸார் தனிப்படை அமைத்து நடத்திய அதிரடி விசாரணையில், வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அதே பகுதியை சேர்ந்த 2 சந்தேக நபர்கள் பிடிபட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, தற்போது சூலூர் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கார்த்தி என்பவன் சிறுமியைக் கடத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். மேலும், அவனுக்கு உதவியதாக மோகன்ராஜ் என்பவனையும் போலீசார் பிடித்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த முன்பே குழந்தைக்கு அறிமுகமான கார்த்திக் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதும், அவருடன் மோகன்ராஜ் இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும், பொதுமக்களும் திரண்டு சூலூர் காவல் நிலையத்தின் முன்பாக விடிய விடியத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். “குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் அல்லது என்கவுண்டர் செய்யப்பட வேண்டும்” என்று அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர்.

இரவு முழுவதும் நீடித்த இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்தது, அங்கு குவிக்கப்பட்டிருந்த உயர்தர போலீஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் நள்ளிரவிலும், அதிகாலையிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். “குற்றவாளிகள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூலூர் காவல் நிலைய முன்பாக இன்னமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் கோவை பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தற்போதைய அமைச்சர்கள் பற்றி ஓர் பார்வை!

ஏ.ஸ்ரீநாத் – தமிழக முதல்வர் விஜய்யின் நண்பரான இவர், தூத்துக்குடியில் திமுக அமைச்சர் கீதாஜீவனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 52 வயதான இவர் விஜய் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். இவருக்கு மீன்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்.கமலி – நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த எஸ்.கமலி, அவிநாசி சட்டப்பேரவை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். அத்தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை தோற்கடித்தவர். இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தமிழக அமைச்சரவையின் இளம் அமைச்சர்களில் கமலியும் ஒருவர். இவருக்கு வயது 28. இவருக்கு கால்நடை வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சி.விஜயலட்சுமி: தமிழ வெற்றிக் கழகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார் சி.விஜயலட்சுமி. இவர் நாமக்கல் மாவட்ட குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றார். அங்கு அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பி.தங்கமணியை வீழ்த்தினார். இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். சுயதொழில் செய்துவந்தார். இவருக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்.வி.ரஞ்சித்குமார் – இவர் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 50 வயதான இவர் வேளாண், ரியல் எஸ்டேட் தொழில்களை செய்துவருகிறார். இவருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பி.ராஜ்குமார் – கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.ராஜ்குமாருக்கு வயது 46. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளார். இவருக்கு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பி.மதன்ராஜா – தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் பொறியியல் பட்டதாரி. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்.ராஜேஷ் குமார் – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ராஜேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் இந்தத் தொகுதியில் 3-வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராகவும் உள்ளார். இவர் சட்டம் பயின்றுள்ளார். இவருக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சராகப் பதவியேற்றபோது, “காமராஜ், ‘ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி வாழ்க’ என அவர் முழக்கமிட்டதை ஆளுநர் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.விஜய் பாலாஜி – ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற எம்.விஜய் பாலாஜி, கடந்த காலங்களில் 2 இடைத்தேர்தல்களை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவற்றில் வெற்றி பெறவில்லை. இவர் வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவராவார். சொந்தத் தொழில் செய்கிறார். இவருக்கு நெசவு, கைத்தறித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் – ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன், அதிமுக மூத்த தலைவர், சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.தனபாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திமுக அமைச்சர் மதிவேந்தனை வீழ்த்தினார்.

தவெகவில் இணையும் முன்னர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் இவர் நீலகிரி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அவரது தந்தை தனபால், தமிழக சட்டப்பேரவைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை பட்டமும், டெல்லி ஐஐபிஎம் மையத்தில் எம்பிஏவும் முடித்துள்ளார். இவருக்கு வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பெ.விசுவநாதன் – மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விசுவநாதன், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சி இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசியாக அறிவித்த வேட்பாளர் இவர்தான்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே பட்டியலின வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். 2009 – 2014 காலக்கட்டத்தில் இவர் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உயர் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்.குமார் – சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.குமார் ஒரு தொழிலதிபர். அவர் பொறியியல் பயின்றுள்ளார். அண்மையில் ஐஐஎம் பெங்களூருவில் பிசினஸ் லீடர்ஷிப் பயின்றுள்ளார். இவருக்கு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், இணைய சேவை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கே.விக்னேஷ் – கிணத்துக்கடவு தொகுதியில் வெற்றி பெற்ற கே.விக்னேஷுக்கு வயது 38. கோவை கிணத்துக்கடவு அதிமுக கோட்டையாகக் கருதப்பட்ட நிலையில், அவர் அங்கு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள மச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். 38 வயதான இவர் பிஎஸ்சி கணினி அறிவியல் பட்டம் பெற்றவர். இவர், மச்சாம்பாளையம் பகுதியில் சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் மன்றத்தில் பணியாற்றி வந்த இவர், தவெக-வில் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

வி.சம்பத்குமார் – கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற வி.சம்பத்குமார், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனை வீழ்த்தி கவனம் பெற்றார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வாயிலாக எம்பிஏ முடித்துள்ளார். சுயதொழில் புரிந்துவருகிறார். இவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் – ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராஜீவ் ஒரு மருத்துவர். 33 வயதான இவர், தவெக இளம் எம்எல்ஏக்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவருக்கு சுற்றுசூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

வி.காந்திராஜ் – 52 வயதான இவர், அரக்கோணம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் சிவில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். 12-ம் வகுப்பு வரையிலும் படித்துள்ளார். இவருக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெகதீஸ்வரி.கே – ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு வயது 40. இவர் ஒரு பட்டதாரி. பத்திரிகை துறை அனுபவம் கொண்டவராகவும் அறியப்படுகிறார். இவருக்கு சமூக நலத் துறை, மகளிர் மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

விஜய் தமிழன் பார்த்திபன் ஏ – சேலம் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற இவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தவெகவில் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து தற்போது வரை பயணித்த பலருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ விஜய் தமிழன் பார்த்திபனும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர். பழைய பேருந்து நிலையத்தில் சிறியதாக மொபைல் கடை ஒன்றை நடத்தி வந்தார். தீவிர விஜய் ரசிகராக இருந்தார். சேலம் மாவட்ட அளவில் விஜய் ரசிகர் மன்றத்தை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது பழைய பேருந்து நிலையம் அருகில் பெரிய மொபைல் ஷோரூம் ஒன்றை வைத்திருக்கிறார். விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர். இவருக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர். ரமேஷ் – ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 10-ம் வகுப்புவரை படித்த இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தவர் ஆவார். இவருக்கு இந்து சமய அறநிலையத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்னரசு.கே – ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் வெற்றி பெற்ற இவருக்கு 36 வயது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். கமிஷன் ஏஜன்ட்டாக பணிபுரிவதாக தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

முகமது ஃபர்வாஸ்.ஜே – 31 வயதான இவர், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அச்சுத் தொழில் செய்துவந்தார். இவருக்கு தொழிலாளர் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

டி.சரத்குமார் – சென்னைக்கு அருகிலுள்ள முக்கியத் தொகுதியான தாம்பரத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்எல்ஏ டி.சரத்குமார். இவர் எம்.எம்.ஜெயின் கல்லூரியில் பி.பி.ஏ பட்டம் பெற்றார். முதன்முறையாகத் தேர்தலில் நின்று, திமுக-வின் கோட்டையாகக் கருதப்பட்ட தாம்பரத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். திமுகவின் ஆர்.எஸ்.கிருத்திகா தேவியை இவர் 35,621 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, இவர் கட்டுமானத் துறையில் சிவில் ஒப்பந்ததாரராக தொழில் செய்து வந்தார். இவருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

என்.மரிய வில்சன் – ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற மரிய வில்சன் நிதியமைச்சர் ஆகியிருக்கிறார். முனைவர் பட்டம் பெற்றவராக அறியப்படுகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழகத்தில் பிரபல கல்வி நிறுவன அதிபராக விளங்கிய ஜேப்பியாரின் மருமகன்தான் மரிய வில்சன். ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் கணவரான இவர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்டியலின அமைச்சர்கள் 7 பேர்!

முதல்வர் விஜய் அமைச்சரவையில் கமலி, விஸ்வநாதன் , ராஜ்மோகன், லோகேஷ் தமிழ்செல்வன், தென்னரசு, காந்திராஜ், மதன்ராஜா ஆகியோர் ஆகிய 7 பேர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்களாவர். அதேபோல் விஜய்யின் அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். எஸ்.கமலி, சி.விஜயலக்‌ஷ்மி, கீர்த்தனா, ஜெகதீஸ்வரி ஆகியோர் அமைச்சர்களாகியுள்ளனர்.