புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு விவரம்

புதுச்சேரி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,099 வாக்குச் சாவடிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் சுமார் 9.5 லட்சம் வாக்காளர்கள் 294 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்க உள்ளனர்.


மும்முனைப் போட்டி

ஆளும் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), காங்கிரஸ்-திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி (INDIA) மற்றும் முதன்முறையாக களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) என புதுச்சேரி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய சுமார் 2,791 காவல்துறையினர் மற்றும் 30 கம்பெனி மத்திய ஆயுதக் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 209 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகத் தானாக முன்வந்து உதவும் தன்னார்வலர்கள் மற்றும் சக்கர நாற்காலி வசதிகள் ஒவ்வொரு மையத்திலும் செய்யப்பட்டுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)

ஆளும் கூட்டணியான இது, இரட்டை எஞ்சின் ஆட்சியைத் தொடர விரும்புகிறது. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC): முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா கட்சி (BJP): 10 தொகுதிகளில் களம் காண்கிறது. அதிமுக (AIADMK) & லட்சிய ஜனநாய கட்சி (LJK): தலா 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.


முக்கிய முழக்கம்: மத்திய அரசின் ஆதரவுடன் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள்.இந்தியா கூட்டணி (INDIA Bloc) ஆட்சியைப் பிடிக்கப் போராடும் எதிர்க்கட்சிப் படை. இந்திய தேசிய காங்கிரஸ் (INC): 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் (DMK): 13 தொகுதிகளில் களம் இறங்கியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர். சிவா வில்லியனூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.புதிய மற்றும் மூன்றாவது அணி

தமிழக வெற்றி கழகம் (TVK): நடிகர் விஜய் தலைமையிலான இக்கட்சி முதன்முறையாக 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு ஒரு வலுவான மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது.

இதர கட்சிகள்

நாம் தமிழர் கட்சி (NTK), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) ஆகியவையும் பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

புதுச்சேரி பிராந்தியம்:

மண்ணாடிப்பட்டு (Mannadipet)
திருபுவனை (Thirubuvanai – SC)
ஊசுடு (Ossudu – SC)
மங்கலம் (Mangalam)
வில்லியனூர் (Villianur)
உழவர்கரை (Ozhukarai)
கதிர் காமம் (Kadirkamam)
இந்திரா நகர் (Indira Nagar)
தட்டாஞ்சாவடி (Thattanchavady)
காமராஜ் நகர் (Kamaraj Nagar)
லாஸ்பேட்டை (Lawspet)
காலாப்பட்டு (Kalapet)
முத்தியால்பேட்டை (Muthiyalpet)
ராஜ்பவன் (Raj Bhavan)
உப்பளம் (Uppalam)
உருளையன்பேட்டை (Orleampeth)
நெல்லித்தோப்பு (Nellithope)
முதலியார்பேட்டை (Mudaliarpet)
அரியாங்குப்பம் (Ariankuppam)
மணவெளி (Manavely)
நெட்டப்பாக்கம் (Nettapakkam – SC)
பாகூர் (Bahour)
ஏம்பலம் (Embalam – SC)
நெடுங்காடு (Nedungadu – SC)
திருநள்ளாறு (Thirunallar)
காரைக்கால் வடக்கு (Karaikal North)
காரைக்கால் தெற்கு (Karaikal South)
நிரவி-திருப்பட்டினம் (Neravy-T.R. Pattinam)
மாஹே (Mahe) – கேரளா எல்லை
ஏனாம் (Yanam) – ஆந்திரா எல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here