சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படைக் காவலர்கள் தாக்கப் பட்டதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் தனிப்படைக் காவலர்கள் 6 பேரை சிபிஐ கைது செய்தது. கூடுதல் குற்றப் பத்திரிகையில் மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.

















