ஷெரிஃப் இயக்கத்தில் விஜய்டிவி பாலா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘காந்தி கண்ணாடி’
விமர்சனம்:
வயதான பாலாஜி சக்திவேல் செக்யூரிட்டியாக வேலை செய்து கொண்டு தன் மனைவி அர்ச்சனாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு பிள்ளை குட்டிகள் எதுவும் இல்லை. இருந்தும் எந்த ஒரு மன கவலையும் இல்லாமல் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இன்பமான இல்லற வாழ்வில் இருக்கின்றனர். ஒரு நாள் தன் மனைவியின் ஆசை படி அவருக்கு அறுபதாம் கல்யாணம் நடத்தி வைக்க பாலாஜி சக்திவேல் முடிவெடுக்கிறார். இதற்காக ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருக்கும் பாலாவிடம் செல்ல அவரோ திருமணத்திற்கு 50 லட்சத்திற்கு மேல் செலவாகும் எனக் கூறுகிறார்.
தன் ஊரில் இருக்கும் சொந்த நிலத்தை விற்றுவிட்டு பணத்தோடு பாலாவை வந்து பார்க்கும் பாலாஜி சக்திவேல் எப்படியாவது அறுபதாம் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என முனைப்புடன் இருக்கிறார். அந்த நேரம் பார்த்து அரசாங்கம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்துகிறது. இதனால் பணம் செயல் இழந்துவிடுகிறது. புதிய பணத்தை மாற்ற பாலா செய்த முயற்சி என்ன? கல்யாணம் என்ன ஆனது? என்பதே கதை
60 வயதைக் கடந்த தம்பதிகளாக வரும் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா தம்பதியினரை சுற்றியே படம் முழுவதும் நகர்கிறது. இவர்கள் இருவருமே இந்த படத்தின் நாயகன் நாயகிகளாக தென்படுகின்றனர். கூடவே கே.பி.ஒய் பாலா – நமிதா ஜோடி காதல் கதையும் விரிகிறது. படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாலாஜி சக்திவேல் கதாபாத்திரம். இவர் காட்சிக்கு காட்சி தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். விவேக் மெரின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பு. பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மைனஸ்: அடுத்த காட்சியை கணிக்கும் படி இருக்கிறது….. காமெடி காட்சிகள் சிரிக்கும்படி இல்லை….
மொத்தத்தில் இந்த ‘காந்தி கண்ணாடி’ சோக உணர்வு

















