நடிகர் விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, அஜய் திஷன் (அறிமுகம்), பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘மார்கன்’
விமர்சனம்:
சென்னையில் ஒரு இளம்பெண் வித்தியாசமான முறையில் கொல்லப்படுகிறார் என கதை தொடங்குகிறது. ஊசியை கழுத்தில் செலுத்தியதும் சில நொடிகளிலேயே உடல் முழுவதும் கருப்பாகி மரணம் நிகழ்கிறது. இறந்தவுடன் உடல் குப்பை தொட்டியில் வீசப்படுகிறது. மும்பையில் இருந்து தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. கொலையான அன்று அஜய் திஷன் சிசிடிவி கேமராவில் பதிவாக, அவரைத் தேடி விஜய் ஆண்டனி செல்கிறார். அவரை பிடித்து வந்து விசாரணையை தொடங்குகிறார். அதில் சில திருப்பங்களைச் சந்திக்கிறார். இறுதியில் கொலையாளி யார்? வித்தியாசமான முறையில் உடலை கருப்பாக்கி கொல்வதற்கான காரணம் என்ன? என்பதே மீதி கதை….
விஜய் ஆண்டனி நடித்து இசை அமைத்திருக்கிறார். அஜய் திஷன் கதாபாத்திரம் படத்திற்கு பலமாக இருக்கிறது. அறிமுக படத்திலேயே நன்றாக நடித்திருக்கிறார். நீருக்குள் அவர் செல்லும் காட்சிகள் பார்வையாளர்களிடம் சுவாரஸ்யத்தைத் தருகிறது. படத்தின் ஆரம்பத்திலேயே கதை சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதால் கவனம் சிதறாமல் பார்க்க முடிகிறது. நீருக்குள் எடுக்கப்பட்ட ஷாட்டுகள் சிறப்பு. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை பலம் சேர்க்கிறது. நீருக்குள் இருந்தபடி கொலையான இடத்திற்கு அஜய் கதாபாத்திரம் செல்வது விறுவிறுப்பை தூண்டுகிறது.
மைனஸ்: ஆமை காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை…. சில லாஜிக் சொதப்பல்கள் படத்தில் இருக்கிறது….
மொத்தத்தில் இந்த ‘மார்கன்’ விறுவிறுப்பானவன்.

















