Wednesday, July 9, 2025
Blog

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்று (ஜூலை 5) நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் 24 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தியா அபார வெற்றி:

மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் தொடங்க தாமதம் ஆனது. மழை நின்ற பின், இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இங்கிலாந்து அணியின் ஆலி போப் மற்றும் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார் ஆகாஷ் தீப். ஆலி போப் 24 ரன்களும், ஹாரி ப்ரூக் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருப்பினும், இந்த பார்ட்னர்ஷிப்பை வாஷிங்டன் சுந்தர் உடைத்தார். வாஷிங்டர் சுந்தரின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடான் கார்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். இருப்பினும், பிரைடான் கார்ஸ் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய ஜேமி ஸ்மித் 99 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்….!

நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அரு​கே​யுள்ள ஹோப் பார்க் பகு​தியை சேர்ந்​தவர் செந்​தில்​கு​மார் (50). இவர் 23 ஆண்​டு​களாக அறி​வியல் ஆசிரிய​ராக பல்​வேறு அரசுப் பள்​ளி​களில் பணி​யாற்றி உள்​ளார். இந்​நிலை​யில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசுப் பள்​ளி​யில் பணி​யில் சேர்ந்​தார்.‌ அங்கு 6 முதல் 9 வகுப்பு வரை அறி​வியல் பாடம் எடுத்​துள்​ளார். சில நாட்​களுக்கு முன்​னர் அந்​தப் பள்​ளிக்கு பாலியல் கல்வி குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வதற்​காக போலீ​ஸார் சென்​றனர்.

பயிற்சி வகுப்பு முடிந்​ததும் 6-ம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவி ஒரு​வர், அறி​வியல் ஆசிரியர் செந்​தில்​கு​மார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக புகார் கூறி​யுள்​ளார். தொடர்ந்து பல மாணவி​களும் அவர் மீது புகார் தெரி​வித்​தனர். பின்​னர், ஆசிரியர் செந்​தில்​கு​மார் பாலியல் தொல்லை கொடுத்​த​தாக 21 மாணவி​கள் புகார் அளித்​தனர்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த போலீ​ஸார், இதுகுறித்து உயர​தி​காரி​களுக்​கும், குழந்​தைகள் நலப் பிரிவு அதி​காரி​களுக்​கும் தகவல் தெரி​வித்​தனர். தொடர்ந்​து, ஊட்டி ஊரக காவல் ஆய்​வாளர் விஜயா தலை​மையி​லான போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, போக்சோ சட்​டத்​தில் வழக்​குப் பதிவு செய்து செந்​தில்​குமரை கைது செய்​தனர். இந்​நிலை​யில், ஆசிரியர் செந்​தில்​கு​மார் தற்​காலிக பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக முதன்மை கல்வி அலு​வலர் நந்​தகு​மார் தெரி​வித்​தார்.

அவர் கூறும் போது:

‘பாலியல் புகாரில் கைதாகி​யுள்ள ஆசிரியர்செந்​தில்​கு​மார் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளார். ஆசிரியர்​களுக்கு விழிப்​புணர்வு மற்​றும் கவுன்​சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது’ என்​றார்.

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரணம்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை காலை எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் பாலகுருசாமி (50) என்பவா் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கண்ணன் (50), சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜபாண்டி (37), ராஜசேகா் (29), ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த கமலேஷ் ராம் (28), ரமேஷ் (20) ஆகிய ஐந்து பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில், இறந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை- கே.ராஜன்

சென்னை:

BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கயிலன்’ திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள்.
 
விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில்  படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  
 
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் B.T. அரசகுமார் பேசுகையில், ”இங்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு முதலில் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கே. ராஜன் இங்கு வந்தவுடன் ‘கயிலன்’ படத்தின் கதை என்ன? கிரைம் ஸ்டோரியா? ஃபேமிலி ஸ்டோரியா? எனக் கேட்டார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. இயக்குநர் அஜித் மீதான நம்பிக்கையினால் நான் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஏதோ சம்பிரதாயத்திற்காக ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வாருங்கள் என்றனர். அதற்காக சில மணித்துளிகள் அங்கு சென்றேன்.
 
இந்த படத்தை பற்றி நான் சிந்திப்பதை விட அன்புத்தம்பி அருள் அஜித் சிறப்பாக சிந்தித்திருக்கிறார். மிக சிறந்த திரை காவியமாக கொண்டு வர வேண்டும் என அவர் கடினமாக உழைத்து இருக்கிறார். ‌ அதை நான் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேன். உங்களுடன் இணைந்து தான் நானும் இந்த படத்தின் முன்னோட்டத்தை இங்கு பார்த்தேன். இந்தப் படத்தின் நாயகி ஷிவதா தங்கமான சகோதரி. ஒவ்வொரு முறையும் பணிவாக நடக்கும் அவருடைய நடவடிக்கைகள் போன்று சினிமாவில் காண்பது அரிது. அவர் இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். நாடக குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவன் நான். எனது தாய் மாமன் வி கே சக்திவேல் மணப்பாறையில் மிகப்பெரிய நடிகர். கலைஞானத்தின் தம்பி போல் பணியாற்றியவர். ‘பெரிய மருது’, ‘மிருதங்க சக்கரவர்த்தி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். எனது தாத்தாவும் நாடக நடிகர் தான். அந்த வகையில் என்னுடைய ரத்தத்திலும் கலை உணர்வு ஊறி இருக்கிறது. என்றாவது ஒருநாள் திரைத்துறையில் சாதிக்கலாம் என காத்திருந்தேன். 1988-89 ஆண்டுகளில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகை தந்த என்னை இயக்குநர் டி. ராஜேந்தர் தான் திசை திருப்பினார். இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன்.  ஆனால் இந்த ஆசையை அப்போது கே.பாக்யராஜிடம் தெரிவித்திருந்தால் நடிகராகி இருப்பேன்.  89ம் ஆண்டிலிருந்து தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறேன். ஆனால் தற்போது தான் முதல் முறையாக ‘கயிலன்’ திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும்,  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
 
இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா பேசுகையில், ”என்னை நம்பி இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.‌ இந்த திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. எல்லா பாடல்களும் நன்றாக அமைந்திருக்கின்றன. இப்படத்தின் பின்னணி இசையை ஹரி அமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஜூலை 25 வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
 
பின்னணி இசையமைப்பாளர் ஹரி பேசுகையில், ”இப்படத்தின் கதை சுவராசியமாக சொல்லப்பட்டிருக்கிறது. வெளியான பிறகு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். கலைஞர்கள் தங்களுடைய அற்புதமான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.  அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
 
இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசுகையில், ”இந்தப் பட முன்னோட்டத்தின் இறுதியில், ‘போராட வேண்டும். போராடினால் தான் அனைத்தும் கிடைக்கும்’ என்ற செய்தி இடம்பெறுகிறது. சினிமாவில் கதையை உருவாக்குவதற்கும் போராட வேண்டும். அந்தக் கதைக்கு ஒரு நாயகனை தேடுவதற்கு ஒரு போராட்டம் வேண்டும். அதை வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளரை தேட வேண்டும் . அதற்கும் போராட வேண்டும். இதையெல்லாம் கடந்து படத்தின் வெளியீட்டிற்காகவும் போராட வேண்டும்.
 
நிறைய போராட்டங்களுக்கு பிறகு தான் இயக்குநர் அஜித் இந்த மேடையில் இருக்கிறார். முதல் காதல், முதல் முத்தம் மறக்க முடியாதது. அது போல் முதல் படமும் முதல் மேடையும் மறக்க முடியாதது.  பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனின் மனநிலையை போன்றது இது. அவருக்குள் இருக்கும் தவிப்பை நான் உணர்கிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், அவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இன்று பெரிய படம் எது சின்ன படம் எது என்று மக்கள் முடிவு செய்கிறார்கள். ஊடகத்தினர் முடிவு செய்கிறார்கள். அதே தருணத்தில் ‘கன்டென்ட் வின்ஸ்’ என்று சொல்வேன். கன்டென்ட் நன்றாக இருந்தால் மக்கள் மிகப் பெரும் அளவில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு கன்டென்ட், அதற்கான ஆய்வு மற்றும் நியாயமான உழைப்பு இருந்தால் மக்களின் ஆதரவு உறுதி. அண்மையில் வெளியான ‘டி என் ஏ’, ‘மார்கன்’ ஆகிய படங்களுக்கும் இது சாத்தியமானது.  
 
இன்றைய தேதியில் இயக்குநர்களை விட பார்வையாளர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். முதல் காட்சியை இயக்குநர் சொல்லத் தொடங்கியதுமே பார்வையாளன் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என சொல்லி விடுகிறான். அதனால் எந்த இயக்குநர் ரசிகர்களை சிறந்த அறிவாளியாக நினைத்து அவர்களை விட அறிவுபூர்வமாக சிந்தித்து படத்தை இயக்குகிறாரோ அவரது திரைப்படங்கள் தான் வெற்றி பெறும். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இது திரில்லராக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த திரில்லர் அர்த்தமுள்ள திரில்லராக இருக்கும் பட்சத்தில் 200 சதவீதம் மிகப்பெரிய வெற்றியைத் தரும்,” என்றார்.
 
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”இவ்விழாவிற்கு வருகை தருவதற்காக இயக்குநர் அருள் அஜித் எனக்கு விடுத்த அழைப்பு கவர்ந்ததால் இங்கு வருகை தந்தேன். அதுவும் இல்லாமல் கார்ப்பரேட் துறையில் 25 ஆண்டு காலம் பணியாற்றிய பிறகு, நான் தனியாக 2016ம் ஆண்டில் திரைப்பட வணிகத்தில்  ஈடுபட்ட போது வாங்கிய முதல் திரைப்படமான ‘ஜீரோ’ படத்தின் நாயகி ஷிவதா. அவர் இந்த படத்தில் நடித்திருப்பதால் வருகை தருவதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.  அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். அவர் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.  கம்பீரமான, ஸ்டைலிஷான போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார். அவருக்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.  
 
இந்தப் படத்தின் தயாரிப்பாளரை வாழ்த்த வேண்டும். நாங்களெல்லாம் காலை  எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தொடங்கி விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். இதற்காகவே படப்பிடிப்பு தளத்திற்கு செல்வோம். நானும் இயக்குநர் கௌரவ் நாராயணனும் இணைந்து ‘சிகரம் தொடு’ எனும் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நான் ஏழு முப்பது மணிக்கு எல்லாம் சென்று விடுவேன். எட்டு மணிக்கு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பேன். இப்படி செய்தால் தான் குறைந்த நாட்களில் படத்தை திட்டமிட்டபடி நிறைவு செய்ய முடியும். மலையாளத்தில் இப்படித்தான் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்துவார்கள்.
 
ஒரு படம் பரவலான மக்களை சென்றடைந்தாலே வெற்றி பெறும். அந்த வகையில் இந்த’ கயிலன்’ திரைப்படமும் வெளியாகி, மக்களை சென்றடைந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
 
நடிகர் பிரஜின் பேசுகையில், ” இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த ஆண்டின் எனது நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது. மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.
 
தற்போது சினிமாவில் நாம் நல்ல கன்டென்டுகளை கொடுத்தாலும் அதனை முறையாக விளம்பரப் படுத்துவதில் கோட்டை விடுகிறோம். சில படங்கள் மட்டும் தான் வேர்ட் ஆப் மௌத்தின் மூலம் வெற்றி பெறும். ‘கயிலன்’ நல்ல திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
 
இயக்குநர் அருள் அஜித் தொடர்ந்து படங்களை இயக்கினாலும் வளரும் நடிகர்களுக்கும் புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் சொன்னதைப் போல போராட வேண்டும். போராடினால் தான் வெற்றி கிடைக்கும் இது அனைவருக்கும் பொருந்தும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்,” என்றார்.
 
பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தம் பேசுகையில், ”இந்தப் படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருப்பதாகச் சொன்னார்கள் நானும் புது முகம் தான்.‌ ‘விருமாண்டி’ படத்தில் கமல்ஹாசன் திரைக்கதை எழுதும் போது அதில் மதுரை மண்ணின் பேச்சு வழக்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு உதவினேன். திடீரென்று அவர் என்னைப் பார்த்து நடிக்கிறீர்களா? எனக் கேட்டார்  நான் பயந்துவிட்டேன். ஏனென்றால் அது மாடு பிடிக்கும் படம்.‌ இருந்தாலும் கமல் நான் மாட்டை பிடிக்கிறேன் நீங்கள் மைக்கை பிடியுங்கள் என்றார். இது எனக்கு பொருத்தமாக இருக்கவே ஒப்புக்கொண்டேன். தற்போது வரை ஐம்பது திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.
 
இயக்குநர்கள் கதை செல்ல வரும்போது எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்பதை சொல்லி விடுவேன். இந்த படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் என்னை அருமையாக கவனித்தார்கள்.
 
நான் முதலில் ஒரு சினிமா ரசிகன். அதனால் நான் பார்க்கும் எந்த படங்களையும் யாருடைய மனதும் காயப்படுத்தும் நோக்கத்தில் விமர்சிக்க மாட்டேன். சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் போது வருத்தம் அடைவேன்.
 
தற்போது மக்கள்தான் தேர்தலைப் போல் திரைப்படங்களையும் தீர்மானிக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்திலேயே முன் கதை சுருக்கம் இருக்கிறது. யார் அந்த கயிலன்? அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த காலத்தில் பாட்டு புத்தகத்துடன் அந்தப் படத்தின் முன் கதை சுருக்கம் இருக்கும் .அதை பார்த்துவிட்டு தான் படத்திற்கு செல்வார்கள்.
 
இந்தப் படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். உங்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம், நன்றி,” என்றார்.
 
நடிகை ஷிவதா பேசுகையில், ”’நெடுஞ்சாலை’ படத்திலிருந்து ‘கயிலன்’ படம் வரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. வருடத்திற்கு ஒரு தமிழ் படத்தில் தான் பணியாற்றுகிறேன், இருந்தாலும் தொடர்ந்து நீங்கள் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த ஆதரவு இந்தப் படத்திற்கும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இந்தப் படம் வெளியான பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.
 
தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ”’கயிலன்’ என் பிள்ளை அரசகுமார் தயாரித்த படம். அது என் படம் தான். அரசகுமார் 1991ம் ஆண்டில் நான் நடத்தும் வண்ணாரப்பேட்டை காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது நான் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கத்தின் தலைவர். என்னை சந்தித்து ‘புதுக்கோட்டையில் இருந்து வருகை தந்திருக்கிறேன். சங்கத்தில் இணைய வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். அப்போது அவரை பேச அனுமதித்தேன் அவரது பேச்சில் தீப்பொறி பறந்தது. அப்போதே இவர் மிகப்பெரிய ஆளாக வருவார் என கணித்தேன்.
 
தொடர்ந்து கடுமையாக உழைத்தார், துணிச்சல் மிக்கவர். வறுமையில் வாடினாலும் சிறிது பணம் சேர்ந்தவுடன் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் என்று ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். நர்சரி பள்ளியையும், அரசியல் கட்சியையும் ஒருசேர நடத்தினார். அதன் பிறகு அவரை சந்தித்து அரசியல் கட்சி வேண்டாம், ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக் கொள் என  அறிவுறுத்தினேன். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் அவரை சேர்த்து விட்டேன். மயிலாப்பூரில் ஒரு விழா எடுத்து தன் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார்.‌ அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் மாநில துணைத்தலைவரானார்.
 
அதன் பிறகு புதுக்கோட்டையில் நடந்த ஒரு திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில் தமிழகத்தை ஆளக்கூடிய முதல்வர் பதவிக்கு தகுதி பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களே என பேசினார். உடனே அவரை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். ஆனால் மு.க. ஸ்டாலினிடமிருந்து அழைப்பு வந்தவுடன் திமுகவில் சேர்ந்து விட்டார். திமுகவின் செய்தி தொடர்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். இன்று ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய வலது கரமாகவும் செயல்பட்டு வருகிறார். பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்.
 
2001ம் ஆண்டில் நான் சின்ன திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது, ‘என்னையும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக்குங்கள். நானும் படத்தை தயாரிக்கிறேன்’ என்றார். நான் தான் கொஞ்சம் பொறுத்திரு என்றேன்.‌  
 
அதனைத் தொடர்ந்து நான் விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போதும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்.
 
25 ஆண்டுகளுக்கு முன் படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்த அரசகுமார் இன்று தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். இன்று ஒரு திரைப்படத்தை இயக்குநரை நம்பி அளித்து தயாரிப்பாளராகி இருக்கிறார்.
 
தற்போது எழுபத்தைந்து சதவீத தமிழ் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். ஆனால் இவர் ‘கயிலன்’ என அருமையான தமிழில் பெயர் வைத்திருக்கிறார். கம்பராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களில் ஏராளமான தமிழ் பெயர்கள் இருக்கின்றன, அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைத்த இயக்குநரை பாராட்டுகிறேன்.
 
இப்படத்தின் முன்னோட்டம் ஆங்கில படத்தை போல் இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. இதன் ரீ-ரிக்கார்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், எடிட்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், கேமரா ஃபர்ஸ்ட் கிளாஸ். இப்படி எல்லா ஃபர்ஸ்ட் கிளாஸ்சும் இருப்பதால், மக்களும் இந்த படத்தை ஃபர்ஸ்ட் சாய்ஸாக பார்ப்பார்கள்.  
 
தமிழ் பண்பாடு குறையாத, தமிழ் கலாச்சாரம் மிக்க திரைப்படங்களை உருவாக்குங்கள் என இளம் இயக்குநர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இன்று திரைப்படங்களில் பெண்கள் மது அருந்தும் காட்சிகளை இயக்குநர்கள் இடம்பெறச் செய்கிறார்கள். இதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில் பெண்கள் தான் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்.
 
300 கோடி ரூபாய், 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். சிறிய முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கான திரையரங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். இப்படி செய்தால் ஏழைகள் திரையரங்கத்திற்கு வருவார்கள். திரைப்படங்கள் வெற்றி பெறும். தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். இதற்கு ஆவண செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுகிறேன்,” என்றார்.
 
இயக்குநர் அருள் அஜித் பேசுகையில், ”உதவி இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளர் தேவை. அந்த வகையில் என்னை நம்பி இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பி.டி. அரசகுமாருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
 
படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் இறுதி வரை படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வரவே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் எங்களுடைய வற்புறுத்தலுக்காக வருகை தந்தார்.  எனக்கு அந்த அளவிற்கு முழு சுதந்திரம் அளித்தார். நானும், என்னுடைய குழுவினரும் இணைந்து பணியாற்றி படத்தை நிறைவு செய்து விட்டோம். தயாரிப்பாளருக்கு இன்னும் நான் திரையிட்டு காண்பிக்கவில்லை, விரைவில் காண்பிப்பேன். அப்படியொரு நம்பிக்கையை என் மீது தயாரிப்பாளர் வைத்திருக்கிறார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.
 
நான் என்றைக்குமே தயாரிப்பாளர்களின் இயக்குநராக தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார்கள் அவர்கள் தரும் வாய்ப்பு நம் வாழ்க்கை. அதை நாம் சரியாக காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் ஏனைய தயாரிப்பாளர்களும் நம் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்வார்கள். இதன் பிறகு தான் நாம் நல்ல படங்களை வழங்க முடியும்.
 
‘கயிலன்’ என்பதற்கான பொருள் என்னவென்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். ஜீரோ எரர்ஸ் என்றும், தி பெர்பஃக்ஷனிஸ்ட் என்றும் சொல்லலாம். இந்தச் சொல் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் வைத்திருக்கிறோம். மேலும் இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அதற்கும் இந்தச் சொல் பொருத்தம் என்பதால் வைத்திருக்கிறோம்.
 
இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது தயாரிப்பாளர் என்னிடம், ‘நீங்கள் ஒரு கமர்ஷியல் படத்தை வழங்க உள்ளீர்கள். அதில் எங்கேயும் வாய்ப்பு கிடைத்தால் நல்லதொரு மெசேஜை சொல்லுங்கள். சொல்ல முயற்சி செய்யுங்கள்’ என்றார். இந்தப் படத்தில் ஒரு மெசேஜ் இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் ஒரு மெசேஜ் இருக்கிறது.
 
என்னுடைய பார்வையில் திரில்லர் திரைப்படங்களில் குறிப்பாக இன்வெஸ்டிகேட்டடிவ் திரில்லர் படங்களில் ஆணாதிக்கம் தான் அதிகம் இருக்கும். இதனால் நாங்கள் படத்தில் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இரண்டும் பெண்களாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அதற்காக நாங்கள் முதலில் தேர்வு செய்தது நடிகை ஷிவதாவை தான், அவர் நடிப்பில் வெளியான ‘அதே கண்கள்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இவர்களைப் போல் திறமையான நடிகைகள் இருந்தால் இயக்குநரின் பணி எளிது.
 
நாங்கள் இப்படத்தின் பணிகளை விரைவாக நிறைவு செய்திருக்கிறோம் என்றால், அதற்கு ஷிவதாவின் பங்களிப்பு அதிகம். அற்புதமான மனிதநேயம் மிக்கவர். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அனைவரையும் அரவணைத்து செல்வார்.
 
இவரைத் தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவரும் திறமையான நடிகை தான்.
 
மேலும் இப்படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் நிதி அமைச்சராக நடித்திருக்கிறார். மனோபாலா, கோபிநாத், அனுபமா குமார் என பலரும் நடித்திருக்கிறார்கள்.  
 
இந்தப் படத்திற்கு 115 நபர்கள் பின்னணி பேசி இருக்கிறார்கள் அந்த அளவிற்கு இந்த படத்தில் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கின்றன. எனவே கஷ்டப்பட்டு இப்படத்தினை நிறைவு செய்து இருக்கிறோம். ஜூலை 25ம் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்”என்றார்.
 
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
 
கே ராஜன் பேசும்போது, தமிழில் பெயர் வைப்பதை பற்றி குறிப்பிட்டார். அதைக் கேட்டவுடன் நான் என்னுடைய படங்களை பற்றி யோசித்தேன். அதில் ஒரு படத்திற்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு ஒரு படத்தில் ‘டாடி டாடி’ என்று பாடலையும் வைத்திருந்தேன். அத்துடன் ‘பேட்டா பேட்டா மேரா பேட்டா’ என இந்தியையும் வைத்திருந்தேன். இதெல்லாம் ஏன் என்றால் சினிமா மக்களுக்கானது. மக்களுக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என்ற நோக்கம்தான். அதை தவிர்த்து தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல. எங்களுக்கு தமிழ் தான் சோறு போடுகிறது.
 
நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்தப் படத்தின் இயக்குநரை நான் மனதார பாராட்டுகிறேன்.  
 
இந்தப் படத்தின் பெயர் ‘கயிலன்’ என்று சொன்னவுடன் மீண்டும் ஒருமுறை தமிழைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் பிறகு இயக்குநர் ‘கயிலன்’ பெயருக்கான பொருளை சொன்னார்.
 
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை எனக்கு அனுப்பினார்கள். அதனை பார்த்தேன். இதன் சாராம்சம் என்னவென்றால் போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. என்னுடைய குருநாதருடன் இணைந்து பணியாற்றிய முதல் படத்தில் பெரும் போராட்டம் இருந்தது. அவருடைய மயிலு என்ற கதையை வைத்துக்கொண்டு ஏறாத கம்பெனிகளே இல்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி தொடங்கவில்லை.
 
கமல்ஹாசனின் கால்ஷீட் இல்லை. அதன் பிறகு தயாரிப்பாளர் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியான ’16 வயதினிலே ‘படம் பெரும் வெற்றியை பெற்றது. இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திலும் போராட்டம் இருந்தது. அதையெல்லாம் எதிர்கொண்டு தான் வெற்றி பெற்றோம்.  
 
இயக்குவர் பாலச்சந்தர் இரண்டு படங்களை இயக்கிய பிறகு தான் அவர் தன்னுடைய அரசாங்க வேலையை விட்டார். ஆனால் இந்த படத்தின் இயக்குநர் வேலையை திடீரென்று வேண்டாம் என்று சொல்லிவிட்டு சினிமாவில் இயக்குநராகி இருக்கிறார். கணவரின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஆதரவு அளித்த அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி சொல்கிறேன்,” என்றார்.
 

பீனிக்ஸ் படத்தின் விமர்சனம் RATING 3.8/5

சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘பீனிக்ஸ்’

விமர்சனம்:

சூர்யா சேதுபதி பொதுமக்கள் முன்னிலையில் MLA -வை கொடூரமாக வெட்டிக் கொலை செய்கிறான். காவல்துறை அவனைக் கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க, அந்த MLAவின் குடும்பமும், கட்சியும் ஹீரோவை எப்படியாவது கொன்று பழிதீர்க்கத் துடிக்கிறார்கள். MLA வின் மனைவி வரலட்சுமி சரத்குமார், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைத்து அவரை கொலை செய்ய அடியாட்களை உள்ளே அனுப்புகிறார். அவர்களை சூர்யா சேதுபதி வெறித்தனமாக அடித்து உள்ளே மாஸ் ஆகிறார். அடுத்து உள்ளே உள்ள போலீஸ் அதிகாரிக்கு பணம் கொடுத்து கொலை முயற்சி நடக்கிறது. அதையும் துணிந்து எதிர்கொள்கிறார் நம்ம அறிமுக ஹீரோ. ஹீரோவை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது அவர் மீது தொடர்ந்து பெட்ரோல் பாட்டில்கள் வீசப்படுகிறது. பிறகு என்ன நடந்தது? ஏன் இந்த கொலை முயற்சிகள் நடக்கிறது? என்பதே கதை….

எந்தவித தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாத நடிப்பை சூர்யா வழங்கியுள்ளார். முதல் படம் மாதிரியே தெரியவில்லை. அவரது ஆக்க்ஷன் காட்சிகள் கோபப்படும் காட்சிகள் எல்லாம் சிறப்பு. கதை எனப் பார்க்கும்போது, இது மிகவும் சாதாரணமான, பழி வாங்கும் கதைதான். புதிதான கருவோ, திரைக்கதை அமைப்போ இல்லாவிட்டாலும், முதல் படத்தை தொந்தரவு தருமளவிலான தொய்வுகள் இல்லாமல் அமைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் அனல்’ அரசு. படத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை தெறிக்க விடுகிறது. “ஜெயிக்கிறது பிரச்னையா, இல்ல நாங்க ஜெயிக்கிறதுதான் பிரச்னையா” என்ற வசனம் சொல்லும் போது அரங்கத்தில் விசில் பறக்கிறது. குழந்தையை சிறைக்குத் தொலைத்த அம்மாவாக புலம்பும் காட்சிகளில் நடிகை தேவதர்ஷிணி கவர்கிறார்.

வில்லனாக எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத் ராஜ், எம்.எல்.ஏ மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரவி, நவீன், காயத்ரி, அட்டி ரிஷி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

மைனஸ்: ஜெயிலில் இப்படி வெறித்தனமான கொலை காட்சிகள்! நீதிமன்ற வாசல் சண்டை காட்சியில் இன்னும் கவனம் தேவை!!

மொத்தத்தில் இந்த ‘பீனிக்ஸ்’ வலிமை வாய்ந்தவன், நிச்சயம் அடிப்பான்!

‘டிராகன்’நூறாவது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்!

சென்னை:

ஏ.ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் – கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் வகையில் ஒருங்கிணைத்திருந்தனர்.  
 
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ரங்கராஜன் வரவேற்றார்.
 
இதனைத் தொடர்ந்து படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரையரங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், பிரதீப் ரங்கநாதன், ஜார்ஜ் மரியான், ரோஹந்த் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், தொழிலாளர்கள் என படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  
 
இந்நிகழ்வில் குரோம்பேட்டை வெற்றி திரையரங்க அதிபர் ராகேஷ் பேசுகையில், ”மிகவும் சந்தோஷமான நாள் இது. ‘டிராகன்’ படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா. பொதுவாக தமிழ் திரையுலகில் பிப்ரவரி மாதம் குறைவான வசூல் இருக்கும் என்று ஒரு கட்டுக்கதை இருக்கிறது. பிப்ரவரியில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டால் அது வெற்றி பெறாது என்ற கட்டுக்கதையை உடைத்து எறிந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘டிராகன்’. இந்த ஆண்டு தமிழக திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டாவது இடத்தை ‘ டிராகன்’ பிடித்திருக்கிறது. இப்படத்தின் நாயகனான பிரதீப் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். அவர் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படமும் சிறந்த படம் தான். அவர் இயக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.
 
கமலா சினிமாஸ் திரையரங்கத்தின் உரிமையாளர் விஷ்ணு பேசுகையில், ”குழுவாக இணைந்து இந்த படத்தை வழங்கி வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள். இந்த வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இத்திரைப்படம் வெளியான முதல் நாளன்று படக்குழுவினர் எங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்தனர். அப்போது நான் ‘இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் நிச்சயமாக சந்திப்போம்’ என்று தான் சொல்லி இருந்தேன். அது இன்று உண்மையாகி இருக்கிறது. தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 2024ம் ஆண்டு ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட ‘கோட்'( GOAT) திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2025ம் ஆண்டில் ‘டிராகன்’ திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினை வாங்கி இருக்கிறோம். அதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினையும் வாங்கியிருக்கிறோம். தொடர்ந்து அவர் நடிக்கும் ‘DUDE’ படத்திற்கும் விருதினை வாங்குவோம். ஏஜிஎஸ் -அஸ்வத்- பிரதீப்- கூட்டணி மீண்டும் இணையும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் நன்றி,” என்றார்.
 
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ”இந்த நான்கு மணி நேரத்தை நான் ஒரு அழகான தருணமாக கருதுகிறேன். படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து அவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று எண்ணிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கலைஞருக்கு மிகப்பெரிய அங்கீகாரமே தயாரிப்பாளர்கள் கையாலோ அல்லது இயக்குநர் கையாலோ அல்லது நாயகன் கையாலோ விருது வாங்குவதுதான். இதனை சாதித்து காட்டிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மடிப்பாக்கம் ஏரியாவில் நானும், பிரதீப்பும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் ‘நான் ஹீரோவாக போகிறேன்’ என்று பிரதீப் சொன்னார். உடனே நல்ல விஷயம் என வாழ்த்து தெரிவித்தேன். அந்தத் தருணத்தில் நாங்கள் ‘டிராகன்’ என்ற ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்றோ, அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றோ நினைத்துக் கூட பார்க்கவில்லை.  
 
‘லவ் டுடே’ படத்தை விட ‘டிராகன்’ படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இங்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து அவருடைய ரசிகர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் பிரதீப் ரசிகர்கள் அதிகமாகி நேரு ஸ்டேடியமே நிறைந்து விடும். அதற்காகவும் காத்திருக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.
 
கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ”ஒரு படம் நன்றாக இருக்கும் போது அந்தப் படத்திற்கான வேர்ட் ஆஃப் மவுத் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியம். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று பத்திரிகையாளர்களாகிய நீங்கள் பாராட்டினீர்கள். அதை ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தீர்கள். இதற்காக இந்த தருணத்தில் ஊடகத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
 
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ”இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன். அப்போது நான் ‘கோமாளி’ படத்தையும் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார்.
 
அதன் பிறகு ‘லவ் டுடே’ படத்தில் நடித்து முடித்த பிறகு, படம் வெளியாவதற்கும் முன் அஸ்வத்திற்கு திரையிட்டு காண்பித்தேன். அப்போது அவரிடம் என்னை ஹீரோவாக வைத்து படம் இயக்குவாயா? எனக் கேட்டேன். காலம் கனியட்டும் என பதிலளித்தார். நானும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு சிறிது கால அவகாசம் ஆகும் என நினைத்தேன். ஆனால் அதனை ஒரே படத்தில் சாதித்து காட்டியது ரசிகர்கள் தான்.
 
‘டிராகன்’ படத்தை இயக்கியதற்காக அஸ்வத் மாரிமுத்துவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது.  
 
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் வெற்றிக்கு ஏஜிஎஸ் நிறுவனமும் காரணம். இந்த நிறுவனத்துடன் நான் இணைந்து பணியாற்றிய இரண்டாவது நூறு நாள் படம் இது. ‘லவ் டுடே’ படத்தின் வெற்றி மேஜிக் என்றார்கள். இதனால் மீண்டும் ஒரு வெற்றி படத்தை வழங்க வேண்டுமே என நினைத்தோம். இந்தத் தருணத்தில் ஏஜிஎஸ் நிறுவனமும் இயக்குநர் அஸ்வத்தும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதாக இருந்தது. அப்படித் தான் ‘டிராகன்’ அமைந்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடனான மகிழ்ச்சி நிரம்பிய இந்தப் பயணம் தொடரும்.
 
‘கோமாளி’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ என என்னுடைய தொடர் மூன்றாவது நூறு நாள் திரைப்படம் இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் ‘டிராகன்’ படத்தின் வெற்றி முக்கியமானது. ஏனெனில் ‘கோமாளி’, ‘லவ் டுடே’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றியின் காரணமாக ‘டிராகன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
 
என்னுடைய வெற்றிக்கு பின்னணியில் அஸ்வத், ஏஜிஎஸ் நிறுவனம், ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘டிராகன்’ படத்தின் வெற்றி மூலம் ரசிகர்கள் என்னை மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.  
 
இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
 
நூறாவது நாள் வெற்றி விழாவில் ‘டிராகன்’ பட உருவாக்கத்திற்காக படக்குழுவினரின் கடும் உழைப்பு குறித்த பிரத்யேக காணொலி திரையிடப்பட்டது என்பதும், இயக்குநர் மிஷ்கின் காணொலி வாயிலாக வாழ்த்தினையும், அன்பினையும் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்கன் விமர்சனம் RATING 3.3/5

டிகர் விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, அஜய் திஷன் (அறிமுகம்), பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘மார்கன்’

விமர்சனம்:
சென்னையில் ஒரு இளம்பெண் வித்தியாசமான முறையில் கொல்லப்படுகிறார் என கதை தொடங்குகிறது. ஊசியை கழுத்தில் செலுத்தியதும் சில நொடிகளிலேயே உடல் முழுவதும் கருப்பாகி மரணம் நிகழ்கிறது. இறந்தவுடன் உடல் குப்பை தொட்டியில் வீசப்படுகிறது. மும்பையில் இருந்து தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. கொலையான அன்று அஜய் திஷன் சிசிடிவி கேமராவில் பதிவாக, அவரைத் தேடி விஜய் ஆண்டனி செல்கிறார். அவரை பிடித்து வந்து விசாரணையை தொடங்குகிறார். அதில் சில திருப்பங்களைச் சந்திக்கிறார். இறுதியில் கொலையாளி யார்? வித்தியாசமான முறையில் உடலை கருப்பாக்கி கொல்வதற்கான காரணம் என்ன? என்பதே மீதி கதை….

விஜய் ஆண்டனி நடித்து இசை அமைத்திருக்கிறார். அஜய் திஷன் கதாபாத்திரம் படத்திற்கு பலமாக இருக்கிறது. அறிமுக படத்திலேயே நன்றாக நடித்திருக்கிறார். நீருக்குள் அவர் செல்லும் காட்சிகள் பார்வையாளர்களிடம் சுவாரஸ்யத்தைத் தருகிறது. படத்தின் ஆரம்பத்திலேயே கதை சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதால் கவனம் சிதறாமல் பார்க்க முடிகிறது. நீருக்குள் எடுக்கப்பட்ட ஷாட்டுகள் சிறப்பு. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை பலம் சேர்க்கிறது. நீருக்குள் இருந்தபடி கொலையான இடத்திற்கு அஜய் கதாபாத்திரம் செல்வது விறுவிறுப்பை தூண்டுகிறது. 

மைனஸ்: ஆமை காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை…. சில லாஜிக் சொதப்பல்கள் படத்தில் இருக்கிறது….

மொத்தத்தில் இந்த ‘மார்கன்’ விறுவிறுப்பானவன்.

சினிமா அனுபவங்களை என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன்- விஜய் சேதுபதி

சென்னை:

விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்களும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு பேசினர்.

நடிகர் முத்துக்குமார் முத்துக்குமார் அவர்கள் பேசும்போது, “பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய நண்பனின் மகன் சூர்யா நடிக்கும் முதல் படம். இந்த படத்தில் நானும் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். யார் என்ன சொன்னாலும் நேரடியாக சென்று கொண்டே இருங்கள் சூர்யா. நீங்கள் மிகப்பெரிய ஆளாக வருவீர்கள்! வாழ்த்துக்கள். ஒரு மாமனாக வாழ்த்துகிறேன்”.

பாடலாசிரியர் விவேகா அவர்கள் பேசும்போது, “மற்றவர்கள் படத்திலேயே அதிரடியான சண்டைக் காட்சிகள் வைக்கும் அனல் அரசு அவர்கள் தன்னுடைய படத்தில் இன்னும் சிறப்பாக வைத்துள்ளார். சாம் சி எஸ் அவர்கள் பிரமாதமாக இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக வந்துள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா அவர்களின் முதல் படமே சிறப்பாக வந்துள்ளது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வருவதற்கு இந்த படமே ஒரு எடுத்துக்காட்டு. பீனிக்ஸ் என்பது ஒரு நம்பிக்கையின் குறியீடு. நம்பிக்கைதான் ஒரு வாழ்க்கையின் முக்கியமானது. நம்பிக்கைதான் நம்மை நகர்த்துகின்ற மிகப் பெரிய பலம். இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்”.

நடிகர் மூணார் ரமேஷ் அவர்கள் பேசும்போது, விஜய் சேதுபதி அவர்களுடனும் நடித்துள்ளேன், அவருடைய மகன் சூர்யாவுடனும் நடித்துள்ளேன். சண்டை பயிற்சிக்கான உலகளாவிய விருதிகளில் அனல் அரசு அவர்களின் பெயரும் இடம் பெற்று இருந்தது. அதை நாம் பெரிதாக கொண்டாடாமல் விட்டும். இந்த படத்திற்கு சாம் சி எஸ் சிறப்பாக இசையமைத்துள்ளார். இந்த படம் நிச்சயம் வெற்றியடையும்”.

நடிகர் திலீபன் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். அனல் அரசு அவர்களின் படத்தில் நடிப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அவருடைய இயக்கத்தில் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருந்தேன். சூர்யா அவர்கள் மிக அருமையாக நடித்துள்ளார். அவருக்கு நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்கும். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

நடிகை தேவதர்ஷினி அவர்கள் பேசும்போது, “ட்ரெய்லர் மிகவும் சிறப்பாக உள்ளது. சூர்யா அவர்கள் சிறப்பாக நடித்துள்ளார். இது போன்ற படங்களில் நடிக்க மிகப்பெரிய கடின உழைப்பு தேவை. என்னுடைய மகன் நடித்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. அனல் அரசு அவர்களின் உழைப்பு ட்ரெய்லர் பார்க்கும்போது தெரிகிறது. அனைவரது கடின உழைப்பிலும் இந்த படம் உருவாகியுள்ளது. சாம் சிஎஸ் அவர்களின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இந்த படத்தை பார்த்து பாராட்ட வேண்டும்”.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் பேசும்போது, “பத்திரிக்கையாளர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். தமிழகத்திலிருந்து சென்று ஹிந்தி, மலையாளம், கன்னடா என்று அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்கும் ஒரு கலைஞர் என்றால் அது அனல் அரசு அவர்கள் தான். அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் படம் பீனிக்ஸ். ஒரு தமிழராக இருந்து ஹிந்தியில் 18 படங்களில் வேலை செய்துள்ளார். அதில் சல்மான் கான் உடன் மட்டும் 7 படம். தளபதி விஜய் அவர்களுடன் 9 படம் பணிபுரிந்துள்ளார். ஒரு முழு ஆக்சன் படமாக பீனிக்ஸ் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா ஒரு முழு ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி அவர்களின் வெற்றி பலருக்கும் ஒரு உந்துதலாக இருந்தது. விஜய் சேதுபதி அவர்களின் வெற்றியைப் பார்த்து 100 பேர் வந்தால், அவரின் மகனின் வெற்றியை பார்த்து 200 பேர் வருவார்கள். விஜய் சேதுபதி அடையாளம் என்றால், சூர்யா ஒரு குறியீடு. படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சினிமாவை நேசித்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றி கொடுங்கள்”.

தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். முழு படத்தையும் பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட முதல் 10 படங்களில் பீனிக்ஸ் நிச்சயம் இடம்பெறும். 100% நேர்த்தியாக அனல் அரசு இந்த படத்தை எடுத்துள்ளார். ஒரு சீட் எச் திரில்லராக படம் உருவாகியுள்ளது. இந்த படம் நான் சொல்வது உண்மையில்லை என்றால் படத்தின் ரிலீஸ்க்கு பிறகு எனக்கு போன் போட்டு திட்டுங்கள். படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான வேலையை செய்துள்ளனர். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குனருக்கான விருதை அனல் அரசு அவர்கள் நிச்சயம் பெறுவார். சூர்யா அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. தமிழ் சினிமாவின் டைகர் ஷெராபாக நிச்சயம் சூரியா வருவார். தமிழ் சினிமாவில் நான் அடிக்கடி பார்க்கும் படம் மகாராஜா. இனிமேல் நான் அடிக்கடி பார்க்கும் படமாக பீனிக்ஸ் இருக்கும். சாம் சிஎஸ் இந்த படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி அவர்கள் தமிழ் சினிமாவிற்கு நிறைய விஷயங்களை கொடுத்துள்ளார், தற்போது அவரது மகனையும் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நான் மிகவும் நேசிக்கும் மனிதர் விஜய் சேதுபதி அவர்கள். அவரை தாண்டி அவரது மகன் மிகப் பெரிய ஆளாக வருவார். அனைவரும் திரையரங்கில் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்”.

இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். சூர்யா அவர்களுக்காக மட்டுமே இங்கு வந்துள்ளேன். அனல் அரசு அவர்களுடன் ஒரே ஒரு படம் மட்டும் தான் ஒர்க் பண்ணி உள்ளேன், அதிலும் ஒரே ஒரு பைட் சீன் தான். இருப்பினும் நாம் என்ன எடுக்கப் போகிறோம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் ஒரு சில மாஸ்டர்களில் இவரும் ஒருவர். இந்த படத்தின் டிரைலர் பார்க்கும்போது படம் அற்புதமாக வந்துள்ளது தெரிகிறது. பசங்க படத்தில் கமிட் ஆகும்போது விஜய் சேதுபதி அவர்களை தெரியும். விஜய் சேதுபதி அவர்களிடம் மனிதாபிமானம் உள்ளது. சூர்யா அவர்களிடம் நல்ல ஒரு தெளிவு உள்ளது. பல நாட்களாக சினிமாவை கரைத்து குடித்தது போல் தெளிவான பேசினார். விஜய் சேதுபதி அவர்களைவிட, அவரது மகன் சூர்யா சிறப்பாக நடனமாடியுள்ளார். சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக்கோழி படத்தில் விஷால் அவர்களை பார்க்கும்போது என்ன தோன்றியதோ அதேபோல் தான் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது தோன்றுகிறது. விஜய் சேதுபதி அவர்களின் 10 படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தாலே சூர்யா நல்ல நடிகராக வந்துவிடலாம்.  ஒரு அண்ணனாக நானும் உங்களை வாழ்த்துகிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய. வாழ்த்துக்கள்.

பெப்சி விஜயன் அவர்கள் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். சாதாரணமாக ஒருவர் வெற்றியடைய முடியாது. அனல் அரசு அவர்கள் நிறைய சிரமங்களை சந்தித்துள்ளார். நல்ல ஒரு எமோஷனல் இல்லையென்றால் ஒரு சண்டை காட்சி வேலை செய்யாது. இயக்குனர் அனல் அரசு அவர்கள் இந்த படத்தை இயக்குவதற்கு நிறைய சிரமங்களை சந்தித்துள்ளார். சூர்யா அவர்களை இந்த படத்தில் நடிகராக அறிமுகம் செய்துள்ளார் அனல் அரசு. சிரித்துக் கொண்டே வேலை வாங்குவதில் அனல் அரசு மிகச் சிறந்தவர். சூர்யா அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை உள்ளது. தன்னம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். மக்களின் மனதை கவரும் தன்மை சூர்யா அவர்களிடம் உள்ளது. இந்தப் படம் உங்களுடைய வெற்றி என்று மார் தட்டி சொல்லலாம். சாம் சி எஸ் அவர்கள் சிறப்பாக இசையமைத்துள்ளார், குறிப்பாக பின்னணி இசையில் அசத்தியுள்ளார். அனல் அரசு அவர்கள் ஒவ்வொரு நடிகர் நடிகைகளையும் தேடித்தேடி இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன். தமிழ் சினிமா இருக்கும் வரைக்கும் நடிகர் சூர்யா நிச்சயம் இருப்பார். சூர்யா பேர் இல்லை பெருமை”.

இயக்குனர் வினோத் அவர்கள் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். சூர்யாவை நான் அறிமுகப்படுத்தலாம் என்று இருந்தேன்.  ஆனால் அனல் அரசு முந்திவிட்டார். ஒரு ஹீரோ ஒரு ஆக்சன் ஹீரோ ஆவதற்கு 10 படங்கள் தேவைப்படும், ஆனால் சூர்யாவிற்கு முதல் படத்திலேயே அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்”.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். ஒரு காட்சி நன்றாக இருக்கிறது.. நன்றாக இல்லை என்று சொல்வதற்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. சண்டைக் காட்சிகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை இசையமைக்க முயற்சிப்பேன். ஒரு படம் மக்களிடம் சென்று சேருவதற்கு கமர்சியல் விஷயங்கள் அவசியம். என்னுடைய தலையீடு இல்லாமல் என் மகன் சூர்யா திரைக்கு வரட்டும் என்று விஜய் சேதுபதி அவர்கள் சொல்லி இருந்தார். பீனிக்ஸ் படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதியிடம் சொன்னேன் உங்கள் மகன் சிறப்பாக நடித்துள்ளார் என்று. இந்த படத்தின் வேலைகளை முடிக்கும் போது ஒரு திருப்தி இருந்தது. என்னுடைய சினிமா கரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அனல் அரசு அவர்கள் ஒரு லட்சியமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். பீனிக்ஸ் படம் எனக்கும் சூர்யா அவர்களுக்கும் நல்ல ஒரு பெயரை பெற்று தரும். இந்த படத்தில் வேலை பார்த்தது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்”.

விஜய் சேதுபதி அவர்கள் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். என்னுடைய மகனைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அனல் அரசு அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. 2019ல் எனக்கு அனல் அரசு அவர்கள் கதையை சொன்னார், ஆனால் அப்போது அதனை பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா இந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார், எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. என் பையனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சூர்யாவை கதை கேட்கச் சொன்னேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை. என்னுடைய சினிமா அனுபவங்களை எப்போதும் என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன். அவருடைய விஷயங்களை அவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் படத்தின் பூஜை மற்றும் மற்ற விஷயங்கள் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. சூர்யாவிடம் அவ்வப்போது மகிழ்ச்சியாக உள்ளதா? என்று கேட்பேன். அவரும் உள்ளது என்பார்.. அவ்வளவுதான். அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி. அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன். இங்கே வந்து சூர்யா அவர்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். படம் நன்றாக வந்துள்ளது. என்னை விட என் மனைவிக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம் இது. அவர்களின் சார்பிலும் நான் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”.

கதையின் நாயகன் சூர்யா சேதுபதி பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையை நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க பயன்படுத்தி கொள்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் நிறைய கற்றுக் கொண்டேன். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு எனது குடும்பமும், நண்பர்களும், பத்திரிகையாளர்களும் தான் காரணம். அடுத்த வாரம் படம் வெளியாக உள்ளது. நான் சோர்வாக இருக்கும் போது எனக்கு உத்வேகம் அளித்து இந்த படத்தில் நடித்த அனைவரும் உதவினார்கள். தேவதர்ஷினி அவர்கள் படத்தில் மட்டும் அம்மா இல்லை, நிஜ வாழ்க்கையிலும் எனது அம்மா தான். என் தயாரிப்பாளர் ராஜலட்சுமி அவர்களுக்கு நன்றி. இயக்குனர் அனல் அரசு அவர்கள் நிறைய சொல்லிக் கொடுத்தார். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இயக்குனர் அனல் அரசு அவர்கள் பேசும்போது, “இந்த இடத்திற்கு வருவதற்கு எனது அப்பா மிக முக்கிய காரணம். தயாரிப்பாளர் ராஜலட்சுமி இல்லையென்றால் இந்த படமே இல்லை. இந்த படத்தை மிகப்பெரிய படமாக மாறியதற்கு இவரும் முக்கிய காரணம். ஜவான் படத்தின் படப்பிடிப்பில் தான் சூர்யா அவர்களை முதன் முதலில் பார்த்தேன். அதன் பிறகு தான் விஜய் சேதுபதி அவர்களிடம் சொன்னேன். ஒன்றரை வருடமாக சூர்யா அவர்கள் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்தார். சூர்யா அவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது. படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் கடமையாக உழைத்துள்ளனர். சண்டை பயிற்சி இயக்குனராக 200 படங்கள் பண்ணி இருந்தாலும், ஒரு இயக்குனராக என்னுடைய முதல் படம் எது. அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்”.

படத்தின் தயாரிப்பாளர் ராஜலட்சுமி அவர்கள் பேசும்போது, “எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இங்கு வந்த பத்திரிகையாளர் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள். இந்த படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறோம். என்னுடைய மகன் மற்றும் மகளுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றிகள்”.

AKB பெவிலியன் IIT என்க்ளேவ்’! – வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி எதிரே பாதி விலையில் வீட்டு மனைகள்!

AKB டெவலப்பர்ஸ் & ப்ரோமோட்டர்ஸ் பெருமையுடன் வழங்கும் ’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’ (AKB Pavilion IIT Enclave), ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்திற்கு நேர் எதிரே உள்ள தையூரில் 6.20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஒரு பிரீமியம் கேட்டட் சமூகமாகும். AKB இன் 93வது திட்டமாக, இந்த மேம்பாடு அதன் மூலோபாய இருப்பிடம், சிந்தனைமிக்க திட்டமிடல் மற்றும் முதலீட்டு திறனுக்காக தனித்து நிற்கிறது.

ரூ.17 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், 19,000+ சதுர அடி பிரத்தியேக பூங்கா, பிளாக்டாப் சாலைகள், தெரு விளக்குகள் மற்றும் பசுமையான இடங்களைக் கொண்ட பாதுகாப்பான, முழுமையாக உருவாக்கப்பட்ட அமைப்பிற்குள் 600-1200 சதுர அடியில் நன்கு அமைக்கப்பட்ட நிலங்களை வழங்குகிறது. குடியிருப்பாளர்களுக்கு அமைதியான மற்றும் தன்னிறைவான சூழலை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

தென் சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் வழித்தடங்களில் ஒன்றாகக் கருதப்படும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி வளாக மேம்பாடு மற்றும் விரைவான வளர்ச்சியால், தையூர் விரைவாக முதலீட்டாளர்களின் மையமாக உருவெடுத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், AKB Pavilion இந்த நீளத்தில் உள்ள நிலங்களின் விலையில் கிட்டத்தட்ட பாதி விலையில் உள்ளது, இது புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோயிலிலிருந்து வெறும் 5 நிமிடங்களில் ஒப்பிடமுடியாத மதிப்பை வழங்குகிறது.

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 200 சதவீதம் வரை எதிர்பார்க்கப்படும் வருமானத்துடன், இந்த திட்டம் ஓ.எம்.ஆர் அருகிலுள்ள மிகவும் விரும்பப்படும் குடியிருப்பு மையங்களில் ஒன்றாக மாற உள்ளது. ஏகேபியின் 36 ஆண்டுகால பாரம்பரியத்தால் ஆதரிக்கப்பட்டு, சட்ட வெளிப்படைத்தன்மை மற்றும் மேம்பாட்டுத் தரத்திற்கு பெயர் பெற்ற பெவிலியன் ஐஐடி என்க்ளேவ் வெறும் ஒரு நிலம் மட்டுமல்ல, இது சென்னையின் எதிர்காலத்தில் ஒரு புத்திசாலித்தனமான முதலீடாகும்.

காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்திய ‘ஜீவன் செயல் திட்டம்’

சென்னை:
 
இந்நாட்டில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் உயர்சிகிச்சை வழங்குவதில் பிரபலமான காவேரி மருத்துவமனை பிறவி குறைபாடான முதுகுத்தண்டு சீர்குலைவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரிசெய்யும் அறுவைசிகிச்சைகளை குறைந்த கட்டணத்திலும் மற்றும் இலவசமாகவும் வழங்குவதற்கான ஒரு விரிவான முன்னெடுப்பு திட்டத்தை பிராஜெக்ட் ஜீவன் செயல்திட்டம் என்ற பெயரில் தொடங்கியிருக்கிறது. மித்ரா ரோட்டரி கிளப் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு ரோட்டரி கிளப்-ன் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்போடு இச்செயல்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. முள்ளந்தண்டு பிளவு, வடவுறைப்பிதுக்கம், இணைக்கப்பட்ட வட நோய்க்குறி, பக்க வளைவு மற்றும் தண்டுவடக் கழலைகள் போன்ற பாதிப்புகளால் அவதியுறும் வசதியற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அவர்களது வாழ்க்கையையே மாற்றி மேம்படுத்துகின்ற அறுவைசிகிச்சையை சாத்தியமாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். சிக்கல் நிறைந்த இந்த மருத்துவச் செயல்முறைகள் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.
 
ரோட்டரி பவுண்டேஷன் மற்றும் பங்கேற்கும் ரோட்டரி கிளப்கள் வழியாக திரட்டப்பட்டிருக்கும் ரூ. 85 இலட்சம் என்ற நிதி உதவியின் ஆதரவோடு இந்த முன்னெடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் முதல் கட்டத்தில் எவ்வித கட்டணமோ, செலவோ இன்றி குறைந்தது 35 குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரிசெய்வதற்கான அறுவைசிகிச்சைகள் ஜீவன் செயல்திட்டத்தின் கீழ் செய்யப்படும். ரோட்டரி கிளப்களுடன் இணைந்து இதற்கு முன்பு நடத்தப்பட்ட வெற்றிகரமான ஒத்துழைப்பின் கீழ் 100-க்கும் அதிகமான இத்தகைய அறுவைசிகிச்சைகள் கட்டணமின்றி இலவசமாக குழந்தைகளுக்கு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
“இந்த குழந்தைகளுள் பலர், குறைபிரசவத்தில் உரிய காலத்திற்கு முன்பே பிறந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள். உரிய நேரத்திற்குள் சிறப்பு சிகிச்சை இக்குழந்தைகளுக்கு வழங்கப்படாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்களை பாதிக்கிற ஊனம்/திறனிழப்பு அல்லது உயிரிழப்பை இக்குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜீவன் செயல்திட்டத்தின் வழியாக இக்குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதுடன் இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை இவர்கள் நடத்துவதற்கு உதவுவதும் எமது நோக்கமாகும். இத்தகைய அறுவைசிகிச்சைகள் மிகவும் நுட்பமானவை; இவற்றை செய்வதற்கு நல்ல ஒருங்கிணைப்புள்ள மருத்துவர்கள் குழு தேவைப்படுகிறது. இச்சிகிச்சைகளின் மூலம் சாத்தியமுள்ள மிகச் சிறந்த விளைவுகளை வழங்குவதற்கு காவேரி மருத்துவமனை முழுமையான வசதிகளையும் தொழில்நுட்ப சாதனங்களையும் கொண்டிருக்கிறது” என்று காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும் & செயலாக்க இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.
 
தென்னிந்தியாவில் உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளில் 10 முதல் 15 குழந்தைகளுக்கு நரம்புக் குழல் குறைபாடுகள் இருப்பதும் மற்றும் குறைந்த வருவாய் உள்ள பின்புலங்களைச் சேர்ந்த குழந்தைகள் மிக அதிக அளவில் இதனால் பாதிக்கப்படுவதும் பிராஜெக்ட் ஜீவன் உருவாக்கப்பட்டது. அறுவைசிகிச்சையின் மூலம் இக்குறைபாட்டை முறையாக சரிசெய்யாவிட்டால், கடுமையான ஊனங்களுடன் இக்குழந்தைகள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்; அக்குடும்பங்கள் மட்டுமன்றி சமூகங்கள் மீதும் உணர்வு ரீதியான மற்றும் நிதி சார்ந்த பெரும் சுமையை இது சுமத்தும் “சரியான நேரத்தில் செய்யப்படும் சரியான இடையீட்டு சிகிச்சையின் மூலம் இக்குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். இந்த முன்னெடுப்பானது வெறுமனே அறுவைசிகிச்சைகள் குறித்தது மட்டுமல்ல; ஒவ்வொரு குழந்தையும் பெறுவதற்கு தகுதியுள்ள சிறப்பான எதிர்காலம், கண்ணியம் மற்றும் சாத்தியத்திறனை அவர்கள் பெறுமாறு செய்வதே இதன் நோக்கமாகும்” என்று டாக்டர். G பாலமுரளி மேலும் விளக்கமளித்தார்.
 
இச்செயல்திட்டத்தில் பல களப்பணி மற்றும் விழிப்புணர்வுக்கான கல்வி நடவடிக்கைகளும் உள்ளடங்கும். பிறக்கும்போது முதுகுத்தண்டு குறைபாடுகள் இருப்பதை பிரசவத்திற்கு முன்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை மேம்படுத்த சோனாலஜிஸ்ட்களுக்கான (ஒலியியல் நிபுணர்கள்) பயிற்சி திட்டமும் இதில் உள்ளடங்கும். இப்பகுதியில் குழந்தைகளுக்கான முதுகுத்தண்டு சிகிச்சை பராமரிப்பை வலுப்படுத்த பிறவிக் கோளாறுகள் ஏற்படாமல் தடுப்பது மீது கருவுற்ற தாய்மார்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களும், அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கும், செவிலியர்களுக்கும் திறன் மேம்பாடு பயிலரங்குகளும் இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்.
 
மேலும் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் இத்திட்டம் பற்றி பேசும்போது “காவேரி மருத்துவமனை, 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக மேம்பட்ட நவீன சிகிச்சை பராமரிப்பை வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது. நிதி வசதி இல்லாத காரணத்தால் உயிர்காக்கும் சிகிச்சை எந்த குழந்தைக்கும் மறுக்கப்படக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். மித்ரா நோட்டரி கிளப் உடனான எமது கூட்டாண்மை, மிக அவசியமாக தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை வசதி கிடைப்பதை உறுதி செய்கிறது. மேலும் முதுகுத்தண்டு மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். G பாலமுரளி அவர்களின் சிறப்பான சேவைக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். 
 
மித்ரா ரோட்டரி கிளப்-ன் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் சரவணன் பேசுகையில், “ஜீவன் செயல்திட்டம் என்பது அர்த்தமுள்ள நடவடிக்கை வழியாக குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நோட்டரி பவுண்டேஷனுக்கும் மற்றும் பெங்களூரில் உள்ள எமது பார்ட்னர் கிளப்-க்கும் அவர்களின் மதிப்புமிக்க ஆதரவுக்காக எமது நெஞ்சார்ந்த நன்றியை இத்தருணத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
 
ஜீவன் செயல்திட்டம் மூலம் அதிகம் பாதிக்கக்கூடிய நிலையிலுள்ள வசதியற்ற, பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவது என்பதையும் கடந்து அவர்களின் வாழ்க்கையை மேம்பட மாற்றியமைக்கும் திட்டத்தை காவேரி மருத்துவமனை மேற்கொள்கிறது. ஆரோக்கியம் என்ற வெகுமதியை வழங்குவதோடு, சாதிக்கும் சாத்தியங்கள் நிறைந்த நல்ல எதிர்காலத்திற்கான வாக்குறுதியையும் இக்குழந்தைகளுக்கு வழங்குகிற ஒரு ஆத்மார்த்தமான செயல்திட்டம் இது. செய்யப்படும் ஒவ்வொரு அறுவைசிகிச்சையும் வலி, கட்டுப்பாடுகள் மற்றும் அச்சத்திலிருந்து விடுபட்டு ஒவ்வொரு குழந்தையும் பெறுவதற்கு தகுதியான நம்பிக்கை, கண்ணியம் மற்றும் சிறந்த வாழ்க்கை என்ற இலக்கை நோக்கிய ஒரு முன்னேற்ற நடவடிக்கையாகும். இந்த உன்னதமான முனைப்பு திட்டத்தின் மூலம் கனிவும், அக்கறையான பராமரிப்பும் வாழ்க்கையின் போக்கையே மாற்றும் திறன் கொண்டது என்று நமக்கு நினைவூட்டும் விதத்தில் குணமாக்கலுக்கான ஒரு வலுவான தூணாக காவேரி மருத்துவமனை தலைநிமிர்ந்து நிற்கிறது.