உயர் துல்லிய லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ்!
“தி ஒடிஸி” The Odyssey Movie
தஞ்சை பெரிய கோவில் திருவிழா ஜீலை 23-ம் தேதி வரை நடக்கும்!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள வராகி அம்மனுக்கான ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, காலை கணபதி ஹோமம், கணபதி அபிஷேகம், வராகி அம்மன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் பரதநாட்டிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில், ஏராளமானோர் கலந்துகொண்டு, வராகி அம்மனை தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஜூலை 23-ம் தேதி வரை தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலிக்க உள்ளார். விழா நாட்களில் தினமும் காலை 8 மணிமுதல் 10 மணி வரை வராகி ஹோமம், காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவின் நிறைவு நாளான ஜூலை 23-ம் தேதி தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், வாணவேடிக்கை ஆகியவற்றுடன் நான்கு ராஜவீதிகளில் வராகி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
லஞ்சம் வாங்கியது உறுதி! TVK ஊராட்சி மன்றத் தலைவர் கைது!!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான என். வீரா (எ) வீராசாமி, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மாம்பாக்கம் ஊராட்சியில் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் நவீன், பணி முடிந்தும் பில் நிலுவையில் இருந்ததாகவும், அதை அனுமதிக்க வீரா முதலில் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொகை ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டதாகதெரிகிறது. அதில் ஒரு பகுதி கூகுள் பே (GPay) மூலம் அனுப்பப்பட்டதுடன், மீதமுள்ள தொகையை நேரில் வழங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் சி.வி. தினகரன் (எ) தீனா, ஜூலை 15-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், “கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் வீரா (எ) வீராசாமி இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தாழம்பூர் போலீஸார் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் என். வீராவை கைது செய்துள்ளனர். வீராசாமி மீது கடந்த 2023-ம் ஆண்டு ஊராட்சி நிர்வாக முறைகேடு தொடர்பாக வார்டு உறுப்பினர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்திருந்ததும், பின்னர் அவரது காசோலை கையொப்ப அதிகாரம் ரத்து செய்யப்பட்டதாகவும், 2025-ம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தலைவர் பதவியை இழந்த அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் அண்மையில் மீண்டும் தலைவர் பொறுப்பேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பழனி பத்திர பதிவு விவகாரம் சூடுபிடித்தது… முக்கிய உத்தரவு!!
பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.35 ஏக்கர் நிலம் பழநி அடிவாரத்தில் உள்ளது. இந்த நிலத்தை அறக்கட்டளையிடம் இருந்து வாங்கி இருப்பதாகவும், அந்த நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப் பதிவு செய்ய பழநி சார்பதிவாளருக்கு உத்தரவிடக்கோரியும் சேதுபதி, வெள்ளைத்துரை ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பத்திரம் பதிவுசெய்ய சார்பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த கோயில் நிலம் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பத்திரப்பதிவில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி மடத்தின் தக்கார் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோயில் நிலம் தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கடந்த 2024 ஆக.19 அன்று தள்ளுபடியானது. இருப்பினும், அந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி நீதிமன்றத் தில் தவறான தகவல்களை அளித்து பத்திரப்பதிவு செய்ய உத்தரவு பெற்றுள்ளனர்.
இந்த நிலத்தின் சட்டப்பூர்வ உரிமை மற்றும் நிர்வாகம் பழநி கோயில் செயல் அலுவலரிடம்தான் உள்ளது. தக்காரை எதிர் மனுதாரராகக் கூட சேர்க்காமல், அவரது தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே தனி நீதிபதி, பத்திரப் பதிவுக்கு அனுமதி வழங்கி உள்ளார். இந்த நிலப் பரிமாற்றம் தொடர்பாக தக்காரால் தொடரப்பட்ட மற்றொரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சார்பதிவாளர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லத்தவறிவிட்டார்.
பொது சொத்து மற்றும் ஆன்மிக மடத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை தனி நபர்கள் அபகரிப்பதைத் தடுக்கும் பொருட்டும், சட்டம் மற்றும் உண்மைக்குப் புறம்பாக பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
பதிவு செய்யப்பட்டுள்ள இடம் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது என ஏற்கெனவே தீர்ப்புகள் உள்ளன. தனி நீதிபதியிடம் உரிய எதிர் தரப்பினரைச் சேர்க்காமல் உத்தரவை பெற்றுள்ளனர். இது நீதிமன்றத்தை ஏமாற்றி பெறப்பட்ட உத்தரவாகும். அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்யக் கூடாது எனக் கோயில் நிர்வாகம் ஏற் கெனவே பதிவுத்துறையிடம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் சொத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே, வழக்கமான சார் பதிவாளரை விடுப்பில் அனுப்பி விட்டு, பொறுப்பு சார்பதி வாளரை வைத்து பத்திரப்பதிவு செய்துள்ளனர். இது முற்றிலும் முறைகேடாக நடந்த செயலாகும். பிரச்சினைக்குரிய மத வழிபாட்டு இடங்களில் பத்திரப் பதிவு செய்யும்போது கோயில் நிர்வாகம் உள்பட அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே முடிவு செய்ய வேண்டும் என பத்திரப் பதிவு சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. அப்படியான சூழலில் சார்பதிவாளர் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முறைகேடாக பதிவு செய்துள்ளார்.
ஒரு சார்பதிவாளர் இவ்வாறு எப்படி முறைகேடான பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பியபோது, அரசு தரப்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்காலிகப் பணி நீக்கம் என்பது போதுமானதாக இல்லை. எனவே பத்திரப் பதிவு முறைகேடாக நடைபெற்றுள்ளதால், அது செல்லாது. ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
பழநியில் ரூ.100 கோடி கோயில் நிலத்தை தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சார் பதிவாளரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பழநியில் கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி ராஜசேகர் நேற்று விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் தொடர்புடைய வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றார். பின்னர் நீதிபதி, மனு தொடர்பாக சிபிசிஐடி பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 17-க்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை மனுதாரரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டார்.
நீங்கள் வருமான வரி செலுத்துபவரா? அப்ப உடனே படியுங்க!!
வருமான வரி கணக்கு (Income Tax Return – ITR) தாக்கல் செய்வது என்பது ஆண்டுதோறும் செய்ய வேண்டிய ஒரு சாதாரண நடைமுறையாக பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் அது ஒவ்வொரு வரி செலுத்துபவரின் நிதி ஒழுங்கு, சட்டப்பூர்வ பொறுப்பு மற்றும் நம்பகத்தன்மையை நிரூபிக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். குறிப்பாக 2026-27 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், கடைசி நேர அவசரம், முழுமையற்ற தகவல்கள், தவறான படிவத் தேர்வு அல்லது வருமானத்தை மறைப்பது போன்ற சிறிய தவறுகள்கூட ஆயிரக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் வரை அபராதத்திற்கும், வருமான வரித்துறையின் விசாரணைக்கும் வழிவகுக்கலாம் என்று வரி நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
பெரும்பாலான வரி செலுத்துபவர்கள் செய்யும் முதல் தவறு, ITR தாக்கலை கடைசி தேதிவரை தள்ளிப்போடுவதுதான். “இன்னும் சில நாட்கள் இருக்கின்றன” என்ற எண்ணத்தில் பலர் காத்திருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவைத் தாண்டி தாக்கல் செய்தால், சட்டப்படி தாமதக் கட்டணம் (Late Filing Fee) விதிக்கப்படும். வருமானத்தின் அளவைப் பொறுத்து இந்த அபராதம் ₹1,000 முதல் ₹5,000 வரை இருக்கலாம். இதைத் தவிர, தாமதமாக தாக்கல் செய்வதால் சில வரிச் சலுகைகளையும், அடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வரி இழப்புகளையும் (Loss Carry Forward) இழக்கும் நிலையும் உருவாகலாம். எனவே, கடைசி தேதி என்பது வெறும் நினைவூட்டல் அல்ல; அது நிதி பாதுகாப்பிற்கான முக்கிய எல்லையாகும்.
சிலர் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துவிட்டால் போதும் என்று நினைத்து, செலுத்த வேண்டிய Self-Assessment Tax-ஐ பின்னர் கட்டலாம் என்று கருதுகின்றனர். ஆனால் வரி முழுமையாக செலுத்தப்படாமல் ITR தாக்கல் செய்யப்பட்டால், அதன் மீது கூடுதல் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். பின்னர் வரித்துறை நேரடியாக வசூல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஆரம்பத்தில் சிறிய தொகையாக இருந்த வரிப்பாக்கி, காலப்போக்கில் கணிசமாக உயரக்கூடும்.
மற்றொரு முக்கிய தவறு வருமானத்தை முழுமையாக வெளிப்படுத்தாமல் இருப்பது. வங்கி வட்டி, ஃப்ரீலான்ஸ் வருமானம், வாடகை வருமானம், பங்குச் சந்தை லாபம் அல்லது பிற முதலீட்டு வருவாய்களை சிலர் குறிப்பிடாமல் விடுகின்றனர். ஆனால் தற்போது வருமான வரித்துறை AIS (Annual Information Statement), Form 26AS, வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தரவு பகுப்பாய்வு மூலம் அனைத்து தகவல்களையும் ஒப்பிட்டு சரிபார்க்கிறது. எனவே, முன்புபோல் எந்த வருமானத்தையும் மறைப்பது எளிதல்ல. வருமானத்தை குறைத்து காட்டியது கண்டறியப்பட்டால், செலுத்த வேண்டிய வரியுடன் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும். திட்டமிட்டு தவறான தகவல் வழங்கியதாக நிரூபிக்கப்பட்டால், அதன் விளைவுகள் இன்னும் கடுமையாக இருக்கலாம்.
ITR தாக்கலில் பலர் கவனிக்காத மற்றொரு விஷயம் சரியான படிவத்தை (ITR Form) தேர்வு செய்வது. சம்பளதாரர், தொழில்முனைவோர், ஓய்வூதியதாரர், முதலீட்டாளர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி ITR படிவங்கள் உள்ளன. தவறான படிவத்தில் தாக்கல் செய்தால், அது செல்லுபடியாகாததாக அறிவிக்கப்படலாம். இதனால் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதோடு, தேவையற்ற தாமதங்களும் சிக்கல்களும் உருவாகலாம். தொழில் அல்லது வணிகம் நடத்துபவர்களுக்கு கணக்குப் புத்தகங்களை முறையாக பராமரிப்பதும் மிகவும் அவசியம். சட்டப்படி வைத்திருக்க வேண்டிய நிதி பதிவுகள் இல்லாதபட்சத்தில், அதற்கும் தனியாக அபராதம் விதிக்கப்படும். அதேபோல், வரித்துறையிலிருந்து வரும் அறிவிப்புகளை அலட்சியப்படுத்துவது அல்லது செலுத்த வேண்டிய வரியை தாமதப்படுத்துவது போன்ற செயல்களும் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
ITR தாக்கல் செய்த பிறகும் வேலை முடிந்துவிடாது என்பதும் பலருக்குத் தெரியாத உண்மை. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை e-Verification செய்யாமல் விட்டால், அது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாது. அதாவது, ITR தாக்கல் செய்திருந்தாலும், சரிபார்ப்பு செய்யப்படாததால் அது செல்லுபடியாகாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே தாக்கல் செய்த பிறகு e-Verification முடிந்ததா என்பதை உறுதி செய்வதும் மிகவும் முக்கியம். இன்றைய டிஜிட்டல் காலத்தில் வருமான வரித்துறையின் கண்காணிப்பு முறை முற்றிலும் மாறிவிட்டது. வங்கிகள், பங்குச் சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டுகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிதி அமைப்புகள் வழங்கும் தகவல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு AI தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. இதனால் முரண்பட்ட தகவல்கள், மறைக்கப்பட்ட வருமானங்கள் அல்லது தவறான கழிவுகள் மிக விரைவாக கண்டறியப்படுகின்றன. முன்பு கவனிக்கப்படாமல் போன சிறிய தவறுகள்கூட இன்று வரித்துறையின் கவனத்திற்கு எளிதாக வந்துவிடுகின்றன.
வருமான வரி தாக்கல் என்பது வெறும் சட்டப்பூர்வ கடமையாக மட்டுமல்ல; அது எதிர்கால நிதி நடவடிக்கைகளுக்கும் முக்கிய ஆவணமாக விளங்குகிறது. வீட்டு கடன், கல்விக் கடன், தொழில் முதலீடு, வெளிநாட்டு விசா விண்ணப்பம் போன்ற பல செயல்முறைகளில் ITR முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, அவசரமாக தாக்கல் செய்வதை விட, ஒவ்வொரு தகவலையும் சரிபார்த்து, சரியான படிவத்தைத் தேர்வு செய்து, அனைத்து வருமானங்களையும் வெளிப்படையாக குறிப்பிடுவது மிகவும் அவசியம். சில நிமிட அலட்சியம் கூட ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதத்திற்கும், தேவையற்ற சட்ட சிக்கல்களுக்கும் காரணமாக மாறக்கூடும். அதனால், ITR தாக்கலில் வேகத்தை விட துல்லியத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதே ஒவ்வொரு வரி செலுத்துபவருக்கும் பாதுகாப்பான மற்றும் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா!
கொட்டாமல் அரிசி போட்ட முதல்வர்! வியந்த விற்பனையாளர்!!
தமிழக முதல்வர் விஜய், எங்கு சென்றாலும் அவரின் செயல்கள், இணையத்தில வைரலாகி வரும் நிலையில், இன்று அவர் தனது சொந்த தொகுதியான பெரம்பூரில், புதிய ரேஷன் அட்டை வழங்குவது மற்றும் ரேஷன் கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில், ரேஷன் கடைசியில், அவர் மக்களுக்கு பொருட்கள் வழங்கியது குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வரும் த.வெ.க தலைவருமான விஜய், இன்று, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்றிருந்தார். அங்கு புதிய ரேஷன் அட்டை வழக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், 50-க்கு மேற்பட்டோலுக்கு தனது கையால் ரேஷன் அட்டை வழங்கினார். தொடர்ந்து ரேஷன் கடைசியில், பொருட்கள் எப்படி எடை போடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்த விஜய், தனது கையால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது அவர் காரில் வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை வரவேற்க குவிந்தனர். சாலையின் இரு பக்கமும் மக்கள் நின்றுகொண்டு மலர் தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். பெரம்பூர் மட்டும் இல்லாமல், மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் முதல்வர் விஜயை பார்க்க திரண்டிருந்தனர். இந்த சந்திப்பில் விஜய் நடந்துகொண்ட விதம் குறித்து பலரும் மகிழ்ச்சியாக பாராட்டி வரும் பலரும் அவரை பார்ப்பதற்காக வந்ததாக கூறியுள்ளனர்.
அருகில் இருந்து பார்த்தது பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பலரும் தெரிவித்துள்ள நிலையில், ரேஷன் கடைசியில், விஜய் மக்களுக்கு பொருட்கள் வழங்க, எடை போட்டு கொடுத்த பெண் ஊழியர் ஒருவர்
இது குறித்து பேசுகையில், அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. எடை போட்டோம். அதை அவர் எடுத்து மக்களுக்கு கொடுத்தார். முதலில் சர்க்கரை போட்டோம். அதடுத்து பருப்பு, அதன்பிறகு ஆயில் அவர் கையில் கொடுத்து கொடுக்க சொன்னோம். அதன்பிறகு இறுதியாக அரிசி எடை போட்டோம்.
அந்த அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கீழே கொட்டாமல், மக்களுக்கு அழகாக வழங்கினார். அவர் கொட்டும்போது சிறிதளவு கூட கீழே சிந்தவில்லை. இது எதிர்பார்க்காமல் நடந்த நிகழ்வு. அவர் பக்கத்தில் இருக்கும்போது பதற்றம் அதிகமாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
சூடு பிடிக்கும் கரூர் சம்பவம்! விடாமல் துரத்தும் திமுக!!
கரூர் சம்பவம் தொடர்பான சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளதால், முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றக் குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியுள்ளார்.
கடந்த 10ஆம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ள முதலமைச்சர் விஜய், கரூர் துயரச் சம்பவத்திற்கு காவல்துறையே பொறுப்பு என்றும், அரசியல் சதி இருப்பது போலவும் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.தவெகவினரின் திட்டமிடப்படாத செயல்பாடுகளும், விதிமீறல்களுமே உயிரிழப்புக்கு காரணம் என தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ள நிலையில், அதே உள்துறையைத் தற்போது தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் முற்றிலும் முரணாக பேசி சாட்சிகளைத் திசை திருப்ப முயன்றுள்ளதாக திமுகவின் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் கரூரில் பேசியது குறித்து சிபிஐ தனியாக புகார் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோருடன் மதியழகன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது என பிணைப் பத்திரம் எழுதி வாங்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் அருகே நாராயணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). இவர் அப்பகுதியில் கடை நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இவரது கடையில் தென்தாமரகுளம் போலீஸார் சோதனை நடத்தினர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இவரது கடையில் இருந்ததாகக் கூறி, சபரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
கடந்த 4 நாட்களாக அவர் விசாரணை கைதி என்ற நிலையில் இருந்துள்ளார். சிறை அறையில் நேற்று அதிகாலையில் சபரிவர்மன் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸார் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது சபரிவர்மன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இத்தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சபரிவர்மனை போலீஸார் பலமாக தாக்கி உள்ளதாகவும், அவருக்கு எந்தவித நோய் பாதிப்பும் கிடையாது எனவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மருத்துவமனை வளாகத்தில் திரண்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி. ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

















