விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில், போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ரோஷணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில் போலீசார் நேற்று மாலை 3 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு, போதை மாத்திரைகளை விற்ற எம்.ஜி.ஆர்.நகர் செல்வராஜ் மகன் குணா, 23; சிங்கனுார் விநாயகமூர்த்தி மகன் ரீகன், 30; மரக்காணம் ரோடு ராஜா மகன் வல்லரசு, 24; ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் இந்த வகை மாத்திரைகளை 1,000 ரூபாய்க்கு கூரியர் மூலம் வாங்கி 3,000 ரூபாய்க்கு போதை ஆசாமிகளிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து 3 பேர் மீது ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 அட்டைகள் கொண்ட 80 போதை மாத்திரைகள், சிரஞ்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.