Saturday, June 13, 2026
Blog

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா!

பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ஃபில் குட் வித் கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான வெற்றிமாறன், பா.ரஞ்சித், ஏ. ஆர்.முருகதாஸ், சரண், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், சதீஷ் குமார், மதன், மந்திர மூர்த்தி, வி.இசட். துரை, சுப்பிரமணிய சிவா, நித்திலன் சாமிநாதன், ராஜூ முருகன், தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் தனஞ்ஜெயன், இசையமைப்பாளர்கள் எஸ். எஸ். குமரன், சிமோன், சித்து குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ‘நூறு சாமி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாலாஜி ஸ்ரீராமை இயக்குநர் சசி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, எஸ் எஸ் குமரன், சிமோன், சித்து குமார் ஆகியோர் இணைந்து வாழ்த்து தெரிவித்துடன் ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தினர்.

வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி வரவேற்று பேசுகையில், ”ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படத்தை பார்த்துவிட்டு பலர், ‘நன்றாக நடித்திருக்கிறீர்கள்’ என்று சொல்லிவிட்டார்கள். என்னை நன்றாக நடிக்க வைத்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி. இந்தப் படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் பேசுகையில், “இந்த மேடையில் என்னை அறிமுகப்படுத்தி லெஜெண்ட்ஸ் அனைவருக்கும் நன்றி. ஒரு நாள் இயக்குநர் சசி போன் செய்து.. ஒரு சூழலை விவரித்து பாடலுக்கான மெட்டு வேண்டும் என கேட்டார். அதுதான் ‘அம்மா அம்மா.. ‘எனும் பாடல். அந்த பாடலின் மெட்டை கேட்டதும் சசி சாருக்கு பிடித்து போனது. உடனடியாக இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று சொன்னார். இவ்வளவு பவர்ஃபுல்லான திரைப்படத்திற்கு என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் இசை சிறப்பாக அமைந்ததற்கும் இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனியின் வழிகாட்டுதல் தான் முதன்மையான காரணம்,” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”பொதுவாக இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினால் அந்தப் படத்தின் டைட்டில் அவர்களுடைய பெயருடன் சேரும். ஆனால் இயக்குநர் சசிக்கு மட்டும் தான் அந்தந்த படத்தின் பெயர் சேரும். ஏனெனில் எல்லா படங்களையும் அவர் தன்னுடைய முதல் படத்தை போலவே முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்து உருவாக்குகிறார்.

எங்கள் இருவருக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது. நாங்கள் இருவரும் இயக்குநர் கதிரிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறோம்.

இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். இப்போதுதான் சசி சாரின் திரைப்பயணத்தை பற்றி குறிப்பிட்டார்கள். இத்தனை ஆண்டுகால அனுபவம் பெற்றவரின் படைப்பு போல் தெரியவில்லை. ஒரு புது இயக்குநரின் படைப்பு போல் இவ்வளவு சுவாரசியமாக இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. இதுதான் அவருடைய தனித்துவம்.

பொதுவாகவே அவருடைய படங்களில் நடிகர்கள் தங்களது திறமையை நன்றாக வெளிப்படுத்துவார்கள். இந்த படத்திலும் அனைத்து நடிகர்கள், நடிகைகளும் தங்களது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்,” ‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைவிட இயக்குநர் சசியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் உதவி இயக்குநராக வேண்டும் என வாய்ப்பை தேடும் தருணத்தில் என்னை முதன் முதலாக அமர வைத்து பேசி, சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு நம்பிக்கையை வழங்கியவர் இயக்குநர் சசி. அந்த தருணத்தில் என்னிடம் அவர் மிகவும் எளிமையான ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு என்னால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. சிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் சந்தித்து அவர் கேட்ட கேள்விக்கான பதிலை அளித்தேன். அப்போது அவர் உன்னிடம் நல்லதொரு குவாலிட்டி இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய். வாய்ப்பு கிடைக்கும் என்றார். அவரிடம் கற்றுக்கொண்ட இந்தப் பாடத்தை இன்று வரை என் வாழ்வில் கடைப்பிடித்து வருகிறேன். என்னை தேடி வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குநர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறேன்.

நான் மிகவும் உணர்வுப்பூர்வமான நபர் தான். சிறிய விஷயங்கள் கூட என்னை மிகவும் உணர்வுப்பூர்வமாக மாற்றிவிடும். ‘நூறு சாமி’ படத்தை பார்க்கும் போது பல இடங்களில் என்னால் எளிதாக படைப்புடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில் நடிகை சுவாசிகா அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் இடம் பிடித்த நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்திருந்தது. படத்தில் பேசப்பட்ட விஷயங்களுக்கு இன்றைக்கும் அதற்கான வேல்யூ இருக்கிறது. அதைப்பற்றி நாம் இன்றும் விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சமூகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற சூழலும் இருக்கிறது. அழுத்தமாகவும். எளிமையாகவும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்று நம்புகிறேன். ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் ‘சீலிங் ஃபேன்’ காட்சியை மிகவும் ரசித்தேன். இது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்துடன் என்னால் உளவியல் ரீதியாக இணைத்து பார்க்க முடிந்தது.

சசி சார் எத்தனையோ படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார். ஆனால் இந்த படத்திற்குத்தான் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கு அழைப்பு விடுக்கும் போது, ‘இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். நிச்சயம் வாருங்கள்’ என்றார். அதேபோல் படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், ”இந்தப் படத்தில் சிறப்பான விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் பிறந்த ஊரில் நடந்த நிஜ கதை. ஒரு உண்மை சம்பவத்தை படமாக இயக்கியிருக்கிறார் நண்பர் சசி.  இது போன்றதொரு கஷ்டமான கதையை தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதற்காக விஜய் ஆண்டனிக்கும் நன்றி. படத்தின் உச்சகட்ட காட்சியை பார்க்கும் போது ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ..! என்ற பதைபதைப்பு எனக்குள் ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியை அமைத்து படத்தை  சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். உச்சகட்ட காட்சியில் ஒரு பதட்டம் இருந்தது.

விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் போது நானும் அவருடன் இருக்கிறேன். இதற்காக அவர் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார். இருப்பினும் ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அறிமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், உறுதியும் அப்போது எனக்கு வியப்பாக இருந்தது.

இந்தப் படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சுவாசிகா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாலு மகேந்திரா படத்தில் ஷோபா எப்படி சிறப்பாக நடித்திருப்பாரோ..! அதேபோன்று இந்த படத்தில் சுவாசிகா நன்றாக நடித்திருக்கிறார்.

பாடலில் சின்ன சின்ன விஷயங்களில் கூட அற்புதமான நடித்திருப்பார். வலி- அவமானம்- என அனைத்து துயரங்களையும் அற்புதமாக முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த ஆண்டு ராதிகா மேடத்திற்கும், சுவாசிகாவிற்கும் தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனக்கு முன்னால் சசி இயக்குநராகிவிட்டார். ஒரு சமயம் அவரிடம் நான் இயக்குநராவதற்காக வாய்ப்பை தேடுகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் , ‘எந்த சூழலிலும் பசியுடன் இருக்காதே. ஏதேனும் நெருக்கடி என்றால்.. என்னை சந்திக்கவும்’ என்று நம்பிக்கை அளித்தார். அப்போது என் மனதில் ஒரு சந்தோஷம் உண்டானது. நாம் உதவி கேட்கிறோமோ… இல்லையோ… நான் உதவ தயார் என்று ஒருவர் சொல்லும் போது மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உருவாகும்.  நாம் கூப்பிட்டால் கடவுள் வந்துவிடுவார் என்றால்… நாம் கடவுளை கூப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நான் கூப்பிட்டால் கடவுள் வருவார் என்ற மன மகிழ்ச்சி இருக்கிறதல்லவா..! நம் முதல்வரின் போன் எண் நம்மிடம் இருக்கிறது என்றால் ..ஒரு  தைரியம் வரும் அல்லவா.. அவருடன் நான் தொடர்பு கொள்கிறோமோ… இல்லையோ… நம்மிடம் அவருடைய தொடர்பு எண் இருக்கிறது. ..என்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறதல்லவா.. !அதுபோன்ற சந்தோஷத்தை எனக்கு கொடுத்தவர் சசி.

என்னுடைய முதல் திரைப்படமான தீனா திரைப்படத்தை இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு கைவிட்டு விடலாமா..! என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஒரு விழாவில் இயக்குநர் சசியை சந்தித்தேன். இயக்குநராகி விட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அவரிடம் ‘இந்தப் படத்தின் பணிகள் இனி நடைபெறாது’ என்று அப்போது நடைபெற்ற விசயங்களையும்.. என் மனதில் உள்ள குழப்பத்தையும்.. அவரிடம் சொன்னேன். ‘படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டால்.. அதுவே தோல்விக்கான அர்த்தம். போராடு. நீ நினைத்ததை நூறு சதவீதம் திரையில் வந்து விட வேண்டும் என்று நினைக்காதே. எழுபது சதவீதம் வந்தால் போதும். மற்றவற்றை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். அதன் பிறகு தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

சமூக நீதியை பற்றி பேசுகின்ற வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் படங்களை விட இந்தப் படத்தில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது. நம் வீட்டிலேயே ஆண் -பெண் என்ற வித்தியாசம்  இருக்கிறது. ஒரு ஆணுக்கு எளிதாக கிடைக்கும் பல விசயங்கள்.. பெண்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. இந்த விசயத்தை சசி அற்புதமாக சொல்லி இருக்கிறார். இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ரசிகர்களாகிய உங்களுக்கும் இந்த படம் மனதிற்கு நெருக்கமாகி பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், ” நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒரு சாமி  இயக்குநர் சசி. சினிமாவில் சாமிகள் கிடையாது. மிகவும் கம்மி. ஒரு பத்து பேர் தேறுவார்களா..! என்பதே  சந்தேகம். என்னுடைய 30 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் மாதத்திற்கு ஒரு முறை என்னுடன் தொடர்பு கொண்டு.. என்னை நேரில் சந்தித்து பேசி.. கட்டி தழுவும் ஒரே சாமி இயக்குநர் சசி.

சினிமாவில் நுழைந்து என்ன செய்யப் போகிறோம் என்றால்.. ஒரு தேசிய விருதை வாங்குவோம். ஒரு பத்து ஃபிலிம் ஃபேர் விருதுகள் வாங்குவோம். இல்லை என்றால்.. ஒரு ஆஸ்கார் விருதை வாங்குவோம். ஆனால் ஒரு நாள் மரணித்து விடுவோம். ஆனால் சசி சாகவே மாட்டார். அவர் ஒரு சாமி.

நான் சசியிடம் உதவியாளராக சேர்வதற்காக அவரை சந்தித்தேன். அவர் பத்து நிமிடம் பேசிவிட்டு, தற்போது வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். மனிதர்களை உற்றுப் பார்த்து கவனித்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்பதை தாயுள்ளத்துடன் பார்க்கக்கூடிய மனுஷன் சசி.

நான் ஆண்களிடம் அதிசயமாக பார்க்கும் விசயம் என்னவெனில்… அந்த ஆண்களிடம் இருக்கும் பெண்மை தன்மை. சமூகம் ஆண்களை ஆண்களாகவே பார்க்கிறது. பெண்களை பெண்களாகவே பார்க்கிறது.

பெண்மை தன்மை யாரிடமெல்லாம் அதிகமாக இருக்கிறதோ…! அவர்கள் எல்லாம் மிகச் சிறப்பானவர்கள். இசைஞானி இளையராஜா – ஏ ஆர் ரகுமான் போன்றவர்களிடம் இது போன்ற பெண்மை தன்மை அதிகமாக இருக்கும். இதனால் தான் இவர்கள் மிகச் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். அப்படியானதொரு மிகச் சிறந்த பெண்மை தன்மையுடன் மனித நேயம் கொண்டவர் தான் சசி.

இந்தப் படத்தின் கதையை எழுதி நிறைவு செய்தவுடன் என்னுடைய மூன்று உதவியாளர்களுக்கு இந்த கதையை அவர் விவரித்தார். அவரின் இத்தகைய அணுகுமுறை.. அவர் மனித வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமே கிடைக்கிறது என நினைக்கிறேன். அதன் பிறகு நாங்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்தோம். பார்த்துவிட்டு விவாதித்தோம். இந்தப் படத்தின் திரைக்கதை மீது எனக்கு மாறுபட்ட பார்வை இருக்கிறது. அதைப்பற்றி சசியிடம் தனியாக விவாதிப்பேன்.

இந்தப் படத்தில் ஒரு தர்மம் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள் … இந்த சமுதாயத்தின் சட்ட திட்டங்களை எழுதிய ஆண்கள்… நாம் வாழும் வீதிகளில் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்? என்பதை இந்தப் படம் சொல்கிறது” என்றார்.

இயக்குநர் ராஜூ முருகன் பேசுகையில், ” இப்போதெல்லாம் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா.. பெரும்பாலும் மிஷ்கினில் தொடங்கி, மிஷ்கினில் நிறைவடைகிறது.

எல்லோரையும் போல எனக்கும் சசி சாரை மிகவும் பிடிக்கும். இத்தனை ஆண்டு காலமாக தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வருவது என்பது மிகப்பெரிய விசயம். அவருடைய எல்லா படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்தப் படத்தில் அவை நிறைய இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு நான் இரண்டு நாட்கள் ‘டிஸ்டர்ப்டு’ ஆக இருந்தேன்.

சுனிதா வில்லியம்ஸ் எனும் பெண்மணி விண்வெளிக்கு சென்று 680 நாட்களுக்கு மேல் அங்கு இருந்துள்ளார். இன்றைக்கும் பெண்களை பற்றிய நம்முடைய பார்வை எப்படி இருக்கிறது என்றால்… ஒரு காலத்தில் நாடகத்தில் கட்டியங்காரன் என்பவன் மேடையில் தோன்றி பெண்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பான். அதன் பிறகு அச்சு ஊடகம் வெளியான போது.. அது கிசுகிசுவாக மாறியது. அதிலிருந்த பெண்களின் பார்வை இன்னும் மோசமானது. சமூக ஊடகங்கள் தற்போது அதிகமாக மாறி இருக்கும் போது பெண்களைப் பற்றிய பார்வை இன்னும் மோசமானதாக மாறிவிட்டது.

ஒரு கள்ள காதல் தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்தால்… பின்னூட்டத்தில் அந்த பெண்ணைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அப்போது எனக்கு,’ இந்த நாட்டில் கலாச்சார காவலர்கள் அதிகமாகி விட்டார்களோ..!’ என்று தோன்றியது. ஆனால் கலாச்சார காவலர்கள் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை- பாலியல் வன்கொடுமை -ஆகியவை தினம் தினம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் ‘நூறு சாமி’ திரைப்படம் எனக்கு மிக முக்கியமான திரைப்படமாக தோன்றுகிறது.

இந்த படம் ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படம். பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களுக்கான படம்.

நீண்ட நாள் கழித்து வெளியாகும் அற்புதமான படம் இது. இப்படி ஒரு கதாபாத்திரங்களை உருவாக்கி.. கதையை சொல்ல சசியால் மட்டும்தான் முடியும்.

விஜய் ஆண்டனியின் முகத்தை நினைவுப்படுத்தி பார்த்தால்.. திரில்லர் திரைப்படங்களுக்கான கதையை எழுதுவது தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் ‘நூறு சாமி’ படத்தை பார்த்த பிறகு, அவருக்காக எந்த கதையை வேண்டுமானாலும் எழுதலாம் என தோன்றும். அவ்வளவு அற்புதமாக இந்த படத்தில் அவர் உட்பட அனைவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு நன்றி.

ஃபேனிடம் பேசிக் கொண்டிருக்கும் மனுஷி- தகப்பன்களாக மாறக்கூடிய மகன்கள்-  எங்கேயோ நடை பயணத்தின் போது நம்பிக்கையை விதைக்கும் மோட்சம்- தேசியக் கொடியை தைப்பதற்காக ஒரு பெண்ணின் வலியை பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் – அன்பை தன்னுடைய அன்றாட இயல்பாக்கி கொண்ட ஏழுமலை- என ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்குவது.. சசியால் மட்டும் தான் முடியும். இந்தப் படம் மிகச் சிறந்த படம். வணிக ரீதியாகவும் வெற்றியை பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், ” இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு தெரியும். ஏனெனில் ‘பூ’ படத்திலிருந்து தொடங்கிய சசி உடனான நட்பு இன்றும் தொடர்கிறது.  இந்த படத்திற்கு முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர். வேறு ஒரு நடிகர் இருந்தார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருந்தது. அந்தத் தருணத்தில் என்னுடன் ஆலோசனை நடத்தினார். இந்தத் தருணத்தில் எங்களுக்கு ஆபத்பாண்டவனாக வந்தவர்தான் விஜய் ஆண்டனி சார்.

இதற்காக அவர் அந்த தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக கொடுத்தார். அந்த வகையில் இந்தப் படத்தின் முதல் சாமி விஜய் ஆண்டனி தான்.  இந்தப் படம் இப்படி திரையில் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் விஜய் ஆண்டனி தான். இது தொடர்பாக விஜய் ஆண்டனியிடம் பேசியபோது ‘சசி சாருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்றார்.

இந்த ஆண்டு நடிகை சுவாசிகாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இது ஒரு ஆர்ட் பிலிம் அல்ல. பக்கா கமர்ஷியல் திரைப்படம். கிளைமாக்ஸ் 20 நிமிடங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும். அந்த வகையில் இந்த படம் வெற்றிகரமான திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், ” தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக திரைப்படங்களை இயக்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு மிகப்பெரிய முயற்சி இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கும் சசி சாருக்கு என் வாழ்த்துக்கள்.

விஜய் ஆண்டனியின் மியூசிக் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அதைவிட நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும் அதைவிட அவர் தயாரிப்பாளராக இருப்பது ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து வித்தியாசமான களங்கள்-  வித்தியாசமான படங்கள்-  புது இயக்குநர்கள் – என தொடர்ந்து வெற்றிகளை அளித்து வரும் விஜய் ஆண்டனியின் இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் சசி பேசுகையில், ” இந்தப் படத்தில் இரண்டாம் பாதியில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு, ‘நான் கடைசியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கூட பரவாயில்லை. நான் இந்த படத்தில் நடிக்கிறேன்’ என்றார்.

இப்போதெல்லாம் படம் தொடங்கி 40 நிமிடத்திற்கு பிறகு தான் ஹீரோ வருகிறார். அதனால் ஒரு படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதில்லை. அதே போல் இந்த படத்தில் கடைசி 40 நிமிடத்தில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். கண்டிப்பாக இந்தப் படமும் ஒரு வெற்றிகரமான படமாக தான் இருக்கும். என்னுடைய இந்த உறுதி மொழியை ஏற்று தாராளமாக அனைவரும் ‘நூறு சாமி’ படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.

இந்தப் படத்திற்கு எனக்கு இரண்டு பாஸ் ( Boss) ஒன்று இந்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த பாஸ்-  படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார்.

என்னுடைய இரண்டாவது பாஸ் ரசிகர்கள். அவர்களும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் பாராட்டை தான் தெரிவிப்பார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.

ரசிகர்களிடம் இந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்று ஊடகங்களும் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன்.

இந்த கதையை நான் எங்கிருந்து எடுத்தேன் என்றால்… தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. அந்த ஷோவில் ஒரு அம்மாவும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட விசயத்திலிருந்து தான் இப்படத்தின் கதை உருவானது.

தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான்- அது பிச்சைக்காரன்.

ஒரு மகன், தாயை மனுஷியாக பார்த்தான்- அது நூறு சாமி.

இந்த கதையின் நிஜ நபரான பாஸ்கரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன். அவருடைய வாழ்வில் நடைபெற்ற விசயங்கள்தான் இப்படத்தின் கதை.

இந்த படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் தங்களது அம்மாவை மனுஷியாக பார்ப்பார்கள் ” என்றார்.

தயாரிப்பாளர் – நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், ” என்னுடைய வாழ்க்கையில் மூன்று திருப்புமுனைகள்.  அதில் ஒன்று ‘டிஷ்யூம்’ படத்தில் இயக்குநர் சசி எனக்கு வழங்கிய வாய்ப்பு.. இரண்டாவது திருப்புமுனை ‘பிச்சைக்காரன்’. இந்தப் படம் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது. மூன்றாவது திருப்புமுனை.. இந்தப் படத்தில் என்னை ‘லவ்வர் பாய்’ ஆக மாற்றியது.  இதன் பிறகு எனக்கு லவ்வர் பாய் கேரக்டர்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் ரசிகர்களாகிய உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். பெண்களுக்கு மிக மிக அவசியமான படம். சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம். உங்களது வீட்டில் அம்மா -அக்கா- தங்கை- என எல்லாருக்குமான மிக முக்கியமான படம். இந்தப் படம் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது” என்றார்.

சாருகேசி விமர்சனம் RATING 3/5

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் Y.G. மகேந்திரன், சுஹாசினி, மணிரத்தினம், சத்யராஜ், தலைவாசல் விஜய், சமுத்திரகனி,ராஜ் ஐயப்பன், ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சாருகேசி’

விமர்சனம்:

கதையின் நாயகனான ஓய் ஜி மகேந்திரா ஒரு பெரும் இசைப்பாடகர். அவருக்கு திடீரென அல்சைமர் எனும் மறதிநோய் ஏற்படுகிறது. அவரது மகனுக்கு ஓய் ஜி மகேந்திரா மீது பெரிய மரியாதை ஏதுமில்லை. ரம்யா பாண்டியனை காதலிக்கும் அவருக்கு கதையில் ஒரு இருக்கிறது. மேலும் அவருக்கும் ஓய் ஜி மகேந்திராவிற்கும் உள்ள பந்தத்தில் ஒரு ட்விஸ்டும் உண்டு. இச்சூழலில் அல்சைமர் நோயிலிருக்கும் ஓய் ஜி மகேந்திரா வாழ்வை பிறர் வாயிலாக நாம் அறிய முடிகிறது. முடிவில் நோய்மையிலிருந்து ஓய் ஜி மகேந்திரா மீண்டாரா? இல்லையா? என்பதே கதை..

ஓய் ஜி மகேந்திரா தனது தேர்ந்த அனுபவத்தை நடிப்பில் வார்த்துள்ளார். “வந்து போவதே நம் வேலை..வழி நடத்துவது அவன் லீலை” என்ற வரிகளை அவர் பாடுகையில் நமது ஜீவன் உருகிப்போய்விடுகிறது. சத்யராஜ் தனது அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். சுஹாசினி, தலைவாசல் விஜய், ராஜ் ஐயப்பன், ரம்யா பாண்டியன் ஆகியோர் தங்களது பாத்திரங்களை நேர்த்தியாக கையாள்ந்துள்ளனர்.

சிறப்பு தோற்றங்களில் வரும் சமுத்திரக்கனி, மதுவந்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பும் கதைக்கு வலுசேர்க்கிறது. தேவா நிச்சயமாக இப்படத்தில் தேனிசையை தந்துள்ளார். பா.விஜய் பாடல், வசனம் ரசிக்க வைக்கிறது.

மைனஸ்: சுரேஷ் கிருஷ்ணா கதை எழுதும் போது இன்னும் இந்த காலகட்டத்திற்கு ஏற்பே மைய கருத்தை சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த ‘சாருகேசி’ உயிருள்ள இசை வடிவம்.

 

ஆட்டி விமர்சனம் RATING 2.9/5

1970 களில் நடக்கும் ஒரு மலைகிராமத்தில் நடக்கும் கதையாக படம் தொடங்குகிறது. படிப்பில்லாத தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ஓர் அஞ்சல் நிலையம், ஒரு காவல்நிலையம் என்றிருக்கும் அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் காவல்துறை ஆய்வாளர் இசக்கி கார்வண்ணன். ஒரு வழக்குகூட வராத அந்த காவல்நிலையத்துக்கு இந்த ஆய்வாளர் வந்த நேரத்தில் ஒரு கொலைவழக்கு வருகிறது. 

அந்த ஊருக்கு பள்ளிக்கூடம் வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று அங்கு ஆசிரியராக பிரவீன் பழனிசாமி கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கை விசாரிக்க தொடங்கும் இசக்கி கார்வண்ணன், பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு கொடூரமாக கொலை செய்து வருவதை கண்டுபிடிக்கிறார். அவரைக் கொன்றது யார்? என்கிற விசாரணையில் விரிகிறது படம். 

காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன்,அந்த வேடத்துக்குரிய கம்பீரம் காட்ட முயன்றிருக்கிறார். என்கவுண்டர் சிறப்பு காவலராக சுட்டு தள்ளுகிறார்.   அபிநட்சத்திரா வேடமும் அவருடைய நடிப்பும் நன்று.சிறுவர்களுக்குப் பாடம் சொல்லித் தரும் நேரமும் ஆசிரியரிடம் சீறும் காட்சியும் சிறப்பு. படத்தில் பாடல்கள் இல்லை. 

பின்னணி இசை ஓகே தான்.  நகைச்சுவைக்கென இருக்கும் காதல் சுகுமார்,அஞ்சல்காரர் சௌந்தர்,பள்ளி ஆசிரியர் பிரவீன் பழனிசாமி,காவலராக வரும் செல்வகுமார் ஆகியோரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்குப் பொருந்தியிருக்கிறார்கள்.

மைனஸ்: சஸ்பென்ஸ் காட்சிகள் யூகிக்கக்கூடிய அளவில் இருந்தது…. மண் வாசனை சார்ந்த பாடல்களை வைத்திருக்கலாம்……

மொத்தத்தில் இந்த ‘ஆட்டி’ பெண்கள் விழிப்புணர்வு.

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுப் பயனடையுமாறு முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026ம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சராசரியாக 52.72 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 20.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில், ஆண்டுக்கு 32.07 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், கார், குறுவை, சொர்ணவாரிப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.48 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் (சில பகுதி), திருச்சி (சில பகுதி), அரியலூர் (சில பகுதி) ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணை ஜுன் 12ம் நாளன்று திறப்பது வழக்கமாகும். இந்நிலையில், நடப்பு தென் மேற்குப் பருவத்தில் ‘எல்நினோ’ எனும் நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென் மேற்குப் பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 79.56 அடி (நீர் இருப்பு: 41.52 டிஎம்சி) மட்டுமே உள்ளது. எனவே, இன்று (ஜுன் 12) மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக் கூறு இல்லாத நிலை உள்ளது.

இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பாக நெல் சாகுபடி மேற்கொள்ளும் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும், டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் (Filter Points) மூலம் 3.55 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ள இயலும் என்பதாலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் தற்போது மழைப் பொழிவு சீராக இல்லாத நிலையிலும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட கார், குறுவை, சொர்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும், நெல் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் பயனடையும் வகையில் 2026ம் ஆண்டிற்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.

இதன்படி, வடிமுனைக் குழாய்களைக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 77.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 57.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் என மொத்தம் 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில், நெல் இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நெல் ரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத் தொகை ஆகிய இனங்களுக்கு 134.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடாக டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களின் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம், இயந்திரமயமாக்கல் ஊக்குவிக்கப்படுவதுடன், நீர் மேலாண்மை மேம்படுத்தப்படும். தரமான விதைகள் மற்றும் தொழில் நுட்பங்கள் பயன்பாட்டின் மூலம் நெல் சாகுபடியின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இத்திட்டம் உறுதுணையாக அமையும்.

மேலும், வேளாண் பொறியியல் துறை வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கி.மீ. நீளமுள்ள ”சி” மற்றும் ”டி” வாய்க்கால்கள் 10 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டுள்ளன. மேலும், நீர்வளத்துறை மூலமாக 100 கோடி ரூபாய் செலவில் 4,971 கி.மீ. நீளமுள்ள ”ஏ” மற்றும் ”பி” வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை 97 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன.

மேலும், குறுவை சாகுபடிக்கு 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும்.

எனவே, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுப் பயனடையுமாறு முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 லட்சம் வழிப்பறி செய்த இருவர் கைது!

டிராவல்ஸ் நிறுவன உரிமை​யாளரைத் தாக்கி ரூ.2 லட்​சம் வழிப்​பறி செய்த இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சேப்​பாக்​கம், மசூதி தெரு​வில் வசித்து வருபவர் முகமது உபேஸ் (38). திரு​வல்​லிக்​கேணி, அருணாச்​சலம் தெரு​வில் டிராவல்ஸ் நிறு​வனம் நடத்தி வரு​கிறார்.

இவர் கடந்த 9-ம் தேதி இரவு, சென்​னை, பர்மா பஜாரில் உள்ள தனது நண்​பரிட​மிருந்து ரூ.2 லட்​சத்தை கடனாக வாங்​கி​னார். பின்​னர் அதை பையில் வைத்​துக் கொண்டு பைக்​கில் அலு​வல​கம் திரும்​பி​னார்.

அலு​வல​கத்​தில் பைக்கை நிறுத்​தும் நேரத்​தில் அவரை ஏற்​கெனவே பின் தொடர்ந்து வந்த வழிப்​பறி கொள்​ளை​யர்​கள் இரு​வர் முகமது உபேஸை தாக்கி அவரிட​மிருந்த பணத்தை வழிப்​பறி செய்​து​விட்டு தப்​பினர். இது தொடர்​பாக திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது.

இதையடுத்து அக்​காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் முகமது உபேஸை தாக்கி வழிப்​பறி செய்​தது கொருக்​குப்​பேட்​டை, திரு​நாவுக்​கரசு தோட்​டம் பகு​தி​யைச் சேர்ந்த நாக​ராஜ் (25), தண்​டை​யார்​பேட்டை சுனாமி குடி​யிருப்​பைச் சேர்ந்த நிதிஷ்கு​மார் (20) என்​பது தெரிந்​தது.

இதையடுத்து தலைமறை​வாக இருந்த இரு​வரை​யும் தனிப்​படை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். இதையடுத்​து, இரு​வரும் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அண்ணாமலை கடும் விமர்சனம்!

பொய், புரட்டுகளை மக்களிடம் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட உண்மை சரிபார்ப்பக வலைதள கணக்கு, தற்போதும் அதே வேலையைத்தான் தொடர்கிறது” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில்:

“குறிப்பிட்ட 3 ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைபட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டதற்கு முதலில் நன்றி. ஆனால், முந்தைய திமுக அரசின் அவல நிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும் செட்டாப் பாக்ஸில் எப்படி தொழில்நுட்ப பிரச்சினைகள் வரும்?.

பொய், புரட்டுகளை மக்களிடம் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த உண்மை சரிபார்ப்பக வலைதள கணக்கு, தற்போதும் அதே வேலையைத்தான் தொடர்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. கன்னத்தில் ஒரு மருவை மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ‘அதே டெய்லர், அதே வாடகை’ (‘வெற்றிக்கொடி கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபன் – வடிவேலு நகைச்சுவை வசனம்) ஏமாற்று வேலைதான் இது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 முன்னணி செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்தது. அதில், ‘செய்தி சேனல்கள் நீக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே 3 சேனல்களை தற்காலிகமாக ஒளிபரப்பு செய்ய முடியவில்லை. விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தையே அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கேரள கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் கைது! எதற்கு?!

தி.நகர், ஜி.என்​.செட்டி சாலை​யில் வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரகம் (டிஆர்ஐ) இயங்​கு​கிறது. தங்​கம் கடத்​தல் தொடர்​புடைய 2 பேர் சமீபத்​தில் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், அவர்​களிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட வாக​னம் ஒன்று இந்த அலு​வல​கத்​தில் நிறுத்தி வைக்​கப்​பட்​டது. இந்த கடத்​தல் வழக்​கில் சர்​வ​தேச கடத்​தல் கும்​பலின் தொடர்பு உள்​ளதா என தொடர்ந்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. மேலும் இந்த வழக்​கில் முக்​கிய நபர்​களும் சிக்கி இருந்​தனர். பறி​முதல் செய்​யப்​பட்ட காரில் முக்​கிய ஆவணங்​கள் இருந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது. இதை சம்​பந்​தப்​பட்ட கடத்​தல் கும்​பல் கொள்​ளை​யடிக்க திட்​ட​மிட்​டது.

அதன்​படி, கேரளாவைச் சேர்ந்த கூலிப்​படை​யினர் கடந்த 31-ம் தேதி நள்​ளிரவு தி.நகரில் உள்ள டிஆர்ஐ அலு​வலக வளாகத்​துக்​குள் முகமூடி அணிந்து நுழைந்​தனர். அவர்​கள் காவலா​ளி​யான ஜான்​கென்​னடியை தாக்கி, வாயில் துணி​யைத் திணித்​து, கை கால்​களை கட்டினர். பின்​னர் கூலிப்​படை காரின் கண்​ணாடியை உடைத்து அதிலிருந்த ஆவணைங்​களை கொள்​ளை​யடித்​து​விட்டு தப்​பியது. மறு​நாள் காலை அலு​வல​கம் வந்த பணி​யாளர்​கள் இதுகுறித்து தேனாம்​பேட்டை போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். போலீ​ஸார் விரைந்து வந்து காவலா​ளியை மீட்டு அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

இந்த கொள்ளை தொடர்​பாக தேனாம்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக டிஆர்ஐ அலு​வல​கம் மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள சிசிடிவி கேமரா பதிவு​கள் கைப்​பற்​றப்​பட்​டன. இதில் கூலிப்​படையைச் சேர்ந்த புதுச்​சேரி காரைக்​காலில் வசிக்​கும் டிஜிட்​டல் மார்க்​கெட்​டிங் வேலை செய்​யும் அப்​துல் ஹாடி (24), கேரளாவைச் சேர்ந்த ஜிம் மாஸ்​டர்​கள் அனூப் (33), ஆதித்​யன் (20), சிம்​லால் (53) ஆகிய 4 பேர் கொள்​ளை​யில் ஈடு​பட்​டது தெரிந்​தது. தலைமறை​வாக இருந்த இந்த 4 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். இதில் தொடர்​புடைய மேலும் சிலரை​யும் கூலிப்​படையை ஏவி விட்​ட​வர்​களை​யும் தனிப்​படை போலீ​ஸார்​ தொடர்ந்​து தேடி வரு​கின்​றனர்​.

 

இது எருமை ஆட்சி! யோவ் விஜய் என்னய்யா நீ…!! யூடியூபர் மாரிதாஸ் கைது!!!

மூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்கள் மூலமாக அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வரும் பிரபல யூடியூபர் மாரிதாஸ், அண்மைக்காலமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனால் மாரிதாஸ் மீது தவெக நிர்வாகிகள் புகாரளித் நிலையில், தமிழக அரசுக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் சில கருத்துகள் பதிவிடப்பட்டதாகக் கூறி, சென்னை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து, வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சென்னை சைபர் கிரைம் தனிப்படை காவல்துறையினர் மதுரைக்கு விரைந்தனர்.

தொடர்ந்து மதுரை மாநகர காவல்துறையினரின் உதவியுடன், மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் இல்லத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில், யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் தன்மை, எந்த குற்றப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் குறிப்பிட்ட வீடியோக்கள் என்ன என்பன குறித்து காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பின்னரே முழுமையான விவரங்கள் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கருத்துச் சுதந்திரம், அரசியல் விமர்சனங்களின் எல்லை, சமூக ஊடகங்களின் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. எனவே தற்போது மாரிதாஸ் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கடைசி மூன்று பதிவுகள் தான் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் அந்த பதிவுகள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமைச்சர் கீர்த்தனா பற்றிய பதிவு :

இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்.. ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும். ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம்.

அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு.. தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் – கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது.. இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனன் குறித்த பதிவு:

ஏன்ம்பா லாட்டரி ஆதவ் ! உன் மாமனார் லாட்டரி திருடன் அக்கவுண்டன் பழனிச்சாமி கொலை செய்யப்பட்ட கேஸ் மீண்டும் விசாரனைக்கு வருமா – நீதி கிடைக்குமா? இல்லை மூடப்படுமா! , உன் மாமியார் லீமா ரோஸ் சகோதரன் ஜான் பிரிட்டோ எங்கே திரியுறான்! என்ன ஹவாலா வேலை பார்க்கிறான் என்பதை விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் ஊத்தி மூடப்படுமா? கொஞ்சம் உன் காந்தி புகைப்படம் வைத்து அம்பேத்கார் என பேசி ஊரை ஏமாற்றும் யுக்தியை விட்டு விளக்கம் தரவும்.

ஆதவ் தற்போது சிறு துறைமுகங்கள் சார்ந்த அமைச்சகத்தையும் தன் கையில் வைத்திருப்பது ஆபத்தானது தமிழகத்திற்கு.. தமிழகத்தின் எல்லை தாண்டிய கடத்தல்கள் , போதை கடத்தல்களும் செய்வதற்கு ஜான் பிரிட்டோ சிண்டிக்கேட் கடத்தலுக்கும் இந்த சிறு துறைமுகங்கள் உதவிகரமாக இருக்குமோ என்ற கேள்வியும் இணைகிறது… எனவே ஆதவ் + லீமா ரோஸ் கும்பல் மொத்த தமிழகமும் விரட்டி அடிக்க கேள்விகள் கேட்பது முதலில் அவசியம்.லாட்டரி மாபியா மீண்டும் தமிழகத்தை தன் கொடூரமான காசு வெறிக்கு வேட்டையாக கிளம்பியுள்ளது…

தவெக ஆட்சி குறித்த பதிவு :

கடந்த ஒரு மணி நேரத்தில் 87 முறை மின்சாரம் செல்வதும் பின் low கரண்டாக வருவதுமாக இருக்கிறது. டேய் வீட்டில் ஒரு பொருள் மிச்சம் இருக்காதுடா இப்படி மின்சாரம் வந்தா. கரண்ட் மொத்தமா கூட நிறுத்தி போட்டு தொலைங்கடா, இப்படி power fluctuation மொத்த மின்சாதன பொருட்களையும் நாசம் செய்துவிடும்..

நடுத்தர குடும்பம் EMI போட்டு வாங்கி வச்ச பொருளேல்லாம் பழுதாகுமே என வருத்தமே இல்லாம எப்படியா எருமை மாடு மாதிரி ஆட்சி நடத்துறேங்க! மின் விசிறி ஆரம்பித்து பிரிட்ஜ் , டீவி வரை எல்லாம் நாசமாக போவது உறுதி. விஜய் யோவ் என்னய்யா நீ ஆலோசனை வழங்கின.. அப்படி என்ன தான் நீங்க நிர்வாகம் பண்றீங்க … எருமை ஆட்சி.. என கூறியுள்ளார்.

இளம் பெண்ணை கொலை செய்த சிங்கம் மீசை முதியவர்!

டலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரது மனைவி 26 வயதுடைய காமாட்சி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரைப் பிரிந்து தந்தை வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை காமாட்சி சரமாரியாக தாக்கப்பட்ட வீட்டிற்கு வெளியே உயிரிழந்து கிடந்த நிலையில் அவருக்கு அருகிலேயே அவரது தந்தையான பாண்டுரங்கன் என்பவரும் அடிபட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட காமாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இளம்பெண்ணை படுகொலை செய்த அதே ஊரைச் சேர்ந்த 63 வயதுடைய மகேந்திரன் என்ற முதியவரை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து இதில் பல்வேறு முக்கிய தகவல்களும், கொலைக்கான காரணமும் தெரிய வந்துள்ளது. அதே ஊரைச் சேர்ந்த முதியவரான மகேந்திரன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார், மேலும் மிகவும் வேண்டியவர்களுக்கு அவ்வப்போது பணமும் கொடுத்து உதவி செய்து வந்துள்ளார். அந்த வகையில் காமாட்சிக்கு அவர் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடனாக பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மகேந்திரன் இளம் பெண் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயன்றுள்ளார். மேலும் தனது கிராமத்தில் அந்தப் பெண் தன்னுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக தவறான தகவலை பரப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம் பெண் காமாட்சி மகேந்திரனை வரவழைத்து அவர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ காட்சிகளை எடுத்துள்ளார். அதில் “நான் உன் கூட தொடர்புல இருக்கேனா.. நீ என்ன வெச்சிட்டு இருக்கியா.. உனக்கு ஆசையா இருந்த உன் பொண்ணு கிட்ட போய் கேளு.. என் வாழ்க்கையையே கெடுத்துட்டியே” என இளம் பெண் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து பின்னர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்நிலையில் ஊருக்கு வந்த மகேந்திரன் தெரிந்தவர்கள் மூலம் காமாட்சியிடம் இருந்த வீடியோ எடுத்த செல்போனை வாங்கி விட்டார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனில் பதிவான காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து இதனால் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த மகேந்திரன் நேற்று காலை தனது வயலுக்கு செல்லும் போது காமாட்சி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்ததை பார்த்திருக்கிறார்.

பின்னர் வயலுக்குச் சென்று இரும்பு பைப்பை எடுத்து வந்து காமாட்சியை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். அதை தடுக்க வந்த அவரது தந்தையையும் தாக்கினார் என்பது தெரிய வந்தது. எனவே அவரை கைது செய்த போலீசார் மேலும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற நோக்கத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த வழக்கில் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசைக்கு இணங்க மறுத்து தட்டிக்கேட்ட பெண்ணை முதியவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இருக்கும் இடத்தில் உற்சாகம் இருக்கும்- விஜய் சேதுபதி

Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இப்படத்தின் பிரம்மாண்ட  டீசர்  வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
 
நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர்.
 
டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள “ஸ்லம் டாக்” திரைப்படம் குறித்து நிகழ்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன.
 
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா   பேசியதாவது:
 
ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
 
இது தயாரிப்பாளராக எனது முதல் திரைப்படம். இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார் மற்றும் சார்மி மேடம் ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகருடன் எனது முதல் திரைப்படத்தை தொடங்கியிருப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
 
கதாநாயகி சம்யுக்தா, தபு மேடம், துனியா விஜய் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் எனது நன்றிகள். விஷ்வா, விடிவி கணேஷ், பிரம்மாஜி மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களின் கைகளில் உள்ளது. எங்களது படைப்பை மக்களிடம் கொண்டு செல்ல நீங்கள் வழங்கும் ஆதரவுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.” என்றார்.
 
தயாரிப்பாளர் சார்மி கௌர் பேசியதாவது:
 
“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஊடக நண்பர்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதே இடம், அதே முகங்கள், அதே புன்னகைகள். 2002-ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அப்போது ஊடக நண்பர்களை சந்தித்தேன். அதன் பிறகு பல படங்களில் நடித்தேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நிறைய அன்பைப் பெற்றேன். இன்றும் உங்களை சந்தித்து பேசும்போது, அந்த பாசமும், நெருக்கமும் இன்னும் மாறாமல் இருப்பதை உணர்கிறேன்.”
 
”‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சென்னை வந்துள்ளேன். ஆனால் இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக. எங்கள் Puri Connects நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளோம். ஆனால் நேரடி தமிழ் திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.”
 
”‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள். பூரி ஜெகன்நாத் சாரின் திரைக்கதை சொல்லும் விதமும், விஜய் சேதுபதி சாரின் நடிப்பும் இணைந்து இந்தப் படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன.”
 
“விஜய் சேதுபதி சார் முதலில் ஒரு சிறந்த நடிகர். அதே நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமும் கூட. ஒரு திரைப்படத்திற்கு நடிப்பு திறமையும், வணிக ரீதியான மதிப்பும் ஒருசேர தேவைப்படும் போது, அந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் நடிகர் அவர். இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த முறையில் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.”
 
“தபு மேடத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அவரைத்தான் நினைத்திருந்தோம். கதையை கேட்டவுடனேயே அவர் சம்மதித்தார். தனது கதாபாத்திரம் மட்டுமல்லாமல், முழுக் கதையையும் பாராட்டி எங்களுக்கு நம்பிக்கையளித்தார். இன்றுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.”
 
“துனியா விஜய் சார் இந்தப் படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையை கேட்டவுடனேயே உடனடியாக ஒப்புக்கொண்டார். தனது படப்பிடிப்பு தேதிகளையும் எங்களுக்காக மாற்றி அமைத்துக் கொடுத்தார். அவருடைய ஒத்துழைப்பிற்கும், அன்பிற்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்போம்.”
 
“சம்யுக்தாவை முதன்முதலில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. கதாபாத்திரத்திற்கு மிகவும் இயல்பான தோற்றமும், நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை தேவைப்பட்டது. சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தை மிக அழகாக உயிர்ப்பித்தார். அவருடைய இயல்பான நடிப்பும், எளிமையான தோற்றமும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.”
 
“விடிவி கணேஷ் சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அவருடைய வீடியோக்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.”
 
“இந்தப் படத்தில் பிரம்மாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.”
 
“எங்கள் நிறுவனத்தின் CEO விஷு ரெட்டிக்கு சிறப்பு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கு எந்தவிதமான அழுத்தமும் வராமல் பார்த்துக் கொண்டவர் அவர். தயாரிப்பு, மார்க்கெட்டிங், விற்பனை, விளம்பரம் என அனைத்து துறைகளையும் ஒரே நேரத்தில் கவனித்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியுள்ளார். அவருடைய உழைப்பிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது.”
 
“இந்தப் படத்தை ஆதரித்த ஜேபி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் முழு படக்குழுவிற்கும் என் நன்றிகள். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ரசிகர்களை பெரிதும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் உங்களை பெருமைப்படுத்துவோம்.” என்றார்.
 
இசையமைப்பாளர்  ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்   பேசியதாவது..,
 
“இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியவர் அவர்தான். அவர் ஒரு மிகப்பெரிய லெஜெண்ட். ஆரம்பத்தில் அவருடன் பணியாற்றுவது எனக்கு சற்று பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றியபோது அது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக மாறியது. இந்த வாய்ப்பிற்காக அவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அதேபோல் சார்மி மேடத்திற்கும் நன்றி. அவர் அனைவரையும் மிகவும் அன்பாகவும், எளிமையாகவும் கவனித்துக் கொண்டார். விஜய் சேதுபதி சாருக்கும், சுமிதா மேடத்திற்கும் என் நன்றிகள்.
 
இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய வகையில் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இது ஒரு இனிய ஆச்சரியமாக இருக்கும். பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் நிறைய புதுமைகளை கொண்டு வர முயற்சித்துள்ளோம். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”.
 
நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது:
 
“இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு திடீரென வந்தது. ஒரு நாள் பூரி ஜெகன்நாத் சார் அழைத்தார். உடனே எனக்கு நினைவுக்கு வந்தது ‘போக்கிரி’. இன்றைய தமிழக முதலமைச்சர் நடித்த அந்த பிரம்மாண்ட வெற்றிப் படத்தின் ஒரிஜினலை இயக்கியவர் அவர்தான். அதோடு பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்த மிகப்பெரிய இயக்குநர். என் மேனேஜரும் அவரைப் பற்றி நிறைய சொல்லியிருந்தார். அதனால் அவரை சந்திக்கும்போது ஒரு விதமான எதிர்பார்ப்பு இருந்தது.
 
ஆனால் நேரில் சந்தித்தபோது, அவ்வளவு பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல், மிகவும் எளிமையான, மென்மையான மனிதராக அவரை பார்த்தேன். அவருடன் அமர்ந்து பேசியதும், ஒன்றாக உணவருந்தியதும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
 
இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் பற்றிய விவரங்களை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதை நடித்தபோதே மிகவும் ரசித்தேன். பூரி சார் நடிகர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
 
“தபு மேடம் ரசிகன் நான்  அவருடைய அன்பையும் அவர் குழுவினரின் அன்பை நான் மறக்க முடியாது. குறிப்பாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, தினமும் எங்களுக்கு அவர் அனுப்பிய உணவுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். மட்டன், சிக்கன், புலாவ் என பல வகையான உணவுகளை நிறைய அளவில் அனுப்புவார் அவர் கூட நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அந்த அன்பும், உபசரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. படப்பிடிப்பு அனுபவத்தை இன்னும் இனிமையாக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.”
 
“படப்பிடிப்பின் முதல் நாளிலேயே விஜய் சேதுபதி சாரின் அர்ப்பணிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தெலுங்கு டயலாக்குகளை எழுதி வைத்து மனப்பாடம் செய்வார்.  கேரவனில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதை விட, வெளியிலேயே அமர்ந்து தொடர்ந்து தனது வேலையில் முழு கவனத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த அர்ப்பணிப்பைப் பார்த்தபோது, நான் முன்பு பணியாற்றிய இன்றைய தமிழக முதலமைச்சரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நினைவுக்கு வந்தது. அதே அளவிலான ஈடுபாட்டையும், உழைப்பையும் விஜய் சேதுபதி சாரிடமும் பார்த்தேன்.
 
அதனால்தான் இன்று அவர் இந்திய அளவில் ஒரு வெற்றிகரமான நடிகராக  திகழ்கிறார். இந்த உயரத்தை அடைவதற்கு திறமை மட்டுமல்ல, கடின உழைப்பும், பொறுமையும் அவசியம். சரியான நேரம் வரும்வரை காத்திருந்து தொடர்ந்து உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.
 
இந்தப் படம் வெளியான பிறகு, குறிப்பாக தெலுங்கு ரசிகர்களும் அவருடைய நடிப்பை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். தமிழ், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அவருடைய திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பூரி சார் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
 
நடிகர்கள் அனைவரிடமிருந்தும் சிறந்த நடிப்பை வாங்கிக் கொள்ளும் திறமை பூரி சாருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் செயல்படுவார். கலைஞர்களை சரியான நேரத்தில் அழைத்து, திட்டமிட்டபடி பணிகளை முடித்து விடுவார். அந்த தொழில்முறை அணுகுமுறையே அவரை இந்த உயரத்தில் நிலைநிறுத்தியுள்ளது.
 
இந்தப் படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்தேன். படக்குழுவில் இருந்த உதவி இயக்குநர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப் படத்திற்காக மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. டீசரிலேயே அதன் தரம் தெரிகிறது.
 
‘ஸ்லம் டாக்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுகள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
 
நடிகை சம்யுக்தா பேசியதாவது..,
 
“பூரி ஜெகன்நாத் சாருடன் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியை மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இயக்கக்கூடியவர் அவர். இயக்கம் என்பது ஒரு கலை. அதை அவர் மிகவும் இயல்பாக கையாள்கிறார். சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, கலைஞர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணரும் திறமை அவருக்கு இருக்கிறது.
 
இந்த படத்தில் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.அவரின் ரசிகை நான், ரசிகர்கள் திரையில் ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒரு இணை நடிகையாக, ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறும் அந்த அற்புதமான பயணத்தை நேரில் பார்த்திருக்கிறேன். விஜய் சேதுபதி சார் அந்த மாற்றத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். அவருடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவர் மிகவும் அன்பானவர், எளிமையானவர்.
 
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் உருவாக்கியுள்ள பாடல்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றன. இதுவரை நான் கேட்ட பாடல்களே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முழு ஆல்பத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.
 
எங்கள் தயாரிப்பாளர்களுக்கு சார்மி மேடமுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்கள் இந்த படத்தில் பணத்தை மட்டும் முதலீடு செய்யவில்லை; தங்களது நேரம், உணர்வுகள் மற்றும் முழு அர்ப்பணிப்பையும் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக சார்மி மேம், படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நேரடியாக ஈடுபட்டு பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். அவரது விருந்தோம்பலும், அன்பான அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்தது.
 
ஜேபி சாருக்கும், முழு தயாரிப்புக் குழுவிற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். நானும் இப்போதுதான் டீசரை பார்த்தேன். முழு படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
 
மேலும் பூரி ஜெகன்நாத் சாருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காத்திருப்பார்கள். அவரது பெயரையே கொண்டாடும் ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநராக அவர் உருவாக்கியிருக்கும் அந்த பிராண்ட் மதிப்பே அவருடைய வெற்றிக்கு சான்று. முழு படத்தையும் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
 
இயக்குநர் பூரி ஜெகன்நாத் பேசியதாவது..,
 
“தமிழ் ஊடக நண்பர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் எனது முதல் நேரடி தமிழ் திரைப்படம். இந்த வாய்ப்பை அளித்த விஜய் சேதுபதி சாருக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
 
ஒரு இயக்குநராக, விஜய் சேதுபதி போன்ற திறமையான நடிகர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் இணைந்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். அவரைப் பற்றி என்னை மிகவும் கவர்ந்தது அவரது எளிமை. எப்போதும் மிகவும் இயல்பாகவும், எளிமையான மனிதராகவும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமுக நடிகரைப் போலவே உற்சாகத்துடன் வருவார். அவரது நடிப்பில் ஒரு துளி கர்வத்தைக் கூட பார்க்க முடியாது. அந்த குணங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. இந்த படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான, சக்திவாய்ந்த விஜய் சேதுபதியை காண்பார்கள்.
 
சம்யுக்தாவுடன் முதல் முறையாக பணியாற்றினேன். அவர் மிகவும் உற்சாகமானவர். இந்த படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் விடிவி கணேஷ் சார் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருப்பார். அவர் இருக்கும் இடத்தில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருக்கும். மிகவும் பாஸிடிவான மனிதர்.
 
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான துனியா விஜய் இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் ஜரீனா வஹாப் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.
 
பிரம்மாஜி, ரோஹன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். இந்த படத்தின் நடிகர் தேர்வுக்கான பெருமை முழுவதும் சார்மி கௌருக்கே சேரும். இந்த படத்திற்காக மிகச் சிறந்த நடிகர் பட்டாளத்தை அவர் ஒருங்கிணைத்துள்ளார்.
 
தயாரிப்பாளர்களான ஜேபி நாராயண ராவ் மற்றும் மகேந்திர ராவ் ஆகியோருக்கு எனது நன்றிகள். அவர்கள் திரைப்படத் துறையில் புதியவர்களாக இருந்தாலும், இந்த படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர். மேலும், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் அற்புதமான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.
 
‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் கதை இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பிச்சைக்காரர்களைக் கடந்து செல்கிறோம். ஆனால் அவர்களின் பின்னால் இருக்கும் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் கதைகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த மனிதர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.
 
இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; வலுவான உணர்வுகளையும் கொண்ட திரைப்படம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.
 
நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது..,
 
“இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் படத்தைப் பற்றியும், தங்களது அனுபவங்களைப் பற்றியும் மிகவும் அழகாக பகிர்ந்து கொண்டார்கள். அதை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
 
முதலில் துனியா விஜய் சாரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். கன்னடத்தில் அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது, மிகவும் ஒழுக்கமான, அர்ப்பணிப்பான நடிகராக இருந்தார். இயக்குநர் சொல்வதை முழுமையாகக் கேட்டு, அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொள்வார். அவர் ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நடிகர். அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.
 
விடிவி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். அவரைப் பற்றி எனக்கு இருந்த எண்ணம் வேறு, ஆனால் அவருடன் இணைந்து நடித்த பிறகு அவருடைய நடிப்பு திறமையை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு காட்சியை எப்படி இன்னும் சிறப்பாக மாற்றலாம் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்திலும், திரையிலும் அனைவரையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞர். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் உற்சாகம் இருக்கும்.
 
சம்யுக்தாவுக்கு நன்றி. மிகவும் திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை. ஒரு கதாபாத்திரத்தை விரைவாகப் புரிந்து கொண்டு, அதை மிக இயல்பாக வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இருக்கிறது.  படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. இன்று இந்த மேடையில் அவர் பேசிய விதமும் மிகவும் அழகாக இருந்தது.
 
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். நான் தற்போது டீசர் இசையை மட்டுமே கேட்டிருக்கிறேன். அது மிகவும் சிறப்பாக இருந்தது. படத்தின் முழு இசை ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நம்புகிறேன்.
 
“முதலில் சார்மி மேடத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும், அதை மிகுந்த அமைதியுடனும் உறுதியுடனும் கையாண்டார். ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், முழு படத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக செயல்பட்டார். இயக்குநருக்கு என்ன தேவை, அதை எப்படி சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார். இன்று நீங்கள் திரையில் பார்க்கப் போகும் இந்தப் படத்தின் தரத்தில் அவருடைய பங்கு மிகப்பெரியது. அவருடைய மன உறுதியையும், அர்ப்பணிப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.”
 
“பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு. அவருடைய சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.”
 
“ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதை திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு ஃபிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும்போது ஒரு நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும். ‘நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் கொடுப்பார்.”
 
படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக்சன், உணர்வுகள், மனித உறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன. பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் அவருடைய ஈடுபாடும், நம்பிக்கையும், உழைப்பும் மிகத் தெளிவாக தெரிகிறது.”*
 
“இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். இயக்குநர் மற்றும் நடிகர் இடையே உருவாகும் அந்த நம்பிக்கையும், புரிதலும் இந்தப் படத்தில் மிகவும் அழகாக அமைந்தது. பூரி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது. அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”
 
”‘ஸ்லம் டாக்’ திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த படத்திற்காக உழைத்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்‘
 
விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்  ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்  இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 
பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.
 
“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது