எஸ்.டி.மணிபால் (அறிமுகம்)  இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் தீரன், ஸ்ரீநாத், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ், சம்பத் ராம், ‘மெட்ராஸ்’ வினோத் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘சாலா’. இன்று திரையரங்குகளில் வெளியானது.

மதுக்கூடம் நடத்தும் நாயகன் தீரனுக்கும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நாயகி ரேஷ்மா வெங்கடேஷுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, அதுவே ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. பார்வதி பார் என்ற மதுபானக் கூடத்துக்காக இரண்டு குழுக்கள் மோதிக் கொள்கிறார்கள். இவர்களின் போட்டிக்கு மத்தியில் டாஸ்மாக்குகளை இழுத்து மூட பெரும் அறப்போராட்டத்தையே நடத்தி வருகிறார் நாயகி. பிறகு பார்வதி பார் யார் கைக்கு போனது? நாயகியின் போராட்டம் என்ன ஆனது? என்பதே கதை.

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் இந்த படத்தில் தீரனுக்கு உள்ளது. ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான வேடம், அதை புரிந்து நடித்திருக்கிறார். ரவீந்தரநாத் குரு ஒளிப்பதிவும், தீசன் இசையும் ஓகே. சார்லஸ் வினோத்தின் வில்லன் நடிப்பு சிறப்பு. அருள்தாஸ், சம்பத் ராம், யோகிராம், பள்ளி மாணவர்களாக எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். தற்போதைய காலக்கட்டத்தில் மதுவினால் மக்கள் எப்படி சீரழிகிறார்கள் என்பதை யோசிக்கும்படி சொல்லியிருக்கிறார் எஸ்.டி.மணிபால். 

மது ஒழிப்புக்கான சமூக அக்கறை எல்லாம் சரி தான் ஆனால் பிரியாணி சாப்பிட்டு பீர் குடிக்கும் காட்சி எல்லாம் ஓவரப்பா…. 

‘மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு’ என தெரிந்தும் விற்கும் அரசை குற்றம் சொல்வதா? குடிக்கும் குடி மகன்களை குறை சொல்வதா? என்று சிந்திக்க வைக்கிறது. 

மதுவின் போதையை விட நம் மனதின் மன வலிமை வலுவானது என புரிந்து கொண்டால் போதை வளையத்தில் இருந்து வெளிவரலாம். 

சாலா- மதுவுக்கு எதிரான சமூக அக்கறை உள்ளவன்.   

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here