கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் கடற்படை விமானத் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘அப்ரெண்டிஸ்’ (Apprentice) பிரிவில் மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களில் பிட்டர் (Fitter) பிரிவில் 31 இடங்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பிரிவில் 21 இடங்கள், எலக்ட்ரீசியன் (Electrician) பிரிவில் 29 இடங்கள், எலக்ட்ரானிக் மெக்கானிக் (Electronic Mechanic) பிரிவில் 18 இடங்கள், இன்ஸ்ட்ரூமென்ட் பிரிவில் 15 இடங்கள், வெல்டர் (Welder) பிரிவில் 14 இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை பிரிவுகள் அடங்குகின்றன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கட்டாயமாக ஐ.டி.ஐ. (ITI) தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களின் வயது 01.06.2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “The Admiral Superintendent (for Officer-in-Charge ATS), Apprentices Training School, Naval Ship Repair Yard, Naval Base, Kochi – 682 004” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.04.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை rdsdekerala.dgt.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

















