ஏ.ஆர். ராகவேந்திரா இயக்கத்தில், நாகராஜன் கண்ணன், டெல்லி கணேஷ், ராமசாமி, காயத்ரி, சாய் தீனா மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் ‘மாயக்கூத்து’
விமர்சனம்:
தொடர்கதை எழுதும் ஆசிரியர் வாசன் அவர்கள் எழுதும் முக்கோண கதையை எழுதி அதை அச்சு அலுவலகத்தில் கொடுக்கிறார். வாசன் தன் புதிய கதையை தேடி ஒரு சிலை செய்பவரிடம் பேசுகிறார்.அங்கு தான் எழுதும் கதைக்கு நான் தான் கடவுள் என்று கூறுகிறார்.அடுத்த காட்சியில் தன் கதையில் வரும் கதாபாத்திரங்கள் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று வாசனிடம் கேட்கிறது .இதனால் மனம் குழம்பிய வாசன் இதற்கு தீர்வு என்ன என்று ஆராய்கிறார். தனது கற்பனை கதாபாத்திரங்கள் தன்னையே கேள்வி கேட்கிறது என்று நான் கடவுளா என்று குழம்புகிறார். தனது கதாபாத்திரங்களுக்கான தீர்வை அவர் தந்தாரா? அவரது அந்த குழப்பம் தீர்ந்ததா? என்பதே கதை…
மாயக்கூத்து திரைப்படம், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒரு அழுத்தமான கதைக்களத்தையும், சிறந்த நடிப்பையும் கொண்ட ஒரு படம். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், கதை சொல்லும் விதத்திலும், காட்சிப்படுத்தலிலும் ஒரு சிறந்த திரைப்படமாக வெளிவந்துள்ளது. படம் பெரும்பாலும் ஒரு பொழுதுபோக்கு நாடகம். நாகராஜன் கண்ணன் வாசனாக கோபப்படும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. ஒரு எழுத்தாளர், தான் உருவாக்கிய கதாபாத்திரங்கள் தனக்கு எதிராக கிளர்ந்தெழும் போது, அவர்களால் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க போராடுகிறார். இந்தக் கதை நம்பிக்கை, கதை சொல்லல் மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நடிகர்களின் நடிப்பு இயல்பாகவும், கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போகும் விதமாகவும் உள்ளது.
மைனஸ்: விஞ்ஞான விளையாட்டுகளால் (கிராபிக்ஸ்) படத்தில் சற்று தொய்வு ஏற்படுகிறது….. கதையை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்…..
மொத்தத்தில் இந்த ‘மாயக்கூத்து’ கற்பனை எழுத்து.