வி ஹவுஸ் புரோடக்ஷன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் நடிகர்கள் தம்பி ராமையா, சமுத்திரகனி, தீபா என பலர் நடித்துள்ள படம் தான் ‘ராஜா கிளி’
தனது சொந்த உழைப்பால் டிராவல்ஸ் என பல நிறுவனங்களை நிர்வாகம் செய்கிறார் தம்பி ராமையா. இவருக்கு ஒரு மகன். இவரது மனைவி தீபா பணம் வந்தவுடன் என்னுடன் நேரம் ஒதுக்குவதில்லை, மற்ற பெண்களை பார்க்கிறார் என மனம் குமுறி கோவிலில் இவர் முன்னேற கூடாது என சாமி கும்மிடுகிறார். ஆனால் தம்பி ராமையா தீவிர முருக பக்தர். மேலும் ஒரு புதிய ஆடை கடையை தொடங்குகிறார். கடையில் பணிபுரியும் திருமணம் ஆன பெண்ணை மீண்டும் திருமணம் செய்கிறார். இது போதாது என மூன்றாவது இளம் பெண்ணின் வலையிலும் விழுகிறார். இரண்டாவது மனைவிக்கு கோடியில் சொந்த வீடு வாங்கி தருகிறார். மூன்றாவது இளம் பெண்ணுக்கு லீஸில் வீடு வாங்கி தருகிறார். பெண்களின் மீது இருந்த மோகத்தால் அவருக்கு கிடைத்த தண்டனை என்ன?! என்பதே கதை….
தம்பி ராமையா தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சியில் உருக வைத்து விடுகிறார். சமுத்திரகனி தனது சேவையை சிறப்பாக செய்திருக்கிறார். தீபாவின் அழுகை நடிப்பு ஓகே. சோக பாடல் சிந்திக்க வைக்கிறது. பல தொழிலதிபர்கள் செய்யும் லீலைகளை வெளிச்சம் போட்டு காட்ட முயற்சி எடுத்திருக்கிறார் இயக்குனர் உமாபதி ராமையா.
காதல் கவர்ச்சி காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது…. தம்பி ராமையா மருத்துவமனையில் இருந்து தப்பிக்கும் காட்சி கொஞ்சம் லாஜிக் இல்லை….
மொத்தத்தில் இந்த ‘ராஜா கிளி’ – ஒற்றை சிறகு
ராஜ்குமார்- சினிமா நிருபர்