MPR Films மற்றும் Skyline Cinemas சார்பில் மதியழகன், வீரம்மாள் தயாரிக்க, துருவன் மனோ , மீனாட்சி கோவிந்தராஜன், ஆர்.கே சுரேஷ், ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘வட்டக்கானல்’

விமர்சனம்:

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்கும் இந்தத் தொழிலைக் கைக்குள் வைத்திருக்கும் தாதா ஒருவன் (ஆர் கே சுரேஷ்) அவனது ‘மகன்’களில் ஒருவன் (துருவன் மனோ) முக்கியமானவன். போதைக் காளான் சிறப்பாக விளையும் நிலம் ஒன்று ஒரு பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசான வாய் பேச முடியாத ஒரு பெண்ணிடம் (மீனாட்சி கோவிந்தராஜன்) இருக்கிறது . சிறுவயதில் அப்பாவோடு வாழ்ந்த காலத்தில், இவளுக்கு ஐந்து வயது இருக்கும்போது விபத்து ஒன்று நடக்கிறது. அப்போது, அந்தக் காரிலேயே அப்பா (மனோ) இறந்து விட , இப்போது அந்தக் கார் தாதா மகனிடம் இருக்க, அந்தக் காரை அவள் விலைக்குக் கேட்கிறாள் . தர மறுக்கிறான் தாதாவின் மகன். அதற்குப் பதிலாக என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறாள் . அந்தப் பெண்ணின் நல்ல எண்ணத்தை அவளது எஸ்டேட்டில் வேலை செய்யும் ஆட்களே தப்பாகப் புரிந்து கொண்டு அந்தப் பெண்ணுக்கு தீங்கிழைக்க, அதன் பின்னணியில் இருப்பவர் யார்? என்பதே மீதி கதை…

கொடைக்கானல் வட்டக்கானல். உலகின் தரமான போதைக் காளான் என்று படம் ஆரம்பித்தபோது , அதன் பின்னால் உள்ள நெட் ஒர்க், மாபியா, அரசியல், பணக்காரர்கள், அதனால் பாதிக்கப்படும் சமுதாயம் என்று ஒரு வித்தியாசமான பரபரப்பான படம் பார்க்கப் போகிறோம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் வழக்கமான காதல், அப்பாவிப் பெண், அனாதைகள் செண்டிமெண்ட் என்று நிமிர்ந்த நமது தலையை அவர்களே அழுத்திக் குனிய வைக்கிறார்கள் . தாதா கதிரவனாக ஆக்ரோஷ வில்லனாக ஆர்.கே.சுரேஷ் அழுத்தமான வசன உச்சரிப்பு, மிடுக்கும் கம்பீரம் நிறைந்த தோற்றத்தில், அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள், சூழ்ச்சிகள் நிறைந்த சதிகாரராக தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மிரள வைத்துள்ளார்.

மைனஸ்: கதை புதிதாக இல்லை… இசையில் கூடுதல் கவனம் தேவை…

மொத்தத்தில் இந்த ‘வட்டக்கானல்’ போதையின் அழிவு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here