Friday, April 17, 2026
Blog

MR X விமர்சனம்

MR X திரைப்பட விமர்சனம் விரைவில்…..

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் விடுமுறை!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-


தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026, வாக்குப்பதிவு நாள் 23.04.2026 (வியாழக்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


பிரிவு 135-B-ன் முக்கிய விதிமுறைகள்:


1.வணிக வர்த்தக, தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரிந்து வாக்காளராக பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் வாக்குப்பதிவு நாளில் விடுமுறை பெறுவதற்கு உரிமை உடையவர்.
2.விடுமுறை நாளை காரணமாகக் கொண்டு எந்த ஒரு பணியாளரின் ஊதியத்திலிருந்தும் எந்தவித பிடித்தமும் செய்யக்கூடாது.
3.சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.
4.தினக்கூலி / தற்காலிக தொழிலாளர்களும் வாக்குப்பதிவு நாளில் விடுமுறை மற்றும் ஊதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.
5.தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு வெளியே பணிபுரியும் வாக்காளர்களும் இந்த சட்டப் பிரிவின் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்கு தகுதியுடையவர்கள்.
6.இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.


எனவே சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் உரிமையாளர்கள், மேற்குறிப்பிட்ட சட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி வாக்குப்பதிவு நாளான 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று தங்கள் அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குமாறு மாவட்ட ஆணையரும் சென்னை பெருநகர மாநகராட்சி தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன், தெரிவித்துள்ளார்.

 ‘குற்றம் கடிதல் 2′

2014ஆம் ஆண்டு வெளியான குற்றம் கடிதல் திரைப்படம், இயக்குநர் பிரம்மா G இயக்கத்தில், JSK சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகி, ஆசிரியர்–மாணவர் உறவை மையமாகக் கொண்ட ஆழமான கதை மூலம் தேசிய விருதுகளை வென்று தனித்துவமான இடத்தைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படம், இந்திய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றது.
 
இப்போது, அதன் தொடர்ச்சியாக  குற்றம் கடிதல் 2, இயக்குநர் S. K. ஜீவா இயக்கத்தில், மீண்டும் JSK சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகிறது. இவரே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். குற்றம் கடிதல் முதல் பாகம் சமூக அவலம் பற்றிப் பேசியது. ஆனால் இந்த படம் அத்தன்மையிலிருந்து விலகி, ஒரு சமூக த்ரில்லர் வகையில் உருவாகி, அதே சமயம் பள்ளிக்கூடப் பின்னணியைத் தக்க வைத்துள்ளது.
 
நடிகர் பாண்டியராஜன் தான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த உள்ளார்.
 
படத்தின் காட்சிகளைப் பார்த்தவர்கள், அதன் சிறப்பான தயாரிப்பையும், சுவாரஸ்யமான கதை சொல்லலையும் பெரிதும் பாராட்டி வருகின்றனர். படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும், இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட உள்ளது.
 
குற்றம் கடிதல் 2 திரைப்படம் கொடைக்கானல் , திண்டுக்கல், நாகர்கோயில் மற்றும் சென்னை ஆகிய சுற்றுப்புறங்களில் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.
படத்தில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ் , தீபக், பாவல், பத்மன், P. L. தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின் , ஜோவிதா லிவிங்ஸ்டன் , ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைக்கதை S. K. ஜீவா மற்றும் JSK சதிஷ் குமார் இணைந்து எழுதியுள்ளனர்.
 
தொழில்நுட்பக் குழு:
 
இசை: DK
 
எடிட்டிங்: C. S. பிரேம் குமார் 
 
ஒளிப்பதிவு: சதிஷ் G
 
ஸ்டண்ட்: மகேஷ் மேத்யூ 
 
நடனம்: மானஸ் 
 
பாடல் வரிகள்: ராஜா குருசாமி 
 
தயாரிப்பு நிர்வாகம்: P. ஆறுமுகம் 
 
டிசைன்: பவன் குமார் G
 
போஸ்டர்கள்: நந்தா 
 
கலர் கிரேடிங்: R. நந்தகுமார் 
 
DI & VFX: வர்ணா Digital Studio
 
ஆடியோ: ராஜா நல்லய்யா 
 
PRO: ரேகா
 
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் குற்றம் கடிதல் 2, சமூக த்ரில்லர் வகையில் ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்கும் திரையரங்கு அனுபவமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘மனிதன் தெய்வமாகலாம்’ விமர்சனம் RATING 2.9/5

டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களின் இயக்கத்தில் செல்வராகவன், குஷி ரவி, ஆர் எஸ் சதீஷ், கெளசல்யா, மைம் கோபி, ஒய் ஜி மகேந்திரன், லிர்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மனிதன் தெய்வமாகலாம்”.

விமர்சனம்:

சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் செல்வராகவனை காப்பாற்ற முயற்சிக்கும் எம்எல்ஏ ஒய்.ஜி.மகேந்திரன், அவரது முன்கதையை கேட்கிறார். பொன்வயல் கிராமத்தில் மனைவி குஷி ரவியுடன் எளிய வாழ்க்கை மேற்கொண்டு வருகிறார், செல்வராகவன். அவரது அக்கா கவுசல்யாவுக்கு அடாவடி ஆசாமி மைம் கோபி வட்டி பணம் கேட்டு குடைச்சல் கொடுக்க, கவுசல்யாவுக்கு உதவ சென்ற குஷி ரவியின் வாழ்க்கையில் மைம் கோபி விளையாட, சாதுவாக இருந்த செல்வராகவன் கையில் கத்தி எடுக்கிறார். பிறகு என்ன நடக்கிறது? தூக்கு தண்டனையில் இருந்து செல்வராகவன் தப்பித்தாரா? என்பது மீதி கதை….

கதைக்கான நாயகனாக செல்வராகவன் வாழ்ந்திருப்பது மகிழ்ச்சி. நாயகி குஷி ரவி கதைக்கு ஏற்ற நாயகியாக பொருந்தியிருந்தார். கெளசல்யாவின் கதாபாத்திரமும் வலுவானது தான். அதையும் சரியாகவே கையாண்டிருக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சதீஷும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்தார்.கே.ரவிவர்மாவின் ஒளிப்பதிவும், ஏ.கே.பிரியனின் பின்னணி இசையும் காட்சிகளை நகர்த்த உதவி செய்துள்ளன.

மைனஸ்: கதை பெரிய அளவில் ஈர்க்கவில்லை…. ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் தேவை….

‘மனிதன் தெய்வமாகலாம்’- தலைப்பு உண்மை, ஆனால் கதை சோர்வு.

வெளியானது ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்!

ன்னிதானம் பிஓ படக்குழுவினர் படத்தின் முதல் பாடலான ஏறி வந்தோம் ஐயப்பா பாடலை வெளியிட்டுள்ளனர். சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் சாரத்தை அழகாக படம்பிடித்துக் காட்டும் வகையிலும், மனதை உருக்கும் பக்தி பாடலாகவும் இது அமைந்துள்ளது. அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோரின் ஆழமான குரலில் உணர்வுபூர்வமாக பாடப்பட்டுள்ள இந்த பாடல், மோகன் ராஜனின் மனதை தொடும் வரிகளாலும், ஏ.ஜி.ஆர்-ன் மெய்சிலிர்க்க வைக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்டுள்ளது. இது படத்தின் உணர்ச்சிகரமான மற்றும் ஆன்மீக பயணத்திற்கு சரியான அடித்தளத்தை அமைத்துள்ளது.

புகழ்பெற்ற இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரால் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டிய நிலையில், தற்போது தனித்துவமான திரையனுபவத்திற்கான எதிர்பார்ப்பை இந்த பாடல் மேலும் அதிகரித்துள்ளது. சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள சன்னிதானம் பிஓ திரைப்படத்தை அமுத சாரதி இயக்கியுள்ளார். அவரே படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். இப்படத்தை மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன் மற்றும் ராமசாமி வேலு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், பல்வேறு திரையுலகங்களை சேர்ந்த திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்களுடன் மூத்த கலைஞர்களான சித்தாரா, பிரமோத் ஷெட்டி, முன்னார் ரமேஷ், கஜராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சபரிமலை, பம்பை, எருமேலி, சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம், பார்வையாளர்களுக்கு உண்மையான மற்றும் கதையோடு ஒன்றிப்போக செய்யும் பின்னணியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன்னிதானம் பிஓ படத்தின் மையக்கரு ஆழமான மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. ஐயப்ப பக்தர்கள் சந்திக்கும் ஓர் எதிர்பாராத சம்பவத்தையும், அதனை தொடர்ந்து அவர்களின் பயணத்தில் ஏற்படும் மாற்றங்களையும் சுற்றியே இதன் கதை நகர்கிறது. நம்பிக்கை, மன உறுதி மற்றும் மனித உறவுகளில் வேரூன்றிய இந்த திரைப்படம், மனதை ஆழமாக தொடும் ஒரு திரையனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அஜினு ஐயப்பன் எழுதியுள்ளார். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, பி.கே  படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தொழில்நுட்ப குழுவில் விஜய் தென்னரசு (கலை இயக்குநர்), மெட்ரோ மகேஷ் (சண்டைப் பயிற்சி), ஜாய் மதி (நடன அமைப்பு), நடராஜ் (ஆடை வடிவமைப்பு) மற்றும் மோகன் ராஜன் (பாடல் வரிகள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏறி வந்தோம் ஐயப்பா பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் பயணம் ஒரு சிறப்பான ஆன்மீக உணர்வுடன் தொடங்கியுள்ளது; வரும் நாட்களில் படம் குறித்த பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள சன்னிதானம் பிஓ மே மாதம் திரைக்கு வர உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

நடிகர்கள்:

யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி, சித்தாரா, பிரமோத் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத், முன்னார் ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகோடி, சாத்விக், அஸ்வின் ஹாசன், வினோத் சாகர், கல்கி ராஜா, விஷாலினி, தஷ்மிகா லக்ஷ்மண், மதுசூதன் ராவ்.

தொழில்நுட்பக் குழு:

 வசனம் & இயக்கம்: அமுத சாரதி
 கதை & திரைக்கதை: அஜினு ஐயப்பன்
 தயாரிப்பாளர்கள்: மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன் & ராமசாமி வேலு
 இணை தயாரிப்பாளர்: ஷபீர் பதான்
 தயாரிப்பு நிறுவனங்கள்: சர்வதா சினி கரேஜ் & ஷிமோகா கிரியேஷன்ஸ்
 ஒளிப்பதிவு: வினோத் பாரதி
 இசை: ஏ.ஜி.ஆர்
 படத்தொகுப்பு: பி.கே
 கலை இயக்குநர்: விஜய் தென்னரசு
 சண்டைப்பயிற்சி: மெட்ரோ மகேஷ்
 பாடலாசிரியர்: மோகன் ராஜன்
 நடன அமைப்பு: ஜாய் மதி
 ஆடை வடிவமைப்பாளர்: நடராஜ்
 ஒப்பனை: சி. சிபுகுமார்
 புரொடக்‌ஷன் கண்ட்ரோலர்கள்: ரிச்சர்ட் & டி. முருகன்
 நிர்வாகத் தயாரிப்பாளர்: விலோக் ஷெட்டி
 இணை இயக்குநர்கள்: ஷக்கி அசோக் & சுஜேஷ் ஆனி ஈப்பன்
 அசோசியேட் இயக்குநர்கள்: முத்து விஜயன், ராஜா சபாபதி, ராஜா ராம்
 உதவி இயக்குநர்கள்: அக்னி மகேந்திரன், சரவணன் ஜீவா
 பப்ளிசிட்டி டிசைனர்: வி.எம். சிவகுமார்
 புகைப்படங்கள்: ரெனி மோன்
 மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத் & பாரஸ் ரியாஸ்
 ஆடியோ லேபில்: ட்ரெண்ட் மியூசிக்

ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன்! நடந்தது என்ன?!

சிவகங்கையில் ரூ.8,000-க்கான மாதிரி கூப்பன் விநியோகித்த 2 பேரை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுகவினர் ஒப்படைத்தனர். அவர்களை அதிகாரிகள் விடுவித்ததால் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அதிமுக, திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் கருணாஸ், அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில்நாதன் போட்டி யிடுகின்றனர். சிவகங்கை 5-வது வார்டில் திமுகவினர் சிலர் வீடு வீடாகச் சென்று ரூ.8,000-க் கான மாதிரி கூப்பன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அதிமுக, பாஜகவினர் அங்கு சென்று 2 பேரை கூப்ப னுடன் பிடித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மரிய ஆரோக்கிய ரூபல்லா தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். 

மேலும், அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து பிடிபட்ட இருவரையும் நகர் போலீஸாரிடம் தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ஆனால், சிறிது நேரத்தில் இருவரையும் போலீஸார் விடுவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நகரச் செயலாளர் என்.எம்.ராஜா, பாஜக நகரத் தலைவர் உதயா தலைமையிலான அதிமுகவினர் சிவகங்கை நகர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர். அதேநேரம் நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையிலான திமுகவினர் அங்கு வந்தனர். மாதிரி கூப்பன் கொடுப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

ரூ.8,000 மாதிரி கூப்பன் குறித்து விளம்பரம் செய்வதற்குத்தான் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. கூப்பனை வாக்காளர்களிடம் விநியோகிக்கக் கூடாது என்று அதிமுகவினர் கூறினர். இதனால், இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டிஎஸ்பி அமலா அட்வின் தலைமையிலான போலீஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அதிமுகவினர் புகார் மனு கொடுத்தனர்.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘மாதிரி கூப்பன் கொடுத்ததில் விதிமீறல் இருக்கிறதா என்பது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று, தவறு இருந்தால் வழக்குப் பதிந்து விசாரிக்கப்படும்’ என்றனர்.

அதிமுகவினர் கூறுகையில், ‘கூப்பன் விநியோகம் செய்த நபர்களை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். பறிமுதல் செய்த கூப்பன்களை வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இருவரையும் தப்பவிட்டனர். தேர்தல் அதிகாரிகளும், போலீஸாரும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்’ என்று கூறினர்.

 

மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் வீடுகள் தோறும் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்பேரில் மாநிலம் முழுவதும் திமுகவினர் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகளின் முன் கருப்புக் கொடி கட்டியும், கோலமிட்டும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இச்சூழலில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு நேற்று இரவு வந்தார். நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் தங்கினார். தொடர்ந்து இன்று காலை நாமக்கல் நல்லிபாளையத்திற்கு கருப்பு உடை அணிந்து முதல்வர் ஸ்டாலின் வந்தார். இதனையடுத்துஅங்கு செல்லப்பன் என்பவரது வீட்டின் முன் உள்ள கொடிக் கம்பத்தில் தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியேற்றினார். மேலும், மசோதா நகலை தீயிட்டு எரித்தார்.

முன்னதாக தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், வெல்வோம் எனவும் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து நாமக்கல் உழவர் சந்தைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு விவசாயிகள், மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ராணி, கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் பதிவு:

தொடர்ந்து, இன்று நடைபெற்ற போராட்டம் குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத்தீ பரவட்டும், பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும். அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது. இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.

இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பாஜக.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். “தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ” எனத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் படம் லீக்! காரணம் இவர்களா?!

விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், படத்தின் சில காட்சிகளுக்குத் தணிக்கைக் குழு ஆட்சேபம் தெரிவித்ததால், வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.

இதற்கிடையில் விஜய் முழுநேரத் தேர்தல் களத்தில் இறங்கியதால், இப்படம் தேர்தலுக்குப் பிறகுதான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில், சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஆரம்பக் காட்சிகள் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது முழுத் திரைப்படமுமே இணையத்தில் கசிந்திருப்பது தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:

ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக அது சாட்டிலைட் கட்டுப்பாட்டில் இருக்கும். தற்போது சாட்டிலைட் பாஜகவின் வசமே உள்ளது. எனவே, திட்டமிட்டுப் படத்தை இணையத்தில் கசியவிட்டு, விஜய்க்கும் தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி மிரட்டியிருக்கிறார்கள். இதற்கு துணை முதல்வர் உதயநிதியும் மத்திய அமைச்சர் எல்.முருகனும்தான் காரணம். விஜய்க்கு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தினாலும், தமிழக மக்களே அவருக்கு அரணாக இருப்பார்கள்.

தொடர்ந்து படத்தைத் திரையிட விடாமல் முட்டுக்கட்டைப் போடும் எல். முருகன், உதயநிதியின் செயல்களுக்குப் பின்னால் முதல்வர் ஸ்டாலின் மூளையாகச் செயல்படுகிறார். இன்னும் 10 நாட்களில் விஜய்யை எப்படியெல்லாம் தாக்க முடியுமோ, அவமானப்படுத்த முடியுமோ அத்தனையையும் போலிப் பிரச்சாரங்கள் மூலம் செய்வார்கள். ஆனால், மக்கள் அவரது கண்ணீருக்குத் தேர்தல் வெற்றி மூலம் பதில் தருவார்கள்.

அன்று எம்ஜிஆருக்கு திமுக மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்தது. மதுரையில் அவரது திரைப்படப் பெட்டிகளை திமுகவினர் தூக்கிச் சென்ற வரலாறும் உண்டு. இன்று அதையே சாட்டிலைட் தொழில்நுட்பம் மூலம் நவீனமாகச் செய்கிறார்கள். இதற்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் மகேஷ் பொய்யாமொழிதான் பொறுப்பு. அன்று முதல் மக்கள் இவர்களைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் இப்போது தவெக-விற்குப் மிகப்பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது! -சரத்குமார்

ர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து  தயாரித்துள்ள படம்   ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இத்திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
 
ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..
 
எப்ஃஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ஏப்ரல் 17ஆம் தேதி ‘மிஸ்டர் எக்ஸ்’ வெளியாக இருக்கும் நிலையில் இதன் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு வடபழனி விஜயா ஃபோரம் மாலில் உள்ள பேலசோ திரையரங்கில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்வில் 
 
தயாரிப்பாளர் S.லஷ்மன்குமார் பேசும்போது,
 
இந்தப் படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி. இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடத்திருக்கிறார்களா என்கிற பிரமிப்பு ஏற்பட்டது. அதேபோல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்ததும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. முழுமையான திருப்தி ஏற்பட்டது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இதை எங்களால் எடுக்க முடிந்ததற்காக எங்களுடன் கைகோர்த்த மேவரிக் மூவிஸ்க்கு நன்றி. ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட எங்களது பார்ட்னர்களுக்கும் நன்றி” என்று கூறினார்.
 
ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசும்போது,
 
“கொடுத்த காசுக்கு மேல் நடிக்கிறார்கள் என்று சொல்வது போல, இந்த படத்தில் பணியாற்றியவர்கள் கொடுத்த காசுக்கு மேல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லலாம். பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல ஸ்டைலிஷாக இருந்தாலும் இங்கே எல்லோருமே ஒரு அடிமட்ட தொழிலாளி போலத்தான் உழைத்தோம். அஜர்பைஜான் உட்பட எங்களுடைய படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள் முழுவதுமே பஞ்சபூதங்கள் ஆக்ரோசமாக வந்தன. நானும் இயக்குநர் மனுவும் ரூம் போட்டு எல்லாம் பெரிதாக விவாதிக்க மாட்டோம். எங்களுக்குள் ஒரே அலைவரிசை இருப்பதால் பணியாற்றுவது எளிதாக இருக்கும்.. சண்டைக் காட்சிகளை படமாக்கும்போது பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டது. மஞ்சு வாரியார் ரொம்பவே அசால்டாக சண்டைக்  காட்சிகளில் நடித்தார்” என்று கூறினார்.
 
இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் பேசும்போது,
 
“ஒரு நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் வெளியாக இருக்கிறது. இதற்கு பின்னணி இசை அமைப்பது ரொம்ப எளிதாக இருந்தது. என்னுடைய பயணத்தில் இந்தப் படத்திற்காக பின்னணி இசையில் அடுத்த கட்டமாக ஒன்றை முயற்சி செய்து இருக்கிறேன்” என்று கூறினார்.
 
படத்தொகுப்பாளர் பிரசன்னா பேசும்போது,
 
“இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த உண்மையான சம்பவங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் இந்தப்படத்தில் சொல்லி இருக்கிறோம்” என்று கூறினார்.
 
நடிகை ரைசா வில்சன் பேசும்போது,
 
“‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக என்னை தேர்வு செய்வதற்கு பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மனு ஆனந்த் ஆகியோருக்கு நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன். நான் படம் பார்த்துவிட்டேன். ரொம்பவே நன்றாக வந்திருக்கிறது. அரசியல் ரீதியாக சரியான படம். சீரியசான டாப்பிக்காகவும் அறிவார்ந்ததாகவும் இந்தப் படம் இருக்கிறது. இது போன்ற படம் நமக்குத்  தேவையான ஒன்று. இதுபோன்ற கதைகளை இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
 
நடிகை அதுல்யா ரவி பேசும்போது,
 
“எப்போதுமே நாம் ஒரே மாதிரி படங்கள் பண்ணும்போது இவர்களுக்கு இதுதான் வரும் என்று முத்திரை குத்தி விடுவார்கள். அதை உடைக்க வேண்டும் என்றால் நம் மீது ஒரு இயக்குநர் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த வகையில் என்னை நம்பியதற்காக இயக்குநர் மனு ஆனந்திற்கு நன்றி. வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் கொடுத்ததுடன் இவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பும் கொடுத்தார். இதில் நடித்த எல்லோருடனும் எனக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அனுபவங்களை கற்பதற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. திபு இசையில் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த பாடல் இப்போது வரை எனக்கு ஒரு பெரிய அங்கீகாரமாக இருக்கிறது. மிகப்பெரிய தியேட்டர் அனுபவம் கொடுக்கும் படமாக இது இருக்கும்” என்று கூறினார்.
 
நடிகை அனகா பேசும்போது,
 
“இந்தப் படத்திற்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்து இருந்ததால் இந்த தருணம் எங்களுக்கு ரொம்பவே முக்கியமானது. இதில் மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்  கலைஞர்களுடன் பணியாற்றியதில் எனக்கு உண்மையிலேயே மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது. மஞ்சு வாரியருடன் இணைந்து நடித்தது கனவு நனவான தருணமாக மாறியது” என்று கூறினார்.
 
நடிகர் சரத்குமார் பேசும்போது,
 
“‘மிஸ்டர் எக்ஸ்’ படம் இப்போது அவசியமான ஒன்று. உண்மைச்  சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதன் கதையை மனு ஆனந்த் என்னிடம் சொன்னபோது என்னை நடிக்க வைப்பதற்காக ஏதோ ரீல் விடுகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் இதற்கான ஆராய்ச்சி பேப்பர்களை பக்காவாக வைத்திருந்தார். அதில் இரண்டு மூன்று பக்கங்களை பார்த்ததுமே அவர் மிகப்பெரிய உழைப்பைக்  கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தது.  உடனே இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். மிஸ்டர் எக்ஸ் என்னுடைய 172 வது படம். இத்தனை வருடங்களில் தாத்தா வேடம் உட்பட பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் இதில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். எனக்கு வெள்ளை முடி, வெள்ளைத் தாடியைக் கொடுத்து இயக்குநர் தன் ஆசையைத்  தீர்த்துக் கொண்டார். 2023ல் இந்தப் படத்தைத்  தொடங்கினாலும் இதை மிகுந்த சிரத்தையுடன் பொறுமையாக கொண்டு வந்ததற்கு மனு ஆனந்த்தைப்  பாராட்ட வேண்டும். தங்களது கதாபாத்திரங்களுக்காக ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக் இருவருமே மிகுந்த அளவு மெனக்கெடலை தந்திருக்கிறார்கள். கௌதம் இந்த படத்தில் வித்தியாசமாகத்  தெரிவார். படத்தில் எங்கள் அனைவரையும் இயக்கியிருப்பதால் மஞ்சு வாரியரை மேம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். போரில் பங்கேற்கும் வீரர்களுக்கு பரம்வீர் சக்ரா உள்ளிட்ட உரிய கௌரவங்கள் கிடைக்கின்றன. நமது நாட்டைப்  பாதுகாப்பதற்காக வெளிநாடுகளில் தங்கியிருந்து உளவாளிகளாக வேலை செய்வது யாருக்கும் வெளியே தெரியாது. அதை வெளியே சொல்லவும் முடியாது. தன் மனைவிக்குக் கூட நான் யார் என்று உண்மையைச் சொல்ல முடியாது.  அப்படிப்பட்ட முகம் வெளியில் தெரியாத ஹீரோக்களை நாம் பாராட்ட வேண்டும் என்றால் இது போன்ற படங்களை எடுத்து தான் பாராட்ட முடியும்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுப்பதற்கு இயக்குநர் மனு ஆனந்திற்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அதை பட்டை தீட்டுவதற்காக  இந்த கால அவகாசம் தேவைப்பட்டது.. இந்த சமயத்தில் தான் துரந்தர் வெளியாகி சரித்திரம் படைத்தது. இதுபோன்ற படங்கள் வரவேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த படங்களை திரையரங்குகளில் பார்த்து ரசித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். படம் பார்த்து எனக்கே ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என்றால் சாதாரண ரசிகனுக்கு எந்த அளவிற்கு அனுபவமாக இருக்கும் எனச் சொல்லத் தேவை இல்லை. படம் வெளியாகி 50 நாட்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியானால் ரசிகர்கள் அதிகமாக திரையரங்குக்கு செல்வார்கள்” என்று கூறினார்.
 
நடிகை மஞ்சு வாரியர் பேசும்போது,
 
“இந்த ஒரு தருணத்திற்காக தான் மாதக்கணக்கில் நாங்கள் அனைவரும் காத்துக்  கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தின் கதையை ஓகே சொல்வதற்கு அதிக காலம் எடுத்துக் கொண்டது நான் மட்டும்தான் என பின்னாளில் ஆர்யா சொல்லி எனக்கு தெரிய வந்தது. மனு இந்தக்  கதையை சொன்னதும் அதைப்பற்றி இன்னும் நிறைய புரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. நிறைய சந்தேகங்கள் இருந்தது. இது நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கும் ஒரு வாழ்க்கையே இல்லை. அதனால் அது குறித்து சில  சந்தேகங்களையும் இயக்குநர் மனுவிடம் கேட்டிருக்கிறேன். அதற்கெல்லாம் பொறுமையாக எனக்கு பதில் சொன்னார்.  எனக்கே ஒரு நம்பிக்கை வந்ததால் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். இதற்கு முன்பாக நிறைய ஸ்பை படங்கள் பார்த்திருப்போம். அதில் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பல கதாபாத்திரங்கள் இடம் பெற்று இருக்கும். அந்த வகையில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பின் கதை, ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பு என எல்லோருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நான் செய்திராத அளவிற்கு இந்த படத்தில் கொஞ்சம் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட சின்ன சின்ன காயங்கள் இப்போதும் கூட இருக்கின்றன. ஆனால் அதை எல்லாம் எப்போதும் ஒரு ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வேன்” என்று கூறினார்.
 
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசும்போது,
 
“என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பைக்  கொடுத்ததற்காக பிரின்ஸ் பிக்சர்ஸுக்கு நன்றி சொல்கிறேன். இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கும் போது எப்போதுமே எல்லோருக்கும் ஒரு சின்ன தயக்கம் இருக்கும். ஆனால் ஆர்யா தன்னிடம் உள்ள தன்னம்பிக்கையால் ரொம்பவே தைரியமாக இருந்தார். அதனாலேயே அவருடன் நான் நடிக்கும் போது என்னை, நீ பண்ணு மச்சான் என்று உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அது மற்றவர்கள் நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். ஆர்யா எனக்கு செய்தது போலவே நானும் இனி எனது படங்களில் உடன் நடிப்பவர்களுக்கு அதைச் செய்வேன். மஞ்சு வாரியருக்கும் எனக்கும் இந்த படத்தில் இணைந்து நடிப்பது போன்று காட்சிகள் இல்லை என்பது தான் எனக்கு மிகப்பெரிய வருத்தம். கிட்டத்தட்ட 70% இது ஆக்சன் படம் என்பதால் இதில் நடித்துள்ள கதாநாயகிகள் அனைவருமே ஆக்ஷனில் இறங்கி அடித்துள்ளார்கள். சரத்குமார் சார் எனக்கு ஒரு அப்பா போலத்தான். அவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா என் உடல்வாகு எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்ற வகையில் மிகச் சிறப்பான சண்டைக் காட்சிகளை எனக்கு வடிவமைத்துக்  கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் மொத்த ஆன்மாவையும் இசையமைப்பாளர் திபு அழகாக செதுக்கி இருக்கிறார். என்னைப் போன்றவர்கள் இந்த கதாபாத்திரத்தை பண்ணுவார்களா என வேறு யாராவது இருந்தாலும் சந்தேகம் பட்டிருப்பார்கள். ஆனால் இயக்குநர மனு ஆனந்த் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்காக அவருக்கு நன்றி. எனக்கே என் மீது கொஞ்சம் சந்தேகம் இருந்தபோது கூட அவர் என் மீது முழு நம்பிக்கை வைத்து உற்சாகப்படுத்தினார்” என்று கூறினார்.
 
இயக்குநர் மனு ஆனந்த் பேசும்போது,
 
“‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை பார்த்த பலரும் என்னிடம் நீங்கள் பான் இந்தியா படம் தான் எடுப்பீர்களா என்று கேட்டார்கள். ஆனால் இது பான் இந்தியா படம் அல்ல. தமிழ்  படம். அந்த ஒரு நோக்கத்தோடு தான் இந்தப் படத்தை எடுத்தேன்.. போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உளவாளிகளை யாருக்குமே தெரியாது. இந்தப் படம் உருவாவதற்கு காரணம் இரண்டு பேர். அவர்களைப் பற்றி எங்கேயும் சொன்னது இல்லை. இப்போது இங்கே கூட என்னால் சொல்ல முடியாது. அதுதான் உண்மை. அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. நன்றிக் கார்டில் கூட அவர்களின் பெயரை என்னால் இடம்பெறச் செய்ய முடியாது. அப்படிப்பட்ட சூழலில் உருவாக்கிய கதை தான் இது.
 
இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற ஏழு உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது. ஆனால் சமீபத்திய பல  பேட்டிகளில் இது துரந்தர் படத்தைப் போல இருக்கிறது என்று ஒரு பேச்சு உருவாகி உள்ளது. துரந்தரையும் இதையும் ஒப்பிட வேண்டாம். இது துரந்தர் அல்ல. இரண்டு படங்களிலுமே உண்மை சம்பவங்களை எடுத்து படமாக்கி இருக்கிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. ஆர்யாவிடம் இந்தக் கதையை சொல்லும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சொன்னேன். ஆனால் கதை கேட்டு அரை மணி நேரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். இப்படி ஒரு படத்தை பண்ண உங்களால் முடியுமா என்று அவரிடம் கேட்டபோது, அது தயாரிப்பாளரின் கவலை என்று கூலாக சொன்னார். கௌதம் கார்த்திக் என் மீது நம்பிக்கை வைத்து அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். 
 
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கடேஷ் ரொம்பவே ஆர்வமுடன் தனது பங்களிப்பைக் கொடுத்தார்.. இதில் பல நட்சத்திரங்களைத் தேர்வு செய்வதற்கு அவர்தான் உறுதுணையாக இருந்தார். அப்படி அவர் மூலமாக வந்தவர்தான் நடிகை அனகா. என்னிடம் கதை பற்றி அதிகமாக கேள்வி கேட்டு சாகடித்தவர் என்றால் அது அனகா தான். எல்லா காட்சிகளிலும் ஏதாவது ஒரு சந்தேகம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதுல்யா ரவியை இந்த படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் எனக்கு இருந்தது இல்லை. ஆனால் தயாரிப்பாளர் வெங்கடேஷ் மூலமாக அவரிடம் கதை சொல்ல சென்றபோது அவர் அந்த அரை மணி நேரத்தில் இந்த கதை குறித்து காட்டிய ஆர்வம், என்னிடம் எழுப்பிய கேள்விகள் எல்லாமே அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சரியானவர் தான் என எனக்கு உணர்த்தியது. இந்தப் படத்திற்கு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு தேர்வு செய்தது என்றால் ரைசா வில்சனை தான். இதற்காக பல பேரை பார்த்திருந்தாலும் கடைசியாக ரைசா தான் உள்ளே வந்தார். அவருடன் ஏற்கனவே பணியாற்றிய அனுபவமும் எனக்கு இருந்தது, அவருக்கு கதையை சொல்வதற்காக நான் அழைத்தபோது அதெல்லாம் வேண்டாம் என்று என் மீது இருந்த நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டார், 
 
இவர்கள் அனைவரையும் விட மஞ்சு வாரியரை இந்தப்  படத்தில் கொண்டு வருவதற்குத் தான் எனக்கு கொஞ்சம் அதிக காலம் பிடித்தது. அவர் நடிப்பாரா என்கிற சந்தேகம் இருந்தாலும் ஒருமுறையாவது அவரைப் பார்த்து பேசி விட்டு வரலாம் என்று தான் சென்றேன். கதையைக் கேட்டதும் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுங்கள் என்றார். அதற்கு மூன்று மாத காலம் ஆகும் என்று சொன்னேன். பரவாயில்லை என்று சொன்னார். மீண்டும் அவரிடம் சென்று முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துக் காட்டினேன், அதுவரை அமர்ந்திருந்தவர் பின்னர் நடந்து கொண்டே கதையை கேட்க ஆரம்பித்தார், ஒருவேளை அவருக்கு கதையைக் கேட்டு தூக்கம் வருகிறதோ என்று கூட நான் நினைத்தேன், அதற்கேற்ற மாதிரி அவரும் முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துவிட்டு நான் சொல்கிறேன் என்றார், எனது குழுவினரிடம் கூட அவர் வருவாரா என்பது சந்தேகம்தான் எனக் கூறினேன். ஆனால் ஆச்சரியமாக ஒரு வாரத்திலேயே அவர் தான் நடிப்பதாக சம்மதித்தார்.
 
சரத்குமார் சார் எப்போதுமே யூத் தான் இப்படிப்பட்ட ஒருவரை எப்படி வேறு ஒரு லுக்கில் காட்டலாம் என்பது ஒரு சவால் தான். ராஜஸ்தானில் பாலைவனத்தில் நல்ல கொளுத்தும் வெயிலில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். ரஷ்ய சண்டைக் கலைஞர்களை வைத்து சண்டைக் காட்சிகளைப்  படமாக்கினோம். சரத் சார் ரொம்பவே கூலாக இருந்தார். அந்த சண்டைக் கலைஞர்கள் தான் ரொம்பவே அந்த சூழலுக்கு சிரமப்பட்டார்கள். அதனால் அவருடைய வயது என்பது ஒரு பொருட்டே அல்ல.
 
பிரசன்னா ரொம்பவே விறுவிறுப்பாக இந்த படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். பல்வேறு காரணங்களுக்காக பலர் இந்த படத்தை பார்த்தார்கள். அதில் பலரும் என்னிடம் சொன்னது திபுவின் இசை பிரம்மாதம் என்பதுதான். படத்தின் கடைசி முக்கால் மணி நேரத்தை நீங்கள் ரொம்பவே ரசித்து அனுபவிப்பீர்கள் என்றால் அதற்கு திபுவின் பின்னணி இசை தான் முக்கிய காரணமாக இருக்கும். ஒரு பயங்கரமான படம், இதுவரை நீங்கள் பார்த்திராத படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். உண்மைச்  சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படம். அவ்வளவுதான். துரந்தரை மிஞ்சிவிடும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு பைசா வசூல் கேரண்டி என்று உறுதியாக சொல்வேன்” என்று கூறினார்,
 
நாயகன் ஆர்யா பேசும்போது,
 
“கதை கேட்கும்போது மிகப்பெரிய பிரம்மாண்டமாக இது இருக்கும் எனத்  தோன்றியது. நம்மை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எந்த தயாரிப்பாளராவது படம் எடுப்பாரா என சந்தேகத்துடன் தான் இந்தப் படத்துக்கு நான் ஓகே சொன்னேன். ஆனால் எங்களை நம்பி, படத்தின் கதையை நம்பி எங்களுக்கு பக்கபலமாக இருந்து ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது தயாரிப்பாளர் லஷ்மன் தான், இயக்குநர் மனு ஒரு கடின உழைப்பாளி. அவரை மிஸ்டர் பர்ஃபெக்ட் என்று சொல்லலாம். இதன் கதையில் அவர் கடினமாக உழைத்து உள்ளார். இந்தப் படத்துக்காக மூன்று வருடங்களாக நாங்கள் ஒன்றாக பயணித்திருக்கின்றோம்.. ஆனால் ஒரு நாள் கூட அவர் முகம் சுளித்து கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. படத்தின் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர். நாங்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தச்  சென்றபோது கூட அந்த நாட்டு மக்களுடன் சென்று சகஜமாக அவர் பழகுவார்.. இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ்.. இந்த படத்தில் அவருக்கு ஸ்கோர் செய்யும் வாய்ப்பு நிறையவே உள்ளது. படத்தின் முதல் காப்பி பார்த்தபோது நான் பிரமித்துப் போனேன். படத்தின் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எனக்கு தன்னம்பிக்கை கொடுப்பதே எடிட்டர் பிரசன்னா தான். படத்தின் முதல் காப்பி பார்ப்பது அவர்தான். நான் இயக்குநரிடம் கேட்பேன் பிரசன்னா என்ன சொன்னார் ஓகே சொல்லிட்டாரா அந்த மாதிரி ஒரு சிறப்பான எடிட்டர் நமக்குத் தேவை. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம் புரொடக்ஷன் டிசைனர் ராஜீவன் சார் தான். ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் இந்தப்  படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமில்லாமல் கோ டைரக்டர் ஆகவும் வேலை செய்துள்ளார். 
 
எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் கௌதம் ராம் கார்த்திக் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருப்பேன். கௌதம் நடித்துள்ள அந்த கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம். நீங்கள் படம் பார்த்து பிறகு கௌதமை தான் நிச்சயம் அனைவரும் புகழ்வார்கள். புதுமையாகவும் ரசிக்கும்படியாகவும் நடித்துள்ளார் கௌதம். சரத்குமார் சாருடன் எனக்கு முதல் காட்சியே ராஜஸ்தானில் தான் படமாக்கப்பட்டது. ஏப்ரல் மே மாத வெயிலிலும் அதை பெரிது படுத்தாது ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்தார். இந்தப் படத்துக்காக கடினமான உடற்பயிற்சி எல்லாம் செய்து சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து கிளைமாக்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார்.
 
மஞ்சு வாரியரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரை சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தபோது நான் ரொம்ப சந்தோஷம் அடைந்து விட்டேன். அவரிடம் சென்று நாம் ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கூட கேட்டேன். மஞ்சு வாரியரின் நடிப்பு நம் அனைவருக்கும் தெரியும் அவ்வளவு அழகாக சிறப்பாக நடித்துள்ளார். அனாகா ஆயிரம் கேள்வி கேட்பார். ரொமான்டிக் பாடலில் சிரியுங்கள் என்று சொன்னால் என் கேரக்டர் சிரிக்காதே சீரியஸாகத் தானே இருக்கும் என்று சொல்வார். நம்மையே இவ்வளவு கேள்வி கேட்கிறார் நாம் சரியாகத்தான் பண்ணுகிறோமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு மிகுந்த அர்ப்பணிப்போடு நடித்தார். அதுல்யா மற்றும் ரைஸா இருவருக்குள்ளேயும் படத்திற்குள் ஒரு போட்டி இருக்கிறது. மிஸ்டர் எக்ஸ் திரையரங்குக்கு வருபவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும்: என்று கூறினார்.
 
வரும் ஏப்-17ல் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமாருடன் இணைந்து  தயாரித்துள்ளார்
வெங்கடேஷ் .

CSK-வுக்கான CUB-இன் கீதம் வெளியீடு! 

சென்னை:

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (CUB), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான தனது கூட்டாண்மையைக் கொண்டாடும் வகையில், அதிகாரப்பூர்வ கீதத்தை வெளியிடுவதை பெருமையுடன் அறிவிக்கிறது. CUB மற்றும் CSK ஆகிய இரு தரப்பினரும் கொண்டிருக்கும் உறுதிப்பாடு, கூட்டு முயற்சி மற்றும் பேரார்வம் ஆகிய பகிரப்பட்ட விழுமியங்களை இந்தக் கீதம் பிரதிபலிக்கிறது. CUB நாடு முழுவதும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது; அதேபோன்று, CSK அணியும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ரசிகர்களைக் கொண்டுள்ளது.

வெளியீட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்:

வெளியீடு: CSK வீரர்கள்/நிர்வாகம், CUB தலைமை மற்றும் ரசிகர்கள் கலந்துகொள்ளும் ஒரு சிறப்பு நிகழ்வில் இந்த கீதம் வெளியிடப்படும். கூட்டாண்மையைக் கொண்டாடுதல்: இந்த ஒத்துழைப்பு, ஒரு நம்பகமான கிரெடிட் கார்டு கூட்டாளராக CUB-யின் பங்கையும், அனைவராலும் விரும்பப்படும் ஒரு கிரிக்கெட் அணியாக CSK-யின் அந்தஸ்தையும் எடுத்துக்காட்டுகிறது

ரசிகர் ஈடுபாடு: இந்த கீதம் டிஜிட்டல் தளங்கள் முழுவதும் விளம்பரப்படுத்தப்படும்; இதன் மூலம் ரசிகர்கள் தங்களின் சொந்தப் பாடல் வடிவங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்.

பகிரப்பட்ட விழுமியங்கள்: CUB மற்றும் CSK ஆகிய இரு அணிகளும் குழுப்பணி, மீள்திறன் மற்றும் சமூகப் பெருமை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன – இந்த விழுமியங்கள் கீதத்தின் வரிகளிலும் தாளத்திலும் பிரதிபலிக்கின்றன.

“இந்த கீதம் இசையைத் தாண்டிய ஒன்று” – இது CSK உடனான எங்கள் கூட்டாண்மையையும், எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவதிலும் சமூகங்களுக்கு உத்வேகம் அளிப்பதிலும் நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும். கிரிக்கெட் ரசிகர்களை ஒன்றிணைப்பது போலவே, CUB-ம் நம்பிக்கை மற்றும் சேவையின் வாயிலாக மக்களை ஒன்றிணைக்கப் பாடுபடுகிறது.