Wednesday, June 24, 2026
Blog

The Hidden Protector (2026) Review RATING 3/5

The Hidden Protector (2026) is a delightful and visually spectacular evolution of the beloved franchise, delivering a perfect mix of fantasy, humor, and heartfelt storytelling. The film takes a bold step forward by weaving in the legendary tale of the Nian beast from Chinese mythology, transforming a familiar children’s series into a grand, magical adventure. This mythological layer adds depth and excitement while still remaining easy for younger audiences to enjoy. Visually, the movie is a real standout. The animation is vibrant, detailed, and cinematic, with breathtaking environments like the mystical Eve City and beautifully choreographed magical battles. It marks a clear upgrade in production quality and ambition for the series.
 
The heart of the film, however, lies in its characters. Briar, Bramble, and Vick continue to shine with their natural comedic timing and lovable chemistry. Their interactions are funny, light, and never forced, keeping the film consistently entertaining from start to finish. Emotionally, the story delivers a strong message about self-confidence, growth, and teamwork. Briar’s personal journey from insecurity to self-acceptance adds genuine warmth and meaning without slowing down the adventure. Overall, The Hidden Protector is a joyful, action-packed, and emotionally satisfying family film. It successfully blends mythology, comedy, and heart, making it one of the most impressive and memorable entries in the Boonie Bears franchise.

‘அனந்தன் காடு’ விமர்சனம் RATING 3/5

சுயநல அரசியல்வாதி மற்றும் காவல் அதிகாரி இருவரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறு கூட்டம் படும்பாடு தான் இந்த ‘அனந்தன் காடு’

விமர்சனம்:

படத்தின் ஆரம்பத்தில் ஒருவரை துப்பாக்கி முனையில் நிறுத்தி ஒரு கதை சொல்கிறார் ஒரு இளைஞர். அந்தக் கதைப்படி இலங்கை ராணுவத்தால் தன் குடும்பத்தை இழந்த இளைஞன் ஆர்யா கேரளா வருகிறார். அவர் வந்து அங்கு அரசியல்வாதி ஒருவருக்காக கொலைகள் செய்யும் குட்டி கூலிப்படை ஒன்றோடு இணைகிறார். அந்தக்கூலிப்படைக்கு அரசியல்வாதி இன்னொரு வேலையும் கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார். அதன்பின் அந்த அரசியல்வாதி ஆர்யாவையும் அவர் நண்பர்களையும் கொலை செய்ய திட்டம் தீட்ட அந்தத் திட்டங்களை ஆர்யா முறியடித்தாரா? இல்லையா? துப்பாக்கி முனையில் நின்று கதை சொல்லும் அந்த சிறுவன் யார்? அடுத்து என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை….

சண்டைக்காட்சிகளில் ஆர்யாவின் துடிப்புமிக்க உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. குற்றப் பின்னணி கொண்ட நால்வர் குழுவினராக நடித்திருக்கும் முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் முரளி கோபி, ஒரு குறிப்பிட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு அதை கமர்ஷியல் ஆக்‌ஷன் பாணியிலான படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். யுவாவின் ஒளிப்பதிவுக்கு தனியாக ஒரு பாராட்டுப்பத்திரமே வாசிக்கலாம். இரவு ஷாட்ஸ் முதல் சண்டைக்காட்சிகள் வரை அவரது கேமரா அபாரம். எடிட்டர் ரோஹித் வி.எஸ். வாரியத் சிறப்பாக கட்ஸ் கொடுத்துள்ளார்

மைனஸ்: சில காட்சிகள் லாஜிக்கே இல்லை… தமிழர்கள் கதையில் கூடுதல் கவனம் தேவை….

மொத்தத்தில் இந்த ‘அனந்தன் காடு’ மழை வந்து நிற்கும்.

முதல்வர் விஜய் ரியாக்சன்! சட்டசபையில் சலசலப்பு!!

மிழக சட்டப்பேரவை நீண்ட, நெடிய பாரம்பரியம் கொண்டது. அடுக்குமொழிப் பேச்சுகள், காரசார விவாதங்கள், ஆளுங்கட்சியை அதிரவைத்த எதிர்க்கட்சிகளின் கேள்விகள், வெளிநடப்புகள், உறுப்பினர்களை அவையிலிருந்து குண்டுக்கட்டாக அப்புறப்படுத்திய, பேப்பர் முதல் சட்டை வரை கிழிந்த நிகழ்வுகள் என பற்பல சம்பவங்களின் சாட்சியாக நிற்கும் புனித ஜார்ஜ் கோட்டை மீதுதான் ஜூன் 18 அன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனக் குவிப்பும் இருந்தது எனலாம்.

தமிழக முதல்வராக விஜய், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி பேரவை கூட்டத் தொடரில் எப்படிக் களமாடுவார்கள் என்ற எதிர்பார்ப்புதான் அதற்குக் காரணம்.

அன்றைய தினம் (ஜூன் 18) சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியில் உதயநிதி தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள் ‘வாயை திறங்க சிஎம்’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்தும், ஆளுங்கட்சியைக் கேள்வி கேட்கும், விமர்சிக்கும் வாசகங்கள் கொண்ட விதவிதமான பதாகைகளை ஏந்தியும் வந்திருந்தனர். அன்றைய தினம் ஆளுநர் உரை வாசிக்கப்பட்டது.

இரண்டாவது நாளான ஜூன் 19 அன்று முதல்வர் விஜய், மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதன் மீது எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிகளில் உடன் இருப்போம்” என்று பாந்தமாகக் கூறினார். மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கையைக் கூட உடனடியாக ஏற்றார் முதல்வர் விஜய்.

இந்த நடவடிக்கைகள் வெகுவாக கவனம் ஈர்த்தன. ஏன் சிலர் சமூக வலைதளங்களில், ‘காரசார விவாதத்தை எதிர்பார்த்தோம், சண்டை போடுங்களேன்’ என்று மீம்ஸ் எல்லாம் போட்டார்கள்.

ஜூன் 20, 21 விடுமுறைக்குப் பின்னர் நேற்று (ஜூன் 22) சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள்” என்று கூறி தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பற்றி முக்கியமான கருத்துகளை முன்வைத்தார்.

இந்த நிலையில், கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று தமிழக முதல்வர் விஜய் தனது பதிலுரையில் பேசியது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பையும், தமிழக மக்கள் மத்தியில் பரவலாக இருவேறு விதமான கருத்துகளையும் ஈர்த்திருக்கிறது.

முதல்வர் விஜய் இன்று பேசுகையில், சொன்ன குட்டிக் கதைதான் ஹைலைட் விவாதப் பொருளாகியுள்ளது.

“ஒரு ஊரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதால் பெரியர் ஒருவர் கண்கள் மீது கையை வைத்து மறைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்து தேடிக் கொண்டிருந்தார். அப்போது உடன் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் எனக் கேட்டான். அதற்கு ‘ஒன்றுமில்லை தம்பி, உங்கள் அப்பா இங்கே தான் இருப்பார் எனச் சொன்னார்கள். அவரைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். எங்க உங்க அப்பாவை காணோம். அவரை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்’ என சொன்னாராம்” என்று குட்டிக் கதையை கூறினார் முதல்வர் விஜய்.

“இதனால் யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்,” என்று தொடர்ந்து அவர் பேசியது அப்பட்டமாகவே ஸ்டாலினையும், உதயநிதியையும் கிண்டலடித்துப் பேசியது என்று தெரிந்தததால் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பும் செய்தனர்.

முதல்வர் விஜய்யின் உடல்மொழி பிரச்சார மேடைகளில் இருந்ததுபோலவே சட்டப்பேரவைக்குள் இருப்பதும், இயல்பாக அவை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் எழுதிக் கொடுத்ததை வாசிப்பதும், நடித்துக் காட்டுவதும் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“என்னைப் பேசு, பேசு என்றால், ஐந்து நிமிடங்கள் கொளத்தூரில் பேசியதற்கே என்னவானது என்று தெரியும்” என்று கூறியதுடன், அன்று கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவின்போது அப்போதைய முதல்வர் ஸ்டாலின் செய்த சைகையை, பேரவையில் இன்று முதல்வர் விஜய் செய்த விதம் அத்தனை நாகரிகமானதாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

“முதல்வர் விஜய் இன்னும் பிரச்சார பாணியிலே பேசுகிறார். நம் கையில்தான் தமிழக அரசு இப்போது இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதை முன்னோக்கி எடுத்துச் செல்வதைத்தான் திட்டமிட வேண்டுமே தவிர திமுக vs தவெக அரசியல் சட்டப்பேரவைக்கு உள்ளே அல்லாது வெளியேதான் செய்ய வேண்டும்,” என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அதுபோலவே, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவால் இந்த ஆட்சியை அமைக்கவில்லை என்று விஜய் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதாலேயே தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

‘தமிழக அரசியலுக்கும், தமிழக சட்டப்பேரவைக்கும் புதியவரான விஜய் அவை நாகரிகம், கூட்டணி நாகரிகம் எல்லாம் தெரிந்து கொண்டு வாய் திறக்க வேண்டும். வாயைத் திறக்கமாட்டேன். திறந்தால் அது கொண்டு திமுகவை மட்டுமே விமர்சிப்பேன் என்ற போக்கு என்பது பண்பட்டது அல்ல’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதேவேளையில், “விஜய் ஊழல் ஒழிப்பு சவால் விடுகிறார் என்றால் அவர் ஒரு க்ளீன் ஸ்லேட். அதனால்தான் ‘நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம், யாரையும் செய்யவிட மாட்டோம், இதற்கு முன்னால் செய்தவர்களையும் சும்மா விடமாட்டோம்’ என்று சவால் விடுகிறார்” என்று பாராட்டுகின்றனர் தவெகவினர்.

“இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர் சொன்னதுபோல் அண்ணாவின் ஆட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். எம்ஜிஆரின் வெற்றியைப் போல் 1977 புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என தமிழக அரசியலில் ஒரு புதிய போக்கினை உருவாக்கியிருக்கிறார்” என்று சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

“அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவார். அவர் பேச வேண்டும் என்பதைவிட அவர் செய்கைகள் பேச வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். அவருடைய செயல்பாடு பேசப்படும் என்று நம்புகிறோம்” என்று தவெக தீவிர விசுவாசிகள் கூறுகின்றனர்.

ஏன், முதல்வர் விஜய்யின் தந்தையும் கூட அண்மையில் அளித்தப் பேட்டியில், “விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா?” என்ற கேள்வியையே முன்வைத்திருக்கிறார்.

இங்கே சில தலைவர்களின் எதிர்வினைகளும் சுட்டிக்காட்டத்தக்கது. “முதல்வர் விஜய் சினிமாவில் நடிப்பது போலவே நினைத்துக் கொண்டு சட்டப்பேரவையிலும் இருக்கிறார். சட்டமன்ற மரபுப்படி இவ்வாறு செய்கைகளை காட்டக் கூடாது. இதுபோன்று முன்பு செய்தவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் உங்களுக்குத் தெரியும். இனிமேலாவது முதல்வர் தனது தகுதியை அறிந்து, அதற்கான சட்டப்பேரவை மரபோடு நடந்து கொள்ள வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

“தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் வழங்கிய பதிலுரை, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அது ஆவேசம், ஆக்ரோஷம், நக்கல், நையாண்டி கலந்த புளித்துப்போன சினிமா வசனங்களின் தொகுப்பாகவே அமைந்தது. சட்டப்பேரவையையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது” என்று சாடியிருக்கிறார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

விஜய்யின் பேச்சுகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில் உதயநிதியின் எதிர்வினையையும் குறிப்பிட வேண்டும் என்கின்றனர் அரசியல் நடுநிலையாளர்கள்.

“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்” என்று உதயநிதியும் தனிப்பட்ட முறையிலான விமர்சனத்தை வைத்திருக்கிறார். அதை அவைக்குள் சொல்லாதது வரவேற்கத்தக்கது. ஆனாலும், விஜய்யின் மனைவி பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்கும் வேளையில், ‘ஒரு பெண்ணை மாண்போடு நடத்துவது எங்கள் பெருமித அடையாளம்’ என்று சொல்லிக் கொள்ளும் உதயநிதி சொல்லியிருக்க வேண்டாம்,” என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேவேளையில், முதல்வர் விஜய்யின் ஆக்‌ஷன்களையும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ரியாக்‌ஷன்களையும் வரவேற்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. தமிழகத்தின் அரசியல் மாறியுள்ளதைப் பார்க்க முடிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதும், முதல்வர் பேசும் மாடலும் மாறியுள்ளது. இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசியல் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது” என்று பாசிட்டிவ் நோட் தருகிறார்.

அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ள கருத்தும் இங்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

“முதல்வர் பொறுப்புக்கு விஜய் புதியவர். விரைவில் அவர் தன் கடமையை உணர்ந்து அவரே சட்டமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். சட்டமன்றம் என்பது கேலி செய்யும் அரங்கம் அல்ல. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் வேறு வேறு அல்ல, இரண்டுமே ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கும் இரு தூண்கள்.

முதல்வர் விஜய் எப்படிப் பேசுகிறார் என்பதை விட, அவர் எந்தக் கொள்கை வழியில் நடக்கிறார் என்பதுதான் முக்கியம்” என்கிறார் மு.வீரபாண்டியன்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது ரீல்ஸ் ஆட்சி, குட்டிக் கதை, வாயைத் திறங்க சிஎம் போன்ற அரசியலை விடுத்து, சிறந்த ஆட்சிக்கான முன்னெடுப்புகளையும், வலுவான எதிர்க்கட்சிக்கான பங்களிப்பையும் விஜய்யும், உதயநிதியும் தருவார்களா என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

‘நூறு சாமி’ விமர்சனம் RATING 3.9/5

சி இயக்கத்தில் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி வைத்தியநாதன், தாமரைச் செல்வி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம்  ‘நூறு சாமி ‘

விமர்சனம்: 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ளது வலையம்பட்டு கிராமம். கிராமப்புற பின்னணியில் வாழும் செல்வி என்ற பெண், தனது இரு மகன்களையும் வளர்ப்பதற்காக தனது வாழ்க்கை ஆசைகளையே தியாகம் செய்கிறார். ஆண்டுகள் கடந்த பிறகு, அவருடைய வாழ்க்கைக்கு மீண்டும் ஒரு புதிய அர்த்தம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகிறது. ஆனால் குடும்பம், உறவினர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்ப்புகள் அவரை சோதிக்கின்றன. அந்த சூழலில் ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் வெற்றிபெறுகிறதா? என்பதே கதை…

விஜய் ஆண்டனி வழக்கமான ஹீரோ பாணியை தவிர்த்து அமைதியான கதாபாத்திரத்தில் தோன்றி கதைக்கு தேவையான ஆதாரமாக இருக்கிறார். கதையின் உணர்ச்சி அம்சங்களை தாங்கிச் செல்லும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுவாசிகா, பல காட்சிகளில் தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக குடும்ப பாசம் மற்றும் மனவேதனைகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

செல்வியின் மூத்த மகன் பாஸ்கராக அஜய் திஷானும், இளைய மகன் விவேக்காக சக்தியும் நடித்திருக்கிறார்கள். இருவருமே அவரவர் கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார்கள். மூத்த மகனுக்கு உரிய பொறுப்பு, இளைய மகனுக்கு உரிய துடிப்பு என இருவரது கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

கதாநாயகன் என்ற லேபிள் இல்லாமல், கதைக்குள் ஒரு கதாபாத்திரமாக, விவசாயி ஏழுமலையாக, படத்தின் இரண்டாம் பாதியில் வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படியொரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க முன் வந்ததற்காகவே அவரைப் பாராட்டலாம். கொஞ்சம் அப்பாவித்தனமும், நிறைய நல்ல குணங்களும் கொண்ட கிராமத்து மனிதனாக இயல்பாக நடித்து தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

இயக்குநர் சசி, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் மனிதர்களின் மனநிலைகளையும் மிகைப்படுத்தாமல் இயல்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார். கதையின் மையக் கருத்தை வணிக அம்சங்களுக்காக சமரசம் செய்யாமல் எடுத்துச் சென்றிருப்பது பாராட்டுக்குரியது.

மைனஸ்:  கதை மெதுவாக செல்கிறது…. கருத்தை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம் ….

மொத்தத்தில் இந்த ‘நூறு சாமி’ பாசக்கார சாமி.    

‘டபுள் ஆக்குபன்சி’ வெற்றி விழா

ஸ்​வின் கந்​த​சாமி இயக்​கி​யுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ படத்​தில் சந்தோஷ், சம்​யுக்தா விஸ்​வ​நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷண் உள்பட பலர் நடித்​துள்​ளனர். அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்​துள்ள இப்​படம் கடந்த வாரம் வெளி​யானது.

இப்​படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்து வெற்றி விழா சென்னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் கிரியேட்​டிவ் தயாரிப்​பாளர் அனந்​திதா சுந்​தரும் கலந்​து​கொண்​டார். இயக்குநர் அஸ்​வின் கந்​த​சாமி கூறும்​போது, “இதில் நடித்​தவர்​கள் அர்ப்​பணிப்​புடன் சிறந்த நடிப்பை வழங்​கி​யுள்​ளனர்.

ரொமான்ஸ் காட்​சிகளில் சந்​தோஷின் நடிப்பு பாராட்​டப்​பட்​டது. சம்​யுக்தா விஸ்​வ​நாதனின் நடிப்​பு, படத்​தின் உணர்ச்சிப்பூர்வமான உச்​சக்​கட்​டக் காட்​சியை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்​றது. படத்​தில் நடித்த அனை​வரை​யும் நான் அதி​கம் சிரமப்​படுத்தி இருக்​கலாம். இருந்​தா​லும் முழு அர்ப்பணிப்​புடன் பணி​யாற்​றினர்.

இந்த வெற்றி அவர்​களுக்​கானது. ஒரு பார்​வை​யாளரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்​தது. கடும் மன அழுத்​தத்​தில் இருந்த அவர், தற்​செய​லாக இப்​படத்​தைப் பார்த்​த​தாக​வும், நீண்ட நாட்​களுக்​குப் பிறகு மனம்விட்டு சிரித்து மகிழ்ந்​த​தாக​வும் கூறி​னார். ஒரு படைப்​பாளி​யாக எனக்கு அதை​விடப் பெரிய வெற்றி எது​வும் இல்லை” என்​றார்.

படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பு பேசுகையில்:

என் மூத்த மகள் திருமண வேலைகளில் தீவரமாக இருக்கிறேன். என் கணவர் சுந்தர் சி. “புருஷன் பட வேலை, திருமண வேலைகளில் சுற்றி வருகிறார். அவராலும் இந்த விழாவுக்கு வர முடியவில்லை. என் இளைய மகள் இந்த பட வேலைகளை சரியாக செய்தார். அவந்திகாவை அனி என செல்லமாக அழைப்பார்கள். நான் பொம்மை என்பேன். என் பொம்மைக்கு வாழ்த்துகள். இந்த பட வேலைகளில் சிக்கல், பிரச்னை இருந்தது. அதை மீறி ஜெயித்தார். என் மூத்த மகள் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து நாலு படங்களில் நடிக்கப்போகிறார். முன்பு ஒரு ஹீரோயின் காதல், திருமணம் என்பதை சொல்ல பதறுவார்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஒரு சின்ன படம் இந்தளவு வந்தது மகிழ்ச்சி. நாம் தயாரிக்கும் படம் மக்களை மகிழ்விக்கணும் அவர்கள் கொடுக்கும். பணத்துக்கு தகுந்ததாக இருக்கணும் என்று சுந்தர் சி சொல்வார். அதை நாங்கள் தொடர்வோம்” எனப் பேசினார்.

‘ஆனந்தன் காடு’ பத்திரிகையாளர் சந்திப்பு

ரவிருக்கும் தமிழ்–மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
 
நிகழ்வின் போது படத்தின் கதை, பின்னணி மற்றும் உருவாக்க அனுபவங்கள் குறித்து படக்குழுவினர் விரிவாக பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி தொடர்பான கேள்விகளுக்கு இயக்குநர் விளக்கம் அளித்தார். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் சில உண்மை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், திரைப்படத்தின் முழு அனுபவத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
 
மேலும் நிகழ்வில் பேசுகையில் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், “இது வெறும் ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; உணர்வுகள், மனிதர்களின் வாழ்க்கை மற்றும் பல அடுக்குகள் கொண்ட கதைக்களத்தை உள்ளடக்கிய திரைப்படம். சில வரலாற்றுப் பின்னணிகளை கொண்டிருந்தாலும், படம் எந்த சமூகத்தையோ அல்லது மக்களையோ புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
 
நடிகர் ஆர்யா பேசுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பில் உருவான இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய முயற்சி. முரளி கோபியின் பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையை எந்த சமரசமும் இல்லாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார். தொழில்நுட்ப ரீதியாகவும், கதைக்கள ரீதியாகவும் இது மிகுந்த திருப்தி அளிக்கும் படைப்பாக இருக்கும்” என்று கூறினார்.
 
மேலும், படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், பார்வையாளர்கள் உணர்வுகளை முழுமையாக அனுபவிக்கும்படி தனித்துவமான வெளியீட்டு வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
படத்தின் ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் மற்றும் இடைவேளை பகுதி (Interval Block) குறித்து ஆர்யா சிறப்பாகக் குறிப்பிட்டார். படத்தில் நடித்துள்ள இந்திரன்ஸ், சுனில், விஜயராகவன், தேவமோகன், நிகிலா விமல் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பையும் அவர் பாராட்டினார்.
 
படத்தின் ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், கலை அமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பேசிய ஆர்யா, படக்குழுவின் அர்ப்பணிப்பை பாராட்டியதுடன், திரையரங்கில் இந்த திரைப்படம் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
 
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் இந்திரன்ஸ் தனது உரையில், “கருப்பு திரைப்படத்திற்கு முன்பே நான் நடித்த படம் ஆனந்தன் காடு. இதில் எனது திரைப்பயணத்தில் முக்கியமான மற்றும் சவாலான கதாபாத்திரம் ஒன்றை செய்திருக்கிறேன் என்றும். படம் வெளியான பிறகு ரசிகர்கள் அதை பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.
 
நிகழ்வின் போது படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் பாராட்டப்பட்டது. ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், பின்னணி வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
 
படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் எஸ்.விநோத் குமார் பேசுகையில், தற்போதைய OTT சூழலிலும் ரசிகர்களின் திரையரங்கு அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து ‘ஆனந்தன் காடு’ திரைப்படத்தை உலகளவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்தார். மேலும், 60 கோடிக்கும் மேற்பட்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் முழுமையாக ரசிகர்களின் ஆதரவை நம்பியே திரையரங்குகளில் வெளியாகிறது என்றும் குறிப்பிட்டார்.
 
நிகழ்வின் நிறைவில், படத்தை உலகளவில் வெளியிடும் Gokulam Movies நிறுவனத்திற்கும் அதன் தலைவர் கோகுலம் கோபாலனுக்கும் படக்குழுவினர் நன்றியை தெரிவித்தனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஆனந்தன் காடு’ திரைப்படம் ஜூன் 25ஆம் தேதி உலகம்  முழுவதும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகவுள்ளது.

First Look of Comedy Entertainer ‘Marriage Story’

The highly anticipated first look poster of the upcoming comedy-commercial entertainer “Marriage Story” has been officially released. Produced under the banner of Reel Petti Productions, the film is directed by filmmaker Sunil Dev.

“Marriage Story” marks the exciting reunion of director Sunil Dev and actor S.P. Siddarth, whose previous thriller collaboration, Athomugam (2024), received critical acclaim and a warm reception from the audience.

Shifting gears from their previous outing, the duo is back with a complete family entertainer packed with friendship, romance, and non-stop comedy.

The film features a dynamic ensemble cast bringing this commercial celebration to life: Lead Actors include S.P. Siddarth, Shabana Shahjahan Aryan, and Deepika Venkatachalam. The Supporting Cast has Veteran actors Nassar, Nizhalgal Ravi, Aruldoss, and Puduvai Poobalan in pivotal roles.

“Marriage Story” boasts a strong technical team ensuring a high-quality cinematic experience:

Technical Team:

Director: Sunil Dev
Cinematography: Tamil Selvan
Music Director: Deepan Chakravarthy
Editor: Tamil Arasan
Stunt Choreography: Miracle Michael
Production House: Reel Petti Productions

With “Athomugam” proving to be a success, the reunion of Sunil Dev and S.P. Siddarth has already generated significant buzz in the trade circuits. ‘Marriage Story’ promises to be a wholesome, theatrical laugh-riot for audiences of all ages.

With post-production work moving at a brisk pace, the team will soon announce the teaser and audio release dates.

பாலன் – தி பாய் விமர்சனம் RATING 3.7/5

சிதம்பரம் இயக்கத்தில் வெங்கட் கே. நாராயணா (KVN Productions) & ஷைலஜா தேசாய் ஃபென் (Thespian Films) தயாரிப்பில் ஃபர்ஸானா பலத்திங்கல், ஆதிஷேஷன், சினான், ஜீன் பால் லால், கிரிஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘பாலன்’

விமர்சனம்:

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி பர்சானா ஜெயிலில் இருந்து ரிலிஸ் ஆகிறார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார், இருவரும் வேலை தேடி தங்கள் அடையாளங்களை அழித்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக வேலைக்கு செல்கின்றனர். அப்படி செல்லும் இடமெல்லாம் பிரச்சனைகள் வர, வேறு வேறு இடம் என செல்கின்றனர். ஒரு வழியாக ஒரு பாட்டி ஒருவரை பார்த்துக்கொள்ளும் வேலை வருகிறது. பாட்டியின் மகன் வெளியூரில் இருக்க இவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தன் மகனையும் பள்ளிக்கு அனுப்பி சில காலம் சந்தோஷமாக வாழ, அவரை தேடி ஒரு ஆபத்து மீண்டும் வர, அதே நேரத்தில் பாட்டியும் இறக்கிறார். அதன் பின் அந்த ஆபத்து என்ன ஆனது, நாயகி பர்சானா யார், அவருக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே கதை……

பெயரை மாற்றி மாற்றி ஊர் ஊராக சுற்றும் நாயகி பர்சானா எந்த ஒரு கலக்கமும் இல்லாமல் அவர் பேசும் பொய்கள் நடிப்பில் மிரட்டல், அட அவுங்க பெரியவங்க சொல்றத கேட்டு நடிப்பார்கள் என சொல்லலாம், பர்சனா மகனாக நடித்துள்ள சிறுவன் அவனும் அந்த பொய்களை உள்வாங்கி கொண்டு மற்றவர்களிடம் கொடுக்கும் ரியாக்ஸன் வார்த்தைகள் இல்லை விவரிக்க, சூப்பர்டா தம்பி. முதல் பாதியில் இருந்த மர்மம், பதட்டம் இரண்டாம் பாதியில் அப்படியே வேறு திசைக்கு கதை செல்ல, பல இடங்களில் ஒரு சிலருக்கு பொறுமையை சோதிக்கும், அப்படியிருந்தும் அந்த கிளைமேக்ஸ் டுவிஸ்ட் அட சொல்ல வைத்துவிடுகிறது. டெக்னிக்கலாக படத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் டால் லெவல் தான்.

மைனஸ்: எடிட்டிங் பணியில் கூடுதல் கவனம் தேவை…

மொத்தத்தில் இந்த ‘பாலன்’ சிறந்த நடிப்பு சிறுவன். 

JITO Sports National Games 2026

Chennai:

The JITO Sports National Games 2026, one of the flagship initiatives of the Jain International Trade Organization (JITO) Apex, concluded successfully in Chennai after three days of spirited competition, camaraderie, and sporting excellence. Hosted by the JITO Chennai Chapter from June 20 to 22, 2026, the biennial national sporting event brought together more than 500 young athletes from 45 JITO Chapters across India, reinforcing JITO’s vision of nurturing sporting talent and fostering holistic youth development within the Jain community.

The prestigious event was organized under the leadership of Rajesh Chandan, Chairman, JITO Chennai Chapter; Rajesh Jain, Vice Chairman; Akash Kumar Jain, Chief Secretary; Ajay Nahar, Convener – JITO Sports Chennai; Rajesh Shah, Sports Secretary; and Sapan Shah, Chapter Secretary, supported by a dedicated organizing committee of over 135 volunteers and committee members.

Athletes competed across eight sporting disciplines — Badminton, Lawn Tennis, Swimming, Athletics, Table Tennis, Chess, Long Jump, and Shot Put — in the Under-13, Under-15, and Under-19 categories. The Games witnessed 61 gold medal events and 183 podium finishes, showcasing extraordinary talent, determination, and sportsmanship among young participants.

One of the most memorable moments of the Games was the “Walk of Pride” at Chennai’s iconic Jawaharlal Nehru Stadium, where athletes from all participating chapters marched together in a powerful display of unity, discipline, and community spirit.

The inaugural and closing ceremonies were graced by distinguished dignitaries from JITO Apex, including Kamlesh Sojatia (Vice President), Narendra Srisrimal (Vice President), Sripal Bachawat (Secretary), D.K. Jain (Joint Treasurer), Vicky Oswal (Chairman, JITO Sports Apex), Aditya Lodha (Vice Chairman, JITO Sports Apex), and Amol Kucharia (National Convener, JITO Sports Apex), along with community leaders, sponsors, and prominent members from across the country.

The event also reflected JITO’s commitment to making sports accessible and inclusive. Participants were accommodated at premium hospitality venues in Chennai, with comprehensive arrangements for accommodation, meals, transportation, logistics, and sporting infrastructure provided through a highly subsidized registration model.

At the conclusion of the Games, JITO Chennai Chapter emerged as the Overall Champion, while JITO Pune Chapter secured the Runner-Up position.

Special Awards

Best Chapter Participation – JITO Bangalore North

Best Disciplined Chapter – JITO Indore

Best Zone Medal Tally – KKG Zone

Best Cheering Chapter – JITO Pune

Star Player (Male) – Arihaan Kankaria (Pune)

Star Player (Female) – Dhwani Vora (Mumbai)

The successful execution of the Games was further strengthened by the technical and operational support of GSEM, led by Mohit and Nikhil, ensuring seamless management throughout the event.

Akash Kumar Jain, Chief Secretary, JITO Chennai Chapter, said “The National Games embody JITO’s long-term vision of creating a strong ecosystem for sports development within the Jain community. Beyond medals and trophies, the event has helped build friendships, confidence, leadership qualities, and a spirit of healthy competition among young participants. We are proud to have delivered an event of national significance in Chennai.”

Ajay Nahar, Convener – JITO Sports Chennai, said “Hosting athletes from across the country has been both a privilege and a responsibility. The dedication displayed by every participant, volunteer, and organizing team member has been extraordinary. These Games have demonstrated the power of sports in bringing communities together while motivating young athletes to strive for greater achievements.”

Sapan Shah, Chapter Secretary, JITO Chennai, said “The success of JITO Sports National Games 2026 is the result of months of meticulous planning and teamwork. From logistics and hospitality to sports management and athlete experience, every aspect was carefully curated. We are grateful to all participants, parents, sponsors, and volunteers whose support helped make this event a resounding success.”

The organizing committee also expressed sincere gratitude to all sponsors and partners whose invaluable support contributed to the success of the event, including Bhashyam (Main Sponsor), Elements (Powered By Sponsor), MTC Group (Trophy & Medal Sponsor), Futura (Jersey Sponsor), Nakoda Marbles & Minerals and Lifestyle Housing (Associate Sponsors), and Urban (Gifting Sponsor).

As the curtains came down on the JITO Sports National Games 2026, the event left behind inspiring stories of perseverance, excellence, and unity. More importantly, it strengthened JITO’s mission of nurturing the next generation of athletes and leaders, ensuring that the spirit of sportsmanship continues to inspire young talent across India.

‘அட்டாக்கர்’ படத்தின் துவக்க விழா!

தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது. BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான “அட்டாக்கர்” படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் படபூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.


ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படமாக உருவாகும் “அட்டாக்கர்” படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தனித்துவமான களத்தில் இப்படத்தை இயக்குகிறார்.


வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமாக “அட்டாக்கர்” அமைகிறது. விளையாட்டின் உற்சாகத்துடன் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக அடையாளங்களையும் இணைத்து இப்படம் உருவாகிறது.


இப்படத்தின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரைப்பட ஆய்வாளர் ஜி. தனஞ்செயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்திய வாலிபால் வீரர்களான ஜி.ஆர். வைஷ்ணவ் மற்றும் எல்.எம். மனோஜ் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்று படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நிகழ்வில் பேசிய *இயக்குநர் பா.இரஞ்சித்,* “எனது கிராமத்தில் வாலிபால் விளையாட்டை அறிமுகப்படுத்திய முதல் நபர் நான்தான். அந்த விளையாட்டு பல இளைஞர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது. இன்று வாலிபாலை மையமாகக் கொண்டு ஒரு தமிழ் திரைப்படம் உருவாகுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ‘அட்டாக்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.
பேசிய ஜி. தனஞ்செயன், “தினேஷ்ராஜ் சிறந்த தயாரிப்பாளர். திட்டமிட்ட பட்ஜெட்டில் தரமான படைப்புகளை உருவாக்கும் திறமை அவருக்கு உள்ளது. அதே நேரத்தில், அவர் தயாரிக்கும் படங்கள் தரத்திலும், பிரம்மாண்டத்திலும் தனித்துவம் பெற்றவை. ‘அட்டாக்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் பேசுகையில், “ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் ‘அட்டாக்கர்’ எங்களுக்கு மிகவும் சிறப்பான படம். விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கும், புதிய திறமைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.
இந்தப் படத்தில் பல புதுமுக கலைஞர்களும், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்றுகின்றனர்.

நடிகர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தீவிர வாலிபால் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்களில் ஒருவரான அஜித் லால் உள்ளிட்ட பல தேசிய அளவிலான வாலிபால் வீரர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விளையாட்டின் துடிப்பையும், மனித உணர்வுகளையும், நமது மண்ணின் கலாச்சார அடையாளங்களையும் இணைக்கும் ஜனரஞ்சகமான திரைப்படமாக ‘அட்டாக்கர்’ உருவாகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படைப்பாக இது அமையும்” என்றார்.


ஏற்கனவே வெளியிடப்பட்ட “அட்டாக்கர்” படத்தின் புரோமோ வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைக் குவித்து சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திரைப்படங்களில் ஒன்றாக “அட்டாக்கர்” உருவெடுத்துள்ளது.