டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன், பவ்யா திரிகா, பாலசரவணன், இமான் அண்ணாச்சி, ராதாரவி, நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘ஜின் தி பெட்’

விமர்சனம்:

முகேன் மலேசியாவில் ஒரு மியூஸிக் பேண்ட் வைத்து நடத்தி வருகிறார். அங்கு அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டு தமிழகம் திரும்ப முடிவெடுக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஜின்-யை ஒரு பெண் உடலில் இருந்து, சில மந்திரங்கள் செய்து பிரித்து ஒரு பாக்ஸில் அடைக்கின்றனர். ஜின் அடைத்திருக்கும் பெட்டியை பார்க்கிறார் முகேன். அந்த பெட்டியில் கை வைத்ததுமே அவருக்கு 5 லட்சம் பரிசு வர, லக்கி என்று நினைத்து அந்த ஜின்-யை வீட்டில் வளர்க்க எடுத்து வருகிறார். ஆனால், இந்த ஜின் முகேன் தவிற அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் துன்பத்தை கொடுக்க, அந்த ஜின்-யை ஒரு கட்டத்தில் முகேன் வெளியே தூக்கி எறிகிறார். பிறகு குடும்பத்திற்கு என்னலாம் நடந்தது? என்பதே கதை…

முகென் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். படம் முழுவதுமே தன் தோளில் சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். சந்தோசம், சோகம், பயம் என்று அனைத்து காட்சிகளிலுமே முகென் ஸ்கோர் செய்து இருக்கிறார். முகென், ஜின்னுடன் சேர்ந்து செய்யும் லூட்டிகள் ரசிக்க வைக்கிறது.

ஜின் என்பது ஒரு குட்டிச்சாத்தான். ஒரு குட்டிச்சாத்தனுடைய கான்செப்ட் தான் இந்த படம். மனிதர்களை பாதுகாக்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜின்கள் படைக்கப்பட்டது. நல்ல ஜின்கள் முன் எஜமான் இடம் விசுவாசமாக இருந்து உயிரையும் கொடுக்கும். நாளடைவில் விரோதிகள் கெட்ட ஜின்களை படைக்கிறார்கள். அவை ஆக்ரோஷமாக கொடூரத்தனமாக உயிர்களை எடுக்கவும் செய்கிறது.

அந்த வகையில் இந்த படத்தில் கெட்ட ஜின்னால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாகக் கொண்டு இயக்குனர் எடுத்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் தான் ஜின் முழு உருவம் பெறுகிறது, அதற்கு கார்டூன் மோடு, பட்லூ வாய்ஸ் போல் வருகிறது. 

மைனஸ்: ஜின் உருவத்தை காமெடி செய்திருக்கிறார்கள்….. பெண்களைப் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தும் நகைச்சுவைகள் தேவையற்றவை…..

மொத்தத்தில் இந்த ‘ஜின் தி பெட்’ மாயை கலவை…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here