Wednesday, May 6, 2026
Blog

விஜய் போட்ட டிவிட்! ரசிகர்கள் உற்சாகம்!!

VIJAY TWITTER MESSAGE:
 
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
 
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
 
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் – வருகின்றனர்.
 
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
 
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
 
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
 
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
 
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
 
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தொகுதியில் TVK விஜய் கட்சி தோல்வி!

மிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய்யின் அலை சுற்றிச் சுழன்று அடித்துள்ள நிலையில், நாகையில் அது எடுபடவில்லை. விஜய் அலையை வீழ்த்தி திமுக கூட்டணி 2 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி ஒரு தொகுதியையும் தக்க வைத்துள்ளன.

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் 2021 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விசிக போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அதன் தலைவர் ஜவாஹிருல்லா வேட்பாளராக போட்டியிட்டார்.

இதில், அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரைவிட 9,781 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மமக வேட்பாளர் ஜவாஹிருல்லா 56,305 வாக்குகளும், தவெக வேட்பாளர் சுகுமாரன் 46,524 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்க.கதிரவன் 41,586 வாக்குகளும், நாதக வேட்பாளர் பாத்திமா பர்ஹானா 5,348 வாக்குகளும் பெற்றனர்.

நோட்டாவுக்கு 479 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் தொகுதியை திமுக கூட்டணி தக்கவைத்துள்ளது. கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.

இந்த தேர்தலிலும் அக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக லதா நின்றார். அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளரைவிட 2,131 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லதா 55,668 வாக்குகளும், தவெக வேட்பாளர் செந்தில் பாண்டியன் 53,537 வாக்குகளும், பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் 31,561 வாக்குகளும், நாதக வேட்பாளர் கார்த்திகா 8,040 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 483 வாக்குகள் கிடைத்தன.

இதன் மூலம் தொகுதியை திமுக கூட்டணி தக்கவைத்துள்ளது. வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஓ.எஸ்.மணியன் மீண்டும் போட்டியிட்டார்.

அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியைவிட 7,331 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 59,172 வாக்குகளும்.

திமுக வேட்பாளர் மா.மீ.புகழேந்தி 51,841 வாக்குகளும், தவெக வேட்பாளர் கிங்ஸ்லி ஜெரால்ட் 38,347 வாக்குகளும், நாதக வேட்பாளர் இடும்பாவனம் கார்த்தி 10,396 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 548 வாக்குகள் கிடைத்தன.

இதன் மூலம் தொகுதியை அதிமுக தக்கவைத்துக் கொண்டது. நாகை மற்றும் கீழ்வேளூரில் தவெக இரண்டாம் இடமும், வேதாரண்யத்தில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

ஆர்.பி.சவுத்ரி சாலை விபத்தில் மரணம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே இன்று (மே 5) நிகழ்ந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். கடைசியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக ‘மாரீசன்’ படம் வெளியானது. இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தமிழில் புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே (1997), சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், திருப்பாச்சி, ஈ, ஜில்லா உள்ளிட்ட படங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியானது.

ஆர்.பி.சவுத்ரியின் மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர் நடிகர்களாக சினிமா படங்களில் நடித்து வருகின்றனர். கடந்த 1980-களில் அவரது திரைப்பட தயாரிப்பு பணியை அவர் தொடங்கினார். சுமார் 40+ ஆண்டுகள் திரைத்துறையில் அனுபவம் கொண்டவர். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை அவரது சினிமா தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

விஜய் மாஸ் காட்டியிருக்கிறார்! அடுத்த நடவடிக்கை என்ன?!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் கூட தனித்துப் போட்டியிட்ட முதல் தேர்தலில் 105+ இடங்களை வசமாக்கியதே தவெகவுக்கு இமாலய சாதனைதான்.

ஆனாலும் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் வேண்டுமென்ற நிலையில், அடுத்ததாக தவெக பக்குவமாகக் காய் நகர்த்த வேண்டிய மிகப்பெரிய சவால் எழுந்துள்ளது.

ஏற்கெனவே உண்மையான காங்கிரஸ் எங்கள் பக்கம் தான் என்று விஜய் சொன்னதால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வெற்றி எம்எல்ஏக்களோடு அங்கே தாவுமா அல்லது அதிமுக கூட்டணியில் இருந்து பாமக நழுவுமா என்பதே இப்போதைய பேசுபொருள். அப்படியான கணக்கு வழக்குகள் எல்லாம் ஒர்க் அவுட் ஆன பின்னர், தவெக மைனாரிட்டி அரசாக ஆட்சியில் அமரக் கூடும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வராகக் கூடும். இதுவரையிலான முடிவுகள் அடிப்படையிலான சாத்தியக் கூறுகள் இவையே.

தவெக ஆட்சிக்கு வந்த கதையை சற்றே துரிதமாக நாம் திரும்பிப் பார்ப்போம். பிப்ரவரி 2, 2024-ல் தான் தவெக தொடங்கப்பட்டது. சரியாக 2 ஆண்டுகள் 3 மாதங்கள் நிறைவு செய்த கட்சிக்கு தமிழக மக்கள் பேராதரவை வழங்கியிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இது தவெகவின் எழுச்சியா இல்லை தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் சறுக்கலா என்பது ஆழமான விவாதப் பொருள்.

அதன் அடிப்படையில், தவெகவின் வெற்றிக்கான காரணங்கள் சிலவற்றை பட்டியலிட்டால், அதில் தமிழகத்துக்கும் திரைக் கவர்ச்சிக்குமான பந்தம் முதலிடம் பெறும். “திரை நட்சத்திர வழிபாட்டில் ஊறிப் போன தமிழகத்தை நன்கு புரிந்து வைத்திருந்தாலேயே திரைவாழ்வில் உச்சத்தில் இருந்த விஜய் கட்சி, அரசியல் என்ற பயணத்துக்கு முதலில் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய நம்பிக்கை சோரம் போகவில்லை.” என்கின்றனர் தேர்ந்த அரசியல் நிபுணர்கள்.

அடுத்ததாக அரசியலில் பெரிதும் அனுபவம் இல்லாத விஜய்க்கு தோதாக, தோளாடு தோளாக நிற்க விசிகவில் இருந்து விலகிய எலக்‌ஷன் ஸ்ட்ராடஜிஸ்ட் ஆதவ் அர்ஜூனா வந்து சேர்ந்தார். அவர் செய்த கிரவுண்ட் ஒர்க், அவர் வகுத்துக் கொடுத்த ஸ்ட்ராடஜிகளையும் விஜய் ஒரு ‘மாணவ ஒழுக்கத்தோடு’ கடைப்பிடித்திருப்பார் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

திரைக் கவிர்ச்சி, எலக்‌ஷன் ஸ்ட்ராடஜிஸ்ட் துணையோடு விஜய்க்கு இன்னும் அதிகமாக பலன் கொடுத்தது அவர் கையிலெடுத்த எதிர்ப்பு அரசியல். தமிழகம் கடந்த 59 ஆண்டுகளாக திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, மாறி மாறி திராவிடக் கட்சிகளை அரியணை ஏற்றிய பூமி. அப்படியிருக்க ஆளும் திமுக எதிர்ப்பு அரசியலை விக்கிரவாண்டி தொடங்கி தனது கடைசி நாள் பிரச்சாரம் வரை ஆக்ரோஷமாக பழகினார் விஜய்.

ஆனாலும் அதிலொரு சூட்சமத்தை தன்வசம் வைத்துக் கொண்டார். அதன்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தாலும் திராவிடக் கொள்கைகளை விமர்சிக்கவில்லை. தனது கொள்கைத் தலைவர்களில் பெரியாரையும் சேர்த்தே வைத்திருந்தார். திமுகவுக்கு எதிராக கூரான வாளைச் சுழற்றிக் கொண்டே ‘அதிமுக பலவீனமாகிவிட்டது; அதற்கு தலைமை சரியில்லை’ என்று மீண்டும் மீண்டும் மேடைகளில் சொல்லி அதிமுக வாக்குகளுக்கும் வேட்டு வைத்துக் காட்டியிருக்கிறார்.

அத்தனைக்கும் முத்தாய்ப்பாக தனது பிரச்சார வாகனத்தில் தனது படத்துக்குப் பின்னணியில் அண்ணாவையும், எம்ஜிஆர் படத்தையும் பொறித்துக் கொண்டார். ஆக பெரியார், எம்ஜிஆர், அண்ணா என யாரையும் விஜய் விட்டுவைக்கவில்லை.

உங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர் பிடிக்கும் ஆனால் அதிமுக மேல் அதிருப்தியா என்னிடம் வாருங்கள், உங்களுக்கு பெரியார், அண்ணா பிடிக்கும் திமுக மேல் அதிருப்தியா என்னிடம் வாருங்கள் என்று விசாலமான கதவைத் திறந்து வைத்தார்.

மூன்றாவதாக தமிழ் தேசியம் என்று சீமான் பேசிக் கொண்டிருக்க திராவிடமும் – தமிழ் தேசியமும் ஒன்று தான் என்று நாதக அதிருப்தியாளர்களையும் தன் பக்கம் வரவு வைத்துக் கொண்டார்.

கூடவே, ”நான் எந்த மத நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை” என்று கூறி பல்வேறு தரப்பு வாக்குகளையும் தன் பக்கம் மடைமாற்றும் வேலையையும் பக்குவமாக செய்து வந்திருக்கிறார் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும் என அரசிய விமர்சகர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், இன்னொரு தரப்பினர் இதையெல்லாம் திட்டவட்டமாக மறுக்கின்றனர். விஜய்யின் வெற்றி முழுக்க முழுக்க திரை பிம்ப வழிபாட்டின் வெளிப்பாடு என்று அடித்துக் கூறுகின்றனர். விஜய் ஒரு ‘கல்ட் பாலிடிக்ஸை’ உருவாக்கி தமிழகத்தை ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்லப் போகிறார் என்று ஆவேச ஆரூடம் கூறுகின்றனர்.

இன்னொரு தரப்பினர், “இது மக்கள் தீர்ப்பு. அதை ஏற்கத் தான் வேண்டும். 5 ஆண்டுகால அரசு சலுகைகளுக்குப் பிறகும். கல்வி வளர்ச்சி, மகளிர் மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்குப் பிறகும், அதே மாதிரியான திட்டங்கள் எங்கள் ஆட்சி அமைந்தால் நிச்சயம் தருவோம் என்று ஏற்கெனவே பலமுறை ஆட்சியில் இருந்த அதிமுக சொல்லியும், இளைஞர்கள் மட்டுமல்லாது பெண்கள், வயதானவர்கள், பாரம்பரியமாக திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் எனப் பலரும் தவெகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் மக்கள் ஏதோ ஒரு மாற்றம் வேண்டுமென விரும்பியிருக்கிறார்கள் என்றே அர்த்தம்.

மாற்றத்தை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அரசியல் வரலாற்றில் கட்சி ஆரம்பித்த மிகக் குறுகிய காலத்தில் ஆட்சி அமைத்தோர் பட்டியலில் தவெக தனக்கும் ஓரிடத்தைப் பெற்றுக் கொண்ட நிலையில், இனி அதன் வாயிலாக மக்களுக்கான ஆட்சியாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பதும், அவ்வாறு நடக்காத போது இடித்துரைப்பதே மாற்றத்தை தேர்ந்தெடுத்த மக்கள் சக்தியின் வேலையாக இருக்க வேண்டும்” எனக் கூறுகின்றனர்.

“இந்தத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடு மக்கள் வாரிசு அரசியலையும், டெல்லியில் இருந்து இயக்கி நடக்ககூடிய ‘ப்ராக்ஸி அரசியலை’-யும் வெறுக்கின்றனர் என்பது உறுதியாகியிருக்கிறது. கூடவே, தமிழக தேர்தல் வரலாற்றின் மிகப் பெரிய கரும்புள்ளியாக இருந்த ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பழக்கத்துக்கு பலத்த அடி தவெகவால் வழங்கப்பட்டிருக்கிறது” என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார்.

இனி தவெக தலைமையிலான ஆட்சி தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விஜய் அரசியல்மயமாக்கப் பட்டிருக்கிறாரா, அவரது தொண்டர்கள் அரசியல்மயமாக்கப்பட்டிருக்கிறாரா, தவெகவுக்கு கட்சி கட்டமைப்பு இருக்கிறதா என்பதெல்லாம் விவாதப் பொருளாகவே இருக்க முடியாது.

அதேபோல் இனியும் ஹீரோ ஒர்ஷிப்பை ஊக்குவிக்காமல், மாநில உரிமைகளை சமரசம் செய்துவிடாமல், சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, அரசியல் முன்னோர் வகுத்த பாதைகளில் மக்கள் நலன் சார்ந்தவற்றை தழுவிக் கொண்டு விஜய் இருக்கட்டும் என்ற ஆதங்கக் குரல்களும் தமிழக அரசியல் களத்தில் ஒலிக்கின்றன.

TVK தொடர்ந்து முன்னிலை!

முன்னிலை நிலவரம் தமிழகம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி தவெக: 63, திமுக: 49, அதிமுக: 42 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

சென்னையில் பெரம்பூர், ராயபுரம், வேளச்சேரி ஆகிய 3 தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது.

புதுச்சேரி முன்னிலை நிலவரம்: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 30 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி ஆளும் என்டிஏ கூட்டணி: 22 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி: 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

மேற்கு வங்க முன்னிலை நிலவரம்: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிணமூல் காங்கிரஸ்: 106, பாஜக: 105, காங்கிரஸ்: 3 என முன்னிலை வகிக்கின்றன.

கேரளா முன்னிலை நிலவரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆளும் எல்டிஎஃப் கூட்டணி: 59, யுடிஎஃப் கூட்டணி: 74, என்டிஏ கூட்டணி: 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

அசாம் முன்னிலை நிலவரம்: அசாம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக: 69 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: 9 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

திருச்சியில் விஜய் முன்னிலை! KN நேரு பின்னடைவு!

திருச்சி மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி 9,105 வாக்குகளும், திமுகவின் கே.என்.நேரு 8,523 வாக்குகளும், அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 432 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி 864 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவியது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஎம் 5, சிபிஐ 5, மதிமுக 4, கொமதேக 2, ஐயுஎம்எல் 2, மமக 2, எஸ்டிபிஐ 1, மஜக 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 166 தொகுதிகளிலும், பாஜக 26 தொகுதிகளிலும், பாமக 18, அமமுக 11, தமாகா 4, ஐஜேகே 2, புரட்சி பாரதம் 1, புதிய நீதிக் கட்சி 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

மக்களின் தீர்ப்பு யாருக்கு?!

யந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 11 மணியளவில் முன்னிலை நிலவரம் தெரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 வாக்கு எண்ணும் மையங்கள்: தமிழகத்தைப் பொருத்தவரை, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர். மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில், 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப் பதிவு முடிந்ததும் அவை அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

4 முனைப் போட்டி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இந்தமுறை 4 முனைப் போட்டி நிலவியது. புதிதாக தேர்தல் களம் கண்ட விஜய்யின் தவெக, இந்தத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு வரை தவெகவுக்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்காகது என்றே கணிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பின்னர் தவெக ஒரு கேம் சேஞ்சர் என்ற வகையில் அணுகப்படுகிறது.

இந்த நிலையில் திமுக ஆட்சியைத் தக்க வைக்குமா?, கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி அதிமுக ஆட்சி அமைக்குமா? இல்லை யாரும் எதிர்பாராத பலத்துடன் தவெக அரசியல் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்புகளுக்கு முற்பகல் 11 மணியளவில் விடை தெரிந்துவிடும்.

 

 

நீட் தேர்வு தொடங்கியது! கட்டுப்பாடுகள் என்ன?!

ளநிலை மருத்​து​வப் படிப்​பு​களில் மாணவர் சேர்க்​கைக்​கான ‘நீட்’ தேர்வு நாடு முழு​வதும் சுமார் 5,500 மையங்​களில் இன்று நடை​பெறுகிறது. மருத்​து​வப் படிப்​பு​களில் சுமார் 2 லட்​சம் இடங்​கள் உள்ள நிலை​யில், 22.80 லட்​சம் மாணவ, மாணவி​கள், தேர்வு எழுதுகின்​றனர். நீட் தேர்வு முடிவு​களை அடுத்த மாதம் வெளி​யிட தேசியத் தேர்​வு​கள் முகமை திட்​ட​மிட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள், ராணுவக் கல்​லூரி​களில் பிஎஸ்சி நர்​சிங் படிப்​பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் ஆகியவை தேசிய தகுதி மற்​றும் நுழைவுத் தேர்​வில் (NEET – ‘நீட்’) தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​கின்​றன. இந்த தேர்வை தேசியத் தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்​துகிறது. அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் இன்று பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெறுகிறது. 

தமிழகத்​தில் சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், திருச்​சி, மதுரை, கோவை என 30 நகரங்​கள் உட்பட நாடு முழு​வதும் 552 நகரங்​கள் மற்​றும் துபாய், அபு​தாபி, தோகா, மஸ்​கட், ரியாத், சிங்​கப்​பூர் என வெளி​நாடு​களில் 14 இடங்​களில் தேர்வு நடை​பெறும். அந்த வகை​யில், சுமார் 5,500 மையங்​களில் தேர்வு நடை​பெறுகிறது.

சுமார் 2 லட்​சம் இடங்​கள் உள்ள நிலை​யில், 9.47 லட்சம் மாணவர்​கள், 13.33 லட்​சம் மாணவி​கள் என மொத்​தம் 22.80 லட்​சம் பேர் தேர்​வுக்கு விண்​ணப்​பித்​துள்​ளனர். தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடை​பெறும். இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல் (தாவர​வியல், விலங்​கியல்) பாடங்​களில் இருந்து தலா 50 கேள்வி​கள் என மொத்​தம் 200 கேள்வி​கள் கேட்​கப்​படும். அதில் 180 கேள்வி​களுக்கு பதில் அளிக்க வேண்​டும்.

ஒரு கேள்விக்கு 4 மதிப்​பெண் என மொத்​தம் 720 மதிப்​பெண்​கள் வழங்​கப்​படு​கிறது. ஒரு தவறான பதி​லுக்கு ஒரு மதிப்​பெண் (நெகட்​டிவ்) குறைக்​கப்​படும். நீட் தேர்வு முடிவு​களை அடுத்த மாதம் வெளி​யிட என்​டிஏ திட்​ட​மிட்​டுள்​ளது.

கடந்த 2024-ம் ஆண்டு வட மாநிலங்​களில் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள் சிலர் ஆள்​மாறாட்​டத்​தில் ஈடு​பட்​டு, உண்​மை​யான தேர்​வர்​களுக்கு பதிலாக நீட் தேர்வு எழு​தி​ய​தாக புகார் எழுந்​தது. இதுதொடர்​பாக பிஹார், ராஜஸ்​தான், ஜார்க்​கண்​டில் 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், ஆள்​மாறாட்​டத்தை தடுக்​கும் வித​மாக, ‘நீட் தேர்வு நடை​பெறும் மே 3-ம் தேதி மற்​றும் அதற்கு முந்​தைய நாளான 2-ம் தேதி ஆகிய 2 நாட்​களும் எம்​பிபிஎஸ் மாணவர்​களுக்கு விடு​முறை வழங்க வேண்​டாம்.

அத்​தி​யா​வசி​யக் காரணங்​கள் இருந்​தால் மட்​டும் விலக்கு அளிக்​கலாம்’ என்று நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​களின் நிர்​வாகங்​களுக்கு தேசிய மருத்​துவ ஆணை​யம் கடந்த வாரம் சுற்​றறிக்கை அனுப்​பியது. அதன்​படி, மருத்​துவ மாணவர்​களுக்கு நேற்று விடு​முறை வழங்​கப்​பட​வில்​லை. இன்​றும்​ அனைத்​து மாணவர்​களும்​ கல்​லூரிக்​கு வரு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது குறிப்பிடத்தக்கது.

தேர்வு கட்​டுப்​பாடு​கள்: தேர்​வர்​கள் காலை 11 மணி முதல் மதி​யம் 1.30 மணி வரை தேர்வு மையத்​துக்​குள் செல்ல அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். 1.30 மணிக்​குப் பிறகு வந்​தால் அனு​மதி இல்லை என்று தேசி​யத் தேர்வு முகமை தெரி​வித்​துள்​ளது.

நீட் தேர்​வுக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை தேசியத் தேர்வு முகமை (என்​டிஏ) வெளி​யிட்​டுள்​ளது. அதன் விவரம்: தேர்வு மையத்துக்குள் தேர்​வர்​கள் தண்​ணீர் பாட்​டில் எடுத்​துச் செல்​லலாம். ஆனால், அவை வெளிப்​படைத் தன்​மை​யுடன் அதாவது ஒளிபு​கும் வித​மாக இருக்க வேண்​டும். மத நம்​பிக்கை சார்ந்த அடை​யாளங்​கள், பொருட்​களை அணிந்து வரலாம்.

அதே​போல, சாதாரண ஆடைகளை அணிவதே சரி​யானது. தேவைப்​பட்​டால் முழுக்கை ஆடைகள் அல்​லது கம்​பளி ஆடை அணிய அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். எனினும், முறை​யான சோதனைக்கு ஒத்​துழைக்​கும் வித​மாக, குறிப்​பிட்ட நேரத்​துக்கு முன்​ன​தாகவே தேர்வு மையத்​துக்கு தேர்வர்கள் வந்​து​விட​வேண்​டும்.

தேர்வர்கள் உயரம் குறைந்த (லோ ஹீல்​ஸ்), சாதாரண காலணி​களை அணி​ய​லாம். உயர​மான காலணி​கள், கனமான அணி​கலன்​கள் அணிவதை தவிர்க்க வேண்​டும். தேர்​வர்​கள் காலை 11 மணி முதல் மதி​யம் 1.30 மணி வரை தேர்வு மையத்​துக்​குள் செல்ல அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். மதியம் 1.30 மணிக்​குப் பிறகு வந்​தால் அனு​மதி இல்​லை. தேர்வு மையத்​துக்கு முன்​கூட்​டியே வந்​தடை​யும் வகை​யில் பயணத்தை திட்​ட​மிட வேண்​டும் என்​பது உட்பட பல்​வேறு வழி​காட்​டு​தல்​களை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது.

தாம்பரத்தில் TATA தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம்!

சென்னை:
 
டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய ஜுவல்லரி ரீடெய்ல் பிராண்டான தனிஷ்க் (Tanishq), சென்னை மேற்கு தாம்பரத்தில் தனது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் தனிஷ்க் நிறுவனத்தின் 66-வது விற்பனை நிலையம் மற்றும் சென்னை மாநகரத்தில் 24-வது விற்பனை நிலையம் என்ற ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இப்புதிய விற்பனை நிலையத்தை டைட்டன் நிறுவனத்தின் ஜுவல்லரி பிரிவின் தலைமை செயல் அதிகாரி  திரு. அருண் நாராயண் [Mr. Arun Narayan, CEO, Jewellery Division, Titan Company Ltd] மற்றும் தமிழ்நாடு & கேரளா ஜுவல்லரி பிரிவின் பிசினஸ் ஹெட் திரு. நரசிம்மன் ஒய்.எல் [Mr. Narasimhan Y L, Circle Business Head, Jewellery, TN & Kerala] ஆகியோர், தனிஷ்க் நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் மதியம் 12:30 மணிக்குத் திறந்து வைத்தனர்.
 
மேற்கு தாம்பரத்தில் புதிதாக அறிமுகமாகும் இந்த புதிய விற்பனை நிலையத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், தனிஷ்க் ஒரு பிரத்தியேக அறிமுகச் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் நகைகளுக்கு தங்க நாணயத்தைப் [complimentary gold coin] அறிமுக சலுகையாகப்  பெறலாம். இந்தச் சலுகை மே 1 முதல் மே 3, 2026 வரை மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேற்கு தாம்பரத்தில், எண் 257, ஜி.எஸ்.டி சாலை, மேற்கு தாம்பரம், சென்னை – 600045 [257, GST Road, West Tambaram, Chennai, Tamil Nadu 600045] என்ற முகவரியில் அமைந்துள்ள இப்புதிய விற்பனை நிலையம், 8000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. தனிஷ்க்கின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் ‘வாடிக்கையாளர்களுக்கே முன்னுரிமை’ என்ற தனிஷ்க்கின் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், நவீனமயமாகவும்,  விசாலமான இடவசதியுடனும் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக இந்த விற்பனை நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இங்கு தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட நகைகள், மிக நேர்த்தியான வைர நகைத்தொகுப்புகள், சாலிட்டர்கள் (Solitaires), போல்கி (Polki) நகை வகைகள் மற்றும் தினசரி பயன்பாட்டிற்காகவே வடிவமைப்பட்டுள்ள ஏராளமான நகைகள் என தனிஷ்க்கின் புகழ்பெற்ற வடிவமைப்புகளிலான நகைகள் இங்கு விற்பனைக்கு உள்ளன. மேலும், பழமையான நகைகளின் அழகியலுடன் கூடிய ஆன்ட்டிக்  நகைகள் [Anique jeweller] மற்றும் தென்னிந்திய கிளாஸ் குந்தன் வடிவமைப்புகளிலான [South Indian Glass Kundan designs] நகை வகைகளையும் வாடிக்கையாளர்கள் இங்கே வாங்கலாம். இயற்கை ரத்தினக் கற்களின் சமீபத்திய நகைத்தொகுப்பான ‘ஹியூஸ்’ (Hues) மற்றும் பாரம்பரியமிக்க நகைகள் முதல் நவீன வடிவமைப்பிலான நகைகள் என பல்வேறு ரகங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
 
மேலும், இந்த விற்பனை நிலையத்தில் தனிஷ்க் டைமண்ட் எக்ஸ்பர்டைஸ் சென்டர் (Tanishq Diamond Expertise Centre)-ம் இடம்பெற்று உள்ளது. இது வைரங்களின் உண்மைத்தன்மை, அதன் அசல் வகை மற்றும் ஜொலிக்கும் தரம் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் சரிபார்க்க உதவும் ஒரு தொழில்நுட்ப முயற்சியாகும். தொழில்நுட்பத்தினால் மிகவும் மேம்பட்ட ஐந்து கருவிகளைக் கொண்டிருக்கும் தனிஷ்க் டைமண்ட் எக்ஸ்பர்டைஸ் சென்டர் மூலம் வைரத்தின் உயர்தரம், ஒளிரும்திறன் மற்றும் லேசர் மார்க்கிங் போன்ற முக்கிய அம்சங்களை மதிப்பீடு செய்யலாம்.
 
புதிய விற்பனை நிலையத் திறப்பு விழா குறித்து டைட்டன் நிறுவனத்தின் ஜுவல்லரி பிரிவு தலைமை செயல் அதிகாரி திரு. அருண் நாராயண் [Mr. Arun Narayan, CEO, Jewellery Division, Titan Company Ltd] கூறுகையில், “மிகவும் நுணுக்கமான கைவினைத்திறன், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் உயர்தரம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு எங்களுக்கு எப்போதும் ஒரு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. மேற்கு தாம்பரத்தில் எங்களது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குவது, இப்பகுதியில் எங்களது சேவையை பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு சென்றடையும் வகையில் விரிவுப்படுத்துவதோடு, வாடிக்கையாளர்களுக்கு ஒரு உயர்தரமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்க வேண்டுமென்ற எங்களது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. எங்களது பல்வேறு வகைகளிலான வடிவமைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும், எதிர்பார்புகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வின் முக்கியக் கொண்டாட்டங்களில் ஒரு அங்கமாக இருக்க நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.
 
தனிஷ்க் நிறுவனத்தின் சர்க்கிள் பிசினஸ் மேனேஜர் திரு. தினேஷ் குமார் [Mr. Dinesh Kumar, Circle Business Manager, Tanishq] பேசுகையில்: “சென்னையின் மேற்கு தாம்பரத்தில் புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குவதன் மூலம் தமிழகத்தில் எங்களது விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதில் நாங்கள் பெரும்மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மைல்கல் விரிவாக்கம் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப பல்வேறு வகைகளிலான, மிக நுணுக்கமான, கைவினைத்திறன்மிக்க  வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த விற்பனை நிலையம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்களது வாடிக்கையாளர்களை வரவேற்பதுடன், அவர்களின் முக்கியமான தருணங்களில் நாங்களும் பங்கெடுப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

தற்கொலை கடிதம்! ஒரே வரியில் திருப்பம்!!

சென்னை, திருவொற்றியூர் மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதுடைய முத்துக்குமார். இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த குணசுந்தரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஒரு வருட முன்பு மனைவி இறந்து தனியாக வசித்த உறவினர் சதீஷ்குமார் என்பவரை முத்துக்குமார் அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.

இந்நிலையில் முத்துக்குமார் தினந்தோறும் காலை வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலையில் தான் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த குணசுந்தரிக்கும், சதிஷ்குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கணவனை விட்டு காதலனுடன் வாழ நினைத்த குணசுந்தரி கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெரியபாளையத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் குணசுந்தரி தனது கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரிவந்தது. இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்த முத்துக்குமார் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் இறப்பதற்கு முன்பு செல்போனில் ஆடியோ பதிவு செய்தும், கடிதம் எழுதி வைத்தும் “எனது மரணத்திற்கு காரணம் மனைவி குணசுந்தரியும் சதீஷ்குமாரும் தான்” என தெரிவித்துள்ளார்.

தன்னை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி காவல் நிலைய போலீசார் இறந்த முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் இது குறித்து சட்டரீதியாக எவ்வித நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் புகாரை வாங்க மறுத்ததால் பிரேத பரிசோதனை முடித்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குகொண்டுவரப்பட்ட முத்துக்குமார் உடலை வழியில் மடக்கி பொன்னேரி நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணலி காவல் நிலைய உதவி ஆணையர் விவேகானந்தன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பொன்னேரி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் முத்துக்குமார் எழுதி வைத்த கடிதத்தில் “என் மனைவி வேற என்ன கரணம் சொல்லி இருந்தாலும் நான் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன் ஆனால் என்னிடம் நல்ல முறையில் நடந்து கொண்டு இப்படி செய்தது என்னால் தங்க முடியவில்லை, கடந்த (ஏப் 2) ஆம் தேதி கூட நாங்கள் ஒன்றாக குளித்து உடலுறவு கொண்டோம், பிறகு இரண்டு நாட்களிலேயே என்னை ஏமாற்றிவிட்டால்” என எழுதி வைத்திருப்பது முத்துக்குமாரின் உறவினர்கள் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.