TVK தலைவர் விஜய் இன்று பாளையங்கோட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

கரூர் விஷயத்தை பத்தி ஊருக்கே தெரியும். ஆனால் என் மேல பழி போடுறாங்க. அடுத்து ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள். மக்களை சந்திக்க கூடாது என்று நமக்கு மட்டும் தனியாக கன்டிஷன் போட்டார்கள். அதுவும் எடுபடவில்லை. சுற்றியுள்ளவர்களை வைத்து தேர்தல் நேரத்தில் பிரச்சினை செய்ய பார்த்தனர். அதுவும் நடக்கவில்லை. என்னை மக்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது.

234 தொகுதியிலும் விஜய்தான் வேட்பாளர். இதுவரை யார் யாருக்கே ஓட்டுபோட்டோம். இப்போது உங்கள் வீட்டில் உள்ளவருக்கே ஒட்டு போடுகிறோம். ஒரு காமராஜர், ஒரு அண்ணா, ஒரு எம்.ஜி.ஆர். தானா. அவர்போல யாரும் வரமாட்டார்களா என்று ஏங்கிய நேரத்தில்தான் நாம் வந்திருக்கிறோம். ஓட்டை வேறு யாருக்காவது போட்டு, வீணாக்கிவிடாதீர்கள். மக்கள் காசில் இருந்து ஒரு பைசாவைகூட எடுக்கமாட்டேன். மற்றவர்களால் இதை தில்லா சொல்ல முடியுமா. இங்கு இருமுனை போட்டிதான். ஒன்று டிவிகே இன்னொன்று டிஎம்கே ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள். இது விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here