ஹீரோ கார்த்தீஸ்வரன் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். அந்த கோடிக்கணக்கான பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆக நினைக்கும்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்குகிறார். பிறகு என்ன நடந்தது? பின்னணி என்ன என்பதே கதை…
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி கம்பீரமாகவும், கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார். ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் என அனைவரும் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன், மிக குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் தருவதாக கூறி கார்ப்பரேட் நிறுவனம் மூலம் நடத்திய மோசடி முதல் தற்போது நடக்கும் ஆன்லைன் மோசடிகள் வரை, அனைத்து விதமான மோசடிகளையும் அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஆன்லைன் மோசடி முதல் அனைத்து வித மோசடிகள் குறித்து காட்சிப்படுத்தி, மிகப்பெரிய எச்சரிக்கை விதையை தூவும் விழிப்புணர்வு படமாகவும் கொடுத்துள்ளார், இயக்குனர் கார்த்தீஸ்வரன்.
மைனஸ்: குறைகளை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்… சதுரங்க வேட்டை கதை சாயல் கொஞ்சம் ஒட்டுகிறது…
மொத்தத்தில் இந்த ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திருடனுக்கு வலிக்கும்.

















