Friday, September 20, 2024
Blog

நடிகைக்கு பாலியல் சீண்டல்: 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்! நடந்தது என்ன?!

மும்பையைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான காதம்பரி ஜெத்வானி. குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர் இவர், தற்போது மும்பையில் இவர்கள் குடும்பம் வசித்து வருகிறது. ‘சத்தா அடா’ என்ற பாலிவுட் படம் மூலமாக திரையுலகில் அறிமுகமான காதம்பரி, பாலிவுட் தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘செந்தட்டி காளை செவத்த காளை’ என்ற படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலத்தில் புதிய அரசு அமைந்த பிறகு புகார் ஒன்றை காதம்பரி கொடுத்திருந்தார்.

அந்தப் புகாரில், “மும்பையில் பிரபல தொழிலதிபர் ஒருவர் என்னை திருமணம் செய்வதாகக் கூறி என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அவர் மீது மும்பையில் புகார் அளித்திருந்தேன். அந்த தொழிலதிபர் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கமானவர். ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்த சமயத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அந்த தொழிலதிபர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான குக்கல வித்யாசாகர் மூலம் ஆந்திராவில் என் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தார்.

அந்த வழக்கில் ஆந்திர டிசிபி விஷால் கன்னி தலைமையிலான காவலர்கள் மும்பைக்கு வந்து, என்னையும் என் குடும்பத்தினரையும் பயங்கரவாதிகளைப் போல விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்று சட்டவிரோதமாக விசாரணை என்ற பெயரில் எங்களை தடுப்பு காவலில் வைத்தனர். ஐபிஎஸ் அதிகாரியே என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்தார். என் பெயரில் இருந்த ரூ.6 கோடி சொத்துக்களைப் பறித்ததோடு, எங்களை சிறையில் அடைத்தனர். 48 நாட்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்தோம்.” என்று தெரிவித்திருந்தார்.

ஜெகன் ஆட்சியில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி சந்திரபாபு நாயுடு ஆட்சியில் குற்றச்சாட்டு சுமத்திய நடிகை காதம்பரியின் புகாரை சந்திரபாபு நாயுடு அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கென ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. இந்நிலையில் தான், நடிகை காதம்பரியைக் கைது செய்ய சட்டவிரோதமாக உத்தரவு பிறப்பித்தது அப்போது உளவுத்துறைத் தலைவராக இருந்த சீதாராம ஆஞ்சநேயுலு என்பது தெரியவந்தது.

அவர் எந்த குற்றச்சாட்டையும் பெறாமல், மற்ற இரு அதிகாரிகளுக்கு நடிகையைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். கைது செய்த இரு நாட்களுக்குப் பின்பே நடிகை மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் விசாரணையில் இது அம்பலப்பட, தற்போது உளவுத்துறை முன்னாள் டிஜிபி ஆஞ்சநேயுலு, விஜயவாடா முன்னாள் காவல் ஆணையர் கிராந்தி ராணாடா, துணை ஆணையர் விஷால் கன்னி ஆகிய மூவரும் அதிரடியாக சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளனர்.

 

தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன்- முதல்வர் மு.க ஸ்டாலின்

சென்னை: 

திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 17.9.1949-இல் முன்னாள் முதல்வா் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக, 75 ஆண்டுகளை நிறைவு செய்து தனது பவள விழாவை இன்று கொண்டாடுகிறது. இத்துடன் பெரியார், அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

சென்னை நந்தனத்தில் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை தொடங்கியுள்ள விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் தலைமை வகிக்க, பல்வேறு விருதுகளை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விருதாளா்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.

துணை பொதுச் செயலா்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

முப்பெரும் விழா மற்றும் பவள விழாவை ஏற்பாடு செய்த அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கும் கழக தொண்டர்களுக்கும் வாழ்த்துகள். தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை. தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன். தொண்டர்களின் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால் திமுக 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது.

அமெரிக்கா சென்றோம் என்பதைவிட முதலீடுகளை வென்றோம் என்றே சொல்ல வேண்டும். இதனால் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். அமெரிக்கவாழ் தமிழர்கள் நல்ல வரவேற்பளித்தனர். கழக தொண்டர்களின் அரவணைப்பும், கலைஞரின் வழிகாட்டுதலும் தான் என்னை பவள விழா கண்ட திமுகவுக்கு தலைவராக உயர்த்தியுள்ளது. திமுகவும் முதல்வர் பதவியும் எனது இரு கண்களாக இருக்கின்றன.

பவளவிழாவை நடத்துவது எனது வாழ்நாளில் கிடைத்த பெருமையாக கருதுகிறேன். அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக உருவாக்கப்பட்ட நாளை இணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 25, 50, 75 ஆண்டுகளிலும் திமுக ஆட்சியில் இருந்திருக்கிறது. திமுக தமிழ்நாட்டை வளமிக்க மாநிலமாக மாற்றியிருக்கிறது.

நிதியுரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மத்திய அரசிடம் இன்னும் போராட வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். ஏராளமான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒற்றை இலக்குடன் திமுக செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என்பதைக் கேட்கக்கூட உரிமை இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் மாநில சுயாட்சியை மீட்டெடுப்பதற்கான ஓர் அறிவிப்பு தான் இந்த பவள விழா.

இதுவரை நடந்த தேர்தல்களை போல அடுத்தடுத்து வரப் போகும் தேர்தல்களிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். நம்முடைய அடுத்த இலக்கு 2026 தேர்தல். இதுவரை எந்தக் கட்சியும் பெற்றிராத வகையில் மிகப்பெரிய வெற்றியை நமது கழகம் பெற வேண்டும்” என்றார்.

டெல்லி முதல்வர் யார் தெரியுமா?!

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவிடம் கேஜரிவால் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

முதல்வராக பொறுப்பேற்கவுள்ள அதிஷி ஆட்சியமைக்க உரிமை கோரினார். டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைதான முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. எனினும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

முன்னதாக, டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும்பொருட்டு இன்று(செவ்வாய்க்கிழமை) காலை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி ஒருமனதாக தேர்வு. செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரை அதிஷி முதல்வராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் கேஜரிவால் சென்றார். அவருடன் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள அதிஷியும் சென்றுள்ளார். கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அதேபோல, அதிஷி முதல்வராக பொறுப்பேற்க, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து விரைவில் டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பொறுப்பேற்பார். தற்போது டெல்லி கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி, இதன் மூலமாக டெல்லியின் 8 ஆவது முதலமைச்சர் ஆகிறார். மேலும் சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித்தைத் தொடர்ந்து மூன்றாவது பெண் முதல்வர் எனும் பெருமையை அதிஷி பெறுகிறார்.

 

இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனி செய்த ரொமன்ஸ்!

சென்னை: 

‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. படத்தில் நடுத்த நடிகர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். விஜய் ஆண்டனி மேடையில் பேசுகையில், கவுதம் வாசுதேவ் மேனனிடம் தனக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மேடையிலயே ஒரு டெமோ காட்டும்படி கேட்டுக் கொண்டார்.

கவுதம் வாசுதேவ் மேனனும் எந்த வித தயக்கமும் இன்றி அவரது படத்தின் பிரபல வசனமான விண்ணை தாண்டி வருவாயா மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வசனங்களை பேச சொன்னார். விஜய் ஆண்டனியும் அங்கு இருந்த நாயகிகளிடம் அந்த வசனத்தை பேசி ஒத்திகைப் பார்த்தார். இந்த சம்பவம் விழாவில் சிரிப்பளையுடன் நிறைவடைந்தது. 

தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் மீண்டும் ரூ. 55,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரத் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வார இறுதி நாளான சனிக்கிழமை வரை ஒரே வாரத்தில் ரூ. 1,480 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. சனிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 54,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, சென்னையில் மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ. 6,880-க்கும், ஒரு சவரன் ரூ. 55,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் வரலாற்றில் முதல்முதலாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 55,000-ஐ கடந்தது. மத்திய நிதிநிலை அறிக்கையில், தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைத்ததை தொடர்ந்து, தங்கத்தின் விலை ரூ. 3,000 வரை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கம் ஏறுமுகத்துக்கு சென்றுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனிடையே, வெள்ளியின் விலையும் மீண்டும் ரூ. 100-ஐ நோக்கி சென்று கொண்டுள்ளது. கடந்த வாரம் ஒரு கிராம் வெள்ளி ரூ. 90-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் 6 ரூபாய் உயர்ந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் ஒரு கிராம் கட்டி வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து, ரூ. 98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

போலி ஆவணங்கள் தயாரித்து இத்தனை கோடி நிலம் விற்பனையா?!!!

சென்னை அண்ணாநகர், தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (33). இவர் தனியார் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் ஆவடி அருகே திருமுல்லைவாயல், பாலாஜி நகரில் 7,200 சதுர அடி நிலத்தை பொது அதிகாரம் பெற்று வைத்திருந்த சுரேந்தர் என்பவரிடம் ரூ.3.66 கோடிக்கு விலைக்குப் பேசி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது தந்தை அருணாச்சலம் பெயரில் கிரையம் பெற்றிருந்தார்.

இதன் பிறகு அந்த நிலத்தில் சுற்றுச்சுவர் கட்ட ஜெயச்சந்திரன் சென்ற போது, அந்த நிலம் வேறு நபர்களுக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது. மேலும் 2016 -ஆம் ஆண்டு இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து குமார் என்பவருக்கு விற்பனை செய்த வழக்கில் போலீஸார் சுரேந்தர், பாபு ஆகியோரை கைது செய்துள்ளனர். அதே நிலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆள்மாறாட்டம் மூலம், போலி ஆவணங்கள் தயாரித்து சுரேந்தர், பாபு மற்றும் கமல் ஆகியோர் ஜெயச்சந்திரனுக்கு விற்பனை செய்து லாபம் அடைந்துள்ளனர்.

ஜெயசந்திரனுக்கு நிலத்தை விற்பனை செய்ய ஐஸ்டின், தும்மகுடி வெங்கடகிருஷ்ணராவ் ஆகியோர் உடந்தையாக இருந்து முறையற்ற லாபம் அடைந்துள்ளனர். இது குறித்து ஜெயச்சந்திரன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நிலப் பிரச்னை தீர்வு பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, வழக்கு தொடர்பாக சுரேந்தர், பாபு, கமல், பாரக்சூடா, ஹரிக்குமார், சையது முகமது பாரூக் ஆகிய 6 பேரை ஏற்கெனவே கைது செய்தனர்.

இந்த நிலையில், அம்பத்தூர் கள்ளிக்குப்பம், ராஜகணபதி தெருவைச் சேர்ந்த ஜஸ்டின் (45), சென்னை அண்ணா நகர், நொளம்பூர் சாலையைச் சேர்ந்த தும்மகுடி வெங்கடகிருஷ்ணராவ் (52) ஆகிய 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Comprehensive Cleanliness Drive Swachhata Hi Seva 2024 begins in Southern Railway

Chennai:

Southern Railway has launched the Swachhata Hi Seva 2024 campaign, with the Medical Department spearheading the first day’s activities on 14th September 2024. The day began with a Swachhata Pledge taken by the department, symbolizing a collective commitment to cleanliness.

Voluntary Shramdaan (Cleanliness) activities followed, where staff and volunteers actively participated in cleaning efforts. Swachhata banners and posters were displayed at key locations, promoting awareness of the importance of cleanliness.

A significant highlight of the day was the flagging-off of a waste collection vehicle by Dr. S. Kalyani, Medical Director, Perambur Railway Hospital, Dr V. Kannan,  Chief Staff & Services Officer/Admin, Dr Priyashauthini, Chief Staff & Services Officer/Outpatient Department and Dr Lalitha, Assistant Chief Medical Director, Health & Family Welfare, Railway Hospital/Perambur.

With this initiative, Southern Railway has set the tone for a fortnight of cleanliness drives, aligning with the Swachh Bharat mission. The campaign in Southern Railway, including that of all the six divisions, workshops and field units,  will continue until 2nd October 2024, with various teams across the zone participating to ensure the success of this initiative.

Swachhata Hi Seva 2024 – Overview

Swachhata Hi Seva 2024, launched under the Swachh Bharat Mission, is a national campaign aimed at fostering a culture of cleanliness through collective participation and volunteerism. The campaign is a joint initiative of the Ministry of Housing & Urban Affairs and the Department of Drinking Water & Sanitation (Ministry of Jal Shakti). It is being observed from 17th September to 1st October 2024, with a curtain raiser on 14th September, culminating in the observance of Swachh Bharat Diwas on 2nd October 2024, which commemorates the birth anniversary of Mahatma Gandhi.

This year’s campaign theme, Swabhav Swachhata, Sanskar Swachhata, emphasizes cleanliness as both a personal habit and a societal value. The campaign seeks to enhance public awareness and participation in cleanliness initiatives across various sectors, including Railways, government institutions, and local communities.

The theme for ‘Swachhata Hi Seva’ 2024, “Swabhav Swachhata, Sanskar Swachhata” seeks to reignite the Indian Railways with collective action and citizen participation in cleanliness efforts across India. The pillars of ‘Swachhata Hi Seva’ have been identified which are :-

Swachhata Ki Bhaagidari,·Sampoorna Swachhata & Swachhata Lakshit Ekayi (CTU-Cleanliness target units) Safai Mitra Suraksha Shiv Indian Railways.

Indian Railways is an active participant in Swachhata Hi Seva 2024. The Railway Board Chairman and CEO, Shri Satish Kumar, highlighted the importance of visible improvements in cleanliness, not only at railway stations but also in trains, railway colonies, and production units. The Railways has set targets to engage the public in activities such as massive plantation drives, waste management efforts, cleanliness awareness campaigns, and shramdaan (voluntary cleaning activities).

To mark the 10th anniversary of the Swachh Bharat Mission, activities which include cleaning of railway tracks, station premises, railway colonies, drains, and toilets, with a focus on high-traffic urban and semi-urban areas. The campaign also promotes the Ek Ped Maa Ke Nam mission (Plant a Tree in Mother’s Name), encouraging the planting of trees as part of the effort to integrate environmental responsibility into cleanliness. Indian Railways will adopt a holistic approach with an emphasis on public participation, ensuring that sanitation becomes a shared responsibility and everyone’s business.

Maruti Suzuki launches the Epic New Swift S-CNG

New Delhi:

Maruti Suzuki India Limited (MSIL) today launched the S-CNG variant of the Epic New Swift. This exciting addition to the iconic Swift lineup seamlessly blends its style, performance, and cutting-edge features with an unmatched fuel-efficiency of 32.85 km/kg#. With this, the new Swift S-CNG cements its position as India’s most fuel-efficient premium hatchback in its segment.

The newly launched Swift is being appreciated for its distinct design, underscored by its bold wraparound character line, which lends it a sporty identity in the premium hatchback segment. The Swift S-CNG continues to uphold this distinct sporty character. Complemented by the Z-series Dual VVT engine it emits low CO2 and delivers an impressive maximum torque of 101.8 Nm @ 2900 rpm for better city driving.

To better cater to diverse customer preferences, the Swift S-CNG is now offered in three variants: V, V(O), and Z, up from two in the previous generation. Each of these trims is equipped with a
5-speed manual gearbox.

Announcing the introduction of Epic New Swift S-CNG, Mr. Partho Banerjee, Senior Executive Officer, Marketing and Sales, Maruti Suzuki India Limited, said, “The Swift brand has always been synonymous with spirited performance and iconic style. With the launch of the Epic New Swift S-CNG, we are not just expanding its rich legacy but taking it to new heights. Powered by our all-new Z-series engine, it delivers remarkable fuel-efficiency of 32.85 km/kg#, more than a 6% improvement over its predecessor, without compromising the exhilarating drive that Swift enthusiasts love. This seamless blend of a greener powertrain and the unparalleled excitement of driving underscores our unwavering commitment to prioritizing the needs and aspirations of Indian customers.”

He further added, “Maruti Suzuki pioneered the production of CNG vehicles in India back in 2010. Since then, we have sold over 2 million S-CNG vehicles to date, contributing to a significant reduction of 2 million tonnes of CO2 emissions. Our S-CNG technology has democratized green mobility solutions, and we are proud to offer the widest range of 14 S-CNG powered vehicles across all body styles. Last fiscal year, our CNG sales in the passenger vehicle category witnessed a 46.8% growth compared to Financial Year 2022-23 and registered a CAGR of around 28% since 2010.”

S-CNG vehicles are conceptualized, designed, developed, and rigorously tested at Maruti Suzuki’s world-class research & development facility before they are made available to customers. The Swift S-CNG has historically been immensely popular, and with S-CNG technology in the Epic New Swift, it is now ready to capture the hearts of more discerning customers who seek a blend of engaging performance and segment-best fuel-efficiency.

It offers an array of standard safety features such as six airbags, Electronic Stability Program+ (ESP®), and Hill Hold Assist. Further, the Swift S-CNG comes equipped with a range of modern features, such as automatic climate control, rear AC vent, wireless charger, 60 : 40 split rear seats, and a feature-loaded 17.78 cm (7-inch) Smart Play Pro infotainment system and Suzuki Connect, enhancing the overall driving experience.

 

 Technical Specifications – EPIC NEW SWIFT S-CNG:

Length (mm)

3 860

Max Torque

CNG mode: 101.8 Nm @ 2900 rpm

Height (mm)

1 520

Max Power

CNG mode: 51.3 kW @ 5700 rpm/69.75 PS @ 5700 rpm

Width (mm)

1 735

Fuel-efficiency

32.85 km/kg#

 

The ex-showroom prices are as follows:

EPIC NEW SWIFT S-CNG Prices (Ex-showroom in INR)

Variant

Prices (in ₹)

VXi CNG

8 19 500

VXi (O) CNG

8 46 500

ZXi CNG

9 19 500

 

The Epic New Swift S-CNG can also be owned through Maruti Suzuki Subscribe at an all-inclusive monthly subscription fee starting from ₹ 21 628*.

Maruti Suzuki Subscribe is a convenient way to bring home a new car. It allows a customer to use a new car without owning it, by paying an all-inclusive monthly subscription fee that comprehensively covers the cost of complete registration, service & maintenance, insurance, and roadside assistance.

தலைமை ஆசிரியர் கொடுத்த முத்தம்: மாணவி சொன்ன பதில்!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த எருமனூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் எடில் பட்த் பிலிப்ஸ். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது வகுப்பில் பயின்று வந்த மாணவி ஒருவருக்கு பிலிப்ஸ் முத்தம் கொடுத்தது போன்ற ஒரு புகைப்படம் சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியானது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்கே சென்று தலைமை ஆசிரியரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் பிலிப்ஸ் எதுவும் சொல்லாமல் தலை குனிந்திருக்க, ஆத்திரமடைந்தவர்கள், அவரை அடித்து நிர்வாணபடுத்தினர்.

இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் நேரில் சென்றனர். அங்கு எருமனூர் பொதுமக்களால் தர்ம அடிக்கு ஆளானவர், உள்ளாடையுடன் நின்றிருந்தார். இதையடுத்து பொதுமக்கள், மாணவியிடம் தவறாக முயன்ற ஆசிரியரை இப்படியே அரை நிர்வாணத்தோடு அழைத்துச் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பயங்கர ஆத்திரத்துடன் காத்திருந்தனர். அப்போது சம்பந்தப்பட்ட மாணவி வந்து ஒரே கேள்வியைக் கேட்டு ஒட்டு மொத்த ஊர் மக்களையும் கிடுகிடுக்க வைத்தார்.

தலைமை ஆசிரியர் எடில் பட்த் பிலிப்சும், தானும் காதலித்து வந்ததாகவும், தன் அனுமதியுடனேயே அவர் முத்தம் கொடுத்ததாகவும் கூறி, யாரை கேட்டு அவரை கைது செய்கிறீர்கள்? இதற்கு என் அனுமதியை வாங்கியுள்ளீர்களா? என கேட்டவுடன் போலீசார் வெடவெடத்துப் போயினர்.

மாணவியின் வாக்குமூலத்தைக் கேட்டு அனைவரும் விரக்தியுடன் வீடு திரும்பியபோதும், சிறுமிக்கு முத்தம் கொடுத்த காரணத்தால் தலைமை ஆசிரியர் பிலிப்ஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி: இந்தியா முதலிடம்!

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்து வந்த 4வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் முடிவுற்றது. இதில் இந்தியா தங்க பதக்கங்களை குவித்து முதலிடம் பிடித்துள்ளது.

இந்தத் தொடரில் இந்தியா உட்பட 7 நாடுகளைச் சேர்ந்த 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தத் தொடரில் மொத்தம் 28 வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தன. 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 29 ஆண்டுகள் கழித்து, சர்வதேச தடகள போட்டி தற்போது சென்னையில் நடைபெற்றது.

இந்தத் தொடரில் இந்தியாவில் இருந்து மட்டும் மொத்தம், 62 பேர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 9 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.