சென்னை:
இன்று (03.06.2026) காலை சுமார் 8.15 மணியளவில், P-3 காவல் நிலையத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தி (SSI), திரு. ஸ்ரீதரன் (HC 2635) மற்றும் திரு. செந்தில்குமார் (HC 42682) ஆகியோர் வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரி பாயிண்டில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 5.5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றார்.
இதனை கவனித்த காவலர்கள் உடனடியாக செயல்பட்டு, அந்த நபரை துரத்திச் சென்று பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்து, P-5 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் யார்? என்று கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரட்டி பிடித்த போக்குவரத்து காவலர்களை பாதிக்கப்பட்ட மூதாட்டி மற்றும் அப்பகுதி பொது மக்கள் பாராட்டினர்.

















