விமர்சனம்:
விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதார்த், வாங்காத கடனுக்காக அவரது நிலத்தை வங்கி ஒன்று ஏலம் விட்டு விடுகிறது. விசயம் அறிந்து வங்கியில் முறையிடும் விதார்த்துக்கு, அவரது தந்தையின் பெயரில் கடன் வாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கும் வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கும் விதார்த், இதில் ஏதோ மோசடி இருக்கிறது, என்பதை உணர்கிறார். பிறகு விதார்த் வங்கியிடம் இருந்து தன நிலத்தை மீட்டாரா? இல்லையா? என்பதே கதை…
விதார்த் நிலத்தை இழந்துவிட்டு வருந்துவது, அதே நிலத்தை மீட்க சட்ட ரீதியிலான போராட்டம் என்று பாதிக்கப்பட்டவர்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரமாக அறிமுகமாகி சில இடங்களில் சிரிக்க வைக்கும் மாறனின் இறுதி முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ரக்ஷனா, தோற்றத்திற்கு பொருந்ததாத வேடமாக இருந்தாலும், வசன உச்சரிப்பு, உடல் மொழி மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருப்பவர், பல காட்சிகளை மிக சாதாரணமாக கையாண்டிருக்கிறார். இசை ஓகே தான். விவசாயிகள் வங்கியில் ஏமாறும் வலியை பற்றி படம் சொல்லுகிறது.
மைனஸ்: கதையை இன்னும் சுவாரஸ்யமாக கொண்டு சென்று அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில் இந்த ‘மருதம்’ வங்கி மோசடி விழிப்புணர்வு.

















