வேட்டையன் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அதில் முக்கிய பிரபலங்களான நடிகர் ரஜினிகாந்த், பகத் பாசில், இசையமைப்பாளர் அனிரூத் ஆகிய யாரும் கலந்து கொள்ளவில்லை. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இவர்கள் ஏன்? நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 1 மணி நேரம் மட்டும் ஒதுக்கி நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ளலாமே! முன்னணியில் இருப்பவர்களே இப்படி செய்வது சரியா? இதுவே வளர்ந்து வரும் ஆரம்ப பட்டியலில் இருந்திருந்தால் வந்திருப்பார்கள் போல, என சிந்திக்க வைக்கிறது.
- எமது நிருபர்